Neelakesi







   நீலகேசி 


🔹 "நீலகேசி" என்னும் நூல், ஐஞ்சிறுங் காப்பியங்களில் ஒன்றெனப் போற்றப்படுகிறது. இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

🔹 இந்நூலுக்கு "சமய திவாகர வாமன முனிவர்" என்பார் உரை எழுதியுள்ளார்.

🔹 இதன் காலம் யாது என்பதை திட்டவட்டமாக அறிய முடியவில்லை இருப்பினும் கி.பி. நான்கு அல்லது ஐந்தாம் நூற்றாண்டு எனக் கருத இடமிருக்கிறது.

🔹 தமிழில் தோன்றிய *முதல் தருக்க நூல்* இதுவெனக் கூறலாம்.

🔹 இது குண்டலகேசிக்கு மறுப்பாக எழுந்த நூலாகும்.

🔹 பழையனூர் நீலியே குண்டலகேசியாகப் பிறந்து சமண சமயத்தினும் பௌத்த சமயமே மேலோங்கியது என உணர்த்துவது குண்டலகேசிக் காப்பியம்.

🔹 அதே பழையனூர் நீலியே நீலகேசியாகப் பிறந்து குண்டலகேசியை வாதில் வென்று சமணமே உயர்ந்த சமயம்  என நிறுவுகிறது நீலகேசிக் காவியம்.

🔹 குண்டலகேசி, நீலகேசி, அஞ்சனகேசி, காலகேசிபோன்ற நூல்கள் தருக்க நூல்களாகவே அமைந்துள்ளன.

🔹 தருக்கவியல் சிந்தனையை மணிமேகலைக் காப்பியம் பின்னைய காதைகளில் பேசினாலும், அதனை முழுமையாகப் பேசுவது நீலகேசி மட்டுமே.

🔹 இத்தகைய சித்தாந்த நூல்களுக்கு  நீலகேசியே மூலாதாரம்  என்பது தெளிவு.

🔹 நீலகேசி பெயர்க்காரணம்

🔹 நீலகேசி என்பது கேசிஎன்று முடியும் பெண்பால் பெயர்களுள் ஒன்று.



🔹 கேசி அழகிய கூந்தலை உடையவள்; நீலகேசி அழகிய கருங்கூந்தலை உடையவள் என்பது பொருள்.

------------ 







                                  நீலகேசி -  பாடல்கள்.


                                  நீலகேசி -  உரைகள்.


No comments:

Post a Comment