tattvartha sutra - chapter 3



மூன்றாவது அத்தியாயம்  -  Chapter  three .




கீழ் உலகம் மற்றும் நடுவுலகம்.



ரத்னசர்கரா வாலூகாபங்கதூம தமோமஹாதம: ப்ரபா பூமயோ கனாம்பு வாதாகாச ப்ரதிஷ்டா: ஸ்ப்தாதோத:* - (அ3 #1) = (87)


 रत्नशर्कराबालुकापंक धूमतमोमहातमः प्रभा भूमयो घनाम्बुवाताकाश प्रतिष्ठाः सप्ताधोऽधः


 Ratna-sharkara-baluka-panka-dhuma-tamo-mahatamah prabha bhumayo ghanambu-vatakasha-pratishthah saptadho (a) dhah



ரத்ன – சர்கரா- வாலுகா – பங்க – தூம – தம – மஹாதம பிரபா: நரக பூமிகள்; கனவாத – கனோததி – வாத – அகாச; ஆதார வலயங்கள்;

The lower world consists of seven infernal earths namely Ratnaprabha, Sharkaraprabha, Baluprabha, Pankaprabha, Dhumaprabha, Tamahprabha and Mahatamahprabha, one below the other, surrounded by three kinds of air and space.



ப்ரபா – ஓளி; ஏழு நரக பூமிகளும் ஒன்றன் கீழ் ஒன்றாய் அமைந்துள்ளன. அவை மூன்று வலயங்களால் சூழப்பட்டும் ஆதாரமாகவும் கொண்டு அமைந்துள்ளன.

அதாவது, ஒவ்வொன்றும்; ஒன்றின் கீழ் ஒன்றாக, ஒரு ரஜ்ஜு அளவுடைய இவ்வேழு பூமிகளும்; கனோததி வாத வலயத்தின் ஆதாரத்தில் அமைந்துள்ளன.

கனோததி வாத வலயம், கனவாத வலயத்தின் ஆதாரத்திலும்;  கனவாத வலயம், தனுவாத வலயத்தின் ஆதாரத்திலும்;  தனுவாத வலயம், ஆகாசத்தை ஆதாரமாக கொண்டு உள்ளது.

ஆகாசம் சுய ஆதாரத்தில் இருக்கிறது.


ரத்னப்பிரபா(பிரபை) நரகம் : ரத்னத்தைப் போல் ஓளியுடன் உள்ளது. 180000 யோசனை கன பரிமாணம் உடையது. மூன்று பாகங்களாக உள்ளது.
-------------
   மேல்பகுதி – கரபாகம்; (16000 யோசனைகள்), பதினாறு வகையான ரத்தின்ங்கள் உள்ளன. பத்து வகையான பவணவாசி தேவர்களில் ஒன்பது வகையினர் வாழ்கின்றனர். இதில்  அசுரகுமாரர்கள் மட்டும் விதிவிலக்காவர்.
 அது போன்று எட்டு வகை வியந்தர தேவர்களில் இராட்சதர் தவிர மற்றவர்கள் வாழ்கின்றனர்.

   நடுப்பகுதி – பங்கபாகம்; (84000 யோசனைகள்), அசுர குமாரர்களும், இராட்சதர்களும் வாசம் செய்கின்றனர்.

   அடிபகுதி – அப்பகூலாபாகம் எனவும் அழைக்கப்படும். (80000 யோசனைகள்), திரஸநாளில் முதல் நரகம் உள்ளது.
-----------
சர்க்கரா பிரபா நரகம்: கற்கண்டு; கூழாங்கல் (pebbles) போல நிறத்தை உடையது. (32000 யோசனைகள் கன பரிமாணம்) இதன் திரஸநாளியில் இரண்டாம் நரகம் உள்ளது.

வாலுகா பிரபா நரகம்: மணல் போன்ற நிறமுடையது. (28000 யோசனைகள் கன பரிமாணம்) இதில் மூன்றாம் நரகமுள்ளது.

பங்க பிரபா நரகம்: சேறு போன்ற நிறமுடையது. (24000 யோசனைகள் கன பரிமாணம்) இதில் நான்காம் நரகமுள்ளது.


தூம பிரபா நரகம்: புகை போன்ற நிறமுடையது. (20000 யோசனைகள் கன பரிமாணம்) இதில் ஐந்தாம் நரகமுள்ளது.


தம பிரபா நரகம்: இருள் போன்ற வண்ணமுடையது. (16000 யோசனைகள் கன பரிமாணம்) இதில் ஆறாம் நரகமுள்ளது.


மஹாதம பிரபா நரகம்: கும்மிருட்டு போன்ற வண்ணமுடையது. (8000 யோசனைகள் கன பரிமாணம்) இதில் ஏழாம் நரகமுள்ளது.


பூமி என்ற சொல் கீழே அமைந்துள்ள, கடினமானதாக இருப்பதைப் போல குறிப்பிட்டுள்ளனர். (தேவருலகம் அந்தரத்தில்  உள்ளது போல்,  லேசான படலமாக சொல்லப்படுகிறது.)
-------------
The vata valayas, or atmospheres are each 2000 yojanas thick at the bottom of the universe.

Each one of these earths is separated from the next by an interval of one rajju.

In each of these intervals there are 3 atmospheres  also  supporting the upper earch.

The seven infernal levels are below one another and the base of each lower level is wider than that of the upper one. Each level floats over a dense ocean, which stays over a layer of air, which in turn rests in the space.
------------
அடுத்து நரகர்களின் வாழிடங்கள் பற்றிய விபரம் காண்போம்....



-------------------

நரகர்  வாழிடங்கள்.


தாஸுத்ரிம்சத் பஞ்சவிம்சதி பஞ்சதசதசத்ரிபஞ்சோ நைகநரகசத ஸகஸ்ராணி பஞ்ச சைவ யதாக்ரமம் - (அ3 #2) = (88)


तासु त्रिंशत्पंचविंशति पंचदशदशत्रिपंचोनैकनरकशतसहस्राणि पंच चैव यथाक्रमम्


Tasu-trinsatpanchavinshati-pancha-dasha-dasha-tri-panchonaika-naraka-shatasahasrani pancha chaiva yathakramam



அந்த பூமிகளில் முறையே முப்பது இலட்சம்,  இருபத்தைந்து இலட்சம், பதினைந்து இலட்சம், பத்து இலட்சம், மூன்று இலட்சம், ஐந்து குறைந்த ஒரு இலட்சம் (99995) மற்றும் ஐந்து நரக வளைகள் உள்ளன.


In these earths there are thirty lakh, twenty-five lakh, fifteen lakh, ten lakh, three lakh, one lakh less five and only five infernal abodes respectively.


பிலங்கள் – நரக வளைகள் (homes like); பொந்துகள், கிணறுகள், மணியைக் கவிழ்த்தது போன்ற வடிவத்தில் வாழும் இடங்கள்.

முதல் நரகில் (ரத்னப் பிரபை)  -  முப்பது இலட்சம், 
இரண்டாவது நரகில் (சர்க்ராப் பிரபை)  -  இருபத்தைந்து இலட்சம்,
மூன்றாவது நரகில் (வாலுகாப் பிரபை)  -  பதினைந்து இலட்சம்,
நான்காவது நரகில் (பங்கப் பிரபை)  -  பத்து இலட்சம்,
ஐந்தாவது நரகில் (தூமப் பிரபை)  -  மூன்று இலட்சம்,
ஆறாவது நரகில் (தமப் பிரபை)  -  ஐந்து குறைந்த ஒரு இலட்சம் (99995)
ஏழாவது நரகில் ( மஹாதாமப் பிரபை)  - ஐந்து வளைகளும் உள்ளன.

இரத்னப் பிரபையில் 13 படலங்களும், இதற்கு கீழே ஏழாவது பூமிவரை தலா இரண்டு, இரண்டு படலங்கள் குறைவாக உள்ளன. மொத்தம் 49 அடுக்கு படலங்கள் உள்ளன.

முதலாவதாக ரத்னப்பிரபையில் மூன்று பிரிவுகள் உள்ளது.

கரபாகம் (மேல் பகுதி) -  பதினாயிரம் யோசனை பருமனுள்ளது. நரகங்கள் 
இல்லை

பங்கபாகம் (நடுப் பகுதி) – 84000 யோசனை பருமனுள்ளது. நரகங்கள் 
இல்லை

அப்பஹுல பாகம் (கீழ்ப் பகுதி) – 80000 யோசனை பருமனுள்ளது. நரகங்கள் உள்ளன.

மற்ற ஆறு பாகங்களிலும் அதனதன் நடுப்பகுதியில் (மேலும் கீழும்  1000 யோசனை பூமியை விட்டு விட்டு) நரகங்கள் உள்ளன.

அனைத்திலும் நடுவில் இந்திர (பிலம்) கம் – 1

அந்த 49 அடுக்கு படலங்களில் 4 திசைகளில் (கி,மே,வ,தெ) 49 வளைகளும், 4 கு-திசைகளில் (வகி, வமே, தெகி, தெமே) 48 பிலங்களும் அமைந்துள்ளன.

இரண்டாவதில் 48, 47ம் ஆக குறைந்து; கடைசி படலத்தில் (49 வதில்) நான்கு திசைகளில் மட்டும் நான்கும், (கு-திசையில் இல்லை) இந்திரகம் – 1 ஆக 5 பிலங்கள் இருக்கும்.
-----------
The hellish beings are born and live in these hells. These hells are  really huge holes in which the hellish beings live. The are in different layers (patala).  The 1st to the  7th earths have 13, 11, 9,7,5,3 and 1 layer for each of the 1st to the 7th hell respectively. ie 49 layers in all.

In each layers there is a central hole (Indraka bila), and lines (Srenbadbha) of holes in the 4 cardinal and 4 intermediate directions.

In the first layer, there are 49 in each  of the cardinal directions; and 48 in each of the intermediate corners.

In the second layer, the numbers are 48, 47; in the third 47 and 46, till in the 49th layer, the number of holes is 1 and 0.  Thus in the last or 49the layer there is central hole and 4 holes in the East, West, North  and  South, 5 holes in all.

The rest of the holes in the 1st 6 hells are called sporadic (Prakirnaka) Thus there are:

  central                                 49
  8 directions (sreni)          9604
Sporadic(Prakirnaka)  8390347

          Total  -              8400000
--------------


நாரகியர்களின் சிறப்பு அம்சங்கள் என்ன? .....


நரகர்  துன்பங்கள்.


  நாரகா நித்யாசுபதரலேச்யா பரிணாம தேஹவேதனாவிக்ரியா:- (அ3 #3) = (89)


  नारका नित्याशुभतरलेश्यापरिणाम देहवेदनाविक्रियाः


  Naraka nitya shubtara leshya parinam deha vedana vikriya



நரக உயிர்கள் எப்பொழுதும் அதிக அசுப லேச்யையும் அசுப பரிணாமும், அருவருப்பான உடலும், அசுப வேதனையும் மற்றும் அசுப செயல்களும் உடையன.


The thought colouration, thought activity, body, suffering and shape of body are incessantly more and more inauspicious in succession among the infernal beings in the first infernal earth to the seventh infernal earth.




லேச்யை – நிறம், colouration. குணநலன் களை நிறங்களால் குறிப்பது. சூத்திரம் - (அ2 #6) =(39) காண்க.

ஆறு வகையில் முதல் மூன்றும் அசுபமானவை. கிருஷ்ண (கருப்பு), நீல, கபோத (பழுப்பு நிறம்) ஆகிய மூன்றும் தீய லேச்யைகள்.

முதல் மற்றும் இரண்டு நரக பூமியில் கபோத லேச்யை;
மூன்றாவதின் மேல் பாகத்தில் கபோதமும், கீழ் பாகத்தில் நீலமும் இருக்கிறது.

நான் காவது, மற்றும் ஐந்தாவதின் மேல் பகுதியில் நீல லேச்யை உள்ளது. கீழ் பாகத்தில் கிருஷ்ண லேச்யை உள்ளது.
ஆறாவது பூமியில் கிருஷ்ண லேச்யையும், ஏழாவதில் கடும் கருப்பு நிறமும் உள்ள லேச்யை இருக்கிறது.

நரகர்கள் உடல் எப்பொழுதும் துர்நாற்றம் வீசும் தன்மையுடையது.


பார்வைக்கு உடல் தோற்றம் பயங்கரமானதாக, தடித்த தோல் உடைய, சிறிய தலை, பெரிய உடல், நீண்ட கைகள் முதலிய வற்றைப் பெற்றவர்களாக இருப்பர்.

விக்ரியா சக்தி இருந்தும் மிருகங்களில் புலி, கரடி, பாம்பு, நாய் போன்ற உருவங்களை எடுக்கும் தன்மை வாய்ந்தவர்களாக இருப்பர்.

முதல் நரகத்தில் உள்ளவர்கள் 7 வில், 3 முழ உயரமும், அடுத்தடுத்து உயரம் இரட்டிப்பாகி கடைசி 7 வது நரகத்தில் 500 வில் உயரமாக இருப்பர்.

1 வில் = 4 முழம்;  1 முழம் = 24 அங்குலம்

ஒன்று முதல் நான்கு நரகங்களும், ஐந்தாம் நரகத்தில் இரண்டு லட்சம் பிலங்களும் மிகுந்த வெப்பம் உடையவை.

சுமேரு மலைபோன்ற ஒரு இரும்பு குண்டைப் போட்டால் உருகி நீரைப்போல் ஆகிவிடும் உஷ்ணம் கொண்டது. மற்றவை குளிர்ந்து காணப்படும்.
நரகங்களில் அகால மரணம் ஏற்படுவதில்லை யாதலால் சொல்லொனாத் துன்பங்கள் அனுபவிப்பர்.

------------

Lesya, complextion of thought; it is said that physical complextion is the same till the end of one’s life.
But thought-colouration changes within one muhurta.
------------


துன்பம் வெப்பத்தினால் அல்லது கடும் வேதனையும், வருத்தத்தினால் ஏற்படுகிறதா? ....

------------ 


நரகர்  துன்பங்கள்.



பரஸ்பரோ தீரிதது: கா  - (அ3 #4) = (90)


परस्परोदीरितदुःखाः


Parasparodiritaduhkhah



பரஸ்பர, உதீரத:, து:கா: - ஒருவருக்கொருவர், உண்டாக்குவர், துக்கத்தை


They cause pain and suffering to one another.




நரகியர்(நாரகியர்) ஒருவருக்கொருவர் துன்பத்தை ஏற்படுத்துவர்.

பிறப்பலேயே குஅவதிஞானம் (தீய அவதிஞானம், மித்யாதரிசனத்தின் காரணமாக) உண்டு.

அதனால் முன்னரே துக்கத்தின் காரணங்களை அறிந்து கொண்டு துன்பம், மனவருத்தத்தை தோற்றி விடுகின்றனர்.

வோருவருர் அருகில் வந்தால் அவர்களுக்கு கோபம் கொழுந்து விட்டு எரிகிறது.

முற்பவ கொடுமைகளின் நினைவு காரணமாக ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்கின்றனர், தெரு நாய்கள் சண்டையிடுவது போன்று. (நரகத்திலுமா அப்படி நடக்கிறது!)

விக்ரியா சக்தியின் சிறப்பு ஆற்றலால் கத்தி, ஈட்டி, கோடறி, சிலாக்கோல், எறி ஈட்டி, கடப்பாரை போன்ற ஆயுதங்களை தோற்று வித்து;

கை, கால்கள் மற்றும் பற்களால் ஒருவரை ஒருவர் வெட்டுவதும், பிளப்பதும், குத்துவதும், கடிப்பதுமாக துன்பத்தை விளைவித்துக் கொள்வர்.

---------
They recollect their past lives and are actuate by intense animosity. 

They begin to strike at one another like dogs and jackals.

By their powers of changing forms they make weapons such as sword, hatchet, axe, spear, pike, javelin, crowbar and others, and these and their hands, feet and teeth, they indulge in cutting, splitting, parting and biting and cause intense pain and suffering to one another.
------------


இவை மட்டும் தானா, இல்லை வேரேதும் உண்டா.....

---------- 

    ஸங்க்லிஷ்டாஸு ரோதீரிதது: காஸ்ச ப்ராக் சதுர்த்யா:  - (அ3 #5) = (91)


   
 संक्लिष्टासुरोदीरितदुःखाश्च प्राक् चतुर्थ्याः



  Sanklishtasurodiritaduhkhashcha prakchaturthyah



ஸங்க்லிஷ்ட அஸு ரே – தீய குணத்து அசுரர்;  உதீரித து: காஸ்ச – துன்பம் தருவர்; ப்ராக்- முன்னே வரை;  சதுர்த்யா: - நான் காம் புமிக்கு 


Pain is also caused by the incitement of malevolent asura-kumaras prior to the fourth earth i.e. in the first to the third earths. 




மற்றும் நான்காவது பூமிக்கு முன்பு அதாவது மூன்றாவது பூமி வரை உள்ள நாரகர்கள் குரூர பரிணாமமுடைய அசுர குமார தேவர்கள் மூலம் விளைவிக்கும் துன்பம் அனுபவிக்கின்றனர்.
எல்லா அசுர குமார்ர்களும் வன்மம் பாராட்டுபவர்களாக இருப்பதில்லை.

அம்பாபரீஷ அசுரர்கள் பிறரைக் கடும் வேதனைக்குள்ளாக்குகிறார்கள்.

முதல் மூன்று நரக பூமிகளில் உள்ளவர்களுக்கு மட்டுமே துன்பம் விளைவிக்கிறார்கள்.

அவர்கள் நாரகியர்களை உருகிய இரும்புக் குழம்பினை குடிக்கச் செய்தும், செந்நிறத்தில் சூடான இரும்புத்தூண்களை தழுவச் செய்தும், கூரிய மூள்ளுடைய (கூடசால்மலி) மரத்தில் ஏற/இறங்க செய்தும் துன்பத்தில் ஆழ்த்துகின்றனர்.

அவ்வசுர குமாரர்கள் நரகியர்களை சம்மட்டியால் அடித்தும், வாளால் அறுத்தும், கத்தியால் வெட்டியும், கொதிக்கும் எண்ணையை ஊற்றியும், சூடான இரும்பு வாணலியில் இட்டு வறுத்தும், நெருப்பில் இட்டும், யந்திரத்தின் கீழ் வைத்து நசுக்கியும் துன்புறுத்துகின்றனர்.

ஒருவருகொருவர் சண்டை மூட்டி சண்டையிட்டு கண்டு மகிழ்வர்.

அவ்வாறு துன்பப்பட்டாலும் ஆயுள் கர்மம் முடியும் வரை அவர்கள் இறப்பதில்லை.

-------------

அப்படியானால் அவர்கள் ஆயுள் எவ்வளவு?..... 

---------- 



நரகர்கள் ஆயுள்.


    தேஷ்வேகத்ரிஸப்ததச ஸப்ததச த்வாவிம்சதி த்ரயம்ஸ்த்ரி சத்ஸாகரோபமா சத்த்வனாம் பரா ஸ்திதி - (அ3 #6) = (92)


    तेष्वेकत्रि सप्त दशसप्तदशत्दवा विंशति त्रयस्त्रिंशत्सागरोपमासत्त्वानां परा स्थितः


    Tesveka-tri-sapta-dasha-saptadasha-dvavinshati-trayastrinshat-sagaropama sattvanam para sthitih




தேஷு – நரக பிலகங்களில்; ஸத்த்வானம் – இருக்கின்ற நரக ஜீவன்களுக்கு; ஸ்திதி- ஆயுள் நிலை; பரா – முதல் இரண்டு என வரிசையாக; ஏக த்ரிஸப்ததச ஸப்ததச த்வாவிம்சதி த்ரயம்ஸ்த்ரி சத் – 1,3,7,10, 17, 22, 33; ஸாகரோபமா – கடற் காலமாகும்.


The maximum life span of the infernal beings in the first to seventh infernal earths is one, three, seven, ten, seventeen, twenty-two and thirty-three sagar respectively.



முதல் நரக பூமியில் ஆயுள் ஒரு கடற்காலம்.
இரண்டாம் நரக பூமியில் ஆயுள் மூன்று கடற்காலம்.
மூன்றாம் நரக பூமியில் ஆயுள் ஏழு கடற்காலம்.
நான்காம் நரக பூமியில் ஆயுள் பத்து கடற்காலம்.
ஐந்தாம் நரக பூமியில் ஆயுள் பதின்ஏழு கடற்காலம்.
ஆறாம் நரக பூமியில் ஆயுள் இருபத்திரண்டு கடற்காலம்.
ஏழாம் நரக பூமியில் ஆயுள் முப்பத்துமூன்று கடற்காலம்.


குறைந்த ஆயுளும் உண்டு. அதாவது 10000 ஆண்டுகள்.
நடுவில் மரணம் ஏற்படுவதில்லை.
---------------

ஏழு பூமிகளை உள்ளடக்கிய நரகங்களை கீழுலகம் எனப்படுகிறது. அடுத்து திர்யக்லோகம் (transverse) நடுவுலம் பற்றி காண்போம்....

---------------


நடு உலகம்


      ஜம்பூத்வீபலவணோதாதய: சுபநாமானோ த்வீபஸமுத்ரா:  - (அ3 #7) = (93)


       जम्बूद्वीप लवणोदादयः शुभनामानो द्वीपसमुद्रा


      Jambudvipa-lavanodadayah shubhanamano dvipa-samudrah



ஜம்பூத்வீபலவணோதாதய: - ஜம்பூதீபம், லவண சமுத்திரம் முதலான; சுபநாமான: - சுப பெயர்களுடைய; த்வீபஸமுத்ரா: - தீப, ஸமுத்திரங்கள் உள்ளன.

Jambudvipa etc. and Lavanoda etc. are the auspicious names of the continents and the oceans respectively.



இந்த மத்யம லோகத்தில் நல்ல(auspicious) பெயர்களுடைய ஜம்பூத்வீபம் முதலான த்வீபங்களும் (continents) லவண சமுத்திரம் முதலான சமுத்திரங்களும் (oceans) இருக்கின்றன.

உலகத்தில் எத்தனை சுபப் பெயர்கள் உள்ளதோ அப்பெயர்களை உடையதே இவ்வெல்லா தீபங்களும், சமுத்திரங்களாகும். அவை:


கண்டம்      -   சமுத்திரம்
-------------     ------------
ஜம்பூத்வீபம்      லவணோத
தாதகீகண்ட      காலோத
புஷ்கரவர        புஷ்கரவர
வாஊணீவர      வாஊணீவர
க்ஷீரவர          க்ஷீரவர
க்ருதவர         க்ருதவர
இக்ஷுவர        இக்ஷுவர
நந்திஸ்வர       நந்தீஸ்வர
அருணவர       அருணவர

இப்படி எண்ணற்ற கண்டங்களும், தீபங்களும், சமுத்திரங்களும் ஸ்வயம்புரமண தீபம், சமுத்திரம் வரை உள்ளன.
--------

மேலும் இவற்றின் நீள, அகலம், அமைப்பு பற்றி காண்போம்.....

---------- 




      த்விர்த்விர் விஷ்கம்பா: பூர்வபூர்வபரிக்ஷேபிணோ வலயாக்ருதய  - (அ3 #8) = (94)


     द्विर्द्विर्विष्कम्भाः पूर्वपूर्वपरिक्षेपिणो वलयाकृतयः


     Dvirdvirvishkambhah purva-purva-parikshepino valayakratayah




த்விர்த்விர் விஷ்கம்பா: - இரண்டு இரண்டு மடங்கு அகலமுடைய; பூர்வபூர்வபரிக்ஷேபிணோ – முந்தய தீவு, சமுத்திரங்களை வளைத்துக் கொண்டிருக்கின்றன; வலயாக்ருதய: - வளயல் போன்று வட்டவடிவமானவை.

Each of the continent is encirled by an ocean and each ocean is encircled by a continent. Each continent and ocean is circular and has a diameter twice that of the immediately preceeding ocean or continent.


முதலில் குறிப்பிட்டுள்ள லவண சமுத்திரத்தின் விஸ்தீரணம் முதலாவது கண்டமான ஜம்பூத்தீவைக் காட்டிலும் இரு மடங்காகும்.

லவண சமுத்திரத்தைக் காட்டிலும் தாதகீகண்ட இருமடங்கும்;

இவ்வாறு ஒவ்வொரு சமுத்திரமும், கண்டமும் இரு இரு மடங்கு பரப்பில் அதிகமாக உள்ளன.

இந்த தீப சமுத்திரங்கள் ஒன்றையொன்று சுற்றி வளைத்து; வளையல் போல் வட்டமாக அமைப்பில் உள்ளன.

-----------

ஜம்பூத்தீவத்தின் விஸ்தீரணம் எவ்வளவு எனக் கண்டால் மற்றவைகள் தெரிந்து விடும் அல்லவா....
---------- 


நடு உலகம் – ஜம்பூத்வீபத்தின் பரப்பு



    தன்மதயே மேருநாபிர்வ்ருத்தோ யோஜனசதஸஹஸ்ரவிஷ்கம்போஜம்பூத்வீப:  - (அ3 #9) = (95)


    तन्मध्ये मेरुनाभिर्वृत्तो योजनशतसहस्रविषकम्भो जम्बूद्वीपः


   Tanmadhye-merunabhirvratto-yojana-shatasahashtra-vishkambho jambudvipah



தன்மதயே – அந்த எண்ணிலடங்காத தீப  ஸமுத்திரங்களுகு மத்தியில் மேருநாபிர்- மேரு மலை தொப்புள் போல; வ்ருத்த- வட்டமான; யோஜனசதஸஹஸ்ரவிஷ்கம்போ  - ஒரு லக்ஷம் யோஜனை அகலமுடைய;  ஜம்பூத்வீப – ஜம்பூதீபம் உள்ளது.


Jambudvipa continent, which is round and one hundred thousand yojanas in diameter, is at the center of these oceans and the continents. Mount Meru is at the centre of this continent like the navel in the body.



அந்த த்வீப-சமுத்திரங்களின் மத்தியில் ஜம்பூத்வீபம் உளது.  மனிதருக்கு உடல் நடுவில் நாபியை (தொப்புள்) போல மேரு மலையையும், சூரிய மண்டலம் போல வட்ட வடிவமாயும், ஒரு லட்சம் யோசனை விஸ்தீரணமும் உடையதாக இருக்கிறது.


இயற்கையாக தோன்றிய நாவல்(ஜம்பூத்) மரங்கள் சூழ்ந்திருப்பதால் ஜம்பூத்வீபம் என அழைக்கப்பட்டது. நாவலந்தீவு என்று தமிழில் அழைக்கப்படுகிறது.

தொடக்கமும், அழிவுமில்லாத; மண்ணால் ஆன; சுயம்புவாக தோன்றிய நாவல் மரங்களும் உடன் பரிவார மரங்களும்  உடைய இந்த தீவு ஒரு லட்சம் யோசனை பரப்பளவு உடையது.

----------
நடுவுலகம் இரத்தின பிரபை பூமியின் மேல் அடுத்ததாக இருக்கிறது.

வளையல் போன்று (மேரு மலையைச் சுற்றி) ஒரு லட்சம் யோசனை பரப்பில் ஜம்பூதீபம் வட்டமான வடிவில் (சூரியன் போல் நடுவில்) அமைந்துள்ளது. 

அதனைச் சுற்றி (மேரு மலையை மையமாக வைத்து) , அடுத்த வட்டமாக தாதகீகண்டம், சமுத்திரம் அமைந்துள்ளது. (வட்டத்திற்குள் வட்டமாக ஜம்பூத்வீபம் உள்ளது, concentric circle)

 இப்படியே வட்டத்தை சுற்றிய வட்டமாக எண்ணற்ற தீபங்கள் (கண்டங்கள், சமுத்திரங்கள்) அமைந்து, கடைசி சுற்று வட்ட பிரதேசமாக ஸ்வயம்புரமண தீபம், சமுத்திரத்துடன் முடிவடைகிறது.

(சூரிய குடும்பத்தை நினைவு கூர்ந்தால் (ஒப்பீட்டில்) புரியும் என நம்புகிறேன்.)

அனைத்திற்கும் நடுவில் உள்ள மேருமலை 100040 யோசனையாகும். அதில் 1000 யோசனை பூமிக்கு அடியில் உள்ளது.

40 யோசனை அளவுக்கு உச்சிபகுதி (சூலிகா, peak portion) இருக்கிறது. ஆக மீதி 99000 யோசனை பூமியின் சமதளத்திலுள்ளது.

ஆரம்பத்தில் அதன் பூமி விஸ்தீரணம் 10000 யோசனைகளாகும்.

மேருவுக்கு மூன்று பகுதிகள் (காண்டங்கள்) உள்ளன. அதாவது 5000, 62500, 36000 யோசனைகள் என்ற  இடங்களில் அமைந்துள்ளது.

நான்கு வனங்கள் அதில் உள்ளது. ஒன்று பூமியின் மீதும், மற்ற மூன்றும்  மூன்று மேடைகளின் மீதும் முறையே பத்ராஸலம், நந்தனம், ஸெளமனஸம், பாண்டுகம் என்ற பெயரில்  அமைந்துள்ளன.

இந்த நான்கு வனங்களில் நான்கு திசைகளிலும் 16 சைத்யாலயங்கள் உள்ளன.

பாண்டுக வனத்தில் நான்கு திசைகளிலும் நான்கு பாண்டுக சிலைகள் மஞ்சள் நிறத்தில் இருக்கின்றன.

அவற்றை சுற்றியுள்ள அந்தந்த திசைகளின் க்ஷேத்திரங்களில்  தோன்றியிருக்கும் தீர்த்தங்கர்ர்களுக்கு அப்ஷேகம் நடைபெறுகிறது.
---------------

ஜம்பூத்வீபம் ஆறு மலைகளால் பிரிக்கப்படுவதால் ஏழு க்ஷேத்திரங்கள் உள்ளது. அவையாவை.....

---------- 

 நடு உலகம் – ஜம்பூத்வீபத்திலுள்ள க்ஷேத்திரங்கள்


     பரதஹைமவதஹரிவிதேஹரம்யக ஹைரண்யவதைராவதவர்ஷா: க்ஷேத்ராணி - (அ3 #10) = (96)


     भरतहेमवतहरिविदेह रम्यक हैरण्ेयवतैरावतवर्षाः क्षेत्राणि


    Bharatahaimavataharivideha ramyaka-hairanyavatairavatavarshah kshetrani




பரத வர்ஷம், ஹைமவத வர்ஷம், ஹரி வர்ஷம், விதேஹ வர்ஷம், ரம்யக வர்ஷம், ஹைரண்யவத வர்ஷம், ஐராவத வர்ஷம் என ஏழு க்ஷேத்திரங்கள் உள்ளன.

Bharata, Haimavata, Hari, Videha, Ramyaka, Hairanyavata and Airavata are the seven regions.




இவ்வேழு க்ஷேத்திரங்களும்  தொடக்கமற்ற காலந்தொட்டே யுள்ளன.

வடக்கே ஹிமவான்  மலைத்தொடராலும், மற்ற மூன்று திசைகளிலும் சமுத்திரங்களால் சூழப்பட்டு, வில் போன்ற அமைப்புள்ளது.

இது விஜயார்த்த மலையாலும், கங்கை, சிந்து என்ற இரு நதிகளால் ஆறு கண்டங்களாக உள்ளது.
ஹைமவத க்ஷேத்ரம் அம்மலைக்கு வடக்கிலும், பெரிய ஹிமவான மலைக்கு தெற்கிலும், மற்ற இரு திசைகளும் சமுத்திரங்களால் சூழப்பட்டுள்ளன.

இது போன்று மற்ற பிரதேசங்களும் மலைகளாலும், நதிகளால் சூழப்பட்டும் உள்ளன.
---------

அந்த ஆறு குசாலமலைத்தொடர்களைப் பற்றி அடுத்து காண்போம்.....

------------ 


நடு உலகம் – ஜம்பூத்வீபத்திலுள்ள மலைகள்


     தத்விபாஜின: பூர்வாபராயதாஹிமவன்மஹாஹிமவன்நிஷதநீலருக்மி சிகரிணோ வர்ஷதரபர்வதா:  - (அ3 #11) = (97)


    तद्विभाजिनः पूर्वापरायता हिमवन्महाहिमवन्निषधनीलरुक्मि शिखरिणो वर्णधरपर्वताः


    Tadvibhajinah purvaparayata himavanmahahima vannishadha-nila-rukmi-shikharino varsha-dhara-parvatah



தத்விபாஜின: - அந்த க்ஷேத்திரங்களைப் பிரிக்கும்; பூர்வாபராயதா: - கிழக்கு மேற்காக நீண்டுள்ள; ஹிமவன், மஹாஹிமவன், நிஷத, நீல, ருக்மி, சிகரி என;   வர்ஷதரபர்வதா: - க்ஷேத்திரங்களை உடைய ஆறு மலைகள்.


The mountain chains Himavan, Mahahimavan, Nishadha, Nila, Rukmi, and Shikhari, running east to west, divide these seven regions.



பரதம் முதலான ஏழு பிரதேசங்களையும் பிரிப்பது கிழக்கு மேற்கில் நீண்டுள்ள ஹிமவன், மஹாஹிமவன், நிஷத, நீல, ருக்மி; சிகரி என்னும் குலாசல மலைத் தொடர்கள் ஆகும்.

கிழக்கு  மேற்கு முனைகள் லவண சமுத்திரத்தை தொடுகின்றன.

இம்மலைகள் தொடக்கமற்ற காலத்திலிருந்தே இருந்து வருகின்றன.

100 யோசனை உயரமுள்ள ஹிமவான் மலைத்தொடர்; பரத மற்றும் ஹைமவத க்ஷேத்ரங்களில் எல்லையோரத்தில் உள்ளது.

200 யோசனை உயரமுள்ள மாஹாஹிமவான், ஹைமவத மற்றும் ஹரியை பிரிக்கிறது.

400 யோசனை உயர நிஷத; விதேகத்திற்கு தெற்கிலும், ஹரிக்கு வடக்கிலும் உள்ளது.

மற்ற மூன்று மலைத்தொடர்களான நீல, 400 யோசனையும் , ருக்மி, 200 யோசனையும், சிகரி, 100 யோசனையும் உள்ளவை; அதே போல் மற்ற மூன்று க்ஷேத்ரங்களுக்கு இடையே அமைந்துள்ளன.

அனைத்து மலைகளும் உயரத்தில் நான் கில் ஒரு பங்கு அஸ்திவாரமாக அமைந்துள்ளது.
-------------

அவற்றின் நிறங்களைக் காண்போம்.....

-------------- 




நடு உலகம் –மலைகளின் நிறங்கள்



      ஹேமார்ஜுனவதபனியவைடுர்யரஜதஹேமமயா: - (அ3 #12) = (98)


       हेमार्जुनतपनीय वैडूर्यरजत रेममयाः


      Hemarjunatapaniyavaiduryarajata- hemamayah



மேற்கூறிய ஆறு மலைத்தொடர்களும் முறையே பொன், வெள்ளி, தங்கம், நீலம், வெள்ளி, பொன் ஆகிய நிறங்களைக் கொண்டதாக இருக்கின்றன.


The colour of these six mountains are golden like gold, white like silver, red like hot gold, blue like vaidurmani, white like silver and golden like gold respectively.



ஹிமவான் மலை சீனப்பட்டு போன்று  பொன்னிறமாய் இருக்கிறது.

மஹாஹிமவான் வெள்ளி நிறத்திலும்;

நிடதம் மலை காலைச்சூரியன் போல தங்க நிறம் கொண்டும்;

நீல மலை மயில் கழுத்து போல நீலமாகவும்;

ருக்மி மலை வெள்ளி நிறத்தை கொண்டும்;

சிகரி மலை பட்டுப் போல பொன்நிறமாயும் உள்ளன.

--------------
மேலும் சில  சிறப்பான செய்திகளாக......

---------------- 



நடு உலகம் –மலைகளின் சிறப்புகள்


       மணிவிசித்ர பார்ஸ்வா உபரி மூலே ச துல்யவிஸ்தாரா:  - (அ3 #13) = (99)


      मणिविचिक्षपर्श्वा उपरि मूले च तुल्यविस्ताराः


     Manivichitraparshva upari mule cha tulya-vistarah



மணிவிசித்ர பார்ஸ்வா – மணிகளாலே விசித்திரமான (பல வண்ணமான) பக்கங்களை; உபரி – மேலே; மூலே – கீழே; ச – மற்றும்  ; துல்யவிஸ்தாரா – ஒத்த அளவுடையது.

Those mountains are of equal width at the foot, in the middle and at the top, and their sides are studded with various jewels.


அந்த மலைகள் அநேக வித மணிகள் பொருந்திய பக்கங்களையும், மேலேயும், கிழேயும், மற்றும் நடுவிலும் சமமாக ஒரே அளவினை உடையனவாக இருக்கின்றன.

‘ச’ என்ற சொல் நடுவிலே என்பதை குறிப்பதற்காக சேர்க்கப்பட்டுள்ளது.

இவைகளின் விஸ்தீரணம் அடியிலும், நடுவிலும் மற்றும் உச்சியிலும் ஒரே அளவினதாக இருக்கிறது.

-----------
அடுத்து அங்குள்ள பொய்கைகளைக் காண்போம்.....

----------- 




நடு உலகம் – பொய்கைகள்


       பத்மமஹாபத்மமதிகிஞ்சகேசரிமஹாபுண்டரீகபுண்டரீகா ஹ்ருதாஸ்தேஷாமுபரி  - (அ3 #14) = (100)


      पद्ममहापद्मतिगिञ्छकेसरि महापुण्डरीकपुण्जरीकाहृदास्तेषामुपरि


     Padma-mahapadmatiginchha-kesari-mahapundarika-pundarika hradasteshamupari



ஹ்ருதாஸ் – ஆறு பெரிய குளம்; தேஷாம்- மேலே; உபரி – அந்த மலைகளின்


Padma, Mahapadma, Tiginchha, Kesari, Mahapundarika and Pundarika respectively are the lakes on the top of these mountains.



அந்த மலைத்தொடர்களில் பத்மம், மஹாபத்மம், திகிஞ்சம், கேசரி,மஹாபுண்டரீகம், புண்டரீகம் என்னும் ஆறு பொய்கைகள் இருக்கின்றன.

முதல் மலை ஹிமவனில் பத்மம்,

இரண்டாம் மலையில் மஹாபத்மம்,

மூன்றாம் மலையில் திகிஞ்சம்,

நாலாம் மலையில் கேசரி,

ஐந்தாம் மலையில் மஹாபுண்டரீகம்,  

ஆறாம் மலையில் புண்டரீகம்

என பெயருடைய பெரிய குளங்கள் இருக்கின்றன.
----------
அடுத்து வரும் சூத்திரங்களில் பொய்கைகள் பற்றி காண்போம்....




-----------



 நடு உலகம் – பொய்கைகள்


        பிரதமோ யோஜன ஸஹஸ்ராயா மஸ்ததர்த்த விஷ்கம்போ ஹ்ருத:  - (அ3 #15) = (101)


        प्रथमो योजनसहस्रायामस्तदर्धविषकम्भो ह्रदः

   
    Prathamo yojanasahastraya-masta- darddhavishkambho hradah



பிரதம – முதல்;  யோஜன ஸஹஸ்ராயாம – ஆயிரம் யோசனை நீளமாக; ஸ்ததர்த்த விஷ்கம்ப – அதில் பாதி 500 யோசனை அகலம்,  ஹ்ருத: - குளம்.


Padma, the first lake is 1,000 yojanas in length and 500 yojana in breadth. 



பத்மப் பொய்கை கிழக்கு மேற்காக ஒரு ஆயிரம் யோசனை நீளமானது.

வடக்கு தெற்கில் 500 யோசனை அகலமானது.

அதன் அடி வஜ்ரத்தினால் ஆக்கப்பட்டது.

கரைகள் பலவித மணிகளாலும் மற்றும் பொன்னாலும் ஆக்கப்பட்டது.




-----------



நடு உலகம் – பொய்கைகள்


      தஸயோஜனாவகாஹ - (அ3 #16) = (102)


      दशयोजनावगाहः


     Dashayojanavagahah


தஸயோஜனாவகாஹ – பத்து யோசனை ஆழமுடையது.


Depth of the first lake is ten yojans.  



பத்ம பொய்கை 10 யோசனை ஆழமுடையது.
---------------
அப்பொய்கையைப் பற்றிய மேலும் அறிய...

-----------



நடு உலகம் – பொய்கைகள்



      தன்மத்யே யோஜனம் புஷ்கரம்  - (அ3 #17) = (103)


      तन्मध्ये योजनं पुष्करम्


      Tanmadhye yojanam pushkaram



தன்மத்யே – அந்த குளத்தின் மத்தியில்;  யோஜனம் – ஒரு யோசனையுடைய;  புஷ்கரம் – தாமரை இருக்கிறது. 


In the middle of this first lake, there is a lotus of the size of one yojana.



அடர்த்தியான இதழ்களை உடைய இக் கமலத்தின் இதழ் கால் யோசனை அளவுடையது.

அதன் பூத்தளத்தினுடைய அகலம் அரை யோசனை யாகும்.

ஒரு யோசனை நீளம், அகலம் கொண்டது.

இந்த கமலத்தின் தண்டு நீர் தலத்திலிருந்து அரை யோசனை உயரத்தில் உள்ளது.

---------
அந்த கமலம் தாவரம் அன்று, மண்ணுடலி ஆகும். யாராலும் செய்யப் படவில்லை. அனாதி காலமாக உள்ளது.


-----------




நடு உலகம் – பொய்கைகள்



        தத்த்விகுணத்விகுணா ஹ்ருதாய: புஷ்கராணி ச  - (அ3 #18) = (104)


       तद्द्विगुणद्विगुणाह्रदः पुष्कराणि च


       Taddvigunadviguna hradah pushkarani cha



மஹாபத்மம், திகிஞ்சம் ஆகிய இரண்டு பொய்கைகளும், தாமரைகளும், பத்மப் பொய்கையின் நிள-அகலத்திலும், ஆழத்திலும் தாமரையினைக் காட்டிலும் இரு மடங்குகளாக இருக்கின்றன.

Size of Mahapadma lake and the lotus in it is double that of Padma lake. Similarly the size of Tiginchha lake and the lotus is double that of Mahapadma lake. Kesri, Mahapundrika and Pundrika are similar to Tiginchha, Mahapadma and Padma respectively.


பத்மப் பொய்கையின் நீள, அகல, ஆழ அளவுகளைக் காட்டிலும் மஹாபத்மப் பொய்கையின் அளவு இரு மடங்குகளாக உள்ளன.

மஹாபத்மப் பொய்கையைக் காட்டிலும் திகிஞ்சப் பொய்கையின் நீளம், அகலம், உயரம் இரு மடங்குகளாக இருக்கின்றன.

அதே விகிதாசாரத்தில் தாமரையின் அளவுகளும் அமைந்துள்ளன.
------------
விதேக தேசம் வரையுள்ள குளங்களும்,  அவற்றிலுள்ள தாமரை மலர்களும் இரண்டிரண்டு மடங்கு பெரியனவாக உள்ளன.

அதைத் தாண்டிய பின்னர், இதே வரிசையில் இரண்டிரண்டு மடங்கு குறைவாக உள்ளன.



-----------



   நடு உலகம் – பொய்கைகளில் உள்ள தேவியர்



      தந்நிவாஸிந்யோ தேவ்ய: ஸ்ரீஹ்ரீத்ருதிகீர்த்தி லக்ஷ்ம்ய: பல்யோப மஸ்திதய: 
ஸஸாமாநிகபரிஷதகா: - (அ3 #19) = (105)


       तन्निवासिन्यो देव्यः श्री ह्रीधृतिकीर्तिबुद्धिलक्ष्म्यः पल्योपमस्थितयः ससामानिक परिषत्काः


     Tannivasinyo-devyahsri-Shri-dhrti-kirti-buddhi-lakshmyah palyopamasthitayah sasamanika-parishatkah



தந்நிவாஸிந்ய – கமலங்களில் வாழ்பவர்;  தேவ்ய:- தேவியர்;  ஸ்ரீஹ்ரீத்ருதிகீர்த்தி லக்ஷ்ம்ய: - (ஆறு தேவியர்); பல்யோப மஸ்திதய: -  ஒரு பல்யம் ஆயுளுடைய; ஸஸாமாநிகபரிஷதகா: - சாமனிக மற்றும் பரிஷத தேவரோடு கூடிய;


Devis called Sri, Hri, Dhriti, Kirti, Buddhi and Laksmi respectively live with devas of the Samanikas and Parisatkas varieties in these lotuses. The life time of these devis is one palya.



அந்த தாமரைகளில் ஒரு பல்யம் ஆயுள் உடைய சாமானிகம் மற்றும் பரிஷத் தேவரோடு கூடிய ஸ்ரீ, ஹ்ரீ, த்ருதி, கீர்த்தி, புத்தி, லக்ஷ்மி எனும் ஆறு தேவியர்கள் வாழ்கின்றனர்.

இந்த தாமரைகளின் பூத்தளத்தின் (கர்ணிகா) நடுவில் முழு நிலவின் ஒளியைப் போல, உறை பணி வெண்மை நிறத்தில் ஒரு கோச நீள, அகலம், அதற்கு சிறிது குறைவான அளவு உயரமுள்ள மாளிகைகள் இருக்கின்றன.

பத்ம மாளிகையில் ஸ்ரீதேவியும், மாஹபத்ம மாளிகையில் ஹ்ரீயும், திகிஞ்சப் பொய்கையில் த்ருதி தேவியும், கேசரியில் கீர்த்தி தேவியும்,  மஹாபுண்டரீகப் பொய்கையில் புத்தி தேவியும், புண்டரீகத்தில் லக்ஷ்மி தேவியும் வசிக்கின்றனர்.

இவர்களது ஆயுள் ஒரு பல்யயோபமம் ஆகும்.

இத்தேவியரின் காவலர்களாக (கணவர்கள் இல்லை) சம அந்தஸ்துள்ள தேவர்கள் (சாமானிக, பரிஷத்) சூழ்ந்துள்ள தாமரைகளின் மாளிகையில் வாழ்கின்றனர்.

அத்தேவியர் அனைவரும் கன்னிகளாவர்.
------------

அடுத்து நதிகளைக் காண்போம்......

--------------- 

நடு உலகம் – நதிகள் பதினான்கு



     கங்காஸிந்துரோஹித்ரோஹிதாஸ்யஹரித்தரிகாந்தா ஸீதாஸீதோதாநாரீநரகாந்தாஸ்வர்ணரூப்யகூலா ரக்தாரக்தோதா ஸ்ரிதஸ்தந்மத்யகா:  - (அ3 #20) = (106)


    गंगासिन्धु रोहिद्रोहितास्याहरिद्धरिकान्तै सीतासीतोदानारीनरकान्ता सुवर्ण रूप्यकूला रक्तारक्तोदाः सरितस्तन्मध्यगाः


   Ganga-sindhu-rohidrohitasya-hariddharikanta-sita-sitoda-nari-narakanta-suvarna-rupya-kularakta-raktodah- saritastanmadhyagah



கங்கா; ஸிந்து ; ரோஹித்; ரோஹிதாஸ்ய; ஹரித்; ஹரிகாந்தா; ஸீதா; ஸீதோதா; நாரீ; நரகாந்தா; ஸ்வர்ண; ரூப்யகூலா; ரக்தா; ரக்தோதா – நதிகள் (பெயர்கள்)  ஸ்ரித – பதினான்கு நதிகள்; தந்மத்யகா: - அந்த ஆறு குளங்களிலிருந்து பாய்கின்றன


The Ganga-the Sindhu, the Rohit-the Rohitasya, the Harit- the Harikanta, the Sita-the Sitoda, the Nari-the Narakanta, the Suvarnakula-the Rupyakula and the Rakta-the Raktoda are the seven pairs of two rivers each flowing across these seven regions.




கங்கா; ஸிந்து ; ரோஹித்; ரோஹிதாஸ்ய; ஹரித்; ஹரிகாந்தா; ஸீதா; ஸீதோதா; நாரீ; நரகாந்தா; ஸ்வர்ண; ரூப்யகூலா; ரக்தா; ரக்தோதா என்னும் பெயருடைய பதினான்கு நதிகள் அந்தப்  பரத க்ஷேத்ரம் முதலான தேசங்களில் ஓடுகின்றன.

மேற்குரிய ஹிமவான் மலையில் மூன்று நதிகள் பாய்கின்றன. 

கடைசி மலையில் மூன்று நதிகள்  பாய்கின்றன.  

மற்ற நான்கு மலைகளில் ஒவ்வொன்றிலும் இரண்டு,  இரண்டு நதிகள் பாய்கின்றன.
----------
_அடுத்து நதிகள் எந்த திசைகளில் பாய்கின்றன......_


------------


நடு உலகம் – நதிகள் பதினான்கு




   த்வயோர்த்வயோ பூர்வா: பூர்வகா:  - (அ3 #21) = (107)

     
  द्वयोर्द्वयोः पूर्वाः पूर्वगाः

    
  Dvayordvayoh purvah purvagah


த்வயோர்த்வயோ – இரண்டு, இரண்டு நதிகளில் ; பூர்வா: - முதல் முதல் நதிகள்; பூர்வகா: - கிழக்கே போகின்றன.

The first of each pair of these rivers flows eastwards and fall into the eastern ocean.



கங்கா; ரோஹித்; ஹரித்; ஸீதா; நாரீ; ஸ்வர்ண; ரக்தா;  என்ற நதிகள் ஏழும் கிழக்கு நோக்கி பாய்ந்து சமுத்திரத்தில் போய் கலக்கின்றன.

--------------
மற்ற ஏழு நதிகளும்....



------------


நடு உலகம் – நதிகள் பதினான்கு



மற்ற ஏழு நதிகளான ஸிந்து ; ரோஹிதாஸ்ய; ஹரிகாந்தா; ஸீதோதா; நரகாந்தா; ரூப்யகூலா; ரக்தோதா மேற்கு நோக்கி பாய்ந்து சமுத்திரத்தில் கலக்கின்றன.
----------------

பத்மப் பொய்கையின் வடக்குத் துவாரத்தின் வழியாகப் புறப்படும் ரோஹிதாஸ்யா நதியும் மஹாபத்மப் பொய்கையின் தெற்கு துவாரத்தின் வழியாகப் புறப்படும் ரோஹித் நதியும் ஹைமவத க்ஷேத்திரத்தின் மத்தியில் பாய்கின்றன.

மகாபத்மப் பொய்கையின் வடக்குத் துவாரத்தின் வழியாகப் புறப்படும் ஹரிகாந்தா நதியும், திகிஞ்சப் பொய்கையின் தெற்கு துவாரத்தின் வழியாகப் புறப்படும் ஹரித் நதியும் ஹரிவர்ஷ க்ஷேத்ரத்தின் மத்தியில் பாய்கின்றன.

திகிஞ்சப் பொய்கையின் வடக்குத் துவாரத்தின் வழியாகப் புறப்படும் சிதோதா நதியும், கேசரிப் பொய்கையின் தெற்கு துவாரத்தின் வழியாகப் புறப்படும் ஸீதா நதியும் விதேக க்ஷேத்ரத்தின் மத்தியில் பாய்கின்றன.

கேசரிப் பொய்கையின் வடக்குத் துவாரத்தின் வழியாகப் புறப்படும் நரகாந்தா நதியும், மஹாபுண்டரீகப் பொய்கையின் தெற்கு துவாரத்தின் வழியாகப் புறப்படும் நாரீ நதியும் ரம்யக க்ஷேத்ரத்தின் மத்தியில் பாய்கின்றன.

மஹாபுண்டரீகப் பொய்கையின் வடக்குத் துவாரத்தின் வழியாகப் புறப்படும் ரூப்யகூலா நதியும், புண்டரீகப் பொய்கையின் தெற்கு துவாரத்தின் வழியாகப் புறப்படும் ஸ்வர்ணகூலா நதியும் ஹைரண்யவத க்ஷேத்ரத்தின் மத்தியில் பாய்கின்றன.

புண்டரீகப் பொய்கையின் கிழக்குத் துவாரத்தின் வழியாகப் புறப்படும் ரக்தா நதியும், புண்டரீகப் பொய்கையின் மேற்கு துவாரத்தின் வழியாகப் புறப்படும் ரக்தோதா நதியும் ஐராவத க்ஷேத்ரத்தின் மத்தியில் பாய்கின்றன.

பொய்கைகளும்     நதிகளும்

பத்ம                        -  கங்கை,  ஸிந்து, ரோஹிதாஸ்யா
மஹாபத்மா        -  ரோஹிதா, ஹரிகாந்தா
திகிஞ்சா               -  ஹரித், ஸீதோதா
கேஸரி                   -  சீதா, நரகாந்தா
மஹாபுண்டரீக- நாரி, ரூப்யகூலா
புண்டரீக              - ஸ்வர்ணகூலா, ரக்தா, ரக்தோதா.
----------------
_துணை நதிகள் பற்றிய வருணனையை காண்போம்...._

---------------



நதிகள் பதினான்குஉப நதிகள்


      சதுர்தச நதீ  ஸஹஸ்ர பரிவ்ருதா கங்கா சிந்து ஆதய:  நத்யா:  - (அ3 #23) = (109)


     चतुर्दशनदीसहस्रपरिवृता गंगासिन्ध्वादयो नद्यः


     Chaturdasha-nadi-sahastra-parivrata ganga-sindhvadayo nadyah



சதுர்தச நதீ  ஸஹஸ்ர பரிவ்ருதா- 14000 துணை நதிகளோடு  கூடியது;  கங்கா சிந்து ஆதய: - கங்கா, சித்து, ஆதாய;  நத்யா: - நதிகள்.


Each of Ganga and Sindhu, the first pair of rivers, has 14,000 tributaries. The number of tributaries doubles for each pair of subsequent rivers upto Sita-Sitoda, and thereafter it reduces to half for each pair of subsequent rivers.




கங்கா,  சிந்து முதலான இணை (ஜோடி) நதிகள் ஒவ்வொன்றும் பதினாங்காயிரம் துணை நதிகளோடு கூடி  இருக்கின்றன.

கங்கா, சிந்து நதிகள் ஒவ்வொன்றுக்கும் உபநதிகள் 14000 ஆகும்.

ரோஹித்,  ரோஹிதாஸ்யா நதியும் ஒவ்வொன்றுக்கும் உபநதிகள் 28000 ஆகும்.

ஹரித், ஹரிகாந்தா நதிகள் ஒவ்வொன்றுக்கும் உபநதிகள் 56000 ஆகும்.

சிதா, சீதோதா நதிகள் ஒவ்வொன்றுக்கும் 112000  ஆகும்.

நாரி, நரகாந்தா நதிகள் ஒவ்வொன்றுக்கும் 56000 ஆகும்.

சுவர்ணகூலா,  ரூப்யகூலா நதிகள்  ஒவ்வொன்றுக்கும்  உபநதிகள்  28000 ஆகும்.

ரக்தா, ரக்தோதா நதிகள் ஒவ்வொன்றுக்கும் உபநதிகள் 14000 ஆகும்.


------------------- 
பரத க்ஷேத்திரத்தின் பரப்பளவு காண்போம்.....


------------



பரத க்ஷேத்திரத்தின் பரப்பளவு



      பரத: ஷட்விம்சதி பஞ்ச யோஜனசத விஸ்தார: ஷட் ச ஏகோனவிம்சதி பாகா யோஜனஸ்ய  - (அ3 #24) = (110)


      भरतः षड्विंशतिपंचयोजनशतविस्तारः षट्चैकोनविंशतिभागायोजनस्य


      Bharatah-shadvinshati-pancha-yojana-shatavistarah-shat chaikonavinshatibhaga yojanasya



பரத: - பரத்;  ஷட்விம்சதி பஞ்ச யோஜனசத விஸ்தார: - 526 யோசனை;  ஷட் ச ஏகோனவிம்சதி பாகா யோஜனஸ்ய – ஒரு யோடனையில் 6/19 பகுதியாகும்.


Bharata is 526x6/19 yojans in width.



பரத க்ஷேத்திரத்தின் பரப்பு 526 யோஜனையும் பத்தொன்பதில் ஆறு பாகமும் அதாவது 526* 6/19 யோஜனையாகும்.

------------
மற்ற க்ஷேத்ரங்களின் விஸ்தீரணம் பற்றி காண்போம்....

------------



மற்ற க்ஷேத்திரங்களின் பரப்பளவுகள்


       தத்த்விகுண த்விகுண விஸ்தாரா வர்ஷதர வர்ஷா விதேஹாந்தா  - (அ3 #25) = (111)


      तद्द्विगुणद्विगुणविस्तारा वर्षधरवर्षा विदेहान्ताः


      Taddviguna-dvigunavistara varshadharavarsha videhantah



தத்த்விகுண த்விகுண விஸ்தாரா – இரண்டு  இரண்டு மடங்கு விஸ்தாரம் உடையன;_  _வர்ஷதர வர்ஷா – மலைகளும், க்ஷேத்திரங்களும்;  விதேஹாந்தா – விதேஹ_ _க்ஷேத்ரம்.

Width of the mountains and regions is double that of the previous one upto the Videha.


பரத க்ஷேத்திரத்திலிருந்து எவற்றின் அகலம் இரண்டு-இரண்டு மடங்காக இருக்கிறதோ அவை பரதத்திலிருந்து இரண்டு-இரண்டு மடங்கு அதிக விஸ்தாரணங்களை உடையவை.

அதாவது

பரத க்ஷேத்ரம்  - 526 x 6/19;

ஹிமவான்  மலை – 1052 x 12/19

ஹைமவத க்ஷேத்திரம் – 2105 x  5/19

மகா ஹிமவான்  4210 x 10/19

ஹரி க்ஷேத்ரம்  8421 x 1/19
-----       ----
விதேஹ க்ஷேத்ரம் 32684 x 4/19

இதன் பிறகு இதே முறையில் குறைந்து கொண்டே போகும்.
-------------

வடக்கில் உள்ள மலைகள், க்ஷேத்ரங்கள் விஸ்தீரணங்கள் பற்றிக் ......

--------------- 

க்ஷேத்திரங்களின் பரப்பளவுகள்


     உத்ரா தக்ஷணதுல்யா - (அ3 #26) = (112)


      उत्तर दक्षिणतुल्याः


      Uttara dakshinatulyah




உத்ரா – வடக்கு பக்கம்;  தக்ஷணதுல்யா – தெற்கு பகுதி போலவே

The mountains and the regions in the north are equal to those in the south (in the reverse order).



 விதேகத்திற்கு தெற்கு பக்கம் எப்படி அமைப்பு உள்ளதோ; அதற்கு நிகராக வடக்கு பகுதியில் உள்ள க்ஷேத்திரங்கள்,மலைகள், ஆறுகள், ஏரிகள் அதே பரப்பளவில் உள்ளது.




தேசங்கள்:

(வடக்கே உள்ள) ரம்யகம்  -  8421-1/19 யோசனை = (தெற்கே உள்ள) ஹரி;

(வ) ஹைரண்யவதம் -  2105-5/19 யோசனை = (தெ) ஹைமவதம்;

(வ) ஐராவதம்      -  526-6/19 யோசனை  = (தெ) பரதம்.

மலைகள்:

(வடக்கே உள்ள) நீலம் -  16842-2/19 யோசனை = (தெற்கே உள்ள) நிடதம்;

(வ) ருக்மி -  4210-10/19 யோசனை = (தெ) மஹாஇமவான்;

(வ) சிகரி -  1052-12/19 யோசனை = (தெ) இமவான்.     

இரண்டும் ஒரே அளவில் உள்ளன.
-----------
இரண்டிலும் வாழும் மனிதர்களின் அனுபவங்கள் ஒன்றாக உள்ளனவா....

------------ 
கால பரிவர்த்தனைகள்


       பரத ஐராவதயோர்வ்ருத்தி ஹ்ராஸென ஷட்ஸமயாப்யா முத்ஸர்பிண்யவஸர்பிணீப்யாம் - (அ3 #27) = (113)


      भरतैरावतविदेहाः कर्मभूमयोऽन्यत्र देवकुरूत्तरकुरुभ्यः


      Bharatairavatayorvraddhihnasau-shatsamayabhyamutsarpinya-vasarpinibhyam



பரத ஐராவதயோ – பரத ஐராவத க்ஷேத்திரங்களில் ; வ்ருத்தி ஹ்ராஸென – வளரும் குறையும்; ஷட்ஸமயாப்யாம் – ஆறுகாலர்மாக;  உத்ஸர்பிண்யவஸர்பிணீப்யாம் – உத்ஸர்ப்பிணீ மற்றும் அவஸர்ப்பணீயில்


Regeneration (Utsarpini) and degeneration (Avsarpini) aeon each has six distinct periods during which the humans in Bharata and Airavata regions experience the improvement and decline respectively in their age, body and the materials for their use.



பரதம், ஐராவதம் ஆகிய தேசங்களில் ஏறுகாலம்,  இறங்குகாலம் என காலமாறுபாடுகள் தோன்றும். இவை ஒவ்வொன்றும் ஆறு பிரிவுகள் உடையது. இக்காலமாறுபாடு தொடர்ந்து நடைபெறும்.

விளக்கம்:
இங்கு வாழும் மனிதர்களின் உயரம், ஆயுள், இன்பநிலை ஆகியவை வளர்பிறைச் சந்திரனைப் போல் வளரும் காலங்கள் ஏறுகாலம் எனவும் தேய்பிறைச் சந்திரனைப் போல் குறையும் காலங்கள் இறங்கு காலம் எனவும் அமையும்.  இவை ஒவ்வொன்றும் ஆறு பிரிவுகளை உடையது. இப்போது நடைபெறும் காலம் இறங்கு காலமாகும். இறங்குகாலப் பிரிவுகளாவன.

1. நன்னற்காலம்  :  நான்கு கோடானுகோடி கடற்காலம்
2. நற்காலம்     : மூன்று கோடானுகோடி கடற்காலம்
3. நற்தீக்காலம்  : இரண்டு கோடனுகோடி கடற்காலம்
4.தீநற்காலம்   : ஒரு கோடானுகோடி கடற்காலத்திற்கு 42000 வருடங்கள் குறைவாகும்.
5. தீக்காலம்  : 21000 ஆண்டுகள்
6. தீத்தீக்காலம் : 21000 ஆண்டுகள்

மொத்தம் பத்து கோடானுகோடி கடற்காலங்கள்

ஏறுகாலங்களில் மேற்கூறிய ஆறுகால மாறுபாடுகள் தலைகீழாக அமையும்.  அதாவது தீக்காலத்தில் தொடங்கி நன்னற்காலம் வரை அமையும்.  இறங்கு காலங்கள் ஆகிய இரண்டும் சேர்ந்த இருபது கோடானுகோடி கடற்காலம் ஒரு கல்பம் எனப்படும்.

------------
இப்போது நாம் இறங்கு காலத்தில் ஐந்தாம் பிரிவாகிய தீக் காலத்தில் வாழ்கின்றோம்.

மகாவீரர் தீக்காலத்தின் நான்காம் காலம் முடிய மூன்று ஆண்டுகள் 8-1/2 மாதங்கள் இருந்த நிலையில் முக்தி அடைந்தார்.  எனவே ஐந்தாம் (இறங்கு) காலத் தொடக்கம் கி.மு. 523 ஆம் ஆண்டு தொடங்கிற்று.  எனவே  ஐந்தாம் காலத்தின் 21000 ஆண்டுகளில், தற்போது சுமார்  2530 ஆண்டுகள்  கடந்துள்ளன என்பதை நினைவில் கொள்ளலாம்.

பரத, ஐராவத தேசங்களிலும் ஆரிய  கண்டம்  என்றழைக்கப்படும் பகுதிகளில் தான் இத்தகைய ஏறு, இறங்கு கால  மாற்றங்கள் உண்டாகின்றன. மிலேச்ச கண்டம் என்று அழைக்கப்படும் பகுதிகளில் இத்தகைய கால மாற்றங்கள்  இல்லை.

விதேக தேசத்திலும் இத்தகைய கால மாறுகை ஏற்படுவதில்லை.  அங்கு எப்பொழுதும் நான்காம் காலம் போன்ற நிலையே இருக்கும். அங்கு எப்பொழுதும் தீர்த்தங்கரர்கள் இருந்து கொண்டே இருப்பர்.


------------------------ 

 மற்ற க்ஷேத்திரங்களின் தன்மை


       தப்யாமபரா பூமயோவஸ்திதா: - (அ3 #28) = (114)


       ताभ्यामापारा भुमयोडवस्थितः


       Tabhyamapara bhumayo (a)vasthitah


தப்யாம் அபரா – பரத ஐராவத் க்ஷேத்ரங்கள் தவிர;  பூமய – மீதமுள்ள பூமிகள் அவஸ்திதா: - நிலையானவை

The regions other than Bharata and Airavata are stable and do not experience change of periods.


முன் கூறப்பட்ட ஏறு, இறங்கு கால மாற்றங்கள் பரத, ஐராவத க்ஷேத்திரங்கள் தவிர மற்ற இடங்களில் இல்லை.

அதாவது ஹமவதம், ஹரி, விதேஹம், ரம்யகம், ஹைரண்யவதம் என்னும் ஐந்து க்ஷேத்ரங்கள் ஏற்ற, இறக்கங்கள் இன்றி நிலையாய் இருக்கின்றன.

------------

இப்பூமியில் உள்ள மனிதர்களின் நிலையினைப் பற்றி காண்போம்....

------------- 

பிற தேசங்களில் உள்ளவர்களின் ஆயுள் நிலை போன்றவை.
   

ஏகத்வித்ரிபல்யோபமஸ்திதயோ ஹைமவதகஹாரிவர்ஷக தைவகுரவகா:  - (அ3 #28) = (114)


एक -द्वि -त्रि -पल्योपामस्थितय  हैमवतक-हरिवार्शाका  दैवाकुरावाकाह:


Eka-dvi-tri-palyopamasthitayo-haimavataka-harivarshaka daivakuravakah



ஏக த்வி த்ரி பல்யோபம ஸ்திதயோ – ஒன்று, இரண்டு, மூன்று பல்ய அயுள் உடையவர்கள்; ஹைமவதக ஹாரிவர்ஷக தைவ குரவகா: - ஹைமவ ஹரிவர்ஷ தேவ குரு இங்கே இருக்கிற மனிதர் விலங்குகள் முறையே.

The life span of the human beings in Haimavata, Hari and Devakuru (an area in the south of the Sumeru) are one, two and three palyas respectively; body height is 2000, 4000 and 6000 dhanush (1000 dhanush equal to 1 mile) respectively; take food after one, two and three days respectively; colour of the body is blue, white and golden respectively.



ஹைமவத க்ஷேத்திரத்தில் பிறந்தவரகளை  ஹைமவதகர் என்றழைக்கப்படுவது போலவே அந்தந்த பூமியில் உள்ளவர்களையும் (தேவகுருவினர்) அழைக்கப் பட்டனர்.

அவர்களின் ஆயுள் ஹைமவதத்தில் ஒரு பல்யம்; ஹரிவர்ஷ இரண்டு பல்யங்கள்; தேவகுரு பகுதியில் மனிதர்களின் ஆயுள் மூன்று பல்யோமங்களாகும்.

ஹைமவதத்தில்:

உயரம் 2000 வில், ஆகாரம் ஒரு நாள்  விட்டு ஒரு நாள் எடுத்துக் கொள்கிறார்கள்.

அழகிய நீலத்தாமரை நிறங்களில் இருக்கிறார்கள்.

அவையனைத்தும் போக பூமியாக, பத்துவகை கல்ப தருக்களால் அளிக்கப்படும் சுகங்களை அனுபவிக்கும் இடமாக, இருக்கின்றன.

ஹரிவர்ஷத்தில்:

ஆயுள் இரண்டு பல்யங்கள்; உயரம் 4000 வில்லாகும்; ஆகாரம் இரண்டு நாட்கள் இடைவெளியில் எடுத்துக் கொள்கின்றனர். சங்கு போன்ற வெண்மை நிறமாகும்.

தேவகுரு க்ஷேத்திரத்தில்;

ஆயுள் மூன்று பல்யங்கள்; உயரம் 6000 வில்லாகும்; ஆகாரம் மூன்று நாட்கள் இடைவெளியில் எடுத்துக் கொள்கின்றனர். பொன் போன்ற  நிறமாகும்.

-------------------


வடக்கு பகுதியில்  க்ஷேத்திரங்கள் எப்படி யுள்ளது... 

---------------- 


பிற தேசங்களில் உள்ளவர்களின் ................போன்றவை


ததோத்தரா: - (அ3 #30) = (116)


तथोत्तरः


Tathottarah



தெற்கு திசை போக  பூமிகள் போல வடக்கு திசை போக பூமிகளும் இருக்கின்றன.

The condition is the same in the north.



எவ்விதம் தென் திசை பகுதி விளக்கப்பட்டதோ, அப்படியே வடபகுதி மனிதர்களும் இருக்கின்றனர்.

ஹைரண்யவத க்ஷேத்திரங்களில் மனிதர்களைப் போலவே ஹைமவத மனிதர்களுக்கும்;

ரம்யக க்ஷேத்திரங்களில்  மனிதர்களைப் போலவே ஹரிவர்ஷ  பகுதி மனிதர்களுக்கும்;

உத்திரகுரு க்ஷேத்திர மனிதர்களைப் போலவே தேவகுரு பகுதி மனிதர்களுக்கும்

கூறியவை அனைத்தும் பொருந்தும்.

-----------

அடுத்து  ஐந்து விதேஹ பகுதியில் ஆயுள் பற்றிக் காண்போம்....

---------------- 


விதேஹத்தில் மனிதர்களின் ஆயுள்




விதேஹேஷு ஸங்க்யேய காலா: - (அ3 #31) = (117)


विदेहेषु संख्येयकालाः


Videheshu sankhyeyakalah


விதேஹேஷு – விதேஹ க்ஷேத்திரத்தில்;  ஸங்க்யேய காலா: - ஒரு கோடி பூர்வம் வருஷ ஆயுள்.

In Videhas the lifetime is numberable years, ranging from seventy lakh fifty six thousand crore years to  (this is a period anywhere from) a little less than forty eight minutes to little move than one instant body height 500 dhanush and take food daily. These conditions correspond to the end of third period of degeneration 

விதேஹ தேசத்தில் உள்ளவர்களின் ஆயுள் ஸங்க்யாத (numerable) வருட ஆயுள் ஆகும்.

அங்கு நற்தீக்காலத்தின் கடைசிக் காலத்திற்கு சமமான காலம் எப்பொழுதும் உள்ளது.

மனிதர்களின் உயரம் 500 வில்கள்; தினம் தோறும் உண்பார்கள்; உயர் ஆயுள் ஒரு கோடி பூர்வம், குறைவு ஒரு அந்தர் முகூர்த்தம் ஆகும்.

ஒரு பூர்வ கோடி என்பது 70 x 1,00,000 x 1,00,00,000 மற்றும்  56,000 x 1,00,00,000 = 7,05,60,00,00,00,000.
----------
அடுத்து பரத தேசம் பற்றி வேறு செய்திகள்....


------------------ 


 விதேஹத்தில் உள்ளவர்களின் ஆயுள் நிலை


        பரத்ஸ்ய விஷ்கம்போ ஜம்பூத்விபஸ்ய நவதிசதபாக: - (அ3 #32) = (118)


         भरतस्य विष्कम्भो जम्बूद्वीपस्य नवतिशतभागः


       Bharatasya vishkambho jambu-dvipasya navatishata-bhagah



பரத்ஸ்ய – பரத தேசத்தினுடைய;  விஷ்கம்ப – விஸ்தீரணம்;  ஜம்பூத்விபஸ்ய – ஜம்பூத்வீப விஸ்தீரணத்தில்;  நவதிசதபாக: - 190 ல் ஒரு பாகமாகும்.


The width of Bharata is one hundred and ninetieth part of that of Jambudvipa.



பரத தேசத்தினுடைய பரப்பு  ஜம்பூத்வீப பரப்பில்  190 ல் ஒரு பங்காக உள்ளது.

ஜம்பூத்வீபத்தினுடைய பரப்பாகிய ஒரு லட்சம் யோசனைகளில் 190 ல் ஒரு பாகமான, அதாவது 526 x 6/19 யோசனைகளாக உள்ளது.
----------
ஒரு மேடான பகுதி ஜம்பூத்வீபத்தை சுற்றியும்; அப்பால் வட்டமான உப்பு சமுத்திரம் 2,00,000 யோசனை பரப்பிலுள்ளது. அதற்கப்பால் தாதகீ கண்ட தீவிபம் உள்ளது. அதில் உள்ள க்ஷேத்திரங்களைக் காண்போம்...


--------------------- 

தாதகீ கண்டம்



            த்விர்த்தாதகீ கண்டே  - (அ3 #33) = (119)


          द्विर्धातकीखण्डे


           Dviradhatakikhande


த்வி: - இரண்டு இரண்டாக (மலைகள், தேசங்கள் ); தாதகீ கண்டே – தாதகீ கண்டத்தில்

In Dhatakikhanda regions, mountains, lakes, rivers etc are twice that in Jambudvipa.



நாவலந்தீவை தீவைச் சுற்றி இலவண சமுத்திரம் உள்ளது. 

இலவண சமுத்திரத்தை யடுத்து தாதகீ கண்டம் உள்ளது.

தெற்கிலிருந்து வடக்கு வரை நீண்டுள்ள இஷ்வாகார என்னும் இரு மலைகளால் பிரிக்கப்பட்டும் இருக்கிற தாதகீ கண்ட த்வீபத்தில் கிழக்கு; மேற்கு தாதகீ கண்டங்கள் ஒவ்வொன்றிலும்:

மலைகள், ஆறுகள், ஏரிகள் எல்லாமே  நாவலம் தீவில் உள்ளவற்றைப் போல் இரு மடங்காக உள்ளன.

இரண்டு பரதம்; இரண்டு ஐராவதம், இரண்டு விதேகம்; இரண்டு சுமேரு மலை என அக் கண்டத்தில் உள்ளன.
----------
The mountain ranges are midway between the regions as the spokes in a wheel.

And the regions are of the shape of the open space in a wheel.

There is dhaiaki tree (தாதகீ மரம்) with its attendant  trees in the same position of this tree that the renowned name of  Dhatakikhanda is derived.

The ocean surrounding the dwipa is Kaloda.(கலோத சமுத்திரம்)
____________
வட திசையில் உள்ள தேசங்களின் நிலைமை எப்படி யுள்ளது..... 
--------------- 

புஷ்கரவரத்தீவு


                 புஷ்கரார்த்தே ச  - (அ3 #34) = (120)


               पुष्कारर्धे च


                Pushkararddhe cha


புஷ்கரார்தே ச – புஷ்கரார்த்தே தீவிலும் ( இரண்டு, இரண்டு மடங்கு)


Pushkaradvipa is divided into two halves by the Manushottara mountain. Half of Puskaradvipa towards Dhatakikhanda also has regions, mountains, lakes, rivers etc. twice that in Jambudvipa.


புஷ்கரவர த்வீபத்து பாதி பாகத்திலும்; க்ஷேத்திரம், மலை முதலிய எல்லா அமைப்பும் ஜம்பூத்வீபத்தைப் போல இரண்டு,  இரண்டு மடங்கில் உள்ளன.
தாதகி கண்டத்தைச் சுற்றிக் காளோததி சமுத்திரம் உள்ளது. அதையடுத்து புஷ்கரவரத் தீவு உள்ளது.  அதன் முன்பகுதியில் மானிடர் வாழ்கின்றனர்.

அத்தீவின் நடுவில் இஷ்வாகார என்னும் ஒரு மலை அத்தீவை இரண்டாக பிரிக்கின்றது.

அதனை தாண்டி மனிதர்கள் செல்ல முடியாது. அதனால் மானுஷோத்திர மலை எனவும் அழைக்கின்றனர்.

பரத க்ஷேத்திரத்தில் ஒன்று, தாதகீ யில் இரண்டு, புஷ்கரவர தீவில் இரண்டு ஆக ஐந்து சுமேரு மலைகள் உள்ளன.

எனவே இரண்டரைத்தீவில் ஐந்து சுமேரு மலைகள்; 35 தேசங்கள்; 30 மலைகள்; 70 நதிகள்; 30 குளங்கள் உள்ளன.

மேலும் புஷ்கர மரங்களும் அவற்றுடன் வேறு மரங்களும் உள்ளன.
----------
அடுத்து மேலும் சில விபரங்களைக் காண்போம்....


------------ 


மனிதர்கள் வாழுமிடம்


ப்ராங் மானுஷோத்தராந்  மனுஷ்யா: - (அ3 #35) = (121)


प्राङ्मानुषोत्तरान्मनुष्याः


Pranmanushottaranmanushyah



ப்ராங் – முன்னே;  ; மானுஷோத்தராந்- மானுஷோத்திர மலைக்கு;  மானுஷ்ய: – மனிதர்கள்

There are human beings up to Manushottara as human beings can not go beyond this mountain.


மானுக்ஷோத்திர  மலைக்கு முன் வரை  மனிதர்கள்  இருக்கின்றனர்.

புஷ்கரவரத்தீவிற்கு மத்தியில் வளையல் போன்று மானுஷோத்திர மலையுள்ளது.

இந்த மலையின் உள்வட்டச் சுற்று வரையிலும் மனிதர்கள் வாழ்கின்றனர்.

அதற்கு வெளியே மனிதர்கள்; சிறப்பு ஆற்றல் (ருத்தி) பெற்ற வித்யாதர்களாலும் செல்ல முடியாது.

சமுத்காதத்தினையுடைய சிறப்பு ஆற்றலையுடைய முனிவர்கள் மற்றும் உபபாத பிறப்புடையவர்கள் மட்டும் செல்ல முடியும்.

ஜம்பூத்தீவு+ தாதகீ கண்டம்+ புஷ்கரவரதீவில் பாதி; ஆகியன (மொத்தம் 1+1+1/2) சேர்ந்து இரண்டரைத் தீவு ஆகும். இதில் லவண சமுத்திரமும், காளோத்தி சமுத்திரமும் இங்குள்ளன.

இரண்டரை தீவின் மொத்த பரப்பளவு 45 லட்சம் யோசனையாகும்.
--------------

நாவலந்தீவில் உள்ள மலைகள்.....

---------- 


மனிதர்களின் வகைகள்


           ஆர்யா மிலேச்சாச்ச: - (அ3 #36) = (122)


          आर्या म्लेच्छाश्च


           Arya Mlechchhashcha


ஆர்யா – ஆரியர்கள்;  மிலேச்சாச்ச: - மிலேச்சர்கள் என (இரு வகை)

The human beings are of two types i.e. civilized people and the barbarians.



இந்த இரண்டரை தீவில் இருப்பவர்களில், ஆரியர் (civilized people) மற்றும் மிலேச்சர் (barbarians) என மனிதர்களில் இரு வகையினர் உள்ளனர்.

ஆரியர்கள்:  உயர்ந்தவர், சீலாச்சார்ங்களைக் கடை பிடிப்பவர், தர்மம் செய்து தீட்சை  ஏற்பவர்கள். இதில் இரு வகையினர்:
  
    1. தெய்வீக ஆற்றல்,  அதீத சக்தி யுள்ளவர்கள் (ருத்தி பிராப்தர்)

      ருத்திகள் ஏழு வகைப்படும்:
     
      # புத்தி மற்றும் விசால அறிவு
      # தன் உடலை மாற்றிக் கொள்ளும் சக்தி (விக்ரியா)
      # தபம், சீலாச்சாரம் தளராமல் கடைபிடித்தல்
      # பலம் பொருந்தியவர்கள், ஆச்சர்யதக்க உடல வலிமை
      # நோய்களை தீர்க்கும் சக்தி (ஒளஷதம்)
      # பார்வையில் தீட்சணயம் (நல்லது கெட்டது செய்யக்கூடிய அளவிற்கு)
      # எதையும் குறைவின்றி செய்தல் (அக்ஷீணம்)
ஆக ஏழு வகை ஆற்றல் உடையவர்கள்.

     2. சாதாரணமானர்கள் (அந்ருத்தி பிராப்தர்) - ஐந்து வகையினர்கள்.

    
     # க்ஷேத்ர ஆரியர்: ஆரிய கண்டம், காசி, கோசலம் முதலிய நாட்டில் பிறந்தவர்கள்.
     # ஜாதி ஆரியர் :  இக்ஷுவாகு முதலிய உயர்ந்த குலத்தில் பிறந்தவர்கள்

     # கர்ம ஆரியர் :  மூன்று வகையுண்டு.

         #1. ஸாவத்யகர்ம ஆரியர்: வாள், வரைவு, பயிர்த்தொழில், வித்தை, சிற்பம், வணிகம் என்னும் ஆருவகைத் தொழில்களைச் செய்து வாழுபவர்கள்.
         #2. அல்பஸாவத்யகர்ம ஆரியர்: அணுவிரதம் முதலான இல்லற தர்மத்தை மேற்கொண்டு ஒழுகும் ஸ்ராவகர்.
         #3. அஸாவத்யகர்ம ஆரியர்: பாப காரியங்கள் இல்லாத முனிவர்கள்.

    # சாரித்ர ஆரியர் :  நல்லொழுக்கத்தில் சிறந்தோர்.

    # தரிஸன ஆரியர் :  நற்காட்சி யுடையோர்கள்.


மிலேச்சர்கள்:  இரு வகையினர் உள்ளனர்.


 1. கர்ம பூமிஜர்:  மிலேச்ச கண்டங்களான பரத தேசம், ஐராவத தேசம், விதேஹ தேசம் ஆக 25+25+800 மொத்தம் 850 இடங்களில் பிறந்த வேடர்கள், இருளர்கள், நாகரீகமில்லாத பழங்குடினர்கள், யவனர்கள், மலயேறுபவர்கள் ஆக இருக்கின்றனர்.

2. அந்தரத்வீபஜர்: லவண சமுத்திரத்தில் ஆங்காங்கே உள்ள 25 தீவுகளில் பிறந்தவர்கள். அழகின்றியும், ஒரு கால் உள்ளவராயும், வால் உள்ளவராயும்,  தலையில் கொம்புகள் உடையவராயும்,  முயல், பணியாரம் போன்ற காதுகள் உடையவராயும், குதிரை, சிம்மம், நாய், எருமை, பன்றி, புலி, காகம், குரங்கு போன்றும்; மேலும் மேகம், மின்னல் போன்றும்; மீன், குயில் போன்றும்; யானை, கண்ணாடி போன்றும்;  பசு, செம்மறியாடு போன்றும் முகமுடையராயும் இருப்பவர்கள். இவர்கள் ஆயுள் பல்யம் ஆகும்.

---------------
500 yojanas from the circumference of Jambu-dvipa, these 24 islands are situated in a circle in Lavana Samudra.
The islands in the 4 cardinal directions are 100 yajanas in breadth.

The 4 corners ones are 55 yojanas, and the remaining 16 are 50 yojanas in breadth. 
The 16 are 550 (instead of 500) yojanas from  the circumference of Jambu-dvipa.
------------


கர்ம பூமிகளில் யார்யார் இருக்கின்றனர் என்பதை.....

--------------- 


கர்மபூமியின் வர்ணனை.



   பரதைராவத விதேஹா: கர்மபுமயோன்யத்ர தேவகுருத்தரகுருப்ய: - (அ3 #37) = (123)


    भरतैरावतविदेहाः कर्मभूमयोऽन्यत्र देवकुरूत्तरकुरुभ्यः


    Bharatairavatavidehah karma-bhumayoanyatra devakuruttara-kurubhyah




பரத ஐராவத விதேஹா: - பரத ஐராவத விதேஹ க்ஷேத்ரம் மற்றும்; கர்மபுமய – கர்ம பூமிகள்; அன்யத்ர தேவகுரு உத்தரகுருப்ய: - தேவகுரு  உத்திர குரு தவிர மற்ற க்ஷேத்ரங்கள்.


Bharata, Airavata, and Videha excluding Devakuru and Uttarakuru, are the regions of labour.


பரதம் மற்றும் ஐராவதம் ஆகிய இரண்டும் கர்ம பூமிகளாய் மாறும் தன்மையுடையவை. விதேகத்தில் தேவகுரு,  உத்திர குரு நீங்கலாக மற்ற பூமிகள் கர்ம பூமிகளாகும்.

பரத தேசமும், ஐராவத தேசமும் போக பூமியாகவும், கர்ம பூமியாகவும் மாறக்கூடியவை.

விதேஹ க்ஷேத்திரத்தில் தேவகுரு, உத்திரகுரு, ஹைமவதம், ஹரி, ரம்யகம், ஹைரண்யவதம்  நீங்கலாக மற்ற பகுதிகள் நித்ய கர்ம பூமிகள் ஆகும்.

ஜம்பூத்வீபத்தில் ஒவ்வொன்றாகவும், தாதகீ கண்டம், புஷ்கரார்த்தில் இரண்டு, இரண்டு க்ஷேத்திரங்களாக மொத்தம் 35 ஆகும்.

தேவகுரு, உத்திர குரு, விதேஹத்தில் இருந்தாலும், தனித்தனி (ஒவ்வொன்றிலும் ஐந்தாக;) பத்து க்ஷேத்திரங்களாக கணக்கிடப்படுகின்றன.

ஆக மொத்தம் 35+10 = 45 க்ஷேத்திரங்களாகும்.

இவைகளில் பரத, ஐராவத, விதேஹ த்தில் ஐந்து, ஐந்து ஆக 15 கர்ம பூமிகளாகும்.

அவை நீங்களாக மீதி 30 யுள்ளவை போக பூமிகளாகும்.

---------------
கற்க தரு முலம் விரும்பியவற்றை பெற்றுச் சுகங்களைப் பெறுகின்ற பூமி, போக பூமி எனப்படும். அங்கு வேலை செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. நல்வினை ஈட்டியோர் போகபூமியில் பிறக்கின்றனர்.

பரதம், ஐராவதம் ஆகிய பூமிகளில் ஒன்று, இரண்டு, மூன்றாம் காலத்தின் கடைசிவரை சில ஆண்டுகள் தொடங்கி கற்பக தருக்கள் மறைந்து விடுவதால், அவை கரும பூமிகளாய் மாற்றம் பெறுகின்றன.

அவை கர்ம பூமிகளாய் மாறும் காலத்தில் மக்கள், உழவு, கைத்தொழில், வாணிபம் முதலான தொழில்களைச் செய்து பிழைக்க வேண்டும். முதலாம் தீர்த்தங்கரர் விருஷப நாதர் காலம் கருமபூமி யாகும். அவரே ஆறு வகையான தொழில்களை முறைப்படி கற்பித்தார்.  

கர்மபூமியில் தான் மானுடப் பிறவிகள் நற்காட்சி, நல்ஞானம், நல்லொழுக்கத்தின் வழியே நடந்து முக்தியைப் பெற முடியும்.
---------- 


வாழும் மனிதர்களின் ஆயுள் அடுத்து காணலாம்....

------------------- 


மானிடர் ஆயுள்


       ந்ருஸ்திதீ பராபரே த்ரிபல்யோபமாந்தர்முஹுர்த்தே - (அ3 #38) = (124)

       नृस्थितीपरावरे त्रिपल्योपमान्तर्मुहूर्त

       Nrasthiti parapare tripalyo-pamantarmuhurte



ந்ருஸ்திதீ – மனிதர் ஆயுள்; பராபரே – அதிகபட்சம், குறைந்தபட்சம்; த்ரிபல்யோபமாந்தர்முஹுர்த்தே – முறையே மூன்று பல்யம், அந்தர் முகூர்த்தம்.

The maximum and the minimum periods of lifetime of human beings are three palyas and antarmuhurta.


மனிதர்கள் உயர் ஆயுள் மூன்று பல்யமும், குறைந்த ஆயுள் அந்தர் முகூர்த்தம் ஆகும்.

(நாழிகை என்பது 24 நிமிடம், அந்தர் என்பது 2*1/2 நாழிகைகு உட்பட்டது)

பல்யம் என்பது வியவஹார பல்யம், உத்தார பல்யம், அத்தா பல்யம் என மூன்று விதமாக உள்ளது.

(முதலாவது மற்ற இரண்டு பல்யங்களுக்கும் மூலமாக உள்ளது.
உத்தார பல்யம் கண்டங்கள், சமுத்திரங்களை அளவிட நுண்ணிய ரோமத்துண்டுகளின் எண்ணிக்கை அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
அத்தா பல்யம் மனிதர்கள், விலங்குகளின் ஆயுளை கணக்கிட உபயோகிக்கப் படுகிறது.
மேலும் விபரங்களை பின்னர் காண்போம்)
--------------

விலங்குகளின் ஆயுளைக் காண்போம்.....

--------------------

விலங்குகள் ஆயுள்


       திர்க்யோனிஜானாஞ் ச - (அ3 #39) = (125)


       तिर्यग्योनिजानां च


       Tiryagyonijanam cha


விலங்குகளின் உயர்ந்த ஆயுள் மூன்று பல்யோபமங்களும், குறைந்த ஆயுள் அந்தர் முகூர்த்தமும் ஆகும். (திர்க்யோனி - விலங்குகள் பிறப்பிடம்)

These are the same for the animals.


மானுடர் ஆனாலும், விலங்குகள் ஆனாலும் உயர்ந்த ஆயுள் போக பூமியிலும், குறைந்த ஆயுள் கர்ம பூமியிலும் ஆகும்.

விலங்குகளின் அதிகபட்ச ஆயுள் நிலை:
நான்குகால் உயிர்கள் - 3 பல்யம்
பறவைகள் - 72000 ஆண்டுகள்
பாம்புகள் - 42000 ஆண்டுகள்
கீரி இனங்கள் – ஒன்பது பூர்வாங்கம்
மீனினங்கள் – ஒரு கோடி பூர்வம்
இவையாவும் ஐம்புலன் உயிர்களாகும்.

நான்கு புலன் உயிர்கள் – ஆறு மாதங்கள்
மூன்று புலன் உயிர்கள் – 49 நாட்கள்
இரு புலன் உயிர்கள் – 12 ஆண்டுகள்
மண்ணுடலிகள் – 22000 ஆண்டுகள்
தாவரங்கள் – 10000 ஆண்டுகள்
நீருடலிகள் – 7000 ஆண்டுகள்
காற்றுடலிகள் – 3000 ஆண்டுகள்
நெருப்புடலிகள் -  மூன்று நாட்கள்.

இவை அனைத்திற்கும் மிகக் குறைந்த ஆயுட்காலம் ஓர் அந்தர் முகூர்த்தமாகும்.
------------

மூன்றாம் அத்தியாயம் முற்றும்.

------------------------------------

மங்களாஷ்டகம்:


கோடி சதம் த்வாதஸம் சைவ கோட்யோ லக்ஷாண்யஷீதிஸ்த்ரயதிகாணி சைவ
பஞ்சாஸதஷ்டெள ச ஸஹஸ்ர ஸங்க்யாமேதத் ஸ்ருதம் பஞ்ச பதம் ணமாமி
 அரஹந்த ப்பாஸியத்தம் கணயர தேவேஹிம் கந்தியம் ஸவ்வம்
பணமாமி பக்தி ஜுத்தோ சுதணான மஹோவயம் ஸிரஸா

அக்ஷரமாத்ரபத ஸ்வரஹீனம் வயஞ்ஜன ஸந்தி விவர்ஜிதரேஃபம்
ஸாது பிரத்ர மம க்ஷமிதவ்யம் கோ ந விமுஹ்யதி ஸாஸ்த்ர ஸமுத்ரே

தஸாத்த்யாயே பரிச்சன்னே தத்த்வார்த்தே படிதே ஸதி ஃபலம் ஸ்யாதுபவாஸஸ்யப்பாஷிதம் முனிபுங்கவை:

ததத்வார்த்த ஸுத்ர கர்த்தாரம் க்ருத்த் பிச்சோபலக்ஷிதம்
வந்தே கணீந்த்ர ஸஞ்சாதமுமாஸ்வாமி முனீஸ்வரம்

ஜம் ஸக்கயி தம் கீரயி ஜம்ண ஸக்கயி தஹேவ ஸத்தஹணம்
ஸத்தஹணமாணோ ஜீவோ பாவயி அஜராமரம் ட்டாணம்

தவயரணம் வயதரணம் ஸஞ்சம சரணம் ச ஜீவதயாகரணம்

அந்தே ஸமாஹிமரணம் சஉவிஹ துக்கம் ணிவாரேஇ



***********************

No comments:

Post a Comment