Ennathin Vannam - எண்ணத்தின் வண்ணம்.






எண்ணத்தின் வண்ணம் 





பகவான் மஹாவீரரும், ஸ்ரேணிக மாமன்னனும்  ஓர் உரையாடல்…..






ஓர்நாள் ஸ்ரேணிக மன்னன் பகவான் மஹாவீரரை வணங்கி மரியாதை செலுத்தும் நிமித்தமாக தன் பரிவாரங்களுடன் சென்று  கொண்டிருந்த போது வழியில் வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் ஒர் வனத்தில் தேஜஸுடன் ஆழ்நிலை தியானத்தில் அமர்ந்திருந்த முனிவரைக்  கண்டான்.


அவர் அருகில் சென்று முனிவ பெருமானுக்கு வணக்கம், என்னை ஆசிர்வதியுங்கள்


அவர் மோனநிலையில் ஆழ்ந்திருந்ததனால் செவிமடுக்காமல் மெளனமாக  அமர்ந்திருந்தார்.


அவர் தியானநிலையை உணர்ந்த மன்னனும் அவரை வணங்கிய பின் பயணத்தை தொடர்ந்தான். 


பயண இறுதியில் ஸ்ரீமஹாவீரரை கண்டு அவரிடம் ஐயனே வழியில் பத்மாசன நிலையில் ஒளிபொருந்திய முகம் கொண்ட முனிவர்  ஒருவர் தியானத்தில் ஆழ்ந்திருந்ததைக் கண்டேன்.


 நான் வணங்கிதையும் காணாது ஆழ்நிலையில் ஆழ்ந்திருந்தார். அக் கணத்தில் அவர்  மரணத்தை தழுவினால் அவரது செல்கதி என்னவாக இருக்கும்ஐயனே!  என தான் அறிய வேண்டினான்.


அரசனே, ம்முனிவர்  இக்கணத்தில் மரணித்தால் ஏழாம் நரக கதி எய்துவார்”  என அவதியில் உணர்ந்ததை உரைத்தார்.


அதனைக் கேட்டு ஸ்ரேணிகனும் அதிர்ச்சிக்குள்ளானான். அப்படியா! ஏன் அத்துறவி நரக கதி எய்த வேண்டும். ஐயனே ஒரு வேளை நான் கூறியதை  தவறாக புரிந்து கொண்டு விட்டீர்களோ! என பகவானிடம் கேட்டான்.


மேலும் சிறு பொழுதில் சரி பகவானே தற்பொது,  நான் வினவும் இக்கணத்தில் அத்துறவி இவ்வுலகை விட்டு விலகினால், எக்கதியை அடைவார் என ஆவதானித்து உரையுங்கள்?”  என மீண்டும்  வினவியதும்;


மன்னனே, கேள்! இக்கணத்தில் அவர் விடுபட்டால் அமரர் உலகமாகிய சர்வார்த்த சித்தி என்னும் சொர்க்கத்தில் தேவனாக தோன்றுவார்  என பதிலுரைத்ததும்;


அம்மறுமொழியைக் கேட்டு மேலும் வியப்படைந் ஸ்ரேணிகன்.  புரியா மனநிலையில்  பகவான் முதலில் ஏழாம் நரகம் என்றார். பின், சில மணித்துளிகளில் அமரனாக சர்வார்த்த சித்தி எனும் சொர்க்கத்தில்  பிறப்பான் என்று கூறுகிறரே என குழப்பமடைந்தான்.


அக்குறுகிய வேளையில் பறையொலியும், பேரிகையின்  முழக்கமும் விண்ணதிர வைத்தன.


அவ்வரசன் வீரசாமியிடம் இஜ்ஜெய பேரிகைக்கான காரணத்தை தெரிந்து கொள்ள விழைகிறேன் ஐயனே!  என பகவானை  வேண்டினான்.


ஏ மன்னா அத்துறவி இக்கணம் முழுதுணர்ஞானம் பெற்றுள்ளார். அதனால் அமரர்கள்  ஜெய கோஷத்துடன் பேரிகையை முழங்குகின்றனர்.என்றார் முற்றும் உணர்ந்த பெருமான்.


மேலும் குழம்பிய அம்மன்னன் பகவானிடம் பெருமானே, எனக்கொன்றும் விளங்க வில்லை. நல் விளக்கம் தர வேண்டி வணங்குகிறேன்.’ என இருகரம் கூப்பி நின்றான்..


பதிலளிக்கும் முகமாக ஸ்ரீ மகாவீரர் ஏ மன்னா, நீ அத்துறவியை நெருங்கும் முன் உன்னிரு படைவீரர்கள் தம் உடையாடலில், அரச முடிதுறந்த அம்முனிவரின் மகன்,  அரசைக் கைப்பற்ற துடிக்கும் மந்திரிகளின் சதிச் செயலில் சிக்கி கொலை செய்யப்படலாம், என்பதைக் கேட்டதும் மனம் குமுறி சற்று குரோத தீயில் வீழ்ந்ததினால், சமநிலையை இழந்தார்.


அக்கணமே அவ்வமைச்சர்களுடன் மனத்தால் தாக்குதலைத் துவக்கினார்.. அமைச்சர்களின் மீது கொடூரமாக தாக்க முற்பட்டார்.  போராயுதங்கள் கழிந்தும் உள்ளத்தின் பகை மட்டும் கழியவில்லை. அவர்களை ஒழிக்க உடன் தலைக் கவசத்தையும் வீசி தாக்க முற்பட்டார். அச்சிந்தனையோடு  இறந்துபட்டிருந்தால் ஏழாம் நரகம் எய்திருப்பார்.


ஆனால் உடன் வேகம் தனிந்து  தாம் பிரசண்ண மகாராஜா வல்ல, பற்றருக்க வந்த துறவி என்பதை உணர்ந்தார். அவரது சினம் தணிந்தது. தான் மன, வசன, காயத்தால் அனைத்து ஜீவன்களிடமும் சமதா பாவத்துடனும்,  அஹிம்சை அறத்தை பின் பற்றுவதாக எற்றுக் கொண்ட விரதங்களை நினைவு கூர்ந்தார். சினச் சீற்றத்தினால் தூண்டப்பட்ட உணர்வுகளுக்கும், விரதம் மறந்தமைக்கும் மனம் வருந்தினார்.


உலக உயிர்களிடம் காருண்யத்தை காக்கும் உணர்வை கட்டாயம் பெறவிரும்பினார். மனதால் மந்திரிகளிடம் காட்டிய பகையுணர்வையும், மகன் மீதுள்ள பற்றையும் நீக்க உறுதி பூண்டார்.' என தான் கூறுவதைக் கேட்டு மன்னன் தெளிவடைந்ததை உணர்ந்த பகவான் மேலும்,


அம்முனிவர் அவ்வெண்ண தூண்டலிற்காக வருந்தினார். குரோதத்தினால் வந்த பகையுணர்வை வெறுத்தார். ஏ மன்னா,  அதனால் தான் உனது அடுத்த வினாவிற்கான விடையா, சருவார்த்த சித்தி  அடைவார் என்று பகர்ந்தேன். அக்கழுவாயின் பயனாக கஷாய உணர்வை விடுத்து  தூய்மை நிலையை எய்தொடர்ந்து முயன்றதினால்; அனைத்து துன்பத்திற்கும் காரணமான காதி கருமங்களை கெடுத்து கேவலஞானத்தை பெற்றார்.


மன்னனும் ‘தன்யனானேன் பிரபு, தங்களின் விளக்கம் எனக்கு பூர்ணமளித்தது. நம் சிந்தனைக்கும் மரணத்தின் பின்வரும் மறுமைக்கும் நெருங்கிய தொடர்பை உணர்ந்தேன்.  எக்கணமும் நற்சிந்தனையே ஆன்ம நலம் பயக்கும் என்பதை அறிந்தேன். என்னை ஆசீர்வதிப்பீர்களாக!’ என்று மண்டியிட்டு வணங்கினான்.  

மனச் சஞ்சலம் எவ்வாறு அடிமைப்படுத்தும் என்பதை ஐயமற தெளிவுபெறுவோம். நடத்தையும், உறுதிமீறல்களும் ன்றி; மனதின் செயல்பாடுகளும் பெருமளவில் நம் வாழ்வில் பேரழிவை ஏற்படுத்தும் என்பதை உணர்வோம்.


மேலும் இக்கதையின் வாயிலாக ஒரு மனிதனின் வெவ்வேறான லேஸ்யைகளின் (leshyas) பண்பினால் வரும் விளைவுகளை புரிந்து கொள்ளலாம்.



இறக்கும் தருவாயிலும் நமது நியம, விரதங்களிலிருந்து மனதாலும் நீங்காதிருத்தல் நற்கதியை தரும். அவ்வுறுதியை பெற பகவான் ஸ்ரீ மகாவீரரை தினமும் வேண்டி நிற்போம்.

----------------------  






Colouring of thoughts.



One day, King Shrenik was on his way to pay homage to Lord Mahavira, and he saw a sage who was meditating and had a bright glow around him. He bowed down to the sage and continued on his way. After reaching Lord Mahavira, King Shrenik asked the Lord, “Oh Lord, I saw a brilliant sage who was engaged in the meditation. If he died at that moment, what would be his destiny?”


The Lord replied, “He would have been hurled down to the seventh hell-region.” The king was much astonished to hear this reply from the Lord. He thought, “Why would such a sage go to hell? Perhaps the Lord might have misunderstood me.” He asked the Lord again, “Oh Lord, if his soul leaves this body just now, where will it go?” The Lord replied, “He will be an angel in the Sarvarthasiddhi, a heavenly region.”


The king was much surprised at this reply, too. He thought, “The Lord first said he would attain the seventh hell, and now he says that the sage would be an angel.” The king was perplexed. At that very moment, drums began sounding in the sky and voices of ‘victory’ were proclaimed. The king asked the Lord, “What is the cause of these sounds?”


The Lord said, “Oh, king, the sage about whom you were inquiring has acquired omniscience and so the angels are beating the drums and proclaiming the ‘Victory’.” The king was extremely confused by these answers and requested for the explanations.


So Lord Mahavira explained, “Oh king, right before you approached the sage, two soldiers leading your procession diverted his mind by their conversation that his son was betrayed by his entrusted ministers and they were planning to overthrow his son and even kill him. His (Renounced king) meditation was disturbed due to rising of the affection for his son. He was inflamed with rage, and he lost his mental equanimity. Therefore, he started mentally to fight against his ministers. He very violently discharged his weapons one after the other against his ministers. Soon his weapons were exhausted and his foes were not destroyed. So, he thought of throwing his steel helmet against them in order to destroy them. If he would have died at that moment, he would have gone to the 7th hell.


Now as he reached for the steel helmet, he realized that he was not the King Prasenjit, but that he was a sage. His anger calmed down immediately. He remembered that he has been initiated into the vow of equanimity and of non-violence to all living beings mentally, verbally, and physically. He deeply regretted and repented for the breach of his vow and indulgence in the acute anger. He further thought that he ought to have maintained love for all the creatures of the world, ought to have no malice for the ministers, and no attachment for his son.

He severely condemned his mental act. He despised it and withdrew himself from such a feat of anger and malice. Oh king, when he thought this way, you asked me the next question and I replied that he would be born in the Sarvarthasiddhi (heaven) as an angel. Even thereafter, he continued the purification of his mental reflections and gradually he reached the stage of ‘Kshapaka’, where he annihilated all of his ghati karmas, and attained omniscience.”

King Shrenik’s doubts were resolved and he learned how mental reflections can fluctuate. He, also learned that not only can physical acts or verbal abuses have such devastating effects, but so can mental acts. We, too, must learn from this episode. Let us understand how a person with the different leshyas behaves and what are the outcome of such leshyas.






No comments:

Post a Comment