DIVYADHONI - திவ்யதொனி



திவ்ய தொனி : (Divine-tone, Deshna)










தீர்த்தங்கரர்கள் கேவல ஞானம் (வாலறிவு) என்னும் முழுதுணர் ஞானத்தை அடைந்தவுடன், தான் பெற்ற எல்லையில்லா அறிவையையும், உலக உயிர்கள்
மேன்மை அடைய வேண்டிய அறத்தை உரைக்க தேவேந்திரனால் ஏற்படுத்தப்படும் சமவசரணம் என்னும் அற உபதேச மண்டபத்தில் தியான ரூபியாக எழுந்தருளுவார்கள்.

அவ்வமயம் அவர்களிடமிருந்து திவ்ய மயமான நாத ஒலி பிறக்கும். இதுவே திவ்யதொனி எனப்படும். உதடுகள் அசையாமலே இந்த ஒலி பிறக்கின்றன. அவ்வாறு வெளிவரும் த்வனி கம்பீரமாகவும், மனத்திற்கு இனிமையாகவும், மாசற்றதாகவும், பூவுலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் கேட்கும் படியாகவும் இருக்கும்.
              
காலை, மதியம், மாலை என மூன்று வேளையும் ஆறு நாழிகை நேரம் இடைவிடாது முழங்குகிறது. மற்ற நேரங்களில் கணதரர்கள்(translator cum interpreter)  அறத்தைப் பற்றிய ஐயங்களுக்கு விளக்கம் அளித்தபின் மீண்டும் ஒலிக்கும்.

இது தீர்த்தங்கரர்களுக்கு ஏற்படும் எண்வகை அற்புதங்களில் ஒன்று! கணதரர்கள் இவற்றின் பயன்களை பின்னர் வரும் சந்ததிகளுக்கும் பயன்படும் வண்ணம் ஆகமங்களாக தொகுத்தளிப்பார்கள். அப்படித் தொகுத்தவைகளே  சுருதங்களாக, ஜினாகமங்களாக நமக்கு ஆச்சார்யர்கள் வழியே வரிவடிவமாக கிடைத்துள்ளது.

ஜினாகமங்களைப் பெண்ணாக உருவகம் செய்து அவற்றுக்கு ஜினவாணிஎன்றும், தொனியாக வெளிப்பட்டதால் வாக்தேவிஎனவும் குறிப்பிட்டார்கள்.

 சரஸ்வதிஎன்றும்., இவ்வாகமங்கள் ஐஸ்வர்யமாககருத்தப்பட்டதால் ஜினஐஸ்வர்யம்என்றும் அழைக்கப்பட்டது.

---------------


மேருமந்திரம் - 1213.     

ஒருதிருமொழியுமே பதினெண் பாடையாய்
 மருவியது ஓசனை மிகுதி மண்டலத்து
 அருகு இடை முடிவு அதன் அகத்தவர்க்கெலாம்
 ஒருவகையால் இனிதாய் ஒலித்ததே.

ஒப்பற்ற அந்தத் திவ்யதொனி ஒன்றே பதினெட்டு மொழிகளாய் மருவி, பன்னிரண்டு யோசனை பரப்பளவுள்ள சமவ சரணத்தில் அருகில், முடிவில் இடையில் இவ்வாறு எங்குள்ளவர்களும் ஒரே தன்மையாய் கேட்குமாறு இனிமையாய் ஒலித்தது. 

----------

திருப்பாமாலை - பஞ்ச குருபக்தி பாடல் எண்.1-10

ஒருபெருங் கேவலத் துலகம் மூன்றும்
பொருவற உணர்ந்த புண்ணிய ராகிப்
பேரொளி மண்டிலம் பெரிதினிது விளங்க
அரிசுமந் தேத்திய அணி ஆசனத்துப்
பொங்கு சாமரை புடைநின் றிரட்ட
எங்குந் துந்துபி அந்தரத் தியம்ப
மருவிய பூமழை வானோர் சொரிதர
எரிதளிர்ப் பிண்டி யின்னிழன் மேவி
இலங்கொளி முக்குடை இயல்பெற நிழற்றக்
கலங்கிய இருவினைக் கடிபடை உடையப்

தேவேந்திரன் அமைக்கும் சமவசரணத்தில் மண்ணுயிர்கள் (மானிடர்கள்,
மிருகங்கள்,பறவைகள்) மட்டுமல்ல வானுலகத்திலுள்ள நான்கு வகைத்
தேவர்களும் பகவான் அறம் கேட்க வருவார்கள். பகவான் திருவாய்
மலர்ந்தருளுவார். (அவருடைய வாய் அசையாது, ஆனால் அவர் திருவாய்
பொழியானது அனைத்து மிருக, பறவை உயரிகளுக்கும் தத்தம் மொழிகளிலும்,
மானிடர்களுக்கு அவரவர் மொழிகளில் (18 மொழிகள்) கேட்கும். இவற்றை
திவ்யதொனி என்பார்கள். தமிழில் திருவாய் மொழி என்றும் திருமொழி
என்றும் அழைக்கப்படும்.

--------------






ஆகம வழியில் கண்டோம்.  அறிவியல் ரீதியாக  காண்போம். 

---------  



ஜினபகவானை, எத்திசையில் நோக்கினும் முகம் காட்டும் தோற்றத்தை கொண்டவர். அச்சிறப்பைக் கொண்டதால் வட்டவடிவ அறவுரை மண்டபத்தை தேவேந்திரன் உருவாக்கினான்.

மலர்மிசையேகியோனின் திவ்யதொனி அனைத்து திசைகளிலும் நாதஒலியாக உலக ஜீவராசிகள் அனைத்தும் உணரும் வண்ணம் உலகளாவியமொழியாய் வந்தது.

--------------

சுருதி என்பது ஒலியின் அதிர்வெண் (frequency in Hertz, Hz). 50 Hz லிருந்து, 15000 Hz வரைதான் குழந்தையினால் கேட்க முடியும், பின்னர் 8000 Hz வரைதான் செவிப்பறை வேலை செய்யும். விலங்கு, பறவைகளுக்கு அதிர்வெண் அளவு கூடுதலாகும். அதற்கு மேல் உள்ள அதிர்வுகளை உடலால் மட்டுமே உணரமுடியும்.

ஒலி:  செறிவு (pitch), கால அளவு, ஒத்திசைவு (harmonic frequency)  போன்ற பல அம்சங்களும் மடக்கை (logarithm) விகிதத்தில் இருந்தால் மட்டுமே, அந்த ஓசை,  இரைச்சலாய் இன்றி இனிமையாய் இருக்கும்.

இசையின் இனிமைக்கான காரணிகள்; தனிப்பட்ட அனுபவம், விருப்பு/வெறுப்பு, கலாசாரம், கேட்டுப் பழகியவை, பெற்றோர் போன்றவை.

இத்தனையும் சரிவிகிதத்தில் இருந்தால் மட்டுமே அது திவ்யமாக அமையும். அதனை ஜிநர் கருத்தில் கொண்டு, இனிய ஒலியாகவும் (harmonic); நான்கறிவு வரையுள்ள காதற்ற உயிரினங்கள் உணரும் வகையில்; அதிர்வை (vibration) உருவாக்கும் தொனியாகவும் (tone) பரவச் செய்துள்ளார்.

------------

ஒலியோ, இசையோ தொலைதூரம் வரை செல்ல, மின் ஒலிபெருக்கி; நிறையில்லா நுண்ணிய பொருளான (mass-less micro-particle) மின்காந்தஅலை ஊடே பரவச்செய்து பெறும்; ரேடியோ, தொலைக்காட்சி போன்ற பல சாதனங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

தற்காலத்தில்  ஒலிபரப்பு முறையில் (transmitting) மின்காந்த அலையோடு, பல மொழிகளையும் பண்பேற்றம் (modulation) செய்து அனுப்பும் SIMULCAST ( Simultaneous broadcasting) எனும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து அனுப்பி வருகின்றனர்.  அதனால் Z tv, DD யிலும் ஒரே நேரத்தில் வீடியோபடம் தெரியும், அந்தந்த பிரதேசத்தில் உள்ளவர்கள், தம்தம் தாய்மொழியில் ஒலியையும் கேட்டு மகிழ வசதி செய்துள்ளனர்.

அந்த தொழில் நுட்பத்திற்கு முன்னோடி திவ்யதொனி என்று சொன்னால் மிகையாகாது. பிரதேசமொழி மாற்றம் மட்டுமின்றி அந்தந்த உயிரின புரிதலையும் உள்ளடக்கியது.

--------------

உலகில் நுகர்ந்ததை, மனதில் தோன்றியதை வெளியிட வகை செய்வது மொழியாகும். (language). அனைத்து ஜீவராசிகளும் தம்தம் சங்கேத ஒலியாகவும், மொழியாகவும் வெளிப்படுத்துகின்றன.

மூளையில் பதிவான பதிவுகளைக் கொண்டு,  செரிபெரத்தில் (cerebrum) உள்ள, டெம்பரல் லோப் (Temporal lobe) என்ற சார்பகுதியில் மொழிக்கான செயல்பாடுகள் அனைத்தும் (Understanding language ,Memory, Hearing, Sequencing and organization) நடக்கிறது.

பதிவகத்திற்கும், செயல்பாட்டு தளத்திற்கும் வெளியிலிருந்து கட்டளைகளை புகுத்தி விட்டால் புரிதலும், மொழியாக்கமும் செவ்வனே செயல்படும்.

மேலும் மூளையில் நம் அனுபவங்கள் அனைத்தும் தெளிவுகளாக, பெப்டைட்ஸ் (peptides, amino acid) என்னும் புரதங்களாக, பழுப்பு நிறத்தில் படிவதாக அறிவியலார் கூறுகின்றனர்.

போதிய அறிவில்லாதவர்களுக்கு,  அனுபவ திறனாளியரின் பெப்டைட்ஸ் ஐ, அப்பகுதியில் உட்புகுத்தினால், பெறுபவருக்கு அந்த மேன்மையான திறனறிவு கிடைப்பதற்கு வழிவகுக்கும் என மேலும் ஆராய்ந்து வருகின்றனர்.
                                                  
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சாத்தியம் என்பதை ஜிநரின் திவ்யத்தொனியின் பகிர்ந்தளிப்பு நிரூபித்துள்ளது.

------------

மேலே குறிப்பிடப்பட்டுள்ள 35 வித பண்புகளை உள்ள ஒரு ஒலிவடிவம், தற்காலத்திலும் கண்டுபிடிக்கப் பட்டால், செறியூட்டப்பட்ட நாதஒலி அலையாகவும், அதிர்வாகவும், ஒளியை விட நிறையில்லா நுண்பொருள் (mass-less micro particle) ஊடே பயணித்து அனைத்து ஜீவராசிகளுக்கும் தெளிவான ஞானத்தை வழங்கும் என்பது சாத்தியமே.

----------

கேவல ஞானத்தை அடைந்த ஒரு ஆன்மா, உடல், மனம் போன்ற அனைத்தின் சிறையிலிருந்து மீண்டவுடன், சுய தரிசனத்தில் இருக்கும். விடுதலை ஞானத்தை பெற்ற ஆன்மா, இவ்வுலக ஜீவராசிகளின் ஆன்மாக்களுக்கு அதிர்வொலியால் உணரச்செய்வதே திவ்யதொனி யாகும். அதனை உணர்ந்த ஆன்மாக்கள் சில பிறவிதனில் அப்பேற்றை பெறும்.

------------ 



திவ்யதொனியின் பண்புகள். 


1. It has quality  -  இது தரம் உள்ளது
2. It has lofty meaning  -   இது உயர்ந்த பொருள் கொண்டது
3. It is free of coloquial terms  -  இது வழக்குமொழி குளருபடி இல்லாதது.
4. Deep as thunder  -  இடியைப் போன்று ஆழமானது
5. Resonent  -  ஒத்த அதிர்வுடையது
6. Simple  -  எளியது
7. Musical  - இசைக் கொத்தது

8. Profound meaning  -  ஆழமான அர்த்தமுடையது
9. Free of ambiguity  -  தெளிவின்மை அற்றது
10. Respectful  -  மரியாதைமிக்கது
11. Free of doubt  -  சந்தேக மற்றது
12. It does not expose faults of others.  -  அது மற்றவர்களின் குறைகளை வெளிப்படுத்தாது
13. Pleasing  -  இனிமையானது
14. Relevant to the time and place  -  ஸ்தலசூழலுக்கு  பொருந்தக் கூடியது
15. It suits the subject-matter  -  இது விஷயத்திற்கு பொருத்தமானது
16. To the point and precise  -  துல்லியமாக சுட்டும்
17. Lyrical  -   உணர்ச்சியுள்ளது
18. Strictly relevant to the topic -  சங்கதிக்கு மிகத் தொடர்புடையது.
19. Sweet like nectar  -  தேனிசையானது
20. Not harsh or biting  -  கடுமையோ கடினமோ அற்றது
21. Supports quest for liberation -  விதலைக்கு வேட்கைக்கு துணை செய்யும்.
22. Profoundly meaningful  - ஆழ்ந்த அர்த்தமுள்ளது
23. Free of self-praise and criticism for others – தற்புகழ்ச்சியோ, விமர்சனமோ அற்றது.
24. To be emulated always  -   எப்போதும் முன்மாதிரியானது
25. Follows the rules of grammar  -  இலக்கணம் அடங்கியது.
26. Incites curiosity in the listener  -  கேட்பவரின் ஆர்வத்தை தூண்டும்
27. Full of eloquence and beauty  -  அழகான  முழு சொல்வன்மை கொண்டது
28. Free of pauses  -  ஒலித்தடங்கல் அற்றது
29. Free of double meaning – சிலேடை அற்றது
30. Having interpretations  -  விளக்கம் உள்ளடக்கியது.
31. Out of ordinary  -  சாதாரணமானதல்ல
32. Capable of picturesque description  -  அழகான விளக்கத்திறனுடையது.
33. Profound in content and effect -  ஆழ்ந்த உள்ளடக்கமானது.
34. Not annoying to self and others  -  யாருக்கும் எரிச்சலூட்டா மொழி
35. Completely logical and vivid  -  முற்றிலும் தெளிவான தருக்க மொழி

-------- 



No comments:

Post a Comment