Alangaram seithal - அலங்காரம் செய்தல்:



அலங்காரம் செய்தல்:




ரட்சிப்பதற்கே  தெய்வச்சிலை, ரசிப்பதற்கு அல்ல.



நாள்தோறும் வழிபடுகின்ற வழிபாட்டோடு சிறப்பு வழிபாடுகள் சில குறிப்பிட்ட நாள்களில் சமண சமயத்தில் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்தச் சிறப்பு வழிபாடுகளில் அடிப்படை வழிபாடுகள் மாறுவதில்லை. நாள்தோறும் நடைபெறும் வழிபாட்டோடு சிறப்பு வழிபாட்டில் முக்கியத்துவம் பெறுவன ஐம்பொன்னால் ஆகிய திருவுருவங்களை உலாவாக எடுத்து வருதல், வேள்விகள் நடத்துதல், சிறப்பான அலங்காரம் செய்தல் ஆகியவையாகும்.

ஆனால் நாம் இக்காலத்தில் வேதிகையில் பிரதிஷ்டை செய்த கற்சிலைகளுக்கே விதவிதமாக அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்படுகின்றது. அவ்வாறு செய்தால் பார்க்க அழகாக கண்களுக்கு விரும்பிய வண்ணம் இருக்குமே தவிர, அச்சிலையை நிறுவிய தாத்பர்யம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவிடும் என்பதை அறிவதில்லை.

கற்சிலையில் தெய்வ அம்சங்களை வடித்து அதனை பிரதிஷ்டை செய்வது *எந்நாளும் பிரதிஷ்டை மந்திரங்களின் செறியூட்டம்  நிலைத்து இருக்கவே* இந்த ஏற்பாடு.

--------------
கருவறைகளில் கடவுள் திருமேனிகளை ஸ்தாபிக்கும் முறைகள் நான்கு விதங்களில் அமைந்துள்ளன.

அவை :

1. ஆவர்த்தம் - புதிய கோயில் ஒன்றைக் கட்டி அங்கு புதிதாக திருவுருவத்தை ஸ்தாபிப்பதாகும்.

2. அநாவர்த்தம் - அநாவர்த்தம் என்பது வெள்ளம், மழை, பூகம்பம் போன்றவற்றால் சேதமடைந்த கோயில்களை புதுப்பித்து மறு பிரதிஷ்டை செய்வதாகும்

3. புனராவர்த்தம் - காலத்தால் சிதிலமடைந்த திருக்கோயில்களை புதுப்பித்து புனர்நிர்மாணம் செய்வதாகும்.

4.அந்தரிதம் திருடர்களாலும், தீயவர்களாலும் புனிதம் இழந்த கோயில்களை மீண்டும் புதுப்பித்து புனிதப்படுத்துவதாகும்.

மந்திரங்கள் பல உறைந்து நிறைந்து உள்ள இறைவனின் உறைவிடம் அது என்பதால், நமக்கு பிரச்னை தீர நல்வழி காட்டுகிறது. அதோடு, அக்கோயிலில் சரியான உச்சரிப்புடன் மந்திரங்களைச் சொல்லி உருவேற்றிய யந்திரங்கள் ஸ்தாபிதம் செய்யப்பட்டிருப்பதும் ஒரு காரணம்.

மந்திரம் என்பதற்கு, ‘சொல்பவனைக் காப்பதுஎன்று பொருள்.

அந்த மந்திரங்களை ஒருங்கிணையச் செய்து, ஒன்றாகக் குவியச் செய்து, இறைவனின் கருவறையில் அதன் சக்தியை நிலைபெறச் செய்வதற்கு, பிராணப்பிரதிஷ்டை அதாவது குடமுழுக்கு  சம்ப்ரோட்சணம், கும்பாபிஷேகம் என்றும் சொல்லப்படும்.

தெய்வங்களுக்கு யந்திர ஸ்தாபனம்:

கருவறையில் எழுந்தருளும் தெய்வங்களை விக்ரகங்களாக அமைக்கிறோம். அதன் உயிர் என்பது தாமிரத் தகட்டில் எழுதப்படுகிற மூலமந்திர வாசகங்களும், அதற்கு உரியதான வரைவுக் கோடுகளும்தான். இந்த யந்திர வடிவை விதிப்படி எழுதி, உரிய மரியாதைகள் செய்து, ஈர்ப்புத் தன்மையுடைய செப்புத் தகட்டில் பதித்து, அதனை சுவாமியின் ஆதார பீடத்தில் பதித்து, பஞ்சலோகம் ஸ்வர்ணங்களைப் போட்டு, எண்வகை மருந்துக் கலவையான அஷ்டபந்தனம் என்ற மருந்தைத் தயார்படுத்தி பீடத்தைச் சுற்றிலும் அதைக் காப்பாக இட்டு வைப்பர்.


யந்திரத்தை வைத்து மருந்து சாற்றியபிறகு. முக்கியமாக கண்திறப்பு என்கிற நேத்ரோன்மீலனம் நடத்தப்படும்போது, மங்களப் பொருட்களை ஏந்திய பெண்களை ஆலய வலம்வரச் செய்து, தெய்வ பிம்பங்களைச் செய்த சிற்பி கண்களைத் திறக்கும் வைபவத்தை நடத்துவார்.

அடுத்ததாக நீர், மண், வாசனை மலர், மரப் பட்டைகள், வாசனைத் திரவியங்களைக் கலந்து பூஜை செய்து ஆலயம் முழுவதும் தெளித்து சுத்தப்படுத்துவர். இப்படிச் செய்வதற்கு பிம்பசுத்தி என்று பெயர்.

உயிர்ப்பித்தல்: ஹோமத்தில், முறைப்படி பூஜிக்கப்பட்ட தெய்வ சக்திகளை தர்ப்பைகளின் வழியாக யதாஸ்தான சிலைக்குக் கொண்டு செல்லுதலை உயிர்தருதல் (நாடி சந்தானம்) என்பர்.

இவ்வாறு பிரதிஷ்டை செய்யப் பட்ட தெயவச்சிலைகள் அதன் அம்சங்களை, மந்திர உச்சாடனை ஒருங்கிணிப்பை பாதுகாப்பது மிகமிக அவசியம்.

வேதிகையில் (சிலை பீடம்) வைக்கப்பட்ட யந்திரம்+ கற்சிலையின் வடிவம் இரண்டும் ஒரு அதிர்வை ஏற்படுத்தும். அது வணங்கும் பக்தர்களின் பிரணான்களில் சிதைவோ, குறைபாடோ இருப்பின் சரிசெய்வதோடு, உடல் இயக்கத்தை நெறிப்படுத்தும் என்ற நம்பிக்கை பலகாலமாக நமது நாட்டின் ஆலய கலாச்சாரம்.

--------------
அந்த சிலைகளை நாம் மிகவும் கவனமாக அதன் மொத்த உருவத்தில் சேர்ப்போ, அரிமானமோ இன்றி பாதுகாப்பது போன்ற வழிபாட்டு முறைகள்; பூசை, அலங்கரித்தல் முதலியன முற்காலத்திலிருந்து அனுசரிக்கப்படுகிறது.

அந்த சிலைக்கு அபிஷேகம் பொருட்கள் அச்சிலைகள் எந்த கல்லில், உலோகத்தில் செய்யப்பட்டுள்ளதோ அதற்கேற்றால் போலும், எந்த பொருட்களை அதன்மீது படலாம் என்பதையும் நிர்ணயித்து  குறிப்பிட்டுள்ளனர்.

இச்செயற்பாட்டில் சில வேளைகளில் சிலைக்கு ஏதேனும் சிதைவு ஏற்படும் என்பதால் அதிக பட்சம் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்சொன்ன நான்கு வகையில் ஒன்றை சரியாக கவனித்து செய்வர் அல்லது ஒட்டு மொத்தமாக நான்கையுமே செய்து விடுவார்கள் தற்காலத்தில்.
-----------

ஆகவே அந்த பிரதிஷ்டா  சிலைக்கு பின்னமோ, அரிமானமோ ஏற்படாவண்ணம் பாதுகாத்தல் அவசியமாகும்.

இல்லையெனில் அதன் பிராணசக்தி செறியூட்டம் குறைந்து காணப்படும்.

அதற்காக வீதியுலா, விசேஷ பூஜை, விதானம் செய்தல் போன்றவற்றிற்காகவே பஞ்ச லோகத்தில் அவ்வுருவங்களைச் செய்து தற்காலிகமாக அச்சக்திகளை நிறுவி முடிந்த பின் விசர்சணம் செய்து மீண்டும் பாதுகாப்பான இடத்தில் வைத்துவிடுவர்.

ஆகவே சன்னதிகளில் இருக்கும் கற்சிலைகளுக்கு அலங்காரம் எனின் சந்தனம், பூமாலை போன்றவற்றை மட்டுமே உசிதம் என்பர். எண்ணைக் காப்பிடுதல் கூட அதனை  சேதப்படுத்தும் என  கூறிகின்றனர்.

அதை விடுத்து பலவித பசைகளை, பேப்பர்கள், ஸ்டிக்கர்கள் போன்றவற்றை உபயோகித்து அலங்காரம் செய்தால் பார்ப்பதற்கு  கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும். ஆனால் பிரிக்கும் போது சிறிய பின்னங்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

எத்தனையோ ஆலயங்களில் அழகாக தற்கால செயற்கைப் பொருட்களை உபயோகித்து செய்து ரசிக்கிறார்கள் எனின், ரசிப்பதற்கு மட்டுமே அக்கற்சிலை,  ரட்சிப்பதற்கல்ல.

------------------ 

No comments:

Post a Comment