சுகுமாரசாமி முனிவர் சரிதம்






"சுகுமாரசாமி முனிவர் சரிதம்👏



Jain United News Centre, Whatsapp குழுவில் தொடராக செய்யாறு திரு கம்பீர. துரைராஜ் அவர்கள் பதிவு செய்து வந்த தொடர். அவரது தொகுப்பு அஞ்சல்களுக்கு நன்றி.


+++++++++++1++++++++++++
(பொன்மாளிகை🏫 இன்பம் கொழிக்கும் எழில்வாழ்வு💰, இவை இன்பம் தரவில்லை. உண்டால் பசி தீரும்இன்ப நுகர்ச்சிகளால்🎎 ஆசை தீர்வதில்லை. நெருப்பை நெருப்பு🔥 அணைக்காது. இன்பத்தால்😄 இன்பத்தை நிறைவு செய்ய முடியாது. இதனை நன்குணர்ந்து தவம் மேற்கொண்ட சுகுமாரசாமி முனிவர்😷 தன்னை நரிகள்🐺 தின்னக் கண்டும் வருந்தவில்லை. தவத்தின் பயனும் நோன்பின் வலிவும் அருளாளர் 👤பெற்ற செல்வங்கள்)
           இச்சம்பூதீவத்தின்🌎 பரதப் பெருநிலத்தில் வத்தவ நாட்டில் கோசாம்பி என்ற ஒரு நகரம் இருந்தது. இந்நகரிலிருந்து நாடாண்ட மன்னன்👵🏻 அதிபலன். அரசியின் பெயர் மனோகரி👸🏻. பெயருக்கேற்ப இவ்வரசி அழகின் திருவுருவாகவும் அன்பின் இருப்பிடமாகவும் விளங்கினாள்.
            இவ்வரசனின் அமைச்சன்😊 சோமசருமன். சோமசருமனுக்கு அக்கினிபூதிவாயுபூதி என இரு👬 மைந்தரிருந்தனர். அமைச்சரின் பிள்ளைகளாயிருந்தும் இவ்விரு இளைஞரும் இளமையில் வேதம் முதலிய📚 அறநூற்கல்வியை ஓதவில்லை. தந்தை தேடிய செல்வத்தில்💰 திளைத்தனர்😄😄. செல்வத்தையும் அழித்தனர். இவர்களின் தாய்👩🏻 காசியபி தன்👬 மைந்தர்களுக்கு கூறிய அறிவுரையும் எடுபடவில்லை.
                அமைச்சன் சோமசருமன் இறந்த😵 பிறகு வறுமை சூழ்ந்தது. அரசன்👵🏻 அமைச்சனின் இரு👬 மைந்தரையும் அவைக்களத்துக்கு வரவழைத்து அவர்களில் யாருக்கேனும் அமைச்சர் பதவி தர முடியுமா என ஆய்ந்தான். அரசனின்🏤 கொலுமண்டபத்தில் அரசனும்👵🏻😇 பெரியோர்களும் கேட்ட கேள்விகளுக்குக் கல்வி பயிலாத அக்கினிபூதிவாயுபூதி👬 ஆகிய இருவராலும் விடையிறுக்க முடியவில்லை. அமைச்சனின் பிள்ளைகள் ஊமையாய் இருக்கக் கூடும் என்று அவையோர்😋😋 பேசிக்கொண்டனர். 👵🏻அரசன் அவர்களைத் திருப்பி அனுப்பி விட்டான்.
        👬அக்கினிபூதியும்வாயுபூதியும் தலை கவிழ்ந்தவாறு தம் தாய் 👩🏻காசியபியின் முன் வந்து தாம் இளமையில் கல்வி கல்லாமைக்காகக்😭😭 கண்ணீர் வடித்தனர். தன் மைந்தர்களின் நிலைக்கு வருந்திய காசியபி👩🏻 அவர்களுக்கு ஒரு வழி கூறினாள்.
(வளரும்)
"சுகுமாரசாமி முனிவர் சரிதம்👏
=============2============
          'மக்களே!👬 மருதநாட்டு தலைநகரான இராசகிருகத்தில் அமைச்சராக இருக்கும் சூரியமித்திரர் 😎என் அண்ணன். உங்களுக்கு தாய்மாமனான அவர்😎 எல்லாக் கலைகளிலும் வல்லவர். அவரிடம் சென்று பணிவோடும்அன்போடும் உங்கள் நிலைமையை எடுத்துக் கூறினால்உங்களுக்கு 📝கல்வி கற்பிக்க ஆவன செய்வார், 📆நாளையே புறப்படுங்கள் என்று கூறி வழி நடைக்காகக் கட்டுச்சோறு🎁 கட்டிக் கொடுத்தாள்.
        தாய் 👩🏻காசியபி அறிவுரைக்கேற்பஅக்கினிபூதியும்வாயுபூதியும்👬 மகத நாட்டு இராசகிருகம் சென்றடைந்தனர்.தாய் மாமனான😎 சூரியமித்திரரையைக் கண்டனர். கோசாம்பி நகரத்தில் இருந்து வந்ததையும்தம் தந்தை😵 இறந்ததையும்தாயார் காசியபி👩🏻 தங்களை இராசகிருகத்திற்கு அனுப்பிய காரணத்தையும் எடுத்துரைத்தனர். கோசாம்பி மன்னர்👵🏻 வேறொருவரை அமைச்சராக அமத்திருப்பதையும், 📚கல்வி கல்லாததால் தமக்கு அவ்வாய்ப்பு கிட்டாததையும் விளக்கமாகக் கூறித் தங்களுக்கு👬 கல்வி புகட்ட உதவவேண்டும் என்று வேண்டினர்.
       தாய்மாமனான சூரியமித்திரர்😎 அவர்களை நோக்கிகாசியபி என்று எனக்கு ஒரு தங்கை இல்லைசோமசருலன் என்னும் பெயரில் என் தங்கையின் கணவர் எவரும் இலர். என் பெயர் 😎சூரியமித்திரர் என்பது ஒன்றுதான் உண்மை.ஆதலால் நான் உங்கள் தாய் மாமன் அல்லேன்😨. நீங்கள் யாராயினும் குறையில்லை.கல்வி📚 கற்கும் ஆர்வத்தால் உந்தப்பட்டு வந்திருப்பதால்👬 உங்களுக்கு நான் உதவி செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். நான் சொல்லும்😴 கட்டுப்பாடுகளுக்கு உட்படுவதாயின் உங்களுக்கு கல்வி கற்க ஏற்பாடு செய்கிறேன்" 😎என்றார்.
        இளைஞர்👬 இருவரும் அவர் 😎இடும் கட்டுப்பாடுகளுக்கு ஒப்புக்கொண்டனர். ஒரே ஆடை👔👖 உடுக்கவேண்டும்கல்வி நிரம்பும் வரை வீடு வீடாக🏡🏠 இரந்துண்ண வேண்டும் என்பவை✊ அக்கட்டுப்பாடுகளுள் சில. அனைத்து✊ கட்டுப்பாடுகளையும் அக மகிழ்வோடு😊😊 ஏற்றுக்கொண்டு மிகவும் பணிவோடும் ஊன்றிய கருத்தோடும்👬 அவ்விருவரும் கல்வி📖 பயிலத் தொடங்கினர்.

"சுகுமாரசாமி முனிவர் சரிதம்👏
++++++++++++++3+++++++++++
           கோசாம்பியில் இருந்த போது👬இவ்விரு இளைஞர்களும் தந்தைபாலிருந்த பாசமிகுதியால் கல்வி பயிலாமல் கெட்டுப் போய்விட்டனர். சிறுவராக இருந்ததக்க பருவத்தில் 📚கல்வி பயிலாமல்  திருமணப்பருவம்👨🏻👦எட்டிய இந்நிலையில் கல்வி📖பயில வந்துள்ளனர்.  தான் தாய்மாமன்😎 என்பது வெளிப்பட்டால் இங்கும் அதே பாச உணர்வாலும்உறவின் நெருக்கத்தாலும்உரிமையாலும் கல்வியில் ஆழ்ந்த கருத்தூன்றாமல் கெட்டுப்போவர் என்பதைத் தன் நுண்ணறிவாலும் பட்டறிவாலும்😎 சூரியமித்திரர் நன்கு உணர்ந்திருந்தார். ஆதலால்தான் அவர்கள் வந்த புதிதிலேயே 'நான் உங்கள் தாய்மாமன்😎  அல்லேன் என்று அவர்களின் நன்மைக்காக ஒரு பொய் சொல்லவேண்டிய நிலை அவருக்கு ஏற்ப்பட்டது.
            நாள் கிழமை📆 கல்வி ஓரை🌟(வித்யா நட்சத்திரம்) ஆகியவற்றின் பொருத்தம் பார்த்துகல்வி ஒன்றிலேயே😇 கருத்தூன்றிஅல்லும் பகலும் அயராதுஓதும் பணியில் வாயுபூதியும்👨🏻அக்கினிபூதியும்👦 ஈடுபட்டனர்.4வேதங்கள்,6அங்கங்கள் 18அறநூல்கள்மீமாம்சைநியாயம்இலக்கணம்பிரமாணம்யாப்புஅணிநிகண்டுசாணக்கியம்சாமுத்திரிகம்,சரகமசுவனீமதம்பாலகாப்பியம்ஆளிதம் முதலிய📚நூல்களையும் ஏழெட்டு ஆண்டுகளுக்குள் கற்று முடித்தனர்.
       கல்வி📚 நிரம்பப் பெற்று அனைத்துத் துறைகளிலும் புலமைச் செல்வர்கள்👨🏻👦 ஆனதும் அமைச்சர் சூரியமித்திரரைக்😎 கண்டு, 'தங்கள் அருளால் புலமை நிரம்பினோம். தங்களுக்கு என்றும்🙏 நன்றியுடையவர்களாயிருப்போம். எங்கள் நாட்டுக்குச் செல்ல விடை தந்தருளவேண்டும்என வேண்டினர்.
     😎 சூரியமித்திரர் அவர்களை அன்புடன் நோக்கி, 'இளைஞர்களே! நீங்கள் உண்மையில் என்👩🏻 தங்கையின் பிள்ளைகள்.உங்கள் கல்வி📝 நிரம்புவதற்காகத் தாய் மாமன் என்னும் உறவை மறைத்து வைத்திருந்தேன்.இதன் பொருட்டு வருந்தாதீர். இனி உங்கள் அரசரைக்👵🏻 காணுங்கள். உங்கள் தந்தையின் அமைச்சர் பதவியை அரசர்👵🏻 உங்களுக்குத் தருவார் என👋 வாழ்த்தினார். உடுப்பனவும்👔👖,அணிவனவும்💍, கட்டுச்சோறும்🎒, வழிநடைச் செலவுக்கு💵💷 வேண்டிய பிறவும் தந்து வழியனுப்பினார்.
     இளைஞர் இருவரும்👨🏻👦 கோசாம்பி நகரம் சென்று👩🏻தாயைக் கண்டு🙏வணங்கினர். கல்வி நிரம்பியவராய் வீடு வந்து சேர்ந்த மைந்தர்களைக் கண்டு👩��தாய் மகிழ்வுற்றாள்.நல்ல நாளும்கிழமையும்,📆 ஓரையும் பார்த்து தன் மைந்தர் இருவரையும் 👵🏻அரசனிடம் அனுப்பினாள்.
            👵🏻அரசனைக் கண்டு வணங்கி,  இளைஞர்👨🏻👦 இருவரும் தத்தம் புலமைத் திறமையைக்👍 காட்டினர். அரசவையில் இருந்த அனைவரும் இவர்களின் கல்வி மேம்பாட்டைப் புகழ்ந்தனர். 👵🏻 அரசனும் உவந்து அமைச்சர் பதவி தந்து சிறப்புச் செய்தான். அரசனின் அருளுள்ளத்தைப் பாராட்டி பதவியேற்றுச் செல்வச் செழிப்போடு 👨🏻அக்கினிபூதியும், 👦 வாயுபூதியும் வாழலாயினர். தம்பால் வந்த அரசவைப் புலவர்களுக்கும் உயர் கல்வி கற்ப்பித்தனர்.
(வளரும்)
"சுகுமாரசாமி முமுனிவர் சரிதம்👏
××××××××××××××4××××××××××××
  சூரியமித்திரர் அருகத் துறவியாதல்
--------------------------------
           இராசகிருக நவரத்தின் அமைச்சரான சூரியமித்திரர்😎 ஒரு நாள் அந்தி🌅 வழிபாட்டுக்கு அருகிருந்த தாமரைப் பொய்கைக்குச் சென்றார். மாலைக் கதிரவனைக் 🌅கையில் நீரேந்தி வழிபட்ட போது 🙏அவர் கையில் அரசன் அணிவித்த மாணிக்க மோதிரம்💍 தவறி விழுந்து விட்டது. இல்லம்🏠 சேர்ந்த பின் மோதிரம் காணாமல் 😎அமைச்சர் வருந்தினார். நகரின் வெகு தொலைவில் உள்ள காட்டில் தவம் மேற்கொண்டுள்ள சுதருமர்😷 என்னும் அருக முனிவர் பெரிய ஞானி என்பதறிந்து அவரைக் காண காட்டிற்குச் சென்றார். முற்றும் உணர்ந்த தவ நெறிச் செல்வரான சுதருமரை அணுகி முறைப்படி வணங்கி👏 அருகிலமர்ந்த சூரியமித்திரரைக்😎 கண்டதும்இவ்வமைச்சர் அனைத்துயிர்க்கும்🐜🐛🐑🐴🐬🐇🐅🐄 அன்பு பூண்ட சான்றோர் என😷 முனிவர் கருதினார். "அமைச்சரே! நீர் அரசன் தந்த மாணிக்க மோதிரத்தை💍 இழந்து வருந்துகிறீர் அல்லவா?" என்று வினவினார்.
         தான் ஒன்றும் சொல்லாத நிலையில் முனிவரே😷 முன்னுணர்ந்து 😇தன் வருத்தத்தை உள்ளதை உள்ளபடியே கூறியதைக் கேட்ட😎 சூரியமித்திரர் வியப்பில் ஆழ்ந்தார். "முனிவர் பெருமானே!😷  தாங்கள் சொல்வது உண்மையே. நான் தொலைத்து விட்ட அம் மாணிக்க மோதிரம்💍 மீண்டும் கிடைக்குமா?"என்று முனிவரைக் கேட்டார்.
      ' 😎அமைச்சரே! அம் மோதிரம் உமக்கு மீண்டும் கிடைக்கும். நீர் அந்தி வழிபாட்டின் போது தாமரைப்🌷 பொய்கையில் கையில் நீரேந்தி வார்த்தபோது அம்மோதிரம் 💍கழன்று விரிந்திருந்த தாமரை மலரில் விழுந்தது. நாளை தாமரைகதிரவனைக் 🌄கண்டு விரியும்போது அம் மோதிரம்💍 கண்ணில்👀 படும். எடுத்துக்கொள்கஎன்று கூறியருளினார். உடனே 😷முனிவரிடம் விடைபெற்றுக் கொண்டு நகருக்கு வந்த அமைச்சர்😎 அத் தாமரைப்🌷 பொய்கைக்குக் காவலாட்களை🏇🏾 அமர்த்தினார். மறுநாள் பகற் போதில் சென்று தாமரை மலரில்🌷 மாணிக்க மோதிரம்💍 பளிச்செனச் சுடர்விட்டுத் திகழ்வதைக் கண்டு களிப்புற்றவராகி எடுத்துவந்து அரசர்பால் தந்து நிகழ்ந்தவற்றைக்🔈 கூறினார். அரசனும் முனிவரின் பேராற்றலைப் புகழ்ந்தனர்.
       😎சூரியமித்திரர் எவ்வாறாயினும் முழுதுணரும் ஆற்றலை முனிவரிடத்துக்😷 கற்றுக் கொள்ள விரும்பி மீண்டும் முனிவரிடம் 😷சென்று பணிவோடு தம் எண்ணத்தை😇 வெளியிட்டார்.
(வளரும்)
"சுகுமாரசாமி முனிவர் சரிதம்👏
***************5*****************
        சுதரும முனிவர்😷 அமைச்சரை 😎நோக்கி, ' தம்பி! முழுதுணரும்  ஆற்றலும்பிற தவ ஆற்றல்களும் துறவியர்க்கல்லது ஏனையவர்களுக்குக் கற்பிக்க இயலாதுஎன்றார்.பதவிப் பெருமைகளாலும்,💺 செல்வ💰 நுகர்ச்சிகளாலும் ஏற்படும் அழியும் இன்பத்தை😥 விடகல்வி📚 தவ ஆற்றல்களால்😇 கிட்டும் பேரானந்தமே நிலையானது என்பதை உணர்ந்த😎 சூரியமித்திரர்  அமைச்சர் பதவியையும் இல்லற வாழ்வையும் துறந்து, 😷சுதரும முனிவரிடம் அருளுரை பெற்றுத் துறவியாகி 😷விட்டார்.
         பதினைந்து நாட்களில் தீட்சை அருளப் பெற்றபின் , "அடிகளே! எனக்கு முழுதுணரும் ஆற்றலைக் கற்பிக்க அருள் செய்ய வேண்டும்என்று😎😷 சூரியமித்திரர் வேண்டினார். ஆனால் ஐம்பெரும் நோன்புகளும்(பஞ்ச மகா விரதங்கள்) படிகமணமும்முதலில் கைக்கொள்ள வேண்டும். அதன்பின்நமக்காரங்கள்ஆலோசனைகள்நியமங்கள் ஓத வேண்டும்.அருளாளர் அறுபத்து மூவர் வரலாறு📘 கிரணகிரந்தம்லோகாணிசங்காணி முதலிய கரணகிரந்தம்📚 ஆகியவற்றைப் பாடங் கேட்கவேண்டும்என்று முனிவர்😷 ஒவ்வொன்றாகக் கற்பித்தபின் அடுத்துக் கற்க வேண்டியதைக் கூறிக் கொண்டே வந்தார். முதலிலேயே கற்க வேண்டிய அனைத்தையும் கூறினால் அச்சமும் தயக்கமும் தோன்றும் என்பதை 😷முனிவர் பெருமான் உணர்ந்திருந்ததினால்  தவநெறியில் படிப்படியாக 😎😷 சூரியமித்திரரை மேலேற்றிச் சென்றார்.
 இவையனைத்தும் குறித்த காலத்தில்📆 முறையாகக் கற்றுத் துறை போனபின் சூரியமித்திரர்😎😷 தனக்கு முழுதுணரும் ஆற்றலை அருள வேண்டும் என்று விண்ணப்பித்தார்.
         முனிவர்😷, "திரவியாணுயோகம்📗 என்று ஒன்று உள்ளது;  அதனை அறிந்த பின் தான் முழுதுணரும்😇 ஆற்றலை அருள முடியும்" என்றார். திரவியாணுயோகம் முடிந்தபின் சித்தாந்தம் கற்க வேண்டும் என்றார். சித்தாந்தம்  முடிந்தபின் இருபத்திரண்டு குற்றங்களின் நீங்கி அனைத்து நலங்களுக்கும் அடிப் படையான சன்மார்க்கம் கைக்கொள்க என்றார். 😷முனிவர் அருளிய அனைத்து அருளுரைகளையும் செயற்படுத்தி தாம் எண்ணிய அனைத்தும் கைவரப் பெற்று பன்னிரண்டு ஆண்டுகள் தவம் செய்து முழுதுணர்ந்த முனிவராக மாறிய 😇😷  சூரியமித்திரர் அன்று முதல் சூரியமித்திரர் அடிகளார் என்று அனைவராலும் போற்றி வணங்கப்படும்🙏 ஆச்சாரியப் பெருநிலை எய்தினார்.
     அதன்பின் சுதரும முனிவரின் ஆணைப்படி, 🍙சிற்றூரில் ஓர் இரவும்நகரில் 🏤ஐந்து இரவும்காட்டில் 🌳🌲🌴🌾பத்து இரவும் தங்கி  நாடுமுழுவதும் சென்று 👤அருகனின் அருள்நெறி பரப்பும்  தொண்டில் ஈடுபட்டார்.
(வளரும்)
சுகுமாரசாமி முனிவர் சரிதம்👏
"""""""""""""""""""6""""""""""""""""""
👦வாயுபூதியைக் காணுதல்--அக்கினிபூதி👨🏻 துறவியாதல்!!!
**********************************
     😷கோசாம்பி நகருக்கு வந்தபோது, ⛺சிறுமனை, 🏢பெருமனை என்றும் பாராமல் உண்ணத்தக்க அருளாளர் இல்லம் நோக்கிஉணவுக்காக சூரியமித்திர முனிவர்😷 எழுந்தருளினார். அக்கினிபூதியின் வீட்டு வாயில் வழியாக இவர் வந்தபோது👨🏻 அக்கினிபூதி மிகவும் பணிவோடு அடிகளாருக்குப் பணி விடை செய்து முறையாக வணங்கி🙏 வரவேற்றான். அடிகளாரை அகமகிழ🍛🍚 உண்பித்து அனைத்துச் சிறப்புகளும் செய்து "தாங்கள் எங்கள் தாய் மாமனாக😎 வாய்த்ததும் பெரும்பேறுபிறப்பு பணிக்கு மருந்தாக முனிவராக😷 எழுந்தருளியதும் பெரும்பேறு" எனப் பாராட்டிப் போற்றினான்👏. முனிவரை ஏழு குணங்களோடும் போற்றி ஒன்பது புண்ணியம் கைக்கொண்டு👋 அருளாசிப் பெற்றான். அவன் தம்பி👦 வாயுபூதியையும் காண வேண்டும் என்று முனிவர்😷 விரும்பியதால் 👨🏻அக்கினிபூதி முனிவருடன்😷 தம்பியின்👦 வீட்டுக்குச் சென்றான்.
      💺 உயர்ந்த   இருக்கையில்😳😁 பிராமணர் பலர் சூழ வீற்றிருந்த வாயுபூதி👦 முனிவரைக்😷 கண்டும் காணதவன் போல் செருக்கோடு😆 இருந்தான். 👨🏻அக்கினிபூதி தன் தம்பியின்👦 செய்கையைக் கண்டு துணுக்குற்றான். வாயு பூதியின் 👦கைகளைப்🙌 பிடித்துக் கொண்டு, "தம்பீ! இவர் நம் தாய்😎 மாமன். உலக உயிர்களை உய்விக்கும் அருகனின் அருள்நெறி நிற்கும் முழுதுணர்ந்த முனிவர்😷, நமக்குக் கல்விக்கண்📘👀 கொடுத்து அமைச்சர் பதவியும் செல்வ💰 வாழ்வும் கிட்ட காரணமாக இருந்தவர்இத்தகையவரை மதிக்காமல் நடந்து செய்நன்றி கொன்ற பழி ஏற்க வேண்டாம்" என்று 😭வேண்டினான்.
            வாயுபூதி 👦சினங் கொண்டு😁 முனிவரை😷 இழிவாகப் பேசினான். தன் அண்ணனாகிய👨🏻 அக்கினிபூதியையும் வசைபாடினான். தரக் குறைவான சொற்களால் முனிவரைத் 😷தாக்கிப் பேசுவதையும் ஏனைய பிராமணர்களோடு சேர்ந்து கைகொட்டி நகையாடுவதையும் கண்டு பொறுத்துக் கொள்ள முடியாத 👨🏻அக்கினிபூதி தன் தம்பியை, "தறுதலை இழிசினனே! நீ ஒரு கயவன்பெரியோரை இகழ்ந்ததற்குரிய 😫துன்பம் உன்னை   விரைவில் வந்தடையும்" என்று வெகுண்டு😤 பேசினான். முனிவர்😷 அக்கினிபூதியை👨🏻 அவ்வாறு மேலும் பேசாமல் தடுத்தார்.
          "தன்னைப் பாராட்டுபவனையும் பழிப்பவனையும்பகைவனையும் நண்பனையும்அருளோடு பார்த்து அன்பாக எவன் நடத்துகிறானோ அவனே சமண நெறி'📘 யைப் பின் பற்றுபவன் ஆவான். அவனே நாட்டின் நாலாத் திசைக்கும் சென்று அருளுரை வழங்கி அறநெறியைப் பரப்பத்தக்க😷 துறவியாவான்.
(வளரும்)
"சுகுமாரசாமி முனிவர் சரிதம்👏
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷7÷÷÷÷÷÷÷÷÷÷÷
    "பிறர் கூறும்😁 கடுஞ் சொற்கள் மனத்தைத் தாக்கித் துன்புறுத்துவனாக இருக்கலாம். ஆனால் அவை என் மனத்தைத் 😌தாக்கா. மனத்தைத் தாக்கும் துயரங்களும் ஒருமுகப்படுத்தப்பட்ட  என் அறிவின் தெளிவைத்(தலையை)😇 தாக்கா.  என் மூழ்கத்தை (தியானம்) எந்த உலகத் துன்பமும் தாக்காது. இத்தகைய நினைவுகளோடு நாம் நம் பகைவரையும் பழிப்பவரையும் பொறுத்து✋ மன்னிக்க வேண்டும்." என்று கூறி 😷 சூரியமித்திரர் அடிகளார்,  அக்கினிபூதியை👨🏻 அமைதிப்படுத்தினார். 😷👨🏻இருவரும்  பின்னர் அவ்விடத்தை விட்டு அகன்றனர்.
             👨🏻அக்கினிபூதி முனிவரை😷 நோக்கி, "அடிகளே! இழிந்த👦 கயவனின் வீட்டுக்குத் தங்களை அழைத்துச் சென்றதும்அவன்😁 இழிச் சொற்களைக்👂 கேட்கச்செய்ததும் என்னால் 😭நிகழ்ந்த கொடுஞ் செயல்கள். இந்த அறக்கேட்டுக்கு என்னைப்👏 பொறுத்தருள வேண்டும். இத்தகைய👦 தம்பி வாழும் ஊரில் வாழ எனக்கு😥 விருப்பம் இல்லை. எனக்குத் துறவறம்😌 அருள வேண்டும்" என வேண்டினான். 😷சூரியமித்திர அடிகளார் அவன் வேண்டுகோளை ஏற்றுப் பதினைந்து நாட்களில் துறவறம்😷 அருளினார். இரு😎��👨🏻😷 முனிவர்களும் பலவிடங்களில் அருளறம் பரப்பி வந்தனர்.

👦வாயுபூதிக்கு நேர்ந்த துன்பங்கள்
---------------------------------
       👨🏻அக்கினிபூதியின் மனைவி சோமதத்தை👰🏼 தன் கணவர் துறவறம் பூண்டதறிந்து 👦வாயுபூதியின் இல்லத்திற்குச்🏢 சென்றுதன் கொழுந்தன் என்றும் பாராது கடிந்துரைத்தாள். "சூரியமித்திரர்😎 உங்கள் தாய் மாமனாவார். கல்வியறிவில்லாத உங்களுக்குக்📘👀 கல்விக் கண் அளித்தவர். அரசவையில் அமைச்சர் பதவி💺 கிடைக்கக் காரணமாக இருந்தவர். அருந்தவத்தில் ஓங்கிய மாபெரும்😷 ஞானிமுழுதுணர்ந்த😷 முனிவர். அப்பெருமானை இகழ😁 உங்களுக்கு எப்படி மனம் வந்தது?  உடன் பிறந்த உங்கள் அண்ணன்👨🏻 மொழியையும் எவ்வாறு உதறித் தள்ளினீர்கள் அருகில் இருக்கும் பிராமணர்களாவது  உங்களுக்கு அறிவுரை சொல்லியிருக்கக் கூடாதா ?' என உளங் கொதித்துக் கேட்டாள்.
        👦வாயுபூதி மிகவும்😁 சினங்கொண்டான். தன் அண்ணி👰🏼 என்றும் பாராது கண்டபடி வைது காலால் 👢எட்டி உதைத்தான். வீட்டை🏢 விட்டு வெளியேற்றினான்.
(வளரும்)
"சுகுமாரசாமி முனிவர் சரிதம்👏
'''''''''''''''''''''''''''''''''8''''''''''''''''''''''''''''''
       குமுறியழுத👰🏼 சோமதத்தை," என்னை எட்டி உதைத்த உன்👢 கால்கள் அழுகிவிடும். காக்கையும்🐦 கழுகும்🐧 கொத்தித் தின்னும்" என்று சூளைரைத்துத் தன் பிள்ளைகளை👫 அழைத்துக்கொண்டு ஊரை விட்டு வெளியேறினாள்.
           இந்நிகழ்ச்சி நடந்த ஏழு நாட்களுக்குள்👦 வாயுபூதிக்குத் தொழுநோய் வந்தது.
👢👢கால்கள் அழுகின. உடல் முழுவதும்🐛புழுத்து நெடுநாள் துன்புற்று😭 இறந்தான். வித்தியாதர😛 இலங்கிகரின் வீட்டில் 🐴 பெண் கழுதையாகப் பிறந்தான். 🐛புழுத்து இறந்து மீண்டும் மத்தமாநகரில் 🐗பேய்ப்பன்றியாகப் பிறந்து இறந்துமகத நாட்டுச் சம்பாநகரில் செருமான் வீட்டில் பெண் நாயாகப்🐺 பிறந்து இறந்துமத்தமா நகரில் புலையர் வீட்டில்💃🏾பெண் குழந்தையாகப் பிறந்தான்.அக்குழந்தை💃🏾நீங்காத நோயால் தாக்குண்டு😡 ஒருநாள்🌇நண்பகல் நேரத்தில் நாவற்பழங்களைத்🍇 தடவித்தடவி தேடி உண்ண முயல்வதைச் (😎)😷சூரியமித்திர அடிகளாரும்(👨🏻)😷 அக்கினிபூதி அடிகளாரும் கண்டனர்.
     ( 👨🏻)😷அக்கினிபூதி அடிகளார் அப்புலையர் குழந்தையின் 🙇துன்பத்தைக் கண்டு 😴உள்ளம் உருகினார்.அவர் கண்ககண்களில்😭நீர் வழிந்தது. குஞ்சமரத்தின் கோலால் சில🍇நாவற் பழங்களை அக்குழந்தையின் அருகில் தள்ளினார். 🙇இக்குழந்தை சென்ற பிறப்பில் என்ன தீவினை செய்ததோஎன்று 😷சூரியமித்திர அடிகளாரை நோக்கி வினவினார். 😷சூரிய மித்திர அடிகளார்,"இக் குழந்தை உன் தம்பி👦 வாயுபூதிதன் தீவினைக்காக 💫இப்படிப் பிறந்திருக்கிறான். அந்த பாசத்தால்தான் உன்னையறியாமல் உன் 👀கண்களில் நீர் வழிகிறது என்றார்.
(வளரும்)
"சுகுமாரசாமி முனிவர் சரிதம்👏
***************9****************
 வாயுபூதியின்👦 பல்வகைப் பிறப்புகள்;
--------------------------------
    (😎)    😷சூரியமித்திர ஆச்சாரியரும், (👨🏻)😷 அக்கினிபூதி அடிகளும் நாகட்டாணம் எனும் இடத்தில் தங்கியிருந்தனர். இதனையறிந்த அவ்வூர் அரசனின் புரோகிதன் சோமசருமன்😆 என்பவன் தன் மக்களோடு ஆச்சாரியரை😷 வழிபடச்🙏 சென்றான். செல்லும் வழியில் புலையர் மகளும்💃🏾 ஆச்சாரியரை வழிபடச் செல்வதைக் கண்டு😬 இகழ்ந்துரைத்தான். தன்னைப் புரோகிதன்😆 இகழ்வதைக் கேட்டு வருந்திய புலையர்💃🏾 மகள், " நான் இறந்து😵 பிராமணர் வீட்டிலேயே பிறப்பேன் " என்று சூளுரைத்தாள்.
      😷  முனிவர் அவளை நோக்கி, "இழிந்த இயல்புகள்தீய பண்புகள்,😍 அருவருக்கத் தக்க வடிவம்😜, இழிந்த வாழ்க்கைதாழ்ந்தவரின் சூழல்ஆற்றாத துன்பங்கள்😭, தீராத நோய்கள்😠, பிறர்க்கு அடிமை செய்து வாழ்தல்கொடுமையான சாவு😱, உயிர்களைத்🐐🐠🐓🐜 துன்புறுத்தல்புலால் உண்ணுதல்🍤🍴, ஆகிய தன்மைகளைப் பெற்றவர்கள் அடுத்தடுதது மண்ணுலகில்🌍 மாந்தராகப் 😭பிறந்து துன்புறுகிறார்கள்.
      கொல்லாமை கொல்லாம?🙏 முதலிய நல்லறங்களைப் பின் பற்றாதவர்கள்இழிந்தவராகவும்தீய பண்பினராகவும்உடற் குறையுள்ளவராகவும்தீவினை செய்பவராகவும்முடை நாற்றம் வீசும் உடம்பினராகவும்அறிவிலிகளாகவும்நாணிலிகளாகவும் (வெட்கம் கெட்டவர்) ஒழுக்கமில்லாதவர்களாகவும்,😙 பேடிகளாகவும்அடிமைகளாகவும்,😫 தீராத😨 நோயாளர்களாகவும் பிறக்கிறார்கள். (வளரும்)
சுகுமாரசாமி முனிவர் சரிதம்👏
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷10÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
        புலால்🍤, மது🏆 போன்றவற்றை நீக்கியவர்கள்திருமகள் தங்கும் மார்பும் ,அழகு மிளிரும் உடலும்🎅 பெறுவார்கள். குடிப்பெருமைபுகழ்நீண்ட வாழ்நாள்அனைவரையும் வென்று மேம்படும் திறன்தேவமகளிராலும்👰🏼 விரும்பப்படும் இயல்புஅமுதம்🍨🍎🍋🍛 போன்ற உணவு வகைகள்நல்ல நீர்🍸, வெற்றிலைப் பாக்குமலர்மாலை🌺, சந்தனம்உயர்ந்த👔👖 ஆடைகள்மென்மையான படுக்கைஒப்பனைப்🎍📦👄 பொருட்கள்(அழகு சாதனங்கள்) ஆகிய வாழ்க்கை நலங்களை😊 முறையாகத் துய்ப்பார் கள். நுண்ணறிவு😇, பெருந்திறமைஅரிய செல்வம்💰, மதிப்பு✊, இன்சொல் 👅பேசி அனைவரையும்😄 மகிழ்விக்கும் ஆற்றல்ஆகியவற்றை எல்லாப் பிறவிகளிலும் பெற்று மகிழ்வர். இவர்களுக்கு நற்பண்பும் கற்பும் உள்ள மனைவி👩🏻, உயர்ந்த மாடமாளிகை🏤, வேலையாட்கள்🚶🚶, அனைவரையும் அடக்கி ஆளும் ஆட்சிதேர்🚆 முதலிய ஊர்திகள்முத்து💍💎👑, பொன்மணி முதலிய செல்வங்கள் ஆகியவை கிடைக்கும்.  என்றுரைத்த 😷முனிவர் உரைகேட்டு மகிழ்ந்துஅவள் (புலையர்மகள்) வீடு திரும்பினாள்.
      ஒருநாள் இருளில்🐍 பாம்பு கடித்ததால் இறந்து விட்டாள்.
       இறந்த புலையர் மகள் 👧🏾சம்பா நகரத்து அரசனின் புரோகிதனாகிய  சோம சருமனுக்கு நாகசிரி👧🏼 என்னும் பெண்ணாகப் பிறந்தாள்.இவளுடைய பொலிவையும் அழகையும் கண்டு நகரமே வியந்தது. ஒளி உமிழும்👀 கயற்கண்களும்,மாம்பழக் 🍋கன்னமும்பொன்னைப் பழிக்கும் மேனியும்,      நிலவைப் பழிக்கும் ஒளி 👧🏼முகமும்கொண்ட இப்பெண் தெய்வமகளே! என்று பெற்றோரும் போற்றி வளர்த்தனர். சூரிய மித்திர (😎)😷ஆச்சாரியாரும்அக்கினிபூதி அடிகளும்(👨🏻)😷, பயணம் மேற்கொண்டுசிற்றூர்நகரம்குறிஞ்சி முல்லை நிலத்து ஊர்கள்மருத நிலத்தூர்கள்நெய்தல் நிலத்தூர்கள்ஆற்றங் கரை ஊர்கள், (கிராம நகர கேட கர்வடம் அடம்ப பத்தன துரோணா முகங்கள்)  ஆகிய அனைத்திடங்களையும்கண்டு அறநெறி பரப்பி மீண்டும் சம்பா நகரத்தின் அருகிலுள்ள  நாகாட்டாணத்தில் வந்து தங்கினர்.
    நாகசிரியும்👧🏼 அரண்மனை மகளிரோடு கூடி அருச்சனைப் பொருள்களை ஏந்தி🐍 நாக தெய்வத்தை வழிபட வந்தாள். அங்கு ஆச்சாரியரைக்😷😷 கண்டதும் அவளுககுத் தன் பழம்பிறப்பு நினைவுகள் வந்தன.
தான் புலையர் மகளாகப் 👧🏾பிறந்ததும்ஆச்சாரியரால் நல்லறம் புகட்டப் பட்டதும் நினைவு கூர்ந்து அவருடைய திருவடியருகில் போய் அமர்ந்தாள். இதனைக் கண்ணுற்ற அக்கினிபூதி👨🏻😷 அடிகளுக்குத் தன்னையறியாமல் பரிவு உணர்வு தோன்றியது. துறவு மேற்கொண்ட தனக்கு இச்சிறுமி👧🏼 மீது பரிவுணர்வு எவ்வாறு முகிழ்த்தது என்று அறிய விரும்பினார்.
(வளரும்)
"சுகுமாரசாமி முனிவர் சரிதம்👏
===========11============
        தன் குருவாகிய சூரியமித்திரரை(😎)😷 நோக்கிபட்டாரரே! இக் குழந்தையின்👧🏼 மீது எனக்குப் பரிவும் இரக்கமும் தோன்றக் காரணம் என்னஎன்று(👨🏻)😷 அக்கினிபூதி அடிகளார் வினவினார். 😷சூரியமித்திரர் யாவும் ஞானத்தால் உணர்ந்து இவ்வாறு கூறினார்.
      ' இக்குழந்தைஉன் தம்பி👦 வாயுபூதியின் பல பிறப்புகளில் ஒன்று. நம்மை இழி சொற்களால் இகழ்ந்த தீவினையால்தொழு நோய் கண்டு இறந்து😁,  கோசாம்பி நகரில் பெண்🐴 கழுதையாகவும்பிறகு பேய்ப்பன்றியாக 🐗வும்பெண்🐶 நாயாகவும்நீலன் என்னும் புலையன் வீட்டில் புலையர் பெண்ணாகவும்👧🏾 பிறந்து இறந்து,  இப்பொழுது அரண்மனைப் புரோகிதன் வீட்டில் நாகசிரி 👧🏼என்னும் அழகிய பெண்ணாகவும் பிறந்து இங்கு காட்சியளிப்பதைக்👀 காண்கிறாய். உடன் பிறந்த😰 பாச உணர்வால்துறவு மேற்கொண்ட உனக்கும்😷 இவள் மீது பரிவு ஏற்பட்டது இயல்பே என்றார்.
        ஆச்சாரியார் 😷 கூறியவற்றைக் கேட்ட நாகசிரி👧🏼 தன் தீவினைக்கும் அதன் பயனாக ஏற்பட்ட துன்பப் பிறவிகளுக்கும் வருந்தி😭, அருளறம் கேட்டு👂 அணுவிரதம் முதலிய விரதங்களைக் கைக் கொண்டு துறவு நெறி நிற்க 👊🏻முன் வந்தாள். 👧🏼அவள் முடிவைக் கேட்ட ஆச்சாரியார்😷, "மகளே உன் பெற்றோர் பிராமணர். அவர்கள் நீ அருகன்👤 நெறி நிற்பதை விரும்பவில்லையானால்  நான் அருளிய விரதங்களை✋ என்னிடமே வந்து ஒப்பு வித்து விடவேண்டும் என்றார். அவ்வாறே செய்வதாக ஒப்புக்கொண்டு👍 நாகசிரி 👧🏼வீடு சென்றாள்.
         👧🏼  நாகசிரி சமண்துறவியர்😷 பால் அருளறம் பூண்டிருக்கிறாள் என்ற செய்தி சோமசருமனுக்குத்😀 தெரிந்தது. 😀சோமசருமன் தன்👧🏼 மகளைக் கண்டு, "மகளே! நாம் பிராமணர்  வகுப்பைச் சேர்ந்தவர்கள்பிராமணர்கள் உலகில் அனைவரையும் விட உயர்ந்தவர்கள். உலகமே நம்மை வணங்குகிறது. 😬நாம் வணங்கத்தக்க பெருமையுடையவர்இவ்வுலகில் எவரும் இலர்.ஆதலால் 📖சமண நெறியைச் சார்ந்து நிற்க நீ😇 விரும்புவது தகாது" என்றான். 'தங்கள் எண்ணப்படியே செய்கிறேன். சூரியமித்திர😷 ஆச்சாரியாரிடம் நான் கைக்கொண்ட நோன்புகளை ஒப்படைத்து விட்டு👋 வருகிறேன்என்று தன் தாயாரைத் துணையாக அழைத்துக் கொண்டு நாகசிரி 👧🏼புறப்பட்டாள். 😀தந்தையும் உடன் சென்றான்.
(தொடரும்)
"சுகுமாரசாமி முனிவர் சரிதம்👏
""""""""""""""""""""12"""""""""""""""
வழியிடைக் காட்சிகள்
---------------------------------
          👧🏼  நாகசிரி,        செல்லும்  வழியில் ஓர் அழகிய இளைஞனைப்💂 பின் கட்டாகக் கைகளைக் கட்டி அடித்தும்உதைத்தும் ,இழுத்துக் கொண்டு அரண்மனை வீரர்கள்😁, கொலைக்களம் நோக்கிச் சென்றனர். 👪👬நகர மக்கள் வழிநெடுக கூட்டமாக மொய்த்து ஒருவரையொருவர் முண்டியடித்துத்🏃🏻🏃🏻 தள்ளிக் கொண்டு வேடிக்கை பார்த்து நின்றனர். 👧🏼நாகசிரி தன் தாயாரை நோக்கிஅம்மா! அந்த இளைஞன்💂 தெய்வமகனைப் போல் அத்துணைக் கட்டழகு உள்ளவனாக இருக்கிறான். அவனை ஏன் கொலைக் களத்துக்கு இட்டுச் செல்கிறார்கள்கேட்டுச் சொல்என்றாள்.
        காவல்காரன் வாயிலாகச் செய்தியறிந்து தாய்🙎 தன் மகளுக்குச்👧🏼 சொல்லத் தொடங்கினாள்.
மகளே! இவ்வூர்ப் பெருவணிகன் இந்திரதத்தன் என்பவன் 16 கோடி செம்பொன் செல்வம்💰🎁 பெற்றவன். அவனுடைய மகன்தான்😁 கொலையாளிகளால் அழைத்துச் செல்லப் படுகிறான். சூதாடியும் கயவனுமான வரசேனன் என்னும் இயக்கனோடு இவ் வணிகன் மகன்💂 தொடர்பு கொண்டு 1000 தினாரம் என்னும் மதிப்புடைய செல்வத்தைத் தொலைத்தான். அந்த இயக்கனுக்குத் தர வேண்டிய கடனையும் தராமல் மறுத்தான். அரசன் ஆணையையும் மீறினான். அந்த இயக்கனையும்😡 கொன்றுவிட்பான். ஆதலால்,  கொலைக் குற்றத்திற்காக நடுத் தெருவில் அனைவரும் இகழ இழுத்துச் செல்லப் படுகிறான்" என்றாள்.
          இதைக்கேட்ட👧🏼 நாகசிரி, " அம்மா! நான் சூரியமித்திர😷 முனிவரிடம் 'என்னுயிர் காக்கும் பொருட்டு பிறவுயிரைக் கொல்ல மாட்டேன்' 👌என்னும் நோன்பு மேற்கொண்டிருக்கிறேன். இப்பொழுது🙎😀 தாங்களும் தந்தையும் சொல்வதுபோல் கொல்லா விரதத்தை முனிவரிடம்😷 ஒப்படைத்த பிறகு நானும்,  சீற்றம்பேராசை போன்ற தீய பண்புகளுக்கு இடம் தந்து யாரையாவது கொன்றுவிட்டால் 😬, என்னையும் அரசன் ஆணையால் கொலை யாளிகள் இப்படித்தானே  தெருவில் பின் கைகளைக் கட்டிஅடித்தும் உதைத்தும் இழுத்துச் செல்வார்கள்சூலத்தில் இட்டுக்(கழுவேற்றி) கொல்வதைக் காண நீங்கள் விரும்புகிறீர்களாஎன்று வினவினாள். உடனே தாய்🙎 பதைபதைத்து, 'மகளே! சமண முனிவரின்😷 அருளுரையால் நீ கைக்கொண்ட இக் கொல்லா நோன்பு மட்டும் இருக்கட்டும். ஏனைய நோன்புகளை முனிவரிடம்😷 ஒப்படைத்து விடுஎன்றாள்.
(தொடரும்)
"சுகுமாரசாமி முனிவர் சரிதம்👏
**************13***************
        🙎தாயும் 👧🏼மகளும் 😀தந்தையும்  சிறிது தொலைவு சென்றதும் மற்றொருவனைக்😳 கொலையாளிகள்😁 கொலைக் களம் நோக்கி இழுத்துச் செல்வதைக் கண்டுநாகசிரி👧🏼 தன் தந்தையைக்😀 காரணம் வினவினாள். அதனையும் கேட்டறிந்து நாகசிரிக்கு👧🏼 அவன் சொல்லத் தொடங்கினான்.
வைனயிகக் கள்வன்
********************************
"கேள்மகளே! இங்கு இழுத்துச் செல்லப்படுபவன் வைனயிகன்😜 என்பவன்.இவன் கன்னிப் பெண்வேலைக்காரன்கிழவி ஆகிய மூவரின் கதைகளைப் படத்தில் எழுதி 👪👬ஊர் மக்களுக்குக் காட்டி கதை சொல்லி உணவுத் தவசங்களைக் கொள்ளையடித்தவன்😜. ஊர் மக்கள் தன்னை நம்புவதற்காக இவன் சொன்ன மூவரின் கதைகளைக் கேள்.
            முதல் கதை🙋 கன்னிப் பெண்ணைப் பற்றியது. கோசாம்பி நகரத்தில் கோடிச்💰 செம்பொன்னுக்குரிய செல்வனாகிய சுமித்திர செட்டிக்கு😄 வசுமித்திரன்😌 என்ற மகனும் சுமதி 🙋என்னும் மகளும் இருந்தனர். வசுமித்திரன் 🐍பாம்பு கடித்து இறந்தான். அவனை இடுகாட்டிற்கு🔥 எடுத்துச் சென்றனர். இடுகாட்டிற்கு வந்திருந்த கருடநாபி😬 என்னும் மந்திரவாதி 'இறந்த வசுமித்திரனை 😌நாளை விடியற்காலைக்குள் உயிரோடு எழுப்பித் தருகிறேன்.அதுவரை இரவு முழுவதும் நால்வர் காவலிருக்க வேண்டும்என்றான். அவன் உறுதி மொழி கேட்டு மகிழ்ந்த சுமித்திர செட்டி நான்கு பட்டர்களைப்😳😳😳😳 பிணத்திற்கு இடுகாட்டில் காவலிருக்கச் செய்தான்.
        நள்ளிரவில் அக் காவல்காரர்களில் ஒருவன்😳 ஆடு🐐களவாடிக் கொண்டு வரச் சென்றான். அடுத்தவன் விறகு 🎋கொண்டு வரவும் மற்றொருவன் நெருப்பு🔥 கொண்டு வரவும் சென்றனர். நான்காமவன்😬 பிணத்திற்குக் காவல் இருந்தான். முதலாமவன் கொணர்ந்த ஆட்டைக்😳🐐 கொன்று நெருப்பிலிட்டு🔥 வாட்டி நால்வரும் தின்றனர். பொழுது விடியும் நேரத்தில் கருடநாபி என்னும் மந்திரவாதி😡 வந்தான். மந்திரங்களை ஓதி பாம்பு கடியுண்டு இறந்த வணிகன் மகனை😌 உயிரோடு எழச் செய்தான். அனைவரும் மந்திரவாதியைப்😡 பாராட்டினர்.
          தன் மகன் ளஉயிர் பெற்று வந்தது கண்டு மகிழ்ந்த சுமித்திர செட்டி இரவு முழுவதும் பிணத்தருகில்😳😳😳😳 காவலிருந்த பட்டர் நால்வருக்கும் ஆயிரம் செம்பொன்💰 பணமுடிப்புகளைப் பரிசளித்தான். ஆனால் அந்நால்வரும் தங்களுக்கு பணம் தரப் படவில்லை என்று பொய் கூறினர். சுமித்திர செட்டி அரசனிடம் வழக்குரைத்தான். ஆயிரம் செம்பொன் பணமுடிப்பு எங்குப் போயிற்றுசெட்டி கொடுத்து விட்டதாக கூறுகிறான்.பட்டர்கள் பெறவில்லை என்கிறார்கள். இது பற்றி ஆராய்வதற்கு அரசன் ஆட்களை அமர்த்தினான். யாராலும்😇 கண்டுபிடிக்க முடியவில்லை.
(வளரும்)
[
"சுகுமாரசாமி முனிவர் சரிதம்👏
^^^^^^^^^^^^^^^14^^^^^^^^^^^^^^^^
     சுமித்திர செட்டியின்😢 வருத்தம் பெரிதாயிற்று. தன் தந்தை முகம் வாடியிருப்பதைக் கண்ட செட்டியின் மகள் சுமதி 🙋🏻தந்தையை நோக்கி,"தந்தையே! வருந்த வேண்டாம். ஆயிரம் செம்பொன்💰 பணமுடிப்புகளைக் களவாடிய கள்வனை😳 நானே கண்டறிகிறேன்" என்று உறுதியளித்து நான்கு பட்டர்களையும்😳😳😳😳 வரவழைத்து அவர்களிடம் இன்னுரையாடி கதை ஒன்று சொல்லத் தொடங்கினாள்.
                            அண்ணன்மாரே! உங்களுக்கு ஒரு கதை சொல்கிறேன்கேளுங்கள். பாடலிபுரத்தில் சுதத்தன்😊 என்னும் வணிகனின் மகள்💃🏻 சுதாமை என்பவள் கங்கையில்🏄🏻 நீராடிக் கொண்டிருந்தாள். மகிழ்ந்து ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த போதுஅவளை ஒரு முதலை 🐊விழுங்க வந்தது. சுதாமை🏄🏻 அஞ்சிக் கூக்குரலிடுவதைக் கேட்டுஓடோடி வந்த அவள் தாய்மாமன்😍 தனதத்தன், "நான் உன்னை🐊 முதலையிடமிருந்து விடுவிக்கின்றேன். நான் கேட்பதைக் கொடுப்பாயா " என்றான். நீ கேட்பதைத் தட்டாமல் கொடுக்கிறேன் என்னைக் காப்பாற்று என்று 💃🏻சுதாமை வேண்டினாள்.
          🐊முதலையோடு போராடி அதனைக் கொன்று🏄🏻 சுதாமையை பத்திரமாக விடுவித்தான். நன்றிக் கண்ணீர் வழிய நீ வேண்டுவது கேள் என்றாள்💃🏻 சுதாமை. தனதத்தன் அவளை நோக்கி, 'உன்னிடம் நான் வேறொன்றும் வேண்டவில்லை.நீ சிறு பெண். நீ💃🏻 பெரியவளாகித் திருமணம் புரிந்து கொண்டதும் ,திருமண முதல் நாளன்று மண மகளுக்குரிய முழுமையான ஆடை👰🏻 அணிகலன்களோடு விளங்கும் திருமகளைப் போன்ற அழகை நான் கண்டு👀 மகிழவேண்டும். இதுதான் என் விருப்பம். அதை நீ நிறைவேற்றினால் போதும் என்று கூறி அவளை வீடு 🏨வரை கொண்டு போய் விட்டு வந்தான்.
          சுதாமை👰🏻 மங்கைப் பருவம் எய்தினாள். ஒரு நல்ல நாளில் அவளுக்கு🎎 திருமணம் நடந்தது.  திருமணம் முடிந்த அன்று நள்ளிரவில்🌙 முழுமையான ஆடை அணிகலன்களோடும்பூவோடும் மஞ்சள் முகத்தோடும் அழகு பொலிய திருமகள்👰🏻 போலும் வீட்டை விட்டு தன் தாய் மாமனாகிய தனதத்தன்😍 இருக்கும் வீடு🏦 நோக்கிச் சென்றாள்.
(வளரும்)
சுகுமாரசாமி முனிவர் சரிதம்👏
+++×++++×++15++×++++×+++
       😁பேய் உறங்கும் அந் நள்ளிரவில்🌒 மணமாலை மார்பில் அசைய நடந்துவரும் புதுமணப் பெண்ணைக்👰🏻 கண்ட கள்வன் 😳ஒருவன் கத்தியைக் 🔪காட்டி,  "உன் நகைகள்💎💍 எல்லாம் கழற்றிக் கொடு" என்றான். சுதாமை👰🏻 கள்வனைக்😳 கண்டு சிறிதும் அஞ்சாமல்,  'கள்வனே! உனக்கு வேண்டியது 💎💍நகைகள். எல்லா நகைகளையும் கழற்றித் தருகிறேன். நான் மிக இன்றியமையாத வீட்டு வேலையின் பொருட்டுச் செல்கிறேன். திரும்பி வரும்போது நகை முழுவதும் தருகிறேன். என் சொல்லை நம்பி என்னைத் தடுக்காமல் வழியனுப்புஎன்றாள். வானுலகத் தெய்வம்👰🏻 போன்ற அவள் தோற்றத்தையும் அஞ்சாத இன்சொல் திறத்தையும் கண்டு கள்வன் அவளைப்✋ போய்வரப் பணித்தான்.
       👰🏻சுதாமை மேலும் சிறிது தொலைவு சென்றதும் ஊர்க் காவலன்😛 வழிமறித்து, "பெண்ணே! நள்ளிரவில் 🌒எங்கே போகிறாய்பல துன்பங்களுக்கு நீ உள்ளாக நேரிடும். நீயும் கள்வர்😳 கூட்டத்தவளோஎன விரட்டினான். அவனுக்கும் கள்ளனுக்குரைத்த நன் மொழிகளையும் உறுதி மொழிகளையும் கூறி அமைதிப்படுத்தி 👰🏻 வழி நடந்தாள். சிறிது தொலைவில் மாந்தரை 😫உயிரோடு உண்ணும் பிரம்மராக்கதன்😈 எதிர்ப்பட்டு, "பெண்ணே! நில். உன்னைத் தின்னப் போகிறேன்" என்றான். 😈பிரம்மராக்கதனிடமும் கள்ளனிடம் கூறிய உறுதி மொழிகளையும் நன்மொழிகளையும் கூறித் திரும்பி வரும்போது தன்னை உண்ணுமாறு உறுதி உரைத்துத் சுதாமை👰🏻         தன் தாய்மாமன் தனதத்தன் 😍இருக்கும் வீட்டிற்குச் 🏦சென்று கதவைத் தட்டினாள்.
         இந் நள்ளிருளில் வந்து கதவைத் தட்டுவது யாரென்று தனதத்தன் 😍கதவைத் திறந்து பார்த்தான். எதிரில் சுதாமை 👰🏻மணக் கோலத்தில் நிற்பதைக் கண்டு வானுலகத்து ரம்பையோ மேனகையோ என ஐயுற்றுத்😇 தெளிந்தான்.
      'சுதாமை! இந்🌒 நள்ளிருளில் ஏன் வந்தாய்என்று வினவினான். 🐊'முதலையிடமிருந்து என்னைக் காப்பாற்றிய தங்களுக்குக் கொடுத்த✊ உறுதி மொழியை நிறைவேற்றுவதற்காக மணக்கோலத்தில்👰🏻 உங்கள் முன் வந்து நிற்கிறேன்.உங்கள் மனம் 😀நிறைவுற்றதா?' என்றாள். சுதாமை👰🏻 உன்னைப் போல் உடலழகும் உள்ளத்தழகும் கொண்ட பெண்🌍 உலகில் யாரும் இருக்க முடியாது. செய்நன்றி மறவாமல் நடந்துகொண்ட உனக்கு எல்லா உலக நன்மைகளும் கிடைக்கும். நீ என்றும் மங்கலியாய் குன்றாத நலங்களோடு நன்றாக வாழ்வாயாக என வாழ்த்தி✋, இந்நள்ளிருளில் நீ அஞ்சாமல் வந்தது வியப்பு அளிக்கிறது. பாதுகாப்பாக🏡 வீடுபோய்ச் சேர்என வழியனுப்பினான்.
(வளரும்)
"சுகுமாரசாமி முனிவர் சரிதம்👏
---------------16--------------
     👰🏻சுதாமை திரும்பி வரும்போது பிரம்ம ராக்கதனைக் 😈கண்டு தன்னைத் தின்னுமாறு கூறினாள். பிரம்மராக்கதன்😈 அவளைத் தொழுது🙏, "அம்மாநீ சொன்ன சொல் தவறாத உத்தமி. உன்னைத் தின்றால் மேலும்🌑 நரகம்தான் கிடைக்கும். கந்தருவ மகள் போலும்தெய்வமகள்👰🏻 போலும் விளங்கும் நீ விரைந்து வீடு🏡 போய்ச் சேர்என வழியனுப்பினான். ஊர்க்காவலனும்😀 அவளுடைய மேலான பண்புகளை மெச்சி வழியனுப்பினான். நகைகளைக் கேட்ட கள்வன்😳 எதிர்பட்டபோது தன் நகைகளை யெல்லாம் கழற்றிக் கொடுத்தாள். அவன் அவற்றை வாங்க மறுத்து, 'அம்மா நீ உண்மையின்👋 உறைவிடம். உன் உள்ளத்தில் உயர் பண்புகள் நிறைந்துள்ளன. 😀நான் களவாடமாட்டேன். சென்று வா என வழியனுப்பினான். சுதாமை👰🏻 களிப்போடு வீடு சேர்ந்தாள்.
         அண்ணன்மாரே! நான் சொன்ன இக்கதையில் வரும், 😳கள்ளன், 😀ஊர்க்காவலன், 😈பிரம்மராக்கதன், 😍தாய்மாமன் ஆகியவர்களுள் மெச்சத் தகுந்தவர்👌 யார்சொல்லுங்கள்என்றாள்.
     இதைக்கேட்ட பட்டர் நால்வருள்😳 ஆடு திருடி தின்னத் தந்தவன்,😈 பிரம்மராக்கதன் 👰🏻சுதாமையைத் தின்னாததால் அவனே சிறந்தவன் 👌என்றான்.  பிணத்தருகில் காவல் இருந்தவன்😳 ஊர்க்காவலனே😀 சிறந்தவன் என்றான். 😳நெருப்பு கொணர்ந்தவன் 😍தாய்மாமனே உத்தமன் என்றான். 😳விறகு கொண்டு வந்தவன் நகைகளைக் கழற்றிக் கொடுத்தும் வேண்டாம் என்று மறுத்த 😳கள்ளனே சிறந்தவன் என்றான். இவர்கள் சொன்ன விடைகளிலிருந்துகள்ளனை நல்லவன் என்று விறகு கொணர்ந்த பட்டனே😳 ஆயிரம் செம்பொன் முடிப்புகளைக்💰 களவாடிய கள்வன் என்று சுமதி உய்த்துணர்ந்தாள். 'கதை முடிந்ததுபோகலாம் என்று அனைவரும் எழுந்து போயினர்.
       சிறிது நேரம் கழித்து🙋🏻 சுமதிவிறகு கொணர்ந்த பட்டனிருப்பிடம்😳 சென்றாள். அவன் வியப்புற்று அவளருகில் வந்தான். 'நான்எனக்கு உடல் முழுவதும்💎💍 நகைகளைப் பூட்டி அழகு படுத்துபவனை மணந்து கொள்ள ஆசைப்படுகிறேன். உன்னால் எனக்கு நகை பூட்டமுடியுமாஎன்று சுமதி🙋🏻 அவனைக் கேட்டாள். எதிர்பாராத களிப்பில் மெய்மறந்த அவன்😳, உடனே தான் களவாடிய ஆயிரம் செம்பொன் முடிப்புகளை 💰கொண்டு வந்து அவள் கையில் தந்தான். அவனை அங்கிருத்திவிட்டு அவற்றைத் தன் தந்தையிடம் காட்டிக் கள்வன் யார் என்பதை தெளிவு படுத்தினாள். மறுநாள் அரசனிடம் அவன் அழைத்துச் செல்லப்பட்டு தண்டணைக் குள்ளானான். சுமதியின்🙋🏻 நுண்ணறிவை👌 அரசனும் மக்களும் புகழ்ந்தனர்.
(வளரும் )
"சுகுமாரசாமி முனிவர் சரிதம்👏
***************17*************
      இரண்டாவது கதையான வேலைக்காரன்😩 கதையை வைனயிகன் கீழ்கண்டவாறு மக்களுக்கு கூறினான்.
       தருமபுரம் என்னும் நகரில் நாகதத்தன்😀 என்னும் செட்டியிடம் வைனாகன்😩 என்னும் வேலைக்காரன் இருந்தான். அவன்🌾🌾 கரும்பு வயலை உழுது கொண்டிருந்தபோது ஒரு புதையல்📛 கிடைத்தது. அதனை மறைத்து வைத்துக் கொள்ள நினைத்தான். தன்👩 மனைவியிடமும் ஒரு விளையாட்டுக் காட்டி அவள் மனதை ஆராய எண்ணி வயிற்றின்⛄ மேல் அப்புதையலை📛 வைத்துக் கட்டிக் கொண்டான். வயிற்றில் கரு வளர்ந்து வரும்⛄ பெண்ணைப் போல் காட்சியளித்த அவனைக் கண்டு அவனுடைய மனைவி👩 திடுக்கிட்டாள். வயிற்றில் என்ன இருக்கிறது என்று வினவினாள். அதை ஏன் கேட்கிறாய்பேசாமலிரு என்றான்😩 அவன்.. அவளால் 👩பொறுக்க முடியவில்லை. 'எனக்கு நீங்கள் சொல்லியே ஆக வேண்டும் 'என்று அவள் உரத்துக் கூச்சலிடத் தொடங்கினாள். 👩அவளைச் சற்று அமைதிப் படுத்தி நீ யாருக்கும் இதனைச்🙊 சொல்லக்கூடாது. அப்படியானால் சொல்கிறேன் என்று ஒரு கட்டுப்பாடு இட்டுஆண்களுக்கு😩 உண்டாகாத ஒன்று எனக்கு உண்டாகிவிட்டது என்றான். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவள்👩 நகர மக்கள்👬👪 எல்லாருக்கும் இச்செய்தியைச் சொல்லி புலம்பினாள். 👩பெண்களிடம் எந்தச் செய்தியைச் சொன்னாலும் ஊரெல்லாம் 📢பரப்பி விடுவார்கள் என்னும் உண்மையை அந்த வேலைக்காரன்😩 உணர்ந்து கொண்டான். இந்த வேலைக்காரனின் கதையைக் கேட்டு மக்கள்சிரித்துமகிழ்ந்தனர்....
ஏய்த்து வாழ்ந்த வைன யிகன்
-------------------------------
       வைனயிகன்😳 என்னும் கள்ளன்மக்களை👪👬 மயக்கத்தக்க வேடிக்கையையும் புதுமையும் நிறைந்த கதைகளைச் சொல்லி நம்ப வைத்து🙉 ஏமாற்றினான். அவன் உரைத்த கதைகளுள் முதுமகளின்💆🏽 கதையைச் சோமசருமன் 😄தன் மகள் நாகசிரிக்குச்👰🏻 சொல்லத் தொடங்கினான்.
         ' மகளே! முதுமகளின்💆🏽 கதையைக் கேள். அரிபுரி என்னும் நகரத்தில் வாழ்ந்த💆🏽 கம்பீரை என்னும் முதுமகள்(கிழவி)சயந்த நகரில் வாழ்ந்த வசுதத்தன் 👨🏽என்னும் பரதனுக்குத் தன் மகளை 👩🏽மணமுடித்துக் கொடுத்திருந்தாள். அம் மகளின் பெயர் அரிணி. தன் மகள் அரிணி கருவுற்றிருக்கிறாள் எனக் கேள்விப்பட்டு மகளுக்கு விருப்பமான🍛🍝🍜 தின் பண்டங்களையும்பலவகை கொழுக் கட்டைகளையும் செய்து எடுத்துக் கொண்டு காட்டு🌲🌳🌴🎄 வழியே தனியாகச் சென்றாள்.
         வழியில் ஆறு கள்வர்கள் அவளை மறித்தனர்.
(தொடரும்)
"சுகுமாரசாமி முனிவர் சரிதம்👏
****************18***********
      வழியில் ஆறு😳 கள்வர்கள் அவளை மறித்தனர். கொல்வதற்கு கொலைவாளை🔪 உயர்த்தினர். கம்பீரை😭 அழுத வண்ணம் அக் கள்வர் தலைவனைத் தழுவி உச்சிமோந்து😛, "பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் என் மகன் காணாமல் போய்விட்டான். அவனைப் போலவே நீ இருக்கிறாய்! மகனே வீட்டுக்கு🏠 வா போகலாம்இவர்களையும் 😳😳உடன் அழைத்து வா. நம் வீட்டில் பெரும் செல்வம்💰 இருக்கிறது" என்றாள். கள்வர்கள் அறுவரும் பின்தொடர்ந்து அக் கிழவியின் மகள் வீட்டுக்குச்🏠 சென்றனர். 😳கள்வர்களுக்கு நீராட்டி உணவளித்து🍛, அவர்கள் உண்டுமுடித்ததும் கிழவிவீட்டுக் கூரையின்🏠 மேலேறி 'கள்வர்கள்என்று கூக்குரலிட்டாள். ஊரார் திரண்டு வரும் ஆரவாரம் கேட்கவே கள்வர்கள் 😳அறுவரும் தலை தப்பினால் போதும் என்று திசைக்கு ஒருவராய் ஓடிப்போய் விட்டனர்.
     முதுமகள் கம்பீரை💆🏽, கள்வர்😳 மீண்டும் அன்றிரவு வீட்டைக்🏠 கொள்ளையிட வருவர் என்று நினைத்துக் கையில் வாளோடு🔪 கதவருகில் தூங்காமல் உட்கார்ந்து கொண்டிருந்தாள். அவள் நினைத்தவாறே அன்று நள்ளிரவு🌑 காரிருளில் அதே கள்வர் அறுவரும் சுவரில் கன்னமிட்டனர். கன்னமிட்ட அச்சுவரின் துளையில் 😳அவர்கள் புகுமுன் கம்பீரை தன் கத்தியை துளைக்கு நேராகப் பொருத்திஒருவன்  இருளில் தலையை😶 நீட்டிப் பார்த்தவுடன் அவன் மூக்கை👃 அரிந்தாள். அவன் தலையைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டு அடுத்தவனை உட்புகச் சொன்னான்.😳 அவன் மூக்கையும் 👃அரிந்தாள்.  இவ்வாறு அறுவர் 👃மூக்கையும்🔪 அரிந்து தள்ளினாள். இந்த வீட்டில் ஏதோ பேய்😁 இருக்கிறது என அஞ்சி அந்த ஆறு கள்வரும் ஓடிப்போய் விட்டனர்.
       💆🏽 கம்பீரை சில நாட் கழித்துப் தன் ஊருக்கு தனியாகத் திரும்பினாள். வழியில் மீண்டும் கள்வர் வரும் ஒலி கேட்கவே ஒரு மரத்தின்🌳 மேல் ஏறிக் கொண்டாள். வழிப் போக்கர்கள் யாரேனும் வருகிறார்களா என்று காண்பதற்காக ஒரு😳 கள்வன் மரத்தின் உச்சிக் கிளையில் ஏறினான். கீழ்க் கிளையில் ஒரு கிழவி💆🏽 இருப்பதைப் பார்த்து வியப்படைந்து, 'நீ யார்என்றான். நான் இந்த மரத்தில் வாழும்😁 பூதத்தின் மனைவி. எனக்கு உடனே இறைச்சித் துண்டு🍤 ஒன்றை உன் நாவால்👅 ஊட்டு. இல்லையேல்😁 பூதவடிவெடுத்து உன்னையும்  உன்னைச் சேர்ந்தவரையும் தின்று விடுவேன் என்றாள். அவன்😳 மிகவும் அஞ்சி😫, தன் இடுப்பில் கட்டி வைத்திருந்த காய்ந்த இறைச்சித் துண்டை🍤 நாவில் ஏந்தி கிழவிக்கு ஊட்டும்போதுகிழவி அவன் நாக்கைக்👅 கடித்துத் துண்டாக்கி விட்டாள்.அவன்😳 கூக்குரலிட்டவாறு🌳 கீழே குதித்தான். ஏனைய ஏழு கள்வரும்😁 அஞ்சி நடுங்கினர். கிழவி💆🏽 கம்பீரை அவர்களைப் பார்த்து, "இனி நாள்தோறும் நீங்கள் கொள்ளையடிக்கும் பொருளில்💰 எட்டில் ஒரு பங்கு மரப் பொந்தில்🌲 கொணர்ந்து வைத்தால் வாழ்வீர்கள்அல்லது செத்தீர்கள்என்று அச்சுறுத்தினாள்.
(தொடரும் )
"சுகுமாரசாமி முனிவர் சரிதம்👏
×××××××××××××19××××××××××××
    😳கள்வர் எண்மரும்அவள்(கம்பீரை)💆🏽 சொல்லை ஏற்று அங்ஙனமே தாம் கொள்ளையடித்தவற்றில் 💰எட்டில் ஒரு பகுதியை அக்கிழவிக்கு அளித்து வந்தனர். கிழவி 💆🏽அச்செல்வத்தை மகள் வீட்டுக்கு கொடுத்து வந்தாள்.
             இத்தகைய வேடிக்கை கதைகளை வைனயிகன்😀 சொல்வான். மக்கள்👪 அவனுடைய கதைக்காக📒 விளை பொருள்களையும் தவசங்களையும் தருவர். அவன் கூட்டாளியான இரண்டாம் கள்வன்😳 வைகன்பொது மக்கள் தரும் 60 படி தவசத்தை 20 படியாக அளந்து காட்டி😋 ஏமாற்றுவான். மூன்றாம் கள்வன் வியோமகன் 😏அத் தவசத்தைச் சிற்றூர் மக்களின் நிலவறைகளில் கொட்டிவைத்து வேறு சுரங்க வழியாகக் களவாடி ஒன்றுக்குப் பத்தாகப் பொது👪 மக்களை ஏமாற்றித் தவசத்தைக் கொள்ளை யடிப்பான். இம்மூவரும்😳😳😳 மொத்தமாக அவற்றைப் பங்கிட்டுக் கொள்வார்கள்.
       கோசல ஊர்த் தலைவனான சகத் திருமன் 😎ஒருநாள் தன் தவசத்தை விற்கும் பொருட்டு சங்கமா நகரம் சென்றான். இக்😳 கள்வர்கள் மூவரின் ஏமாற்றுகளை அறிந்து அரசனிடம் 😠அம்பலப் படுத்தினான். அரசன்😡 சினந்து இம்மூவருக்கும் பொய்யும் களவும் புரிந்ததற்காகக் கொலைத் தண்டனை விதித்தான். அதனாற்றான் இம்😳😳😳 மூவரையும் கொலைக் களம் நோக்கி அழைத்துச் செல்கின்றனர் என்று சோமசரும பட்டாரர் தன் மகள் 👩நாகசிரிக்குக் கூறினார்.
            உடனே நாகசிரி,👩 "தந்தையே!  இதனாற்றான் நான்😷 சமணப் பெரு முனிவரிடம் பொய்யும் களவும் தவிர்வேன் என்று நோன்பு மேற்கொண்டிருக்கிறேன். 👩நான் சமண சமயம் சாராதவாறும் இந்த நல்ல நோன்புகளை மேற்கொள்ளாதவாறும் என்னைத்😁 தடுக்கிறீர்கள். நானும் இவர்களைப் போல் பொன்னுக்கும்💴💰💍 பொருளுக்கும் ஆசைப் பட்டு பொய்க் கதைகளைச் சொல்லி களவுத் 😁தொழிலில் ஈடுபட நேர்ந்தால் இப்படித்தானே எனக்கும் அரசன்😡 கொலைத் தண்டனை அளிப்பான். நான்👩 பொய்யும்களவும் தவிர்வதற்காக  உறுதி பூண்டது👍 தவறாஎன்று கேட்டாள்.
          👩நாகசிரியின் தாயும் 😟தந்தையும்,😧 'மகளே! நீ சமண முனிவரிடம்😷 மேற்கொண்ட இந்த நல்ல உறுதிமொழி தொடர்பான நோன்புகள் இருக்கட்டும். மற்ற உறுதிமொழிகளை அம் முனிவரின் இசைவு பெற்று விட்டு விடலாம் வா என்று முனிவர் 😷இருப்பிடம் நோக்கி அழைத்துச் சென்றனர்.
(வளரும் )
"சுகுமாரசாமி முனிவர் சரிதம்👏
***************20*************
கூடா ஒழுக்கம் குடி  கெடுக்கும்
--------------------------------
     👩நாகசிரி தன் பெற்றோர்களுடன்😧 செல்லும் போது எதிரில் ஒரு பெண்ணையும்💃🏻, ஆணையும்🚶 பின் கட்டாகக் கட்டிக் காவலாளர்😯 இழுத்துச் செல்வதைக் கண்டாள். 'ஏன் இவர்களை இப்படி இழுத்துச் செல்கிறார்கள்? 'என்று தந்தையைக்😟 கேட்டாள். தந்தை அதன் விளக்கத்தைக் கூறினார்.
     ' கேள் மகளே! சம்பா நகரத்தைச் ஜசார்ந்த சுவேதபுரத்தில் மத்தசயன் என்னும் பரதனுக்கும் சைசை என்பவளுக்கும் நந்தன்👱🏼 போதன் 👱🏽என இரு மக்கள் இருந்தனர். இப் பிள்ளைகளின் தாய் மாமனான சூரதத்தனுக்கு மோதாளி🙎🏻 என்னும் மகள் இருந்தாள். மோதாளி தாய் வயிற்றில் இருக்கும் போதே பிறப்பது பெண் மகவானால் நந்தனுக்கே 👱🏼திருமணம் செய்து தர வேண்டும் என்று ஒப்பந்தம் செய்திருந்தனர்.
       நந்தன் 👱🏼வணிகம் செய்து பொருளீட்டும் பொருட்டு சுவர்ண தீவுக்கு 🌁செல்ல நினைத்தான். தாய்மாமனிடம்😄 சென்று 'நான் பன்னிரண்டு ஆண்டுகளுக்குள் திரும்பாவிட்டால் மோதாளியை🙎🏻 என் தம்பி போதனுக்குத்👱🏽 திருமணம் செய்து கொடுங்கள் என்று கூறிவிட்டு கப்பலில் ஏறிச் சென்று விட்டான். பன்னிரண்டு ஆண்டுகள் ஓடின. நந்தன் 👱🏼வரவில்லை. பன்னிரண்டு ஆண்டு முடிந்த நாளே போதனுக்கு👱🏽 மோதாளியை🙎🏻 மணமுடிக்க நாட்குறித்து திருமண உறுதி ஏற்கும் நேரத்தில் நந்தன்👱🏼 திரும்பி வந்தான். நந்தனைக் 👱🏼கண்டதும் எல்லோரும் களிப்புற்றவராகி😀 நந்தனுக்கே மோதாளியை🙎🏻 மணமுடிக்க துணிந்தனர். ஆனால் நந்தன்👱🏼, தன் தம்பிக்கு என்று திருமண உறுதி (நிச்சயம்) செய்யப்பட்ட பெண்ணைத் தான் மணப்பது தகாது என்று மறுத்து விட்டான். போதனும்👱🏽 அண்ணன் திரும்பி வந்து விட்டதால் அண்ணனுக்கென்று பிறந்த நாள் முதல் உறுதிப் படுத்தப்பட்ட பெண்ணைத் தான் மணப்பது தகாது 😁என்று மறுத்து விட்டான். இந் நிலையில் திருமண ஏற்பாடுகள் நின்று விட்டன. மோதாளி🙎🏻 தன் தாய் வீட்டிலே திருமணமாகாத கன்னியாகக் காலங் கழித்து வந்தாள்.
         அவ்வூரில் பரதர் குடியைச் சார்ந்த நாகசூரன்😍 என்பவன் எட்டுப் பெண்களை மணந்திருந்தான். எட்டு மனைவியராலும் மனம் நிறைவடையாமல்  மோதாளியிடமும்🙎🏻 தகாத தொடர்பு கொண்டிருந்தான். மோதாளியை🙎🏻 அழைத்துக் கொண்டு சம்பா நகரத்துக்கு😍 வந்தான். ஊர்க்காவலன் கழுத்தில் தாலியில்லாத 🙎🏻கன்னிப் பெண்ணுடன் வந்த இவனை 😍ஐயுற்று அரசனிடம் அழைத்துச் சென்றான். அரசன் இவர்களின் வரலாற்றைக் கேட்டு மிக்க😡 சினமுற்றான். தீயொழுக்கம் புரிந்த இருவரையும் சிவக்கக் காய்ந்த இரும்புப் படிவங்களைத் தழுவச் செய்து கொல்லுமாறு ஆணையிட்டான். அரசன் 😡ஆணைப்படி இவர்களைக் கொல்வதற்காக அழைத்துச் செல்கின்றனர்'. என்று 😃சோமசருமன் நாகசிரிக்குக்👩 கூறினான்.
(வளரும்)
"சுகுமாரசாமி முனிவர் சரிதம்👏
============21============
      ' தந்தையே ! தீயொழுக்கம்😁 காமத்தால் நிகழ்வது😍, காமமும் தீயொழுக்கமும் புரியேன். கணவனாகும் உரிமையற்ற ஆடவனைத் தீண்டேன் என்னும் நோன்புகளைச்😷 சூரியமித்திர ஆசாரியர் இடத்தில் நான் பூண்டிருக்கிறேன். சமணர்களிடம் பெற்ற நோன்புக் கொள்கைகளைச் சமணரிடமே திருப்பி ஒப்படைக்கச் சொல்கிறீர்களே! இந்த நல்ல கொள்கைகளையும் ஒப்படைத்து விடட்டுமா?' என்று 👩நாகசிரி கேட்டாள்.
             😄பிராமணனான சோமசருமனும் அவன் மனைவியும் தம் மகள்👩 நாகசிரியை நோக்கி, 'மகளே பிற ஆடவரை நினையேன். காமவயப்படேன் என்னும் நோன்புகள்👌 நல்லவை.இவை உன்னிடம் இருக்கட்டும். நீ சமண முனிவரிடம்😷 கைக் கொண்ட ஏனைய நோன்புகளை திருப்பி ஒப்படைத்து விடலாம் நடஎன்று சூரியமித்திரரும்😷😷 அக்கினி பூதியும் தங்கி இருக்கும் நாகடாணத்திற்குச் சென்று முனிவரைக் கண்டனர்....
👩நாகசிரி துறவு மேற் கொண்டாள்
---------------------------------
           சூரியமித்திர ஆச்சாரியரையும்😷 அக்கினி பூதி அடிகளாரையைம்😷 கண்ட நாகசிரி👩 பணிவும் அன்பும் களிப்பும் பெருகியவளாகி  அவர்கள் திருவடியில் வீழ்ந்து வணங்கி🙏 தரையில் அவர்கள் அருகிலேயே அமர்ந்து கொண்டாள்.
   😄 சோமசருமன் என் மகளைச் சமண சமயத்தில்👏 சேர்த்து விடாதீர்கள். என்னிடமே என் மகளாக ஒப்புவிக்க வேண்டும் 'என்றான்.  சூரியமித்திரர்😷,  'இவள்👩 எங்கள் மகள்உங்கள் மகள் அல்லள். இங்கிருந்து உடனே வெளியேறுங்கள்என்று சோமசருமனையும்😄 அவன் மனைவியையும்👩🏻 போகச் சொல்லி விட்டார்.
       பிராமண குலத்திற்குத் தீங்கு நேர்ந்துவிட்டதே என்று புலம்பியவாறு சோமசருமன்😄 அரசனிடம்👳 முறையிட்டான்.
    சம்பா நகரத்து அரசன் 👳அமைச்சர்கள் புடைசூழ சமண முனிவர்களாகிய சூரிய மித்திர😷 அக்கினிபூதி அடிகளாரைக்😷 கண்டு,  சோமசருமனின்😄 வழக்கு குறித்து வினவினான்.
(வளரும் )
"சுகுமாரசாமி முனிவர் சரிதம்👏
^^^^^^^^^^^^^^^^22^^^^^^^^^^^^^^^^^
     😷  சூரியமித்திரர் சோமசருமனை😄 நோக்கி, "நாகசிரி👩 உன்னுடைய மகளானால் அவளுக்கு நான்கு வேதம் ,ஆறு அங்கம்பதினெண் தரும சாயத்திரம்மீமாம்சை முதலிய நூல்களைக் கற்பித்திருக்கிறாயா?" என்று கேட்டார். 😄சோம சருமன் , 'நான் என் மகளுக்கு ஒன்றும் கற்பிக்கவில்லை என்றான்.
      உடனே😷 சூரியமித்திரர்அரசனை 👳நோக்கி, 'அரசேஇந்த நாகசிரி👩 என் மகளாக இருப்பதால் இவளுக்கு அனைத்து வேத சாத்திரக்கலை சூத்திர நூல்களையும் கற்பித்திருக்கிறேன். கற்றோர் அவை ஒன்றைக் கூட்டி இவள் கல்வித் திறனை ஆராய்ந்து பாருங்கள் என்றார்.
       👳அரசன் பொது இடத்தில் பெரிதும் கற்றவரின் அவைக் களத்தைக் கூட்டினான். 😷சூரியமித்திரர் வந்து அமர்ந்தார். 👩நாகசிரி கற்ற கலைகளின் திறனை அவையில் நிறுவினாள்.
             
        நான்கு வேதம், 6 அங்கம் 18 தரும சாத்திரம்மீமாம்சைநியாயம்இலக்கணம்பிரமாணம்காவியம்நாடகம்சந்த அலங்காரம்,  அபிதானம்சாமுத்திரிகம் முதலியவற்றிலும் சாலிகோத்திரம்பாலகாப்பியம்ஆளிதம்சரகம்அசுவினீமதம்வாகடம் சுசுருதம் முதலிய மருத்துவத்திலும் சாணக்கியம்சோதிடம்மந்திரவாதம் முதலிய சாத்திரங்களிலும் தனக்குள்ள தன்னிகரில்லாத புலமையை நிறுவிக் காட்டினாள். அவை தொடங்கியபோதுமுதன்முதல்நாகசிரி பிரணவ மந்திரம் ஓதி சுவர வண்ண வேறு பாடுகள் தெளிவுபட சுலோகங்களைச் சொல்லும்போதே அவையிலிருந்த பெரும் பண்டிதர்கள்👴🏼👳🏾👵🏼 அனைவரும் மூக்கின் மேல் விரல் வைத்து அயர்ந்து விட்டனர்.
                  18புராணம், 18தரும சங்கிதை மீமாம்சைநியாய சூத்திரம் ஆகியவற்றில் பண்டிதரும் பிறரும் கேட்ட வினாக்களுக்கு 👩 நாகசிரி அழகாக ஆணித்தரமாக விடையளித்தாள்.
            👳அரசன் பெரிதும் வியப்புற்றுஇவள் எப்படி இவற்றைக் கற்றுக் கொண்டாள் என்று வினவினார். 😷சூரியமித்திரர்,  "அக்கினிபூதியின்👨🏻 தம்பியான வாயுபூதி👱🏼 ஆசிரியரை இகழ்ந்த குற்றத்திற்குக் கழுவாயாக பல பிறவிகளெடுத்து இப் பிறவியில் பிராமணனான சோமசருமன்😃 வீட்டில் நாகசிரியாகப்👩 பிறந்திருக்கிறான். அக்கினிபூதி👱🏼 வாயுபூதி 👱🏽ஆகிய இருவரும் முன்பொரு காலத்தில் என் மாணவராக இருந்து பல ஆண்டுகளாக இத்துணைச் சாத்திரங்களையும் கற்றனர்" என்றார்.
        👳அரசன் முனிவர் 😷காலில் வீழ்ந்து வணங்கித் தானும்😷 துறவியாகிவிட்டான். 😃சோமசருமனும் அவன் மனைவியும்👩🏻 சூரியமித்திரரை பணிந்து சமணத்துறவு பூண்டனர்.
         நாகசிரியும்👩 அவள் தாயான திரிவேதியும் 👩🏻 பிரம்மலே என்னும் கந்தியிடம் துறவு மேற் கொண்டு அருகனின்👤 நெறியைச் சார்ந்தனர்.
(வளரும் )
சுகுமாரசாமி முனிவர் சரிதம்👏
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷23÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
 சுகுமாரசாமியின் பிறப்பும் வளர்ப்பும்
---------------------------------
   👩நாகசிரி தன் தவப் பயனால் அச்சுதகல்பம் என்னும் விண்ணுலகில் தேவனாகப் பிறந்தாள். முற்பிறப்பில் நாகசிரியின் தந்தையான சோமசருமன்😃 தேவருலக இன்பங்களை நுகர்ந்து இச்சம்புத் தீவத்தின் தென்பரத நிலத்து அவந்தி நாட்டு உச்சயினி பொழிலில் (நகரில்) இந்திரதத்தன் என்னும் பரதவனுக்கும்(வணிகனுக்கும்) குணவதிக்கும் சூரதத்தன் 👲🏻என்னும் மகனாகப் பிறந்தான். அதே பொழிலில் (நகரில்) முப்பத்திரண்டு கோடி பொற்காசு செல்வமுடைய சுபத்திர செட்டிக்கும் சருயவசிக்கும் 👩🏻திரிவேதி என்னும் தேவன்யசோபத்திரை என்னும் மகளாகப்👰🏻 பிறந்தாள். பருவம் எய்தியதும் சூரதத்தனுக்கு👲🏻 யசோபத்திரையைக் கொடுத்து திருமணம் செய்தனர். முற்பிறப்பில் தேவனாகப் பிறந்திருந்த👩 நாகசிரி இவ்விருவர்க்கும் சுகுமாரசாமி🎅 என்னும்  மகனாகப் பிறந்தான்.
       🎅சுகுமாரசாமி பிறந்த நாளே 👲🏻சூரதத்த செட்டி மகனுக்குச் செட்டி பட்டங்கட்டி விட்டு அனைத்து இன்ப நலங்களையும் துறந்து தவம் பட்டான். 🎅சுகுமாரசாமி செல்வக் குழந்தையாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கட்டிளங் காளையானான். அவனுடைய கட்டமைந்த உடலையும் 👀கண்கவரும் தோற்றப் பொலிவையும் காண்பவர்கள் தேவகுமாரனே வந்து பிறந்திருப்பதாக 😄மகிழ்ந்தனர். சிறந்த ஆண்மகனுக்குரிய முப்பத்திரண்டு இலக்கணங்களும் பொருந்தியவனாக 🎅சுகுமாரசாமி விளங்கினான். அவனுக்குத் தேவமகளிரைப்👸🏻 போன்ற அழகுடைய முப்பத்திரண்டு கட்டிளங் குமரிகளைத் திருமணம் செய்து வைத்தனர்.
    
🎅சுகுமாரசாமியின்  தாய் 👰🏻தன் முப்பத்திரண்டு மருமகளிருக்கும் முப்பத்திரண்டு வள்ளிக்கொடி🏤 மாடங்களைக் கட்டச் செய்தாள். முப்பத்திரண்டு💃🏻👯 நாட்டியங்களைக் கண்டு மகிழ ஏற்பாடு செய்தாள். சுகுமாரசாமி🎅 முப்பத்திரண்டு கோடி பொற்காசு💰 செல்வத்திற்குரியவனாகவும் விலையுயர்ந்த இரத்தினங்களை💎💎💍 அளவின்றிப் பெற்றவனாகவும் எண்ணிலாத இன்ப நலன்களைத் துய்க்கும் பேறு பெற்றவனாகவும் விளங்கினான்.
(வளரும் )
சுகுமாரசாமி முனிவர் சரிதம்👏
++++++++++++×24×+++++++++
😄💰செல்வ வாழ்வு-👠செருப்பிலும் 💎இரத்தினக்கல்.
-------------------------------
  ஒரு நாள்😉 நிமித்திகன் ஒருவன் வந்து 👰🏻யசோபத்திரையிடம், 'உன் மகன் 🎅சுகுமாரசாமி முனிவர்களை 😷என்று நேரில் பார்க்கிறானோ அன்று தந்தையைப் போலவே துறவியாகி விடுவான் என்று கூறினான். இதைக் கேட்டு திடுக்கிட்ட 👰🏻யசோபத்திரைதன் 🏤வீட்டு வாயில் வழியாகக்கூட 😷துறவிகள் யாரும் வரக்கூடாது என்று 😬வாயிற்காவலர்களை அமர்த்திக் கட்டளை இட்டாள். இவ்வாறு காலம் செல்ல மற்றொருநாள்மாணிக்கத்⛲ தீவிலிருந்து ஒரு 👮🏼வணிகன் ஓரிலக்கம் மேனாட்டுப் பொன்💰(தீனாரம்) விலையுள்ள 💎இரத்தின கம்பளத்தை💮 விற்பதற்காக உச்சயினி நகருக்கு வந்தான். அப் பொழிலில் ( நகரில் ) இருந்து ஆளும் அரசன்😊 இடபாங்கனையும் அவனுடைய பட்டத்தரசி சோதிமாலையையும் கண்டு💎 இரத்தினக் கம்பளத்தைக் காட்டினான். அந்தக் கம்பளம் கண்ணைக்👀 கவரும் பேரெழில் மிக்கதாக இருப்பதால் விலைக்கு வாங்க நினைத்த மன்னன்😊 அதன் விலை ஓரிலக்கம் தீனாரம் என்றதும் அத்துணை விலை கொடுத்து வாங்க இயலாது என்று வணிகனை அனுப்பி விட்டான். அந்நகரில் யாருமே அதனை விலைக்கு வாங்க முடியாதவராயினர்.
        அந்த வணிகன்👮🏼 யாருமே வாங்க இயலாதது அறிந்து அடுத்த நகருக்குச் செல்ல நினைத்தபோது 👰🏻யசோபத்திரை அவனைத் தன்🏤 வளமனைக்கு வரவழைத்து ஓரிலக்கம் தீனாரம் (மேனாட்டுப் பொற்காசுகள்) கொடுத்து💎 இரத்தினக் கம்பளத்தை விலைக்கு வாங்கிக் கொண்டாள். அந்த இரத்தின கம்பளத்தை முப்பத்திரண்டு(32துண்டுகளாக வெட்டச் செய்து ஒவ்வொரு துண்டையும் மேலும் இரண்டிரண்டாக வெட்டித் தன் முப்பத்திரண்டு👸🏻 மருமகள்மாரையும் வரவழைத்து அவர்களுடைய👠 செருப்புகளில் அழகுக்காக வைத்துத் தைத்துக் கொள்ள ஏற்பாடு செய்தாள்.

😊அரசனே வியப்புற்றான்!
-------------------------------
     😊தன்னாலே விலை கொடுத்து வாங்க முடியாத இரத்தினக் கம்பளத்தை 🎅சுகுமாரசாமியின் தாய் 👰🏻யசோபத்திரை விலை 💰கொடுத்து வாங்கிவிட்டாள் என்றும்அந்தக் கம்பளத்தைத் துண்டு துண்டாக வெட்டித் தன் முப்பத்திருவர் மருமகளிருக்கும்👸🏻 செருப்பில்👠 வைத்து தைத்துக் கொள்ளச் சொல்லிவிட்டாள் என்றும் கேள்விப்பட்ட மன்னன் பெரிதும்😇 வியப்புற்றான். அவர்களின் செல்வ வாழ்வையும் வள  மனைகளையும்🏤 நேரில் சென்று காண நினைத்தான்.    (வளரும் )

தீனாரம் என்பது யவன வணிகரால் தென்னாட்டில் புழக்கத்துக்கு விடப்பட்ட பொன் நாணயம்...
"சுகுமாரசாமி முனிவர் சரிதம்👏
***************25**************
       😊அரசனும் அரசியும் தன் வீட்டிற்கு வர விரும்புவதை அறிந்த👰🏻 யசோபத்திரை மிகவும் மகிழ்ந்து அரசனின் வருகைக்கு📆 நாள் குறித்து அரசன்😊 வரும் வழிநெடுக முத்துத் தோரணங்களைக்🎋🎈 கட்டச் செய்தாள். பாதையில் ஐவகை விலை மிக்க மணிகள் பதித்த 🎌கொடிக்கோல🎏 வகைகளை யிடச் செய்தாள். கண்ணைக் கவரும் வண்ணங்களுடைய பட்டு நடைக் கம்பளங்களை விரித்து வரவேற்பு வரிசைத் தட்டுகளையும் நிறை குடங்களையும் தாங்கிய மகளிரோடு அரசன் வரவை ஆவலுடன் எதிர் பார்த்திருந்தாள்.
                😊அரசனும் அரசியும் பெருமிதத்தோடு வந்தனர். யசோபத்திரை👰🏻 அளித்த சிறந்த வரவேற்புக்கு மகிழ்ந்து அரண்மனை யை விட அழகான வளமனையினுள்🏤 வியப்பு மேலிட திறந்த விழியை மூடாமல் நாற்புறமும் பார்த்துக் கொண்டு சென்றனர். தேவர்களின்🎇 பொன்னுலகத்துக்கே வந்து விட்டதாக மன்னன் நினைத்தான். அன்னத்தூவி மெத்தையிடப்பட்ட கண்கவர்💺💺 இருக்கையில் அரசனையும் அரசியையும் இருத்தினர். அரசன்😊 உம்மகன் 🎅சுகுமாரசாமி எவ்விடத்திருக்கிறான் என்று வினவினான்.
         'அரசே! அவன் அறியாக் குழந்தை போன்றவன். தங்கள் வரவு அவனுக்குத் தெரியாது. பூங்கொடிப் பொன் மாளிகையில் இருக்கிறான்.அவனை வரவழைக்கிறேன்என்று கூறிவிட்டு👰🏻 யசோபத்திரை மகனை அழைத்து வரச் சென்றாள்.
         சுகுமாரசாமியைக் 🎅 கண்டு, 'மகனே அரசர்😊 வந்தார்வா போவோம்என்று அழைத்தாள். உடனே🎅 சுகுமாரசாமி,  ' அம்மா அரசர் என்போர் யார் என்று வினவினான்.  அரசரென்போர் நம்மை ஆள்வோர் என்று👰🏻 தாய்.மறுமொழி உரைத்தது கேட்டுநம்மை ஆள்வாரும் உளரோ என்று வியப்புற்று வினவினான். மகனின் வினாவுக்கு மறுமொழி சொல்ல இயலாதவளாய் 🎅அவனை அழைத்துக் கொண்டு அரசனிடம் வந்தாள்.
        சுகுமாரசாமியைக்🎅 கண்ட அரசன்😊 கண் பெற்ற பயனை இன்று பெற்றேன் என்று மகிழ்ந்தான்.மலர்க் கணை எய்யும் காம தேவனை நேருக்கு நேராக அதே அழகு வடிவத்தில் காண்கின்றேன் என்று கூறி அவனை மார்புறத் தழுவி வாழ்த்தினான். பிறகு இருவரும் மென் பூஞ்சேக்கையில் அமர்ந்தனர்.
   ( வளரும் )
சுகுமாரசாமி முனிவர் சரிதம்👏
+ + + + + + + + + 26+ + + + + + + + +
        😊அரசனும் 🎅சுகுமாரசாமியும் மென் பூஞ்சேக்கையில்💺 அமர்ந்தனர். அப்பொழுது மங்கலப் பொருளாக மஞ்சள் கலந்த 'அக்கதையைமலர்களோடு கலந்து🎊 அவர்கள் மேலே மகளிர்🙋🏻 வீசி இறைத்தனர். அதில் இருந்த ஒரிரு💦 வெண் கடுகுகள் 🎅சுகுமாரசாமியின் இருக்கையில்💺 விழுந்தன. அவ்வெண் சிறுகடுகு உறுத்தியதைத் தாளாத 🎅சுகுமாரசாமி முள் குத்துவதுபோல் உணர்ந்து🚶 எழுந்திருந்தான். உடனே அவ்வெண்💦 சிறு கடுகுகள் இருக்கையினின்று💺 அப்புறப் படுத்தப்பட்டதும், 🎅சுகுமாரசாமி மீண்டும் இருக்கையில்💺 அமர்ந்தான். இதைக் கண்டு அரசனுக்கு😇 மேலும் வியப்பு உண்டாயிற்று.
                அரசன்😊 வந்திருப்பதால் மங்கல நல் விளக்குகள்📍🎐 கொளுத்தி வைக்கப் பட்டிருந்தன.தொலைவில் வைக்கப்பட்டிருந்த விளக்குகளின் மென் புகை💫 காற்றில் மிதந்து வந்தததால் 🎅சுகுமாரசாமியின் கண்களில் கண்ணீர்😭 வழிந்தது. கண்ணீர் வழிவது ஏன் என்று அரசன்😊 வினவியபோது, 🎅சுகுமாரசாமி மிக மென்மையான இன்ப நலன்களையே நுகர்ந்து வாழ்பவன் என்றும் 💎மாணிக்கக் கற்களின் ஒளியிலல்லாது விளக்கின்💡 ஒளியில் அவன் உட்கார்ந்ததில்லை யென்றும் 👰🏻யசோபத்திரை கூறினாள்.
         பின்பு 💎 மாணிக்கக் கல் பதித்த நீராடு 💠��🏻மண்டபத்துக்கு அரசனை😊 அழைத்துச் சென்றனர். அரசன் மாணிக்கம் பதித்த💠 படிக்கட்டுகளில் இறங்கித்தூநீராடத் தொடங்கினான். அப்பொழுது😊 அரசனின் விரலில் அணிந்திருந்த மாணிக்கம் பதித்த மோதிரம்💍 நழுவி நீருக்குள் விழுந்து விட்டது. அரசன் 😊அதை எடுத்துத் தருமாறு கூறினான்.
        😊அரசன் கூறியதற் கேற்ப அப்💠 பொய்கையிலிருந்த நீர் முழுவதையும் உள் மதகுப் பலகையைத் தூக்கி வடித்து விட்டனர். நீர் முழுவதும் வடிக்கப்பட்ட அப் பொய்கையில்💠 மாணிக்கக் கடை விரித்தார்போலும் நகைகள் நிரம்பிய அணிகலப் பெட்டியை திறந்தது போலவும் எங்குப் பார்த்தாலும் மோதிரங்களும்💍💎👑 பொன்னாரங்களும்காற் சிலம்புகளும் உள்ளிட்ட பல அணிகலன்கள் கிடந்தன. தன்னைப் போல் நீராடுவோர் தவறவிட்டள நகைகளின் எண்ணிக்கையைக் கண்டு அரசன்😊 மலைத்துப்😳 போய்விட்டான்.
வளரும் )
சுகுமாரசாமி முனிவர் சரிதம்👏
============27===========
          😊அரசன் நீராடி🏊🏻 ஆடையணி பூண்டு 👔👖வந்ததும் விருந்துண்ண அமர்ந்தனர். விருந்தில் புதுமையான பலவகை உண்டிகளும் 🍛🍚தின் பண்டங்களும் 🍞🍪இனிப்பு வகைகளும்🍧கார வகைகளும்🍲 பழங்களும்🍋🍐🌽 இடம் பெற்றிருந்தன. 😊அரசனும் அரசியும் மிகவும் மெதுவாக விருந்தைச் சுவைத்து😛 மகிழ்ந்தனர். ஆனால் 🎅சுகுமாரசாமி மட்டும் சிறிது உண்பதும் ஓரிரு முறை சிலவகை உண்டிகளை விரும்பாமல் உமிழ்வதுமாக😤 இருந்ததை அரசன் பார்த்தான். அனைவரும் மன நிறைவோடு உண்டு முடிந்த பிறகு 😊அரசன் யசோபத்திரையை👰🏻 நோக்கி உன் மகன் சில உணவு வகைகளை உமிழ்ந்தது ஏன்என்று வினவினான்.
            அதற்கு யசோபத்திரை 👰🏻 மறுமொழி சொல்லத் தொடங்கினாள். 'விருந்தினர் வரும்போது மணமூட்டப் படாத அரிசியாலும் சோறாக்குவோம். 🎅'சுகுமாரசாமி உண்ணும் சோறு வழக்கமாக பல்வகை மலர்களின்🌸🌼🌻 மணமூட்டப் பட்ட அரிசியால் சமைக்கப் படும். உண்டி வகைகளின் சுவை இன்று வேறுபட்டிருந்ததால்😤 உமிழ்ந்து விட்டான்.  தனக்குப் பிடித்ததை மட்டும் விரும்பி😜 உண்டான்என்று யசோபத்திரை👰🏻 கூறியதைக் கேட்ட மன்னன்😊 அடுக்கடுக்கான வியப்புக்குரிய செய்திகளைக் கேட்டு திகைத்துப் போய்விட்டான்.
                      சுகுமாரசாமியின்🎅 நொடிப்பொழுது இன்ப வாழ்வுக்கும் ஐம்புல நுகர்வுக்கும் என் போன்ற 😊அரசர்களின் செல்வ வாழ்வுகள் அனைத்தும் ஒரு சிறிதும் ஈடாகாது என அறிந்தேன். உலகில் இவன்👍 ஒருவனே ஐம்புல இன்பங்களை முறையாகத் துய்க்கப் பிறந்த செல்வப் பெருமகன். 🎅அவந்தி சுகுமாரன் என்னும் பெயர் முற்றிலும் இவனுக்குப் பொருந்தும். இவன் பல்லாண்டு வாழ்கஎன மனங்குளிர வாழ்த்தி✋ அரசனும் அரசியும் யசோபத்திரை யிடம்👰🏻 பிரியா விடைபெற்றுத் தம் அரண்மனைக்குச்🏣 சென்றனர். யசோபத்திரை👰🏻 அரசனுக்கு😊 விலைமதிப்பரிய உயர்ந்த பொருள்களைப்💎💍🎁 பரிசாகக் கொடுத்து அனுப்பினாள்.
வளரும் )
"சுகுமாரசாமி முனிவர் சரிதம்👏
* * * * * * * * * 28* * * * * * * * * * *
தயாபத்திர முனிவரின்
வருகை!
--------------------------------
    கடக (ஆடி)த் திங்கள் பதினான்காம் நாள் மாலையில் பறையறையும் நேரத்தில் தயாபத்திரர் என்னும்  😷 முனிவர் அந்நகருக்கு வந்து அரண்மனையின்🏣 பின் உள்ள பூஞ்சோலையில்🌾🌷🌴 அமர்ந்து தவம் செய்து😌 கொண்டிருந்தார். பூஞ் சோலையின் 😲காவல்காரன் 👰🏻யசோபத்திரையிடம் வந்து,  'ஒரு முனிவர்😷 அரண்மனை பூந்தோட்டத்தில் அமர்ந்து தவம் செய்கிறார். போ என்று விரட்டினாலும் போக வில்லைஎன்று கூறினான். 👰🏻யசோபத்திரை முனிவரிடம்😷 சென்று, 'அடிகளே ! தாங்கள் தங்கியிருக்க  நகரின் புறத்தே ஜினாலயம்🏠 உள்ளது. தங்களுக்குத் தவம் செய்வதற்கேற்ப திருமடமும்🏫 நகரின் புறத்தே கட்டித் தருகிறேன். தாங்கள் 🏣அரண்மனைத் தோட்டத்தில் தங்காமல் அங்குப் போய் விடுவது நல்லதுஎன்றாள்.
       'அம்மையே ! நான் நெடுந்தொலைவு நடந்து👣👣 களைத்து வந்திருக்கிறேன். மேற் கொண்டு என்னால் எங்கும் நடக்க முடியாது. நான்கு மாதத் தவத்தில்😌 ஈடுபட்டிருக்கிறேன். இத்தவம் முடிந்ததும் நானே வெளியில் போய் விடுகிறேன்என்றார். 'அப்படியானால் ஒன்று செய்யுங்கள். தங்களின் நான்கு மாதத் தவம்👏 முடியும் வரை தாங்கள் உரத்து மந்திரம்🔇 சொல்லக்கூடாது. அற நூல்களையும் 📚ஓதக் கூடாது. இந்த உதவியை தாங்கள்😷 செய்யவேண்டும்என்றாள். அப்படியே ஆகட்டும் என்று முனிவர்😷 ஒப்புக் கொண்டார். 👰🏻யசோபத்திரை தன் அரண்மனைக்குத் திரும்பிச் சென்றாள்.
      😷 முனிவர் தன் தவ வலிமையால்✋ யசோபத்திரையின் மகன்  🎅சுகுமாரசாமிக்கு வாழ்நாள் இன்னும் நான்கு மாதமும் ஐந்து நாளும்தான் என்பதைத் தெரிந்து கொண்டார். 🎅சுகுமாரசாமிக்குத் தவ நெறி அருளி👌👋 நன்மை செய்ய வேண்டும் என்றும் நினைத்தார். நான்கு மாதங்கள் முடிந்தன. 😷முனிவர் தன் தவம் முடித்தார். அன்று இரவு கார்த்திகை முழுநிலவு🌝 வானில் ஒளி வீசிக் கொண்டிருந்தது.
          🎅சுகுமாரசாமி தன் முப்பத்திரண்டு 🙋🏻👩🏻மனைவியருடனும் களித்து😍 நிலா🌙🏤 முற்றத்தில்  விளையாடினான். கார்த்திகை முழுநிலா🌝 அவர்களுக்கு மனமகிழ்ச்சியைப் பெருக்கியது. ஏழாவது மாளிகையில் 🎅சுகுமாரசாமி அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த போது நான்காம் யாமத்தில்  ஒரு பாட்டோசை📢 இனிமையாகவும் தெளிவாகவும் கேட்டது.
(வளரும் )
"சுகுமாரசாமி முனிவர் சரிதம்👏
*************29**************
               😷தயாபத்திர முனிவர் தவம் முடிவு பெற்றதால் நான்காம் யாமத்தில்🌙 மந்திரங்களை 📢உரத்து ஓதினார். 🎅சுகுமாரசாமி க்கு அந்த மந்திர ஓசை  பழம் பிறப்பின்😇 நினைவை உண்டாக்கியது. சென்ற பிறப்பில் அச்சுதகல்பம் என்னும் மேலுலகில் தேவனாகப்👱🏼 பிறந்திருந்தது நினைவுக்கு வந்தது. அதன் பின் 😷முனிவர் வானுலகின்🌠 அழகுகளையும் இன்பங்களையும் வருணிக்கும் பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தார். 🎅சுகுமாரசாமிக்கு அந்தந்த உலகங்களில் தான் கண்ட மற்றும் வாழ்ந்திருந்த இடங்களின் அடையாளம் நன்கு நினைவுக்கு😇 வந்தது. இன்பம் நுகர்ந்த வானுலகத்தை 🌠விட்டு மண்ணுலகில் 🌄வந்து பிறந்திருப்பதற்காகப் பெரிதும் 😰வருந்தினான்.
          'வானுலகத்தில்🌠 அமுதக் கடல் போன்ற பேரின்பம் நுகர்ந்த நான் புல் நுனியில் இருக்கும் பனித்துளி💧💦 போன்ற மண்ணுலக🌄 இன்பங்களை விரும்பி வாழமாட்டேன். இப்பொழுதே துறவு கொள்கிறேன்'.என்று கூறிப் பொழுது புலரும் முன் முனிவர்😷 இருப்பிடம் சென்றான். ஏழாவது மாளிகையில்🏤 இருந்து இறங்கி வரும் போது ஒவ்வொரு கதவருகிலும் தான் அணிந்திருந்த ஒவ்வொரு👔👖 ஆடையைக் கழற்றி எறிந்தான்.
             😷 முனிவரின் அருகில் வந்ததும் அவரை வணங்கி🙏 எனக்குத் தவநெறி அருள வேண்டும்😰 என்று வேண்டினான். 😷முனிவர் 🎅சுகுமாரசாமியை நோக்கி 'உனக்கு வாழ்நாள் இன்னும் நான்கு   நாள்தான் இருக்கிறது. அதற்குள் நீ கடுந்தவம்😴 மேற்கொள்வது நல்லது 'என்று கூறி✋ தவநெறியருளினார். 'இத்துணைக் காலம்  தவம் செய்யாமல் காலங்கழித்து விட்டோமோ என்று வருந்திய😷(🎅) சுகுமாரசாமி ,    😷முனிவர் உரைத்த நோன்புகளையும் தவ நெறிகளையும் அப்பொழுதே கைக் கொண்டு அவர் திருவடிகளின் அருகிலேயே😴 தவஞ் செய்தான்.
(வளரும் )
சுகுமாரசாமி முனிவர் சரிதம்👏
--------------30--------------
😷((🎅))சுகுமாரசாமியின் தவம்
-------------------------------
      மறுநாள்நகரின் புறத்தேயிருந்த மகாகாளம்  என்னும் சுடுகாட்டுக்குச்🔥 சென்று 😷சுகுமாரசாமி தவத்தில் ஈடுபட்டார். நிலத்தில் எப்பொழுதும் நடந்தறியாத- அதுவும் வெறுங்காலில் நடந்தறியாத-😷சுகுமாரசாமிக்கு,  சுடுகாடு 🔥போய்ச் சேர்வதற்குள் முள்ளும் கல்லும் குத்தி இரண்டு பாதங்களிலும்👣 கொப்புளங்களும் புண்களும் தோன்றின. கொப்புளங்களிலிருந்தும் புண்களில் இருந்தும் வழிநெடுக இரத்தம்👣👣 கொட்டியிருந்தது.
            👦வாயுபூதியின் அண்ணியாக இருந்த சோமதத்தை🙎🏻 தன் நான்கு பிள்ளைகளுடன் இறந்து அந்தச் சுடுகாட்டில் நரியாகப்🐺பிறந்து ஊளையிட்டுக் கொண்டிருந்தாள். அவளைச் சுற்றி🐺🐺🐺🐺 நான்கு நரிகள் இருந்தன. 😷சுகுமாரசாமி யின் காலில் இருந்து சிந்திய இரத்த👣👣 மணம் அறிந்து அந்த ஐந்து நரிகளும் கடித்துத் தின்ன இரை தேடி வந்தன. 🔥சுடுகாட்டில் தவஞ்செய்து கொண்டிருந்த😷 சுகுமாரசாமியின் முழங்கால் வரை முதல் நாள் இரவில்🌒 நரிகள் தின்றுவிட்டன. 😷சுகுமாரசாமி நோயைப் பொருட்படுத்தாமல் தவம் செய்து😌 கொண்டே இருந்தார்.  நரிகள் இரண்டாம் நாள் இரவும் 🌓வந்து அவருடைய தொடைகளைத் தின்றன. மூன்றாம் நாள் இரவில்🌔 அவருடைய வயிற்றைக் கிழித்துத் தின்றன. 😷சுகுமாரசாமி மனத்தை ஒருமைப் படுத்தி சுக்கில மூழ்கத்தில் (தியானத்தில்)ஆழ்ந்து துன்பங்களைப் பொறுத்து😌, அற நெறிகளை நினைத்து😇 அருள் உள்ளம் ததும்ப இவ்வுலக வாழ்வை நீத்து💫 மேலுலகில் 🌠 சயசத்தம  தேவனாகப் 👤பிறந்தார்.
          🏤அரண்மனையின் ஏழாவது மாளிகையில் உறங்கிக் கொண்டிருந்த 🎅சுகுமாரசாமியைக் காணாமல்  தாய் யசோபத்திரையும்👰🏻 முப்பத்திரண்டு👸🏻👩🏻 மனைவியரும் பதறிப் போயினர். எல்லா இடங்களிலும் தேடினர். நகரம் முழுவதும் தேட🚶🏃🏻 ஆட்களை அனுப்பினர். மூன்று நாட்களாகத் தேடியும் 🎅சுகுமாரசாமி யைப் பற்றி ஒரு செய்தியையும் தெரியவில்லை. நான்காம் நாள் இரவு🌠 வானத்தில்,  "ஓ ! மாபெரும் வீரனே ! இணையில்லாத அழகனே ! துணிவின் இருப்பிடமே ! பொறுமையின் பிறப்பிடமே ! உன்னைப்போல் நற்காட்சி,  நல்லொழுக்கம்நல்ஞானம் என்னும் மும்மணி💎💎💎 (ரத்னத்திரயம்) ஒழுக்கத்தில் சிறந்தவர் எவருமில்லை. சுகுமாரா ! செல்வக்குமாரா ! என்று தேவர்கள் ஓசையிடுவதை யசோபத்திரை👰🏻 கேட்டாள்.
-------------------------------
#😷((🎅 ))   சுகுமாரசாமி இவ்வுலக வாழ்வை நீத்த சுடுகாட்டுப் பகுதியாகிய மகாகாளம் இன்றும் காபாலிகரின் மேற்பார்வையில் உள்ளது. காபாலிகளுக்கு உரிய கட்டணத்தைச் செலுத்தி சவ எரிப்பை அந்த இடத்தில் மக்கள் செய்து வருகின்றனர்.  தேவர்கள் பூமாரி பொழிந்து சந்தனம் போன்ற நறுமணக் குழம்புகளை பொழிந்ததால் அங்கு  கந்தவதி  என்னும் ஆறு ஓடுகிறது. 🎅சுகுமாரசாமியின் முப்பத்திரண்டு மனைவியரும் புலம்பி அழுத 😭அழுகைக் குரலின் நினைவாக அங்கு கலகலேசுவரன் என்னும் தேவன் நிலைத்திருப்பதாக நம்பப்படுகிறது.. ...
-------------------------------
**வளரும்,...........
-----'----------------------'---
சுகுமாரசாமி முனிவர் சரிதம்👏
*************31****************
    👰🏻யசோபத்திரை     தன் மகன் நகரத்துக்குள்ளேயே இருக்கிறான் என்று நினைத்துப் 🌄பொழுது புலர்ந்ததும் தன் முப்பத்திரண்டு👸🏻👩🏻 மருமகள்மாரையும் அழைத்தாள். "நீங்கள் நீராடி நல்ல உடைகளை உடுத்தி👚👗🎽🌹🌸 பொட்டிட்டு பூ முடித்து வாருங்கள். உங்கள்🎅 கணவன் இருக்கும் இடம் தேடிச் செல்வோம் "என்றாள். அவர்களும் அவ்வாறே தம்மை ஆடையணிகளால் அழகு படுத்திக்கொண்டு👚👗🎽🌹🌸 வந்தனர். மகாகாளம்  என்னும் சுடுகாட்டில் 🔥தேவர்கள் பூமாரி பொழிவது கண்டு அருகில் சென்றனர். தேவர்களின் மலர்களோடு சந்தனம்,  அகில் போன்றவற்றின் நறுமணக் கலவைகளையும் பொழிந்து கொண்டிருந்தனர்.
     👵🏼👴🏼தேவர்கள் பூமாரி பொழிந்ததால் ஒரு பெரிய மலர்க்குவியல்🌹🌷 காணப்பட்டது. மலர்க்குவியலின்🌹🌷 நடுவே வண்டுகள்🐝🐝 மொய்ப்பதறிந்து யசோபத்திரை மலர்க்குவியலை ஒதுக்கினாள். உள்ளே ((🎅)) 😷சுகுமாரசாமி இறந்து கிடப்பதைக் கண்டு மயங்கி விழுந்தாள். முப்பத்திரண்டு மனைவியரும் 😭😰😪மயங்கி வீழ்ந்தனர். மயக்கம் சிறிது தெளிந்ததும் மாரிலும் தலையிலும் அடித்துக் கொண்டு அழுது புலம்பினர். சுகுமாரசாமியின்🎅 அழகையும் பண்புகளையும் நினைத்துப் பலவாறு புலம்பினர். அழுவதும் மயக்கமடைவதுமாக  இருந்தனர்.
      👼சூலாக (கர்ப்பமாக) இருந்த எட்டு பேர் தவிர ஏனைய இருபத்து நான்கு மனைவிகளும் சுகுமாரசாமியின்🎅 பிரிவுத் துயரத்தை தாளாமல் துறவு🙅 பூண்டனர். இவர்கள் அனைவரும் தயாபத்திர முனிவரை😷 குருவராக(குருவாக)வும்   கமலசிரி கந்தியாரைத் தவநெறிப் படுத்துபவராகவும் கொண்டு கடுந்தவம் செய்து இவ்வுலக வாழ்வை நீத்து😞😞 சவுதரும கல்பம் என்னும் மேலுலகத்தில்🌌 தேவராகப் பிறந்தனர்.
               மூன்று நாட்களாக  நரிகள்🐺🐺 தன்னைத் தின்றும் தவம் குலையாமல் மனவுறுதியோடு👍 தவஞ்செய்து துன்பம் பொறுத்துக்கொண்டு மேலுலக இன்பங்களைப் பெற்றதால் சுகுமாரசாமியை 🎅 அவந்தி சுகுமாரசாமி👏 என்று மக்கள் போற்றினர். தேவர்களால் வழிபடப்👏 பெற்ற பெருமையையும் பாராட்டினர்.
      அவந்தி சுகுமாரசாமியின்🎅😷 கதையைக் கேட்ட அன்பர்கள் அறநெறி நின்று துன்பங்களைப் பொறுத்து 😌அருள் நலன்களையும் மேலுலக இன்பங்களையும் எய்துவார்களாக.🙏
(முடிவுற்றது)
--------------------------------
குறிப்பு- இக்கதையை படித்த அன்பர்களுக்கு,
  பதிவேற்றத்தில்    சிறு சிறு எழுத்துப் பிழைகள் இருந்திருக்கும்.அதை பொறுத்துக்கொண்டு படித்தமைக்கு மிகவும் நன்றி! 🙏🙏🙏



------------------------------- 

2 comments:

  1. முழுவதும் படிக்க வாய்ப்பு கிடைத்தது.

    நன்றி.

    ReplyDelete
  2. முழுவதும் படிக்க வாய்ப்பு கிடைத்தது.

    நன்றி.

    ReplyDelete