Tattvartha Sutra - chapter 1






தத்வார்த்த சூத்திரம்




சமணத்தின் முதன்மை நூலாக, அனைத்து பிரிவினராலும் கருதப்படும் நூலாகும்.

தத் – தத்துவம்,  ஒரு பொருளின் தனித்தன்மை (பிற பொருளிலிருந்து பிரித்தெடுத்தல்); அர்த்தம் – விளங்கவைத்தல்.

பொருளின் தனித்தன்மையான குணத்தை விளங்க வைத்தல்.

சூத்திரம் என்றாலே சுருங்கக்கூறுவது.

மிகப்பெரிய உண்மைகளை மிகச் சில சொற்களால் சொல்கிறது தத்வார்த்த சூத்திரம்.

சுருங்கச் சொல்லி விளங்க வைத்தலில் உலகின் முன்னோடியானது இந்த நூலாகும்.

உயர் பிறப்பான மனிதப்பிறவி ; தன் ஆத்மனை அறியவும், பரமான்ம நிலையை அடைவதற்கான வழிகளை ஆராய்ந்து,  கடைபிடித்து தளைகளிலிருந்து விடுதலை பெறும் வல்லமை பெற்றது.

இப்பிறவிப் பயனை அறிந்து, அதன் வழியே முயற்சி செய்யும் தேவையை இந்நூல் வற்புறுத்திக் கூறுவதால்; தத்வார்த்த அதிகம சூத்திரம், மோக்ஷ சாஸ்திரம் என்றும் அழைக்கப்படுகிறது.

சுமார் 1900 ஆண்டுகளுக்கு முன்  தோன்றியதாக சொல்லப்படும் (கி.பி. இரண்டாம் நூற்றாண்டு appraised by Dr. A.N.  Upathyaya) இந்நூலின் ஆசிரியர் கிருதபிச்ச ஆசாரியர் என்னும் உமாஸ்வாமி ; உமாஸ்வாதி ஆவார்.

மேலும் குந்த குந்த ஆசாரியருக்கும் இப்பெயர் உண்டு என்றும், சிலர் இல்லை என்றும் சமண மதம் பல்வேறு பிரிவுகளைக் கொண்டதால் கூறப்படுகிறது.

ஆனால் அனைத்து பிரிவு சமணர்களாலும் இந்நூல் ஓதப்படுகிறது என்பதே இதன் பெருமையாகும்.

ஆசாரியர் பூஜ்யபாதர், ன் சர்வார்த்த சித்தி என்னும் உரையை முதல் விளக்கமாக  கூறுகின்றனர். பின்னர் அகளங்கசுவாமி எழுதிய ‘ராஜவார்திகம்’ ; சமந்தபத்ர ஆசாரியர் 84000 ஸ்லோகங்களுடன் ‘கந்த ஹஸ்தி மஹா பாஷ்யம்’ என்றும், மேலும் வித்யாநந்தி சுவாமி போன்ற முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் உரை எழுதியுள்ளனர்.

தமிழில் ஸ்ரீபாலவர்ணீ, முன்னாள் ஜினகஞ்சி மடாதிபதியவர்கள், பேராசிரியர் A. சக்கரவர்த்தி அவர்கள்  நீலகேசி உரையாசிரியர் போன்ற பலரும்;

ஆங்கிலத்தில் J.L. Jaine ; முதல்வர் S.A.Jain அவர்களின் Reality போன்றவைகளும் உள்ளன.

உரைகள் பல வெளிவந்தும் இன்றும் மனப்பாடமாக ஓதும் வழக்கம் தமிழ்நாட்டிலும் உள்ளது. ஏனெனில் நூல்வடிவம், மின்னனு பதிவுகள் அழிந்தாலும், மனித இனம் உள்ளவரை நிலைத்திருக்கும் நோக்கத்துடன் செயல்படும் பெரியவர்கள் உள்ளனர்.


அவர்கள்  தொண்டுள்ளத்தை வாழ்த்தி வணங்குவோம். 



நூல் அமைப்பு:

இந்த நூலில் தத்துவம் முதன்மையாகப் பேசப்படுவதால் ‘ தத்வார்த்த சூத்திரம் என்று அழைக்கப்படுகிறது. பத்து இயல்களில் (அத்தியாயங்கள்) 357 சூத்திரங்கள் அடக்கப் பட்டுள்ளன.

இதன் பொருளை உயிர், உயிரற்றது, இரண்டின் கூட்டு நிலைகளாக பகுக்கப்பட்டிருந்தாலும்,  மூன்றாவதை மேலும் ஐந்து வகைகளாக பிரிக்கப்பட்டு, ஏழு தத்துவங்களாக வருணனை உள்ளது.

1-4 வரை ஜீவ தத்துவம், 5 அஜீவ தத்த்வம், 6-7 ஆஸ்ரவ தத்துவம், 8 பந்தம், 9 சம்வரை, 10 ல் மோக்ஷ தத்துவமும் வர்ணிக்கப் பட்டுள்ளது. இந்த ஏழு தத்துவங்களும் 10 அத்தியாயங்களில் சமஸ்கிருத மொழியில் ஆக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு  அத்தியாயத்தில் ஒரு தத்துவம் முதன்மையாக அமைக்கப் பட்டிருந்தாலும், பிற தத்துவங்களும் உடன் தொடர்பு படுத்தப்பட்டுள்ளன.

ஆன்மா மோக்ஷத்தை குறியாக வைத்து பிறவிச் சுழற்சியிலிருந்து விலகி, ஆன்மீக ஆற்றலால் ஜீவ தத்துவத்தை அறிந்து, அஜீவத்திலிருந்து விலகி, மோக்ஷத்தை அடைகிறது.

அதாவது ஜீவ தத்துவத்திற்குள் அஜீவ தத்துவ ரூப கர்மம் வருவது ஆஸ்ரவம்.

ஜீவ தத்துவத்திற்குள் அஜீவ தத்துவ ரூப கர்மம் பந்தமாவது பந்தம்.

ஜீவ தத்துவத்திற்குள் அஜீவ தத்துவ ரூப கர்மம் வராமல் செய்வது நிர்ஜரை,

ஜீவ தத்துவத்திற்குள் அஜீவ தத்துவ ரூப கர்மம் ஒரு பகுதி விலகுவது நிர்ஜரை,

ஜீவ தத்துவத்திற்குள் அஜீவ தத்துவ ரூப கர்மம் முழுவதுமாக நீங்குவது  மோக்ஷம் ஆகும்.

அதன் உபதேசத்தைச் சொல்லுவதால் *மோக்ஷ சாஸ்திரம்* எனப்படுகிறது.

தத்துவார்த்த சூத்திரத்தில் சில அத்யாயங்கள் இன்றைய விஞ்ஞான உலகத்தோடு தொடர்புடையதாக உள்ளதால், விஞ்ஞானத்தோடு மிகுந்த நெருக்க முடையது என கொள்ளலாம்.

நுண்பொருள் கோட்பாட்டினை பல நூற்றாண்டுகளுக்கு முன்னே சோதனைச்சாலைகள்  இன்றி சூட்சுமமாக தெரிவித்துள்ளார் எனில் மிகையாகாது.

சில விஞ்ஞான கருத்துகள் சுட்டப்பட்டுள்ளன. மேலும் நுட்பமாக பார்த்தால் ஒவ்வொரு அத்தியாயத்திலும் காணமுடியும்.

இந்த விஞ்ஞான சாஸ்திரத்தை அனைவரும் படித்து அறியவேண்டும். நம் கேவலஞானி வீதராக விஞ்ஞானியாவார், அவர் தந்த இந்த சாஸ்திரத்தை விஞ்ஞான வழியே தெளிவு பெற முடியும்.

மருந்தை நம்புவதாலோ, தெரிந்து கொள்வதாலோ மட்டும் நோய் நீங்கி விடாது. அது போல் நல்ல நம்பிக்கையும், நல்ல ஞானம் மட்டும் இருந்தால் போதாது. கிரியையும் நல்ல கிரியையாக இருந்தால் தான் விடுதலை கிடைக்கும்.

இம்மூன்றின் கூட்டு முயற்சியே மோட்ச மார்க்கம் என்பதை தெரிவிப்பதே இந்நூலாகும்.



----------

தத்வார்த்த சூத்திரம் எழுந்த வரலாற்றை, செவி வழிச் செய்தியாக, ஓர் இனிய கதை வழங்குகிறது:

குஜராத் நாட்டில் துவைபாயகர் என்று ஓர் இல்லறத்தார் வாழ்ந்து வந்தார்.  அவர் சமண சமய உணர்வுடன், நல்லியல்பும் நல்லொழுக்கமும் உடையவர்.

இல்லறத்தில் இருந்தாலும் ஆன்ம முன்னேற்றத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். நாள் தோறும் ஒரு சூத்திரமாவது எழுதுவது என்றும்,  எழுதாத நாளன்று உண்ணா நோன்பு இருப்பது என்றும் முடிவு செய்தார்.

முதல் சூத்திரமாக தர்சன ஜ்ஞான சாரித்ராணி மோக்ஷமார்க: என, வீட்டில் பார்வையில் படும்படியான இடத்தில் எழுதிவைத்தார்.

மறுநாள் அவர் வெளியே சென்றிருந்தார்.  அவ்வமயம் அவர் வீட்டில் உணவு ஏற்கத் துறவி ஒருவர் வந்தார். துணைவியார் துறவியை முறைப்படி வரவேற்று உணவு அளித்தார்.

உணவு ஏற்ற பின், வந்த துறவியார் எழுதியிருந்த சூத்திரத்தைக் கண்டார்.  சூத்திரத்தை படித்த மறுகணம் அதன் முன் ஸ்ம்யக் என்ற சொல்லை முன் சேர்க்கையாக எழுதி சென்று விட்டார்.

வீட்டிற்கு திரும்பிய துவைபாயகர் தன் சூத்திரம் திருத்தப் பட்டிருப்பதை கண்டு, அது பற்றி துணைவியிடம் வினவ, துறவி இல்லத்திற்கு வந்து சென்றதை அவர் தெரிவித்தார்.

உயர் ஆன்ம சிந்தனையுள்ள ஆச்சார்யரே தம் இல்லத்திற்கு வந்திருக்க வேண்டும் என எண்ணி அவரை தேடி அலைந்து, கண்டு கொண்டு, காலில் வீழ்ந்து வணங்கினார்.

மனம் நெகிழ்ந்து தன் ஆவலை வெளிப்படுத்தினார். நூல் எழுத தான் தகுதியற்றவன் என கூறி, அதனை முடித்து தருமாறு வேண்டினார்.

அவ்வேண்டுகோளை ஏற்று  உயர் சிந்தனையில் உதித்த தத்வார்த்த சூத்திரம் என்னும் இந்நூலை முடித்தார். அம் மகானே கிருதபிச்ச ஆச்சார்யர் என்னும் உமாஸ்வாமி யாவார்.

இல்லறத்தான் துவக்கி வைக்கத் துறவி முடித்து வைத்தார் என்பதால் இல்லறத்தார் அனைவரும் படிக்க வேண்டிய நூல்  இது என்பது விளங்கும்.

இந்நூலைக் கற்பதை மனச் சுமையாக கொள்ளாமல், மனச் சுவையாக ஆக்கிக் கொள்ள முயலுங்கள்.

நூற்பாவையும், விளக்கத்தையும் பொறுமையாகப்  படியுங்கள். மீண்டும், மீண்டும் படியுங்கள், படித்த கருத்து குறித்து எண்ணிப்பாருங்கள்.


விளங்கிக் கொள்ளும் ஆற்றல் உங்களிடம் உள்ளது. அதனைப் பயன் படுத்துங்கள். விளங்கிடா பகுதியை அறிஞர் பெருமக்களிடம் வினவி புரிந்து கொள்ளுங்கள்.

------



மோக்ஷமார்கஸ்ய நேதாரம் பேதாரம் கர்மபூப்ருதாம்
ஜ்ஞாதாரம் விஸ்வதத்வாநாம் வந்தே தத்குண லப்தயே. 



முக்திக்கு வழிகாட்டியவரும் , வினை எனும் பெருமலையை உடைத்தவரும், உலகத்திலுள்ள அனைத்து தத்துவங்களை அறியும் அறிவைப் பெற்றவருமாகிய பரமான்மாவின் திருவடிகளில் நான் அவரிடம் எத்தனை குணங்கள் இருக்கின்றனவோ அவற்றை பெற வேண்டும் என்ற உணர்வுடன் வணங்குகிறேன்.


தமிழ் வடிவம்:


விடுறும் நெறிதந் தான்; வினைப் பெருமலை
வீழ்த்தி னான்; துணர் வால் அறிவனை
வாழ்த்துவன், அவைதாம் வாய்க்க என்றோ.



வீடுபேறு தரச்செய்யும் நெறியைக் கூறி அருளினான்: வினையாகிய பெருமலை அறவே அகற்றினான்: நிலை பெற்ற பொருட்களை அவற்றின் எல்லா நிலைகளிலும் முழுதும் உணரும் தூய அறிவனான அவ் அருகப் பெருமானை, அவன் அடைந்த பேறுகளை, எளியோனாகிய எனக்கும் வாய்க்க: என்று நன்றியுணர்வுடன் வணங்கி அவன் புகழ் பேசி வாழ்த்துவேன் என்பதாம்.

முக்தி நெறி கைகூடுவதற்கும்; வினைகெடுவதற்கும்; முழுதுணர் ஞானம் பெறுவதற்கும்; என்னிடத்தும் அவை விளங்குவதற்கு அருகனை வணங்கி வாழ்த்துவேன் என்பதாம்.


சமணன் கடவுளை வணங்குவது ஏனெனின்:


தொழுபவன் தொழத் தக்கவனாக உயர்வதே தொழுவதின்  நோக்கம்.

-----------

மோட்சம்:


ஒவ்வொருவரும் தாம் செய்யும் தொழில்கள் காரணமாக செயல்கள் புரிய வேண்டும் என்பது ஒரு நியதி; அதாவது விதிமுறை. 

அப்படி செயல் புரிவதினால், செயலில் ஈடுபடுபவரின் ஆத்மாவில் விருப்பு, வெறுப்பு உணர்வுகள் உண்டாவதால் பிறவி சுழற்சி ஏற்படுகிறது.

ஆதலால் திரவிய வினை, பாவ வினை (bhava) மற்றும் நோகர்மம் ஆத்மாவிலிருந்து தனியாக விலகிய பிறகு தன் இயல்பு குணங்களான முழுதுணர் அறிவு முதலியனவும் ஆத்மாவுக்கே உரிய;

புலன்களுக்கே எட்டாத, குலைக்க முடியாத பேரானந்த இயல்பு நிலையும் கிடைக்கப் பெறுகிறது.

அதுவே மோட்சம் (விடுதலை பேறு) எனப்படுகிறது.

----------------

தன்னுடைய ஆன்மனுக்கு நன்மை செய்வதை விரும்புபவர் யாரோ,  அவரே நிகட பவ்யன் ஆவார். குறுகிய காலத்தில் விடுதலை அடையக் கூடியவர்.

ஒரு வலிமை வாய்ந்த சமயத்தோரும் பிறவிச் சுழலிலிருந்து கடப்பதற்கு பெயரை நினைவு கூறுதலே (பக்தி மார்க்கம்), அதில் நம்பிக்கை வைப்பதே, முக்கிய காரணம் என்கின்றனர்.

சாங்கியர்கள், பெளத்தர்கள், வைசேஷிகர்கள் எல்லோருமே தத்துவ அறிவு (வித்யா) மட்டுமே விடுதலைக்கான வழி என்கின்றனர்.

அதாவது நோயை உணர்ந்தாலோ, அதன் மருந்தை கண்டாலோ நீங்கிவிடும் என்கின்றனர். அதுபோல் ஒவ்வோன்றை மட்டுமே துணை கொண்டு கடைத்தேறி விடலாம் என நம்புகின்றனர்.

ஆனால் அவ்வாறு அடைய முடியாது என சமணம் சுட்டுகிறது. அப்படியானால் ஆச்சாரியர் அதற்கான வழியை எப்படி சுட்டுகிறார்?

சமண சித்தாந்தத்தின் முறைமையை வெளிப்படுத்துவதற்காக, முக்தி நெறிக்காக எந்தப் பரம்பரை ஆகமத்தில் பின்பற்றப் பட்டதோ, அதனை  ஒட்டி இந்நூலை துவக்குவதற்காக முதல் சூத்திரத்தை கூறுகிறார்.





Note:

The Jain principles have been described here both spiritually and scientifically. It mentions that the object of a successful life is to attain ultimate, permanent inner happiness or salvation.

Liberation is never attained by the knowledge alone irrespective of conduct, or by faith alone, or by conduct alone irrespective of knowledge.


 ------------ 


ஸம்யக்தர்சன ஞான சாரித்ராணி மோக்ஷ மார்க: - (1)

सम्यग्दर्शन ज्ञान चारित्राणि मोक्षमार्गः

Samyagdarshana-gyana-charitrani- mokshamargah

(Right faith, right knowledge, and right conduct together constitute the path to liberation.

It cannot be fulfilled until we have a threefold-coordinated path of right faith, right knowledge and right conduct. The path cannot be followed until we have the right knowledge about the realities of the world.

நற்காட்சி, நல்ஞானம், நல்லொழுக்கம் இம்மூன்றும் மோக்ஷத்திற்குரிய வழியாகும்.







இவை ஒவ்வொன்றும் செய்பொருள், செயப்படுபொருள் மற்றும் செய்முறை என மூன்று வகையாகவும் அறிதல் வேண்டும்.

நற்காட்சி:  நம்புபவன்,  நம்பப்படும் பொருள், நம்பும் வகை.

நல்ஞானம்:  அறிபவன், அறியப்படும் பொருள், அறியும் வகை

நல்லொழுக்கம்:  நடைமுறைப் படுத்துபவன், நடைமுறைகள், நடைமுறைப்படுத்தும் வகை.

ரத்தினத்திரயம் - மும்மணி என்னும் நற்காட்சி, நல்ஞானம், நல்லொழுக்கமானது; பிறவிக் கடலில், கர்மங்களின் சேர்க்கையால், உடலில் கட்டுண்டிருக்கும் ஒவ்வொரு ஆன்மாவும் விடுபடக் காரணமானது.

[இச்சொற்களின் இயல்பு (nature),வரையறை (definition) மற்றும் பிரிவுகள் (divisions) பின்னர் விளக்கப்பட உள்ளன.]

பொருட்களின் உண்மையான இயல்புகளைப் பற்றிய உண்மையான அறிவின் மீது நம்பிக்கை வைப்பதற்காகவே ஸம்யக் என்ற சிறப்புச் சொல் சேர்க்கப்பட்டுள்ளது.

உயிர் முதலான பொருள்களை உள்ளது, உள்ளபடியாக , ஐயமும், தடுமாற்றமும் இன்றி அறிவது நல்ஞானம். அதனால் ஸம்யக் என்ற முன்னீடு சேர்க்கப்பட்டுள்ளது.

வினைகளை கிரகிக்கும் காரியங்களை  நிறுத்துவது / தவிர்ப்பது என பிறவிக்கான காரணங்களை விலக்குவதற்கு தயாராக இருப்பது நல்லொழுக்கம். அதனால் ஸம்யக் என்ற முன்னீடு சேர்க்கப்பட்டுள்ளது.

எது பார்க்கிறதோ, எதன் வழியாக பார்க்கப் பட்டதோ, பார்த்துக் கொண்டிருக்கிறதோ அது காட்சி (தரிசனம்) ஆகும்.

எது அறியப்படுகிறதோ,  எதனால் அறியப்படுகிறதோ, அறிதல் மட்டுமே நிகழ்கிறதோ அது அறிவு (ஞானம் ) ஆகும்.

எது செய்யப்படுகிறதோ, எதன் வழியாக செய்யப்படுகிறதோ, செய்தல் மட்டுமே உள்ளதோ அது ஒழுக்கம் (சாரித்ரம்) ஆகும். 



நெரிப்பின் தன்மை எரிப்பது (கர்த்தா), எரிப்பதற்கு கருவியாக (சாதனம்) இருக்கிறது. அதுபோல் நற்காட்சியும் செயல்படுகிறது. (agent & device)

மோக்ஷமார்க: என ஒருமையில் (singular)  சொல்லப்படுகிறது.  (மார்கங்கள் என பன்மையில் இல்லை) அதனால் தனித்தனி மார்க்கமாக கொள்ள முடியாது.  மூன்றும் சேர்ந்ததுதான் விடுதலைக்கான தகுதியாக சொல்லப் படுகிறது.

நற்காட்சி, நல்ஞானம்;  ஏணியின் இரு கைப்பிடிகளாகவும்,  படிகளை நல்லொழுக்கமாகவும் கொண்டு,  ஏறி லட்சியத்தை அடைய வேண்டும்.

நல்ஞானம் பெற நற்காட்சி அவசியமாகிறது,  நல்லொழுக்கம் நல்ஞானத்தின் வெளிப்பாடு , அதனால் நல்லொழுக்கத்திற்கு நற்காட்சியும் காரணமாகிறது. அதனால் நற்காட்சி, நல்ஞானம், நல்லொழுக்கம் என முறைப்படுத்தப்பட்டிருக்கிறது.

இம்மூன்றும் ஒருங்கே அமைந்திருந்தால் தான் வீடுபேறினை அடைய முடியும்.

---------

குழந்தை பசுவைப் பார்த்தால் அதன் பிம்பம் சிறிய கொசு அளவில் (தலைகீழாக) விழித்திரையில் விழும், அதனை அறிந்து-தெளியும்கால் முற்பதிவை மனதில் மூளை தேடும், இல்லையேல்  பெரியோர் துணை  கொண்டு அறியும். பின் விரட்டவோ, விலகவோ என தூண்டுதலின் படி செயல்  முடிவுறும்.

அது போல் காட்சி, ஞானம், ஒழுக்கம் என  மூன்றும் ஒருங்கே அமைந்தால் தான் வினை முற்றுபெறும். அதனால் வினைத்துகளின்  சேர்க்கையோ, விலகலோ ஆன்மனில் கிளர்ச்சியூட்டும். 


அதுவே ‘ நற் ’- காட்சி, ஞானம், ஒழுக்கத்தின் வழியே நடைபெற்றால் மோட்சத்தின் வழியில் முன்னேற்றம். 

-----------

தத்வார்த்த ச்ரத்தானம் ஸம்யக் தர்சனம்:  (2)

तत्त्वार्थश्रद्धानं सम्यग्दर्शनम्

 Tattvarthashraddhanam- samyagdarshanam

(Belief in realities ascertained as they are is right faith.)


தத்வ -  அது அதுவாகவே இருத்தல்

அர்த்த -  (அதனை உறுதிப் படுத்துதல்)

தத்வார்த்த -  அது இன்னது என நிர்ணயித்தல்

ஜைனத்தின் கொள்கைகளே இத்தத்துவங்கள் எனலாம்.


தத்துவங்களின் பொருள் மற்றும் இலக்கணங்கள்  அறிந்து , உயிர் முதலாகிய ஏழுதத்துவங்கள் மீது நம்பிக்கை வைப்பது நற்காட்சி எனப்படும்.

ஜீவ, அஜீவ, ஆஸ்ரவ, பந்த, சம்வரை, நிர்ஜரை, மோக்ஷம் என்ற ஏழு தத்துவங்களை பேதமின்றி, தெளிந்தவர் யாரோ; 

ஜீவனில் மட்டும் ஸ்தாவர, திரஸ;  ஸ்தாவர ஜீவனில் ஓரறிவு மற்றும் திரஸ ஜீவனிவில் இரண்டு முதல் ஐந்து இந்திரியங்கள் வரை;  அதில் விலங்கு , மனிதன் போன்ற பல பேதங்களை அறிந்தவர்  யாரோ;

 ஜீவனில் முக்த ஜீவன், சம்சார ஜீவன்;
முக்த ஜீவனில்; ஜீவன் முக்தன், கர்ம முக்தன்; 

மேலும் பூஜ்ய ஜீவன் (பூஜை செய்யப்படுபவை), அபூஜ்ய ஜீவன் (பூஜை செய்யப்படுவதில்லை) இவ்வாறு பல பேதங்களையும் அறிந்து, தெளிந்தவர் யாரோ:

அதே போல் பிற தத்துவங்களையும் உள்ளது, உள்ளபடி ஐயமின்றி தெளிந்தவர் யாரோ;  அவரை குருவாக ஏற்கும் விவேக ஞானம் கொள்வதும் நற்காட்சி யாகும்.

தேவ சாஸ்திரம் – வீதராகியால் சொல்லப்பட்ட நூல், அதில் ஏழு த்த்துவம், ஒன்பது  பதார்த்தம் அனைத்தும்  வருகிறது. 

எனவே தேவ சாஸ்திர குரு நம்பிக்கையும் நற்காட்சியாகிறது. இதுவே வியவகார சம்யக்த்வம் எனப்படும். (வியவகாரம், நிச்சயம் பற்றி பின் அத்தியாயத்தில் சொல்லப்படுகிறது.

ஸம்யக்த்வம் அல்லது ஸம்யக் தரிசனம் . அவை ;

1. ஸராக ஸம்யக்த்வம் (with attachment) :  இது பற்றுடன் கூடியது.  இதில் நான்கு பிரிவுகள் உள்ளன:

      1- 1  ப்ரஸமம்   -  தவறான உணர்வுகளையும் (கோப தாபங்களையும்) ஏமாற்றும் (பொய்யை மெய்யெனக் காட்டும்)  வினைகளையும் தவிர்த்து சாந்தமாயிருத்தல்.

       1- 2  ஸம்வேகம்  -  நீண்ட காலம் பிறவிச் சுழற்சியில் தொடர்ந்து வர வேண்டுமே என பயம் கொள்ளுதல்.

       1- 3  அநுகம்பா   -  ஜீவ தயை, ஜீவ காருண்யம்.  அனைத்து உயிர்களிடத்தும் (1 முதல் 5 வரை அறிவுள்ள) கருணையும், இரக்கமும் கொள்ளுதல்.

       1- 4   ஆஸ்திக்யம் -  ஏழு தத்துவங்களில்  அதாவது உயிர், உயிர் அல்லாதன மற்றும் பிற பிரிவுகளில்  நம்பிக்கை வைத்தல்.

2. வீதராக ஸ்ம்யக்த்வம் (without attachment) :   ஆன்மாவின் பற்றற்ற தன்மையில் நம்பிக்கை வைத்தல்.

 இதனின் கருத்து யாதெனில் உயிர் முதலான  ஏழு தத்துவங்கள் உள்ளன என்றும், அவற்றின் உண்மை இயல்புகள் இவைதான் என்று நம்புதலே நற்காட்சியாகும்.

----------
தர்சனம் என்றால் பார்த்தல் என்று ஓர் அர்த்தம் உள்ளது.  அப்படியானால் கண்கள் உள்ள ஜீவன்கள் அனைத்திற்கும் நற்காட்சி கிடைக்கிறது என ஆகிறது. அது சரியில்லை. அதனால் பார்த்தல் எனக் கொள்ளாமல் நம்பிக்கை கொள்ளுதல் எனக் கருதப் படுகிறது.

ஒன்பது பதார்த்தங்களில் , மெய்ப் பொருள் வடிவில் முக்காலத்திலும் துண்டிக்கப்படாத ஓர் அகன்ற வடிவ ஆன்மாவே பிரகாசிக்கிறது.  அவ்வான்ம அனுபவமே சம்யக் தரிசனம் (நன்நம்பிக்கை) ஆகும்.
---------

விஞ்ஞானியின் கோட்பாட்டில் நம்பிக்கை வைத்து கண்டு பிடிக்கப் பட்ட கருவிகளில் பயணிப்பது போல்,  நம் வீதராக விஞ்ஞானியின் மேல் நம்பிக்கை வைத்து மோட்சப்பயணத்தை தொடர்வது தான் நற்காட்சியளிக்கும்.

--------------- 

தன்னிஸர்கா ததிகமாத் வா  (3)

तन्निसर्गादधिगमाद्वा

Tannisargadadhigamadva

(This right faith is attained by intuition or by acquisition of knowledge)

Nisarga means Nature or innate disposition;
Athigama means Knowledge of objects
these are mentioned as causes

நற்காட்சி இயல்பாகவோ அதாவது புற நிமித்தம் இல்லாமலோ அல்லது பிறர் உபதேச நிமித்தமாகவோ உண்டாகிறது.

நிஸர்கஜம்இயல்பாக தன்னிச்சையாக உண்டாவது.
அதிகமஜம்மற்றவர் சொல்லக்கேட்டு அல்லது படித்தறிந்ததினால் உண்டாவது

என நற்காட்சி(நன்னம்பிக்கை) இருவகையாக ஏற்படுகிறது.

உண்மையில் நற்காட்சி ஏற்பட

உள்காரணங்கள்: (போகப் போக முழு விளக்கங்கள் கிடைக்கும்)

 தர்சன மோகனீய(காட்சி மயக்கு வினை) கர்மங்களான மித்யாத்வம், ஸம்யக் மித்யாத்வம், ஸம்யக்த்வ பிரகிருதி மற்றும் நான்கு அனந்தானுபந்தி துவர்ப்பசைகள் (கஷாயங்கள்) குரோத, மான, மாயா, லோபம் நான்கும்;

தணிவு (உபசமம்) – குறைந்திருத்தல்

கேடும் தணிவும் (க்ஷயோபசமம்)  - குறைதல் மற்றும் பயனைக் கொடுத்து விட்டு மறைதல்

கேடு (க்ஷயம்) -  முற்றிலுமாக அழிந்து போதல்

போன்ற மூன்று வகை உள்காரணங்களால் நற்காட்சி ஏற்படுகிறது.

வெளிக்காரணங்கள்:(பாஹ்ய)

முற்பிறவி வாசனையிருத்தல், அரஹந்தர் சைத்ய (பிம்ப) தரிசனம்பொருள்

ஸமவசரணம்/ தர்மோபதேசம் நடைபெறும் இடங்களில் இருந்து கேட்டதினால்இடம்.

அர்த்த புத்கல பரிவர்த்தனையில் (மாறுகையில்) -  காலம்
ஒரு ஆன்மா சம்சார சுழற்சியில் எடுத்துக் கொள்ளும் வீடுபேறு நிலையில் பாதி நேரமே எடுத்துக் கொள்வது.

எண்ணங்களின் செயல்பாடு அதாவது செயல் திறமை (கரணலப்தி- இது ஐந்து வகை). -  பாவ கரணம். (bhava)

---------                   
உயிரானது நிகழ்கால பரியாயத்திலோ அல்லது முந்தைய பிறவியிலோ உயிர் முதலான பொருட்கள் பற்றிய சிந்தனையைத் தூண்டும் உபதேசத்தினைக் கேட்கவில்லை எனில் அதற்கு நன்னம்பிக்கை தோன்றுவதில்லை. தோன்றவும் முடியாது.

இவ்விதமாக உபதேசத்திற்கான் வாய்ப்பு கிடைக்கிறதோ அவ்வுயிர் உடனடியாகவோ, நாளடைவிலோ நற்காட்சியினைப் பெறும்.

இந்நோக்கில் குருவின் உபதேசத்தால் ஏற்படுவது அதிகமஜ சம்யக் தரிசனம் (knowledge of objects).

(முன் பிறவி, தேவ சாஸ்திர குரு உபதேச பதிவு விழிப்படைவதால்) இப்பிறவியில் தனாகவே ஏற்படுவது நிசர்கஜ (nature/ innate disposition) சம்யக் தரிசனம் என இச்சூத்திரம் பகர்கின்றது.
--------

குறிப்பு: தமிழ் மட்டும் அறிந்தவர்கள்; இதில் உள்ள சமஸ்கிரத வார்த்தைகளின் அர்த்தங்களை உட்கிரகிக்க முயலாமல்,  தமிழ் அர்த்தங்களை மட்டும் புரிந்து கொள்ளுதல் அவசியமாகிறது.

அதுவே மோக்ஷ மார்க்கத்தை அவர்கள் சீக்கிரம் அடைய வழியைத்தேடும். இல்லாவிடில் இருமொழி தெளிவு பேதத்தில் குழப்பம் வர வாய்ப்புள்ளது.

-----------

ஜீவாஜீவாஸ்ரவ பந்த ஸம்வர நிர்ஜரா மோக்ஷாஸ் தத்வம்  - (4)


जीवजीवास्रव बन्धसंवरनिर्जरामोक्षास्तत्त्वम्


Jivajivashrava-bandha-samvara-nirjara-mokshastattvam


The living and the non- living substances, influx, bondage, stoppage, dissociation and liberation from karmas are the seven types of reality.

Jeev (soul), Ajeev (lifeless matter), Asrav (incoming  of Karma), Bandh ( bondage), Samvar (prevention of karma), Nirjara (eradivation of bondage) and Moksha ( Liberation) as the main aspects that constitute truth.
 ---------- 

உயிர், உயிரற்றது, ஊற்று, கட்டு, செறிப்பு, உதிர்ப்பு, வீடு ஆகிய இவ்வேழும் தத்துவங்களாகும்.

உயிர்(ஜீவ)  -  உணர்வு (சேதனா) சொரூபமானது. இதில் அறிவு முதலான அனேக குணங்கள் உள்ளன.

உயிரற்றது(அஜீவ) - உயிருக்கு எதிர்மறையானது (அசேதனா) உணர்வற்றது. இதில் அநேகம் இருந்தாலும், புத்கலம் என்னும் ஆன்மப்பிரதேசத்தின் ஒட்டுண்ணியான பொருளையே குறிக்கும்.
                                  
ஆஸ்ரவம் – மேற்சொன்ன (புத்கல) வினைப்பொருளில் சுப (புண்ணிய) மற்றும் அசுப (பாப) வினைகளின் வருகையே ஊற்று எனக் கூறுவர்.

பந்த – ஆன்மப் பிரதேசத்துடன், சுப மற்றும் அசுப வினைப்பிரதேசம் ஒன்று சேர்வதே பந்தம்/ கட்டு ஆகும்.

சம்வரை – ஊற்றினைத் தடுப்பது செறிப்பு (சம்வரை) ஆகும்.

நிர்ஜரை – ஆன்மாவுடன் பிணைந்திருக்கும் வினைகள் பகுதி பகுதியாக கழித்தல் / கழிதல், விலகுவதற்கு உதிர்ப்பு எனப்படும்.

மோக்ஷம் -  எல்லா வினைகளும் முற்றிலுமாக ஆன்ம பிரதேசத்தை விட்டு விலகிய நிலையே முக்தி, வீடு, வீடுபேறு/ மோக்ஷம் ஆகும்.

புண்ணியம், பாபம் என்ற வினைகள் ஆஸ்ரவம் மற்றும் பந்தத்துடன் அடங்கி விட்டதால் அவ்விரண்டினையும் தனித்தத்துவமாக திகம்பர மரபில் கூறுவதில்லை.

---------
உயிர் உயிரற்றவை இவை இரண்டும் உலகையே ஆட்கொண்டுள்ளன.

இந்த ஏழு தத்துவங்களிலேயே எல்லாம் அடங்கி விடுவதால், மோக்ஷத்தை கடைசியாக வைத்து, அதற்கான வழிகளும் விபரமாக பின்னர் கொடுக்கப்பட்டுள்ளது.
------------ 





-----------

Of those seven aspects, the first two, soul and lifeless matter are most vital.

There are several lifeless substances, but we are mainly concerned with Pudgal (tangible matter), which is the only substance the soul can interact with.

The soul has infinite capabilities, inherently imbibed with them. But being unaware of that, the worldly soul interacts with the lifeless matter in pursuit of happiness. That interaction leads to bondage of karma. How that bondage occurs, how to prevent it and to get freed from the same is subject matter of spiritual science. In that context we need to consider the remaining five aspects.

It would be noticed that this sutra does not specify punya (wholesome activity) and pap (unwholesome activity) as vital aspects and enumerates seven tattvas in all, in Digamber tradition. But of nine as per Swetamber tradition, which considers Punya and Pap as implicit in Asrav. But whether Punya and Pap are separately mentioned or not, they are to be reckoned with.   
------------


தத்துவங்களைப் புரிந்து கொள்ளும் போது குழப்பங்கள் வராமல் இருக்க அடுத்த சூத்திரங்கள் அமைக்கப்பட்டிருப்பதை காண்போம். 

--------- 


                     
நாமஸ்தாபனா திரவ்ய பாவதஸ் தந்ந்யாஸ: (5)


नामस्थापना द्रव्य भावतस्तन्न्यासः


Nama-sthapana-dravya-bhavatastannyasah



The realities, right faith etc. are installed by name, representation, substance (potentiality) and current state.


நாமம் (name) ஸ்தாபனை(representation),  திரவிய(substance) மற்றும் பாவ (actual state) என நான்கு குறியீடுகள் வாயிலாக தத்துவங்களை விளங்கிக்கொள்ள வேண்டும்.

-----------------
நாமம்  என்றால் பெயர், நிக்ஷேப என்பது குறித்தல். நாம நிக்ஷேபம்:

ஒரு பொருளை குணம், ஜாதி, தொழில், திரவியம் முதலான எதையும் குறிப்பிடாது, வெறுமனே விரும்பியபடி அறிதல்.

ஓர் உயிருக்கு குணங்களின் அடிப்படையில் பெயர் வைக்காமல் ஏதாவது ஒரு பெயரை வைத்து அழைப்பது, எப்போதும் சோகத்துடன் காண்பவனுக்கு அசோகன் என்று பெயர் வைப்பது போல.

அரசனாக இல்லாத ஒருவனை ராஜன் என பெயரிட்டு அழைப்பது. குணம் கெட்டவனை குணா என்று பெயரிட்டு அழைப்பது. தரித்திரம் பிடித்திருக்கும் லெட்சுமி என அழைப்பார்கள்.
--------------------

ஸ்தாபனா நிக்ஷேபம்: ஒன்றைப் போலவே உருவம் செய்தல், அதன் குணத்தை ஸ்தாபித்தல். பகவான் ஸ்ரீமகாவீரரைப் போல் சிலை செய்தல், அவருடைய குணத்தை அதில் ஸ்தாபித்தல்- பிரதிஷ்டை செய்தல்.

ஒரு நடிகன் அரச வேடம் தரித்து நடிக்கிறான்.  அவன் உண்மையில் அரசன் அல்ல அரசனாக ஆகவும் முடியாது, இருப்பினும் அவனை அரசன் என்கிறோம்.

இதில் இரண்டு வகை:
பகவானைப் போலவே உருவம் செய்தால் அது ததாகாரம்.
அரிசியிலே பகவானை ஸ்தாபிக்கிறோம் (உருவம் இல்லாமல்) அது அததாகாரம்.
---------------
திரவிய நிக்ஷேபம்: கடந்த மற்றும் எதிர் காலத்தை முக்கியமாகக் கொண்டு நிகழ் காலத்தை எடுத்துரைப்பது.

முன்பு கலெக்டராய் இருந்தார், பணி ஓய்வு பெற்று விட்டார், ஆனாலும் கலெக்டர் என்று அழைப்பது போல. தற்போது IAS படிக்கிறான், இன்னும் கலெக்டர் ஆகவில்லை; இருப்பினும் கலெக்டர் என்று வீட்டில் அழைக்கின்றனர் அது போல.
-----------------

பாவ நிக்ஷேபம்: பர்யாயத்தை/ மாறுகையை அடிப்படையாக கொண்டது. என்ன சொல்கிறோமோ அப்படியே இருத்தல்.

அரசாட்சியில் இருக்கும் போது அரசன், நோயை வைத்தியம் பார்க்கும் போது வைத்தியர், வியாபாரம் செய்யும் போது வியாபாரி என்பது போல, உள்ளவாறு சொல்லுதல்.

---------------

இதனை ஏழு தத்வங்களில் காணும் போது:

நாம உயிர்: காட்சி, ஞானம், வீரியம், சுகம் முதலிய குணங்கள் இல்லாது பிறவியில் உழலும் ஆத்மனை உயிர் என சொல்வது நாம உயிர் ஆகும். எ-டு அசோகன்.  

நாம உயிரற்றது: ஒரு மனிதனை எறுமைமாடு என்று சொல்லும் போது அவன் மாடாக இருப்பதில்லை. Mr. Wood, Mr. copper, Mr. Tiger கூறுவது இதே போல் தான். உயிருள்ள மனிதனை உயிரல்லாத பெயரால் குறிப்பிடுவது.

நாம ஊற்று: சித்த பதவியடைந்த தீர்த்தங்கரர் துன்பம் துடைப்பார் என போற்றுதல்; அது சாத்தியமல்ல. அது ஆசையை உற்பத்தி செய்வது, அதன் கர்மங்கள் வந்து சேர காரணமாவது,  நாம ஊற்று ஆகும்.
                               
நாம பந்தம்: கடவுளை நீ என் எதிரிகளை அழித்து விட்டாய் என வணங்குதல் ஆசையும், அதன் கர்ம பந்தமும் ஏற்படுத்தும். அவர் அதற்கு அப்பாற்பட்டவராதலால் அவர் பெயரே / நாம பந்தம் ஆகிறது.

நாம சம்வரை (தடுப்பு): அடித்த ஒருவனை, ஏற்பவன் அடிக்க தைரியமில்லை. அதனால் அடித்தவன் தன்னை ஏற்பவனை மன்னித்ததாகக் கருதுதல் அவனுக்கு  நாம சம்வரை ஆகும்.

நாம நிர்ஜரை:  நற்செயலில் ஈடுபட்டிடுப்பதைப் போல ஒருவன்  காட்டிக் கொள்கிறான், ஆனால்  அவனைப் பார்த்து உலகம் கர்மங்களை கழிப்பதாக சொல்வது நாம நிர்ஜரை. ஏனெனில் உண்மையில் அவன் கர்மங்களை கெடுப்பதில்லை.

நாம மோக்ஷம்: கடனை முழுவதுமாக அடைத்தவன், விடுதலையாகி விட்டேன் என்கிறான். அது ஆன்ம விடுதலை இல்லை, எனினும் மோக்ஷம் என்னும் வார்த்தை உண்மை பெறாமல் இங்கு குறிக்கப்படுவதால் நாம மோக்ஷம்  ஆகும்.

--------------

ஸ்தாபனா உயிர்:  மகாவீரர், நண்பன் போன்றோர் படத்தை அவர்களை போலவே பாவித்தல்.

ஸ்தாபனா உயிரற்றது:  சமதளத்தில் மலையையும், நதியையும் படம் வரைந்து இமயமலை, கங்கைநதி என ஸ்தாபித்தல், ஸ்தாபனா அஜீவ.

ஸ்தாபனா ஊற்று:  துஷ்டதேவதை, பயங்கரவாதி யின் படத்தை வரைந்து உண்மையில் அவர் குணங்கள் அதில் இல்லை, எனினும் பயங்கரம் எனக் காட்டுதல்.

ஸ்தாபனா பந்தம்: ஒரு கொலையை செய்வது போல சிற்பம் வரைந்து சித்தரிப்பது, காட்டுவது உண்மையில் அங்கு அச்செயல் இல்லை. அதைக் காண்பது ஸ்தாபனா பந்தம்.

ஸ்தாபனா சம்வரை: ஒரு அடக்கமான பெண்ணைப் பார்த்த ஒருவன் அவள் தூய்மையைக் காண்கிறான். தீய எண்ணம் தடுக்கப் படுக்கப்படுகிறது. இவ்வாறு ஒரு சித்திரம் அமைந்தாலும் ஸ்தாபனா சம்வரை ஆகும்.

ஸ்தாபனா உதிர்ப்பு:  ஒரு சித்திரத்தில்  முனிவர் தியானம் செய்வதாக வரையப்பட்டுள்ளது. அதனை காணும் போது, அங்கு கர்மம் கெடுவதாக காட்டப்பட்டிருப்பதால், ஸ்தாபனா நிர்ஜரை.

ஸ்தாபனா மோக்ஷம்:  அது போல் சித்தர் உருவப்படம், சித்தலோகத்தில் சுயம் பிரகாசத்துடன் காட்டப்பட்டிருப்பதால் அது ஸ்தாபனா மோக்ஷம்.

---------------        

அதுபோல் திரவ்ய, பாவ(bhava) நிக்ஷபத்திற்கும் நீங்களாகவே விளங்கிக் கொள்ளலாம். (because so lengthy)

--------------

இதில் உதாரணங்கள் சூத்திரத்திலிருந்து அந்தந்த காலத்திலும் வந்தவை. ஆக உலக விஷயங்களை அறிவியல் பூர்வமாக அந்தந்த காலத்திற்கும் ஏற்றார் போல் பல நூற்றாண்டுக்கு முன்னரே ஒரு சூத்திரத்தை அமைத்துள்ள உமாஸ்வாமி ஆச்சாரியரின், (சமண மதத்தின்) பெருமையை என்ன வென்று சொல்வது.

இன்றைய வாழ்க்கைக்கும் பொருந்தும் ஒரு வழிகாட்டுதலை என்றோ தந்துள்ளவர். இதில் ஒரு கடவுளையும் போற்றவும் இல்லை, தூற்றவும் இல்லை. அன்றாட மனிதவாழ்வைச் சித்திரிக்கும் ஒரு அமைப்பை மனோதத்துவ  ரீதியாக தந்துள்ளார் எனில்  மிகையாகாது. ஆக இதில் நம் வாழ்வில் நிகழாத, சந்திக்காத விஷயங்களையும் நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். ஆக கேவலஞானம், மோட்சம் என்பது அனைவருக்கும்  பொதுவானதே.


-----------------


ப்ரமாண நயை: அதிகம:  -  (6)


प्रमाणनयैरधिगमः


Pramana-nayairadhigamah



Knowledge of the realities, right faith etc. is attained by means pramana (the complete knowledge) and naya (one aspect of the knowledge).


உயிர் முதலிய ஏழு தத்துவங்களையும், நற்காட்சி முதலிய மும்மணிகளை அறிய பிரமாணங்களும்,  நயங்களும் அவசியம் தேவை.

அதிகம என்பது உபதேசம் மற்றும் சாஸ்திரங்கள் போன்றவைகளிலிருந்து பெறப்படும் ஞானம் ஆகும்.

அந்த ஞானம் பிரமாணத்தாலும், நயத்தாலும் பெறப்படுகிறது.

பிரமாணம்:

நம்மைப் பற்றியும் பிற பொருள் பற்றியும் முழு அளவில் நமக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கிடைக்கும் சரியான அறிவை சோதிக்க உண்டான (authority) ஆதாரமாகும்.  

பிரத்யக்ஷ பிரமாணம்: ஆன்மா எந்த ஞானத்தின் மூலம் வேறுவழியின்றி எல்லா பொருட்களையும் விளக்கமாக குறைவின்றி அறிகிறதோ அதற்கு பிரத்யக்ஷ பிரமாணம் என்பர்.
தானே பொருளைப்பற்றிய ஞானம் கொள்ளுதல் ஸ்வார்த ( for oneself),
சுருத ஞானத்தை தவிர மற்றவை (மதி, அவதி, மனப்பர்யாய, கேவல) இவ்வகையில் கிடைக்கிறது.

தானே மற்றும் பிறர் துணை கொண்டு அறிதல் ஸ்வார்த மற்றும் ப்ரார்த என இருவழிகளிலும் பொருட்களை அறியலாம். படித்து அறிதல் /  கேட்டு அறிதல்.

நயம்: ஒவ்வொரு பொருளின் தன்மைகள் பலவற்றுள், ஒவ்வொன்றாக அறிதல்.

திரவ்யார்த்திக நயம்: நாம, ஸ்தாபனை, திரவ்யம் மூன்று நிக்ஷேபங்கள் இதற்குட்பட்டவை.

பர்யார்திக நயம்: பாவ (bhava) நிக்ஷேபம் இதற்குட்பட்டது.

--------------
நற்காட்சி யென்பது நம்பிக்கையின் பிரதிபலிப்பு அல்ல. நற்காட்சி வெளியிலிருந்தோ சுயமாகவோ ஏற்படுவதில்லை. அது விவேகத்துடன் ஆராய்ந்து பெறப்படும் அறிவாகும்.

எதுவரை ஒரு பொருளில்  சந்தேகம் உள்ளதோ அதுவரை அங்கு நம்பிக்கை அல்லது நற்காட்சி உண்டாவதில்லை. உண்டாகும்  சந்தேகத்தை அப்படியே விடக்கூடாது. சந்தேகத்தை நீக்கிக் கொள்ள வேண்டும். பொருளை நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்றுக் கொள்ள கூடாது.

எதையும் பரிசோதித்துப் பார்த்து ஒவ்வொருவரும் ஏற்றுக் கொள்வதாக இருக்க வேண்டும்.  அது எப்படி சாத்தியம் என்பதையே இந்த சூத்திரம் எடுத்துச் சொல்லுகிறது.

முதலில் எண்ணங்கள் (மனதின்) நியாயத்திற்கும் பின்னர் அனைவராலும் ஏற்கப்படும் விவேகமான ஆராய்ச்சியின் முடிவிற்கும் வருவதை (universal principles of all  reasoning) பிரமாணம் மற்றும் நயம் என்ற தலைப்பில் / பெயரில் கூறப்படுகிறது.

--------------
ie truth can be ascertained by Pramans and Nayas.

Pramana denotes a standard established for ascertaining the accuracy.
There are mainly four types of Praman, viz. experience, inference, analogy and authenticity. They take into consideration all the aspects under reference.

Naya, on the other hand, denotes particular point of view. In other words, it presents a facet of truth.


----------- 



நிர்தேச ஸ்வாமித்வ ஸாதனாதி கரணஸ்திதி விதானத: - (7)


निर्देशस्वामित्वसाधनाधिकरण स्थितिविधानतः


 Nirdesha -svamitva- sadhana-dhikarana-sthiti-vidhanatah



Knowledge is also attained by description, ownership, means, resting place (substratum), duration and division.


நிர்தேசம், ஸ்வாமித்வம், ஸாதனம், அதிகரணம், ஸ்திதி மற்றும் விதானம் மூலம் (நற்காட்சி மற்றும் ஏழு தத்துவங்கள்) பற்றி அறியலாம்.


நிர்தேசம் (specification):  பொருளின் உண்மை சொரூபத்தினை , இலக்கத்தினை (nature of object) விவரிப்பது ஆகும்.
(ஆப்பிளின் நிறம் சிகப்பு, மஞ்சள், பச்சை;  இனிப்பு சுவை; ஊட்டமளிக்க கூடியது. )

ஸ்வாமித்வம் (ownership) :  பொருளின் சொந்தக்காரன் / உரிமையாளன் என்பதாம்.
(ஆப்பிள் தோட்டம் இன்னாருக்கு சொந்தமானது)

சாதனம் (means): பொருளின் உற்பத்திக்கு காரணமாக இருப்பது.
(ஆப்பிள் மரத்தில் விளைகிறது)

அதிகரணம் (instrumental factors) : பொருட்களுக்கு ஆதாரமாக (இருப்பிடம்) இருப்பது .
(மிதமான உஷ்ண மண்டலத்தில் விளைகிறது)

ஸ்திதி (duration):  பொருள் எவ்வளவு காலம் இருக்கும் என்பது.
(ஆப்பிள் 2-4 வாரங்கள் வரை புது மலர்ச்சியுடன் இருக்கும்)

விதானம் (type): பொருள்களின் வகைப்பாட்டிற்கு விதானம் என்று பெயர்.
( ஆப்பிள் அன்டனோவ்கா (உருசியா) , பால்ட்வின், கோர்ட்லான்ட் (அமெரிக்கா), ப்ராபொர்ன், ராயல் காலா (நியுசிலாந்து), ப்ராம்லே (இங்கிலாந்து)  போன்ற பல ரகங்கள்)


இதே போன்று நற்காட்சிக்கும்  காணலாம்.


நிர்தேஸம்: பொருளின் உண்மையான தன்மையை உள்ளது உள்ளவாறே உணர்தல்.

ஸ்வாமித்வம்: முக்திக்கு யோக்கியமான மனமுள்ள ஆன்மாவுக்கே உரித்தானது.

ஸாதனம்:

  அந்தரங்க ஸாதனம்:  தர்சனீய மோகனீய கர்மம் தணிவு நிலை (உபஸமம்), கேடுநிலை (க்ஷயம்), கேடு தணிவு நிலை (க்ஷயோபஸமம்) இவற்றில் இருக்கும் போது நற்காட்சி ஏற்படுதல்.

  புற (பாஹ்ய) ஸாதனம்: முற்பிறவு நினைவு (ஜாதிஸ்மரண்), அற உணர்வு (தர்மஸ்மரண்), துக்க அனுபவம் ஆகிய மூன்று காரணங்களால் ஏற்படலாம்.

அதிகரணம்: அகம், புறம் என இரு வகையுண்டு.

  அகம்: ஆன்மாவிற்கே உண்டான இயல்பில் தோன்றுதல்.

  புறம்: உயிர்கள் உலாவரும் திரஸநாளி. இந்த திரஸநாளிக்கு வெளியே ஓருயிர் உயிர்கள் மட்டுமே உள்ளன.

ஸ்திதி:  நற்காட்சி மிகக் குறைந்த கால அளவு ஒரு ஜகன்ய அந்தர் முஹூர்த்தம், அதாவது 48 நிமிடங்கள். மிக நீண்டகாலம் அனந்தானந்த காலம். அதாவது வீடு பேறு அடைந்த ஆன்மா.

விதானம்:  மூன்று பிரிவுகள் உண்டு.

  ஒளபஸமிகம்:  இது தர்ஸன மோகனீயம் அனந்தானுபந்தி குரோத,  மான, மாயா, லோப கஷாயங்கள் ஆகியவை தம்முடைய செயலிழந்து அடங்கி யிருக்கும் போது ஏற்படுவது.

  க்ஷயோப ஸமிகம்:  மேற் சொன்னவைகள் ஒரு பகுதி அடங்கியிருக்க, மற்ற பாகம் பலனைக் கொடுத்து விட்டு மறையும் போது ஏற்படுகிறது.

  க்ஷாயிகம்:  மேற்சொன்ன கர்மமும் கஷாயங்களும் முழுதாக விலகிவிடல். இந்த நற்காட்சி என்றும் நின்று நிலவும்.

மொத்தத்தில் பொருட்களைப் பற்றிய ஞானம் பெற இது வழியாகும்.


---------- 




ஸத்ஸங்கியா க்ஷேத்ரஸ்பர்சன காலாந்தர பாவால்பபஹூத்வைஸ்ச  - (8)


सत्संख्याक्षेत्र स्पर्शनकालान्तर भावाल्पबहुत्त्वैश्च


Satsankhya-kshetra-sparshana-kalantara-bhavalpa-bahutvaishcha



Existence, number (enumeration), present abode, extent of space (pervasion), time, interval of time, thought-activity, and reciprocal comparison and also help in the attainment of knowledge.


ஸத், ஸங்க்யா,  க்ஷேத்ர, ஸ்பர்சன, காலம், அந்தரம், பாவம், அல்பபஹூத்வம் என எட்டு வழிகளால் கூட பொருள்களை அறியலாம்.

ஸத் (existence) : அது நிலைத்திருக்கும் தன்மையை குறிக்கும் (புகழ்ச்சி போன்ற அர்த்தம் இருப்பினும் இங்கு பொருந்தாது; eulogy and other meanings are not intended here.). இருத்தல், மெய்ம்மை.

ஸ்ங்கியா(enumeration of divisions or classes) : எண்ணிக்கை அடிப்படையில் பிரித்து பார்ப்பது. வகைகளும், பிரிவுகளும் அடங்கும்.

க்ஷேத்ர (the present abode) : நிகழ்காலத்தில் பொருட்கள் இருக்கும் இடத்தை குறிப்பது(குறித்து பேசுவது).

காலம் (the extent of space, time of two kinds real and conventional): முக்காலத்திலும் (கடந்த, நிகழ், எதிர்) பொருட்களின் இருப்பிடத்தைப் பற்றி பேசுவது. நிச்சய காலம் மற்றும் வியவகார காலம் எனவும் இரண்டு வகைகளாக உள்ளது. (பின்னர் விரிவாக காணலாம்)

அந்தரம் (interval of time): இடைவெளி/இடைப்பட்ட காலம் / விரஹகாலம். பரிணாமம்; எவ்வளவு காலம் வரை இருக்கும்.

பாவம் (substantial thought- activity and so on): தணிவு நிலை/ ஒளபசமிகம் முதலிய பரிணாமத்தை குறிப்பது. அங்கே இருந்தது, இங்கே எப்போது வந்தது? என்பது போல.

அல்பபஹூத்வம் (distinction based on comparison between one another): மற்ற பொருட்களைக் கொண்டு ஒரு பொருளின் வேறுபாட்டினை/ ஏற்றத்தாழ்வுகளை/  வித்தியாசத்தை கூறுவது.

நற்காட்சி மற்றும் ஏழு தத்துவ பொருட்களை இதன் மூலம் அறியலாம். முன் ஸுத்திரத்தில் கண்டது போல் உயிர்/ ஜீவ னைப்பற்றி உதாரணமாக பார்ப்போம்.

ஸத் :  இருத்தல்; ஆன்மா உயிர்ப்பு நிலை; உள்ளுணர்வால் அறியலாம். ஆன்மா எந்த உருவில் சேர்ந்து இருந்தாலும் அந்த உடலில் உயிர்ப்பு இருக்கும்.

ஸங்க்யா :  ஆன்மாக்கள் எண்ணற்றவை, அதனை பல ஜீவராசிகள் இருப்பதிலிருந்து அறியலாம்.

க்ஷேத்ரம்:  உயிர் உலகம் பூராவும் பரவியுள்ளது.

ஸ்பர்சனம்:  சென்ற பிறவியில் தேவனாக, தற்போது மனிதப் பிறவியில், அடுத்து சித்த லோகத்தில் இருக்கப்போவது என மூன்று கால இருப்பிடத்தை குறிப்பது.

காலம்:  விடுதலையடைந்த உயிர் உலக உச்சியினை அடைய ஒரு சமய காலமே ஆகிறது. சித்தாலயத்தை அடைந்தவுடன் கால வரையறையின்றி அங்கேயே இருக்கிறது.

அந்தரம்:   ஒரு ஜீவன் மனித பிறவியிலிருந்து இறந்து, பல பிறவிகள் எடுத்து, மீண்டும் அதே மனித பிறவியை எடுக்க நேர்ந்தால், இரண்டிற்கும்  இடைப்பட்ட காலம் அந்தரம் எனப்படும். (மனிதப்பிறவிக்கு மட்டும் மல்ல மற்ற கதிகளுக்கும் இது பொருந்தும்.)

பாவம்:  ஆன்மாவின் தூயத்தன்மைக்கு ஏற்ப அதனின் செயல்கள், குணங்கள் அமைகின்றன. உதாரணமாக முற்றிலும் தூய்மை அடையும் போது (சதுஸ்டங்களான) அனந்த சுகம், அனந்த ஞானம், அனந்த வீர்யம், அனந்த தர்சனங்களை பெற்றிருப்பது போலாகும்.

அல்பபஹூத்வம்:  தாவர ஜீவன்கள் வாயு ஜீவன்களை விட அதிகமாக உள்ளன. வாயு ஜீவன்கள் நீர் (அப்பு) ஜீவன்களை விட அதிகமாயுள்ளன, அப்பு ஜீவன்கள் பிருத்வி(மண்) ஜீவன்களை விட அதிகமாயுள்ளன, பிருத்வி ஜீவன்கள் நெருப்பு ஜீவன்களை விட அதிகமாயுள்ளன.

--------------   
குறிப்பு:  இருப்பு, எண்ணிக்கை என்பன திரவியத்தின் மாறுபாடுகள்; 
இடமும், அளவையும் எனபன க்ஷேத்திரத்தின் மாறுபாடுகள்; 
நிச்சய/ வியவகார காலமும் காலத்தின் வேறுபாடுகள்; 
குணமும்,  எண்ணிக்கையும் பண்பின் அதாவது பாவ(bhava)த்தின் மாறுபாடுகள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
-----------
7 & 8 sutras specify fourteen factors, ie Specification, ownership, means, instrumental factors, duration,  types, existence, numbers, location, contact, time, distance, modes and quantities can be judged the Truth; which are helpful in making out various aspects of the subject under reference.  They are like windows through which one can get a clear idea of the subject.


Of these 14, the following factors are more significant, Specification, ownership, duration, types, location, time.

-------------- 


மதிஸ்ருதாவதி மன: பர்யய கேவலானி ஞானம்  - (9)


मतिश्रुतावधिमनः पर्यय केवलानि ज्ञानम्


Mati-srutavadhi-manah paryaya-kevalani gyanam



Knowledge is of five kinds_ sensory knowledge, scriptural knowledge, clairvoyance, telepathy and omniscience.


மதி ஞானம், சுருத ஞானம், அவதி ஞானம், மனப் பர்யய ஞானம், கேவல ஞானம் என ஐந்தும் ஞானமாகும்.

இவ்வைந்தும் ஞானத்தின் நிலைப்பாடுகளே தவிர, வெவ்வேறு வகைகள் அதாவது தனித்தனி ஞானமல்ல.

மதி ஞானம் (sensory  knowledge): ஐந்து இந்திரியங்கள் மற்றும் மனம் வழியாக எந்தப் பொருள் அறியப்படுகிறதோ, அது மதி ஞானம் எனப்படும்.

பொறிகள் மற்றும் மனம் என்ற புறக்கருவிகள் கொண்டு அறிவு அறியப்படுகிறது. (கர்த்தா); அறிதல் என்ற நிகழ்வு நடைபெறுகிறதே அதுவும் அறிவு எனப்படுகிறது.

எது அறிகிறதோ, எதனால் அறிகிறதோ, எந்த அறிதல் நிகழ்கிறதோ இம்மூன்றும் மதி ஞானம் ஆகும்.


சுருத ஞானம் (scriptural knowledge):  சாஸ்திரங்களை தானே படித்தோ, பிறர் படிக்க கேட்டோ அறிதல் மற்றும் மதியை உபயோகித்து வெகுவாக அறிதல்.

சுருத ஞான மறைப்பு வினைகள் அழிவும், தணிவும் ஏற்படுவதால்;  எது, எதனால் மற்றும் எதன் மூலம் கேட்கப்படுகிறதோ அல்லது கேட்பது மட்டமே நிகழ்கிறதோ அதனை சுருத ஞானம் எனச் சொல்லப்படுகிறது.

ஆப்த வசனா, ஆகம உபதேச, ஐதீகப ஆம்நாய, பிரவசனம், ஜிநவசனம் போன்றவை.


அவதி ஞானம் (clairvoyance):  ஐம்புலங்கள் மற்றும் மனதின் துணையின்றி ; சில உருவமுள்ள (மூர்த்த) பொருட்களை, நேரடியாக அளவுடன் அறிதல்.

புத்கலங்கள், அவற்றின் பரிமாணங்களை திரவிய, க்ஷேத்ர, கால, பாவ (bhava) இவற்றின் தன்மையால்  அறிவது.

கீழ்நோக்கி அங்குள்ள பொருட்களை (downward range) அறிவது அவதி எனக் கூறப்படுகிறது.

(உ-ம்)  சுவர்க்கத்து தேவர்களின் (பிறப்பில் உள்ள) அவதி ஞானத்தை குறிப்பிடும் போது 5 ம் நரகம், 7 ம் நரகம் என்ற கீழ் நோக்கிய எல்லை என வரையறை வகுத்து கூறப்படுகிறது. அவர்கள் வாழும் தேவலோகத்திற்கு மேல் உள்ள பொருட்களை அவதிஞானத்தால் அறிய முடியாது.


மனப் பர்யய ஞானம் (telepathy): பிறர் மனம் சார்ந்த எண்ணங்களை அறிதல்.

அதாவது மனதை அறிவதில்லை. மனதில் உள்ள பொருட்களை (பொருள் பற்றிய எண்ணம்,  சிந்தனை) அறியும் ஆற்றல். ஆனால் மனதை அறிவதாக கொள்ளக் கூடாது. ஏனெனில் மனம் என்ற பொறியைக் குறிப்பிட வில்லை.
                      
(உ-ம்) வானத்தில் சந்திரன் உள்ளது என்பதில்; மனம் வானத்திற்கு ஒப்பானது. பொருள்(எண்ணம்) அதில் உள்ள சந்திரன் ஆகக் கொள்ள வேண்டும்.

கையைத் திறந்து ஒருவன் காசை வைத்திருந்தால் மனப்பர்யய ஞானத்தால் அறிய முடிவதில்லை (அவதி ஞானத்தில் அறிய முற்படலாம்). அதையே கையை மூடி, கருத்தில் கொண்டு வந்தால் மனப்பர்யய ஞானத்தால் அப் பொருளை அறியலாம்.


கேவல ஞானம் (omniscience): முழுதுணர் ஞானம், மூவுலகிலுள்ள எல்லா பொருட்களையும் அவற்றின் எல்லா நிலைகளிலும் (மாறுதல்களிலும்) அலோகத்தையும் குறைவு இன்றி ஒருங்கே ஒரே சமயத்தில் அறியும் ஞானம்.
                                                   
அகத்தவம்; புறத்தவம் செய்து, காதி வினைகள் அழியுமாறு தவநெறியில் ஈடுபடுகிறார்களோ அவர்களுக்கு கிடைக்கிறது.

-----------
Classified into two categories.

Mati, shruti are gained by resorting to intelligence, rationale, books, teaching etc. which are external factors. They relate to sensory perception and are therefore termed as indirect.

The remaining Avadhi, Manahparyay, Keval jyan are arise by virtue of internal purity and are therefore termed as direct.
------------

மனம் என்பது ஞானமல்ல, அறியக்கூடிய சக்தி/ ஆற்றல் மனதிற்கு  இல்லை. ஞானத்திற்கு தான் இருக்கிறது. ஞானத்தினுடைய ஆற்றல்/ சக்தி எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு ஞானம் வளர்ச்சியடைகிறது.

---------------

Kevali ; those who attained the Kevalgyan:

A kevali has the capability of deploying his ‘sookshma-pudgals' (massless micro particles) to capture an event at infinite speed. This is how a kevali knows everything in ZERO TIME.

Since keval gyanis can convert moving time frames to a static frame they are always in present.

Past and future merge for them. And because of this collapse of time, everything in past , present or future is ‘just happening’ for them.

Any event in universe can be described in terms of space and time. For a kevali, the condition of singularity holds and time = 0(past=present=future) always, so all events in space are known to them.

Time travel is theoretically possible and moving at a speed greater than that of light is one of the ways in which the same can be achieved. Other ways include use of cosmic strings or blackholes, and travelling through a wormhole.
------------

ஜீவன்களின் ஆத்மாக்கள் அனைத்துமே கேவலஞான ஆற்றல் கொண்டவைகளாக தான் பிறவி எடுக்கின்றன. அதன் மீதுள்ள மாசுக்களால், காதி வினைகளின் மறைப்பால் ஆற்றல்களை இழந்து பிறவி கதிகளில் சுழன்று வருகின்றன.

அவைகளை எந்தந்தளவுக்கு அழிக்கிறதோ அந்தந்த ஞான ஆற்றல் நிலையினை ஆத்மா பெறுகின்றன. முற்றிலும் அழிக்கப்படும் போது, திரை விலகும் போது முழு ஆற்றலும் வெளிப்படுகின்றது.

அற்றலை பெறுவதற்கு நாம் சித்தாந்தங்களையும், நன்நெறிகளையும் கடைபிடிக்க வில்லை. உள்ளிருக்கும் ஆற்றலின் தடைகளை நீக்குவதற்கே கருவிகளாக கொள்கிறோம் என்பதை உணர வேண்டும்.

முழுதுணர் ஆற்றல் நிலைவரை சுயம்புவாக நம்மிடமே உள்ளன.


----------- 


தத் பிரமாணே -  10

तत्प्रमाणे

Tatpramane


All of these five kinds of knowledge are pramana i.e.  valid knowledge and are of two types.



மேற்கூறிய ஐந்து வகை ஞானங்களும் பிரமாணங்களாகும்.  வேறு எவையும் பிரமாணங்கள் ஆகா.

அப் பிரமாணங்கள் இரு வகை அவை:

ப்ரத்யக்க்ஷப் (direct) பிரமாணம்:  ஐம்புலன்கள் உதவியின்றி ஆன்மனால் நேரடியாக அறியப்படுதல்.

அவதி, மனப்பர்யய, கேவல ஞானங்கள் ப்ரத்யக்ஷமாமும்.

பரோக்ஷப் (indirect) பிரமாணம்: ஐம்புலன்களின் உதவியாலும் மனத்தின் உதவியாலும் அறியப்படுதல்.  மதி, சுருத ஞானங்கள்.

--------------
எது நன்கு அறியப்படுகிறதோ, எதன் மூலம் அறியப்பட்டதோ அந்த ஞானம் மட்டும் தான் பிரமாணம்.

பிரமாணத்திலிருந்து ஆத்மா முதலான பொருட்கள் அறியப் படுகிறது.

பிரமாணம் அல்லது ஞானம் என்பது தீபம் போன்று பிற பொருட்களை அதன் சொரூபத்தில்- சுபாவத்தில் காண்பிக்க காரணமாகிறது. மேலும் அந்த ஒளி தருவை பார்ப்பதற்கு வேறு ஒரு ஓளிதரு பொருளை தேட வேண்டியதில்லை.

-----------
ஞானம் பிரமாணம் என்றால் பயன் ஏதும் இல்லை என்று கூறப்படுகிறது. ஞானம் கிடைப்பதில் மகிழ்ச்சி மற்றும் திருப்தி கிடைக்கிறது.

ஆத்மனுக்கு சம்பந்தமில்லாத வினை, அதன் சுபாவத்தை மறைத்துக் கொண்டிருப்பதை பொறிகள் மூலம் நிர்ணயம் செய்து கொள்வதில் திருப்தி கிடைக்கிறது.


வேறுபாடில்லாத தன்மை அல்லது சமதாபாவம்; விருப்பு வெறுப்பற்ற தன்மை கிடைத்து, அஞ்ஞானம் என்னும் இருள் விலகுவதுதான் பயன் என்று சொல்ல வேண்டும்.

----------- 



ஆத்யே பரோக்ஷம்  -   (11)


आद्ये परोक्षम्


That pramane



The first two kinds of knowledge are indirect knowledge (since these are attained through the sensory organs and the mind).


முதலில் கூறப்படும் இரண்டு ஞானங்கள்;  மதி, சுருதி பரோக்ஷ ஞானங்கள் ஆகும்.

ஆதி என்றால் முதல் (first) ஆத்யம் என்ற சொல்லிலிருந்து வருகிறது.

உண்மை (real point of view) நோக்கில் பொறிவழி ஞானம் முதலாகும்.

சுருத ஞானம் மதி ஞானத்தின் மூலமாக பெறப்படுவதாலும் அதுவும் முதலாகும் என்பது உபசாரத்தினால் (figurative point of view) கூறப்படுவதாகும்.

அதனால் சூத்திரத்தில் ஆத்யே என்ற சொல் கூறப்பட்டுள்ளது. முதல் இரண்டுமாகும், அதனால் இருமை (plural) எண்ணிக்கையில் உபயோகப்படுத்தப் பட்டுள்ளது.

மதி ஞானமானது  பொறி மற்றும் மனம் சம்பந்தப் பட்டது. ஆன்மனைப் பொருத்தவரையில் புறக் கருவிகள் மூலம் பெறப்படுகிறது. ஆகவே பரோக்ஷம் (indirect) என சுட்டப்பட்டுள்ளது.

---------------

மதி ஞானாவரணம் மற்றும் சுருத ஞானாவரண கருமங்களின் அழிவு மற்றும் தணிவு என்கிற அந்தரங்க நிமித்தங்களினால் தான் மதி மற்றும் சுருத ஞானங்கள்  ஏற்படுகின்றன.
                    
ஆன்மாவில் ஒளி மற்றும் உபதேச புற நிமித்த காரணங்களால் தோன்றுகிறது. அந்தரங்க நிமித்தம் இல்லாமல் புற நிமித்தங்களால் மட்டும் ஞானம் பெறமுடியாது.

உவமானம், உவமேயம், அனுமானம், ஆகமம் முதலியனவும் மதி, சுருத ஞானத்தில் அடங்கும்.

---------------

On the destruction-cum-subsidence of the concerned karmas, sensory knowledge and scriptural knowledge arise in the soul through the senses and the mind in the presence of light, teaching, etc. Hence these are called indirect. And comparison, verbal testimony, etc. are included under these alone.

----------------- 



பிரத்யக்ஷமன்யத் -  (12)


प्रत्यक्षमन्यत्


Pratyakshamanyat




The remaining three knowledges constitute direct knowledge (since these are attained by the soul itself)


மற்ற ஞானங்களான அவதி, மன பர்யய மற்றும் கேவல ஞானங்கள் பிரத்யக்ஷமாகும். இம்மூன்று ஞானங்களும் அந்தரங்க காரணங்களால் அறியப்படுகின்றன.

ஜீவனின் ஆத்மாவில் கருமங்கள் (க்ஷயோபசமம்) கேடு-தணிவும், கேடு (க்ஷயம்) ஆவதினால் அறியும் ஞானம் பிரத்யக்ஷம் என்பர்.

ஆன்மா நேரடியாக அறியும் அறிவும், அறியும் ஆற்றலும் உடையது. ஏனெனில் ஆன்மா இந்திரியங்கள் பொருளின் ஞானம் வருவது இல்லை.

ஞானம் ஒரு விளக்கிற்கு சம்மாக இருக்கிறது. இரண்டு செயல்பாடுகள் ஒன்று ஒளிர்வது. மற்றொன்று பொருட்களை ஒளிரச் செய்வது/ வெளிப்படுத்துவது.

------------ 


மதி: ஸம்ருதி: ஸம்ஞா சிந்தாபினியோத இத்யநர் தாந்தரம்   - (13)

                                            
मतिःस्मृतिः संज्ञाचिन्ताभिनिबोध इत्यानर्थान्तरम्


Matih smrtih sangya chinta-abhinibodha ityanarthantaram




Sensory cognition, remem-berance, recognition, induction and deduction are synonyms for sensory knowledge.


மதி, ஸம்ருதி, ஸம்ஜ்ஞா,  சிந்தா மற்றும் அபினிபோத இவையெல்லாம் முதலாவதாக கூறப்பட்ட மதிஞானத்தின் மறுபெயர்கள்.

மதி என்பது மனம் மற்றும் பொறிகள் துணை கொண்டு தற்போது உள்ள பொருட்களை அறிதல் ஆகும்.

ஸ்ம்ருதி (sensory cognition): ஸ்ம்ருதி என்பது நினைவிற்கு கொண்டு வருதல்


ஸம்ஜ்ஞா (Remembrance) : என்பது தற்போது ஏதோ ஒரு பொருளைப் பார்த்து, அது தான்  இது, என நினைவு கூர்ந்து நேரடியாகப் பார்க்கும் ஞானம். மீட்டுணர்வு ஞானம் எனலாம்.


சிந்தா (induction) : பொருளின் குறிப்பைக் கொண்டு அப்பொருளை உணர்தல்.
நெருப்புடன் சேர்ந்த பொருள் சூடாகும்.
எங்கெங்குப் புகையுள்ளதோ அங்கங்கு நெருப்புள்ளது என உணர்தல் சிந்தா எனப்படும்.

அபினிபோத (deduction): காரணத்தைக்  கொண்டு காரியத்தை அறிதல். அனுமானம் என்றும் கூறுவர்.
மலைக்கு பின்னாலிருந்து புகைவருவதைக் கண்டு அங்கு நெருப்பு உளது என்று கூறுவது.

இவை அனைத்தும் ஞானாவரண கரும (க்ஷயோபசமத்தால்) கேடு-தணிவினால் ஏற்படுகிறது. ie(destruction -cum- subsidence)

-------------

இவை ஒன்றையொன்று அடிப்படையாக கொண்டு அறியத்தக்கது. பீட்டர் என்பவர் நமக்கு முன்னர் அறிந்தவர் (ஸம்ஜ்னா). அதனால் அவர் போட்டோவை பார்த்ததும் பீட்டர் என்பதை கண்டு உணர்கிறோம்.(ஸ்மிருதி)

தினமும் சூரியன் தொடர்ந்து காலை உதயமாவதை பார்த்து வருகிறோம்( சிந்தா), அதனால் நாளை காலை உதிக்கும் எனக் கூறுவது.(அனுமானா, அபினிபோத)

மனிதர்கள் ஆயுள் முடிந்ததும் இறந்துவிடுகிறார்கள் (சிந்தா). அதனால் பீட்டர் கூட இறந்து  விடுவான் என முடிவு எடுக்கிறோம்.(அனுமானா, அபினிபோத)

--------

Each of the last four is based one among them, e.g. remembrance is based on sensitive knowledge.  We remember Peter: because we have seen him before. We recognize his picture before us because we remember him.

The Sanjna; or recognition is based upon our remembrance, Smriti of Peter which is itself based our Mati, sense knowledge of Peter when we saw him, as also upon our sense-knowledge of the picture before us.

Induction(chintha) is base upon recognition, We see the sunrise in the same way every day.  We see men dying.  The same or similar phenomena take place.  We remember and recognize these pheromones.

By induction we say the sunrises always, and all men die.  Having steered up observations in the above induction we can make use of them in deduction or Anumana and argue:

The sun rises every day, therefore it will rise tomorrow. All men die, therefore Peter will die.

----------------



ததிந்திரியாநிந்திரிய நிமித்தம்  -  (14)


तदिन्द्रयानिन्द्रियनिमित्तम्


Tadindriyanindriya-nimittam



Sensory knowledge is attained through five senses and the mind.


மதிஞானம் இந்திரியங்கள், மனம் ஆகியவற்றின் நிமித்தத்தால் ஏற்படுகிறது. 


ஒரு ஆத்மா எப்பொழுது ஞானாவரண கருமம் கேடு மற்றும் தணிவுநிலையில் (க்ஷயோபசம) இருக்கும் போது, ஞானம், அறிவு என்ற பொருட்களை நேரடியாக அறியும் சக்தியற்று இருக்கும். (destruction cum subsidence state)

இங்கே இந்திர என்பதற்கு ஆத்மா என்று பொருள்.

அந்த ஆன்மா பொருட்களை அறிகிறது என காட்டுவதற்கு எவை நிமித்தமாக அமைகிறதோ அது இந்திரியமாகும்.

அதாவது சூக்குமமாக உள்ள ஆன்மாவின் இருப்பினை, ஆத்மா என்பது உள்ளது என்பதை உணர்த்த காரணமாக உள்ள அடையாளத்தை, லிங்கத்தை (sign) தான் இந்திரியம் என அழைக்கப்படுகிறது.

தொடு உணவிற்கு காரணமாக பொறிகளின் பயன்பாடுகளுக்கு ஆத்மா காரணமாகிறது.
(ஆக இந்திர என்ற சொல் நாம வினையை குறிக்கிறது)

அநிந்திரியம், அந்தகரணம், மனம் என்பதெல்லாம் ஒரே பொருள் குறித்த சொற்கள் (synonyms) ஆகும்.

என்ற சொல்லிற்கு இல்லை என்கின்ற பொருள் இவ்விடத்தில் கொள்ளாமல் மெலிந்த (slim), சிறிய (little) என கொள்ளல் வேண்டும். கொஞ்சம் சிறிய இந்திரியத்தை (quasi-sense) அநிந்திரியம் என்று கூறுவர்.

(அனுதாரா கன்யா என்றால், வயறு இல்லா கன்னிகை எனக் கொள்ளாமல், ஒடி இடையாள் என்பது போல்)

மனமும் ஆத்மாவை காட்டக்கூடிய இந்திரியம் தான் ஆனாலும், தொடர்பு கொள்ளும் பொருளுக்கான குறிப்பிட்ட இடம் கிடையாது, நிலைப்பாட்டுக் காலமும் கிடையாது.
                       
ஒரு எல்லைக்குள், தான் அறியும் என்பதோ, நீண்ட காலம் வரை ஒரு நிலையில் இருக்கும் என்பதோ இல்லை, மாறிக் கொண்டே இருக்கும்.

மனம் உள்ளே இருப்பதாலும், பார்வைக்குத் தெரியாததாலும் அது நல்லது, இது கெட்டது என்பதை ஆன்மா ஆய்வதற்கு ஒரு கருவியாக செயல் படுவதினால்; மனம் அந்தகர்ணம் என்றும் சொல்லப் படுகிறது.

(though the mind is also  the sign (lingam) of the soul, it does neither cognize  objects within a limited sphere nor  remain for long. That is mental attitude changes quickly)

------------ 
சமணத்தில் மனம் ஒரு உறுப்பாக சொல்லப் படுகிறது. நுண்பொருட்களால் ஆன மனோவர்கணா என்ற மனம், இதயத்துக் கருகில் எட்டு இதழ் கொண்ட தாமரைவடிவில் அமைந்துள்ளதாய் சுட்டப்படுகிறது.

In Jainism it is an organ which is made of subtle matter called manovargana, or mental matter.  Its form is like a lotus with eight petals near the heart.


----------------- 




அவக்ரஹேஹாவாய தரணா:  -  (15)


अवग्रहेहावाय धारणाः


Avagrahehavayadharanah 




The four divisions of sensory knowledge are  perception, curosity, judgement and retention.


மதி ஞானத்தில் அவக்ரஹ, ஈஹா, அவாய மற்றும் தாரணா என நான்கு பிரிவுகள் உள்ளன.

அவக்ரஹ (apprehension) : பொருள் மற்றும் ஐம்புலன்கள் சம்பந்தம் ஆன பிறகு, முதலில் அறியப்படுவது எதுவோ அது அவக்ரஹம் எனக் கூறப்படுகிறது. எண்ணத்தால் சிறைப்படுத்தல்.

எந்த பொருள் (விஷயம்) எதனால் அறியப்படுகிறதோ அது விஷயீ (ஐம்புலங்கள்).  கண்ணால் பார்க்கப்படுகிறது என்பது சொன்னால் கண் (விஷயீ) சம்பந்தப்பட்டது. பொருளின் நிறம் விஷயம்.

கண்ணும் அந்தப் பொருளும் இணங்கி தோன்றுகிற அறிவு அவகிரஹம். விஷயம், விஷயீ சம்பந்தம் ஏற்படும் போது முதலில்  அறியப்படுவது அவகிரஹம்.

ஒரு பொருளின் இருப்பு பற்றிய உணர்வு (sensation) / அறிவு தோன்றுகிறதே அதுதான் தரிசனம். அதன்  பிறகு எந்த பொருள் அறியப்படுகிறதோ அது அவக்ரஹம்.

ஈஹா (speculation): அவக்கிரஹத்தின் மூலம் அறிந்த பொருளின் சிறப்புகளை அறிவதற்கு விருப்பம்(இச்சை) தோன்றுவது ஈஹா ஆகும்.

அங்கு பார்த்த பொருள் பாம்பா, பழுதா/கொடியா என ஒரு முயற்சி ஏற்படுகிறதே அது தான் ஈஹா. (conjecture without firm evidence.) சிந்தனை வேட்டை.

அவாய (Judgement): ஊக்கம், உணர்வு காரணமாக அல்லது இச்சையின் (கஷாயம்) காரணமாக பொருளின் சிறப்புகளை நிர்ணயம் செய்ததன் மூலம் பொருள் இதுதான் என்ற அறிவு ஏற்படுகிறதே அது  அவாய என சொல்லப்படுகிறது.

பாம்பா, கொடியா என்பதை அசைந்து ஊர்ந்து செல்வதையும் வைத்து கொடியல்ல பாம்புதான் என நிர்ணயம் செய்வது அவாய/ தீர்மாண முடிவெடுத்தல்.

தாரணா (retention) அவாய ஞானத்தின் மூலம் நிர்ணயம்  செய்த பொருளை நீண்ட நாட்களாக மறக்காமல் இருப்பது தாரணா எனப்படும். - நினைவில் பதித்தல்.

அன்று நான் பார்த்த பாம்பு இதுதான் என்று கூறுவது.

மதிஞான வகைகள் எந்த வரிசையில் கூறப்பட்டிருக்கிறதோ, அதே வரிசையில் தான் ஒரு பொருளின் ஞானம் ஏற்படுகிறது. எல்லா நேரத்திலும் அனைத்தும் இருக்க வேண்டும் என்பதில்லை. சில விடுபட்டும் மதிஞானம் ஏற்படலாம்.

-----------
Mati: it arises in four stages of Avagrah ie apprehension, Iha ie faint perception, Avay comprehension and Dharana (Imprint).

when a person comes to know merely about the existence of something, it is termed as Avagrah. When he gets some idea about it, but is not  able to identify  clearly,

e.g. When he come around  something,which is round andlong,  but does not  make out whether  it is  a rope or a snake, it is  termed as Iha.

When he makes out that it it is  rope and  not a snake, it is termed as Avay.

Therefore one may retain the  impression of the object  evenwhen it is not in his presence. Such lasting impression is termed as Dharana.

These four stages  can be  divided  in many categories.

For instance, knowledge can be gained by exercising the senses of  touch, taste, smell, sight and sound or by exercising the faculty of mind.

So six organs can be  involved in  gaining knowledge, we can multiply those six with foregoing four stages and get  twenty four ways in which knowledge can arise.

-------------

தற்காலத்தில் மனோதத்துவ நிபுணர்கள் ஒரு பொருளை அறிவதை four R  எனச் சொல்வர். read, recognize, retention, recall ; இவை பல நூற்றாண்டைக் கடந்துள்ள மேற்சொன்ன சூத்திர-நான்கின் வேறு வடிவமாக சொல்லப்பட்டிருக்கிறது.

conative , cognitive, affective போன்றவை, இன்று நிபுணர்களால் அலசப்பட்டு வரும் ஒரு பாடமாக உள்ளது. இவையின் உள்ளடக்கம் அவக்ரஹ, ஈஹா, அவாய மற்றும் தாரணா என நான்கின் மதிஞானத்தைப் பற்றியதே  எனக் காணும் போது,

கிருதபிச்ச ஆச்சாரியர் மெய்ஞானியா இல்லை வீதராக  விஞ்ஞானியா என வியக்க வைக்கிறது. இன்றைய விஞ்ஞானத்திற்கு என்றோ வித்திட்டவர் என கூறி அவருக்கு நாம் இக்கால salute ஐயும் உரித்தாக்குவோம்.


 -------------------- 

பஹுபஹுவித க்ஷிப்ராநி : ஸ்ருதாநுக்தத்ருவாணாம் ஸேதராணம்  -  (16)


बहुबहुविधक्षिप्रानिः सृतानुक्त ध्रुवाणां सेतराणाम्


Bahu-bahuvidha-kshipranih-srata(a)nukta-dhruvanam setaranam



The subdivisions of each of these are many, many kinds, quick, hidden, unexpressed, lasting and their opposites.

பஹூ, பஹூவித, ப்ர, அநிஸ்ருத, அனுக்த, த்ருவ,  இவற்றிற்கு எதிர் மறையான ஏக, ஏகவித,  அக்ஷிப்ர, நிஸ்ருத, உக்த, அத்ருவ, ஆகிய பன்னிரண்டு  வகையில் பொருட்களில் முன் சொன்ன அவக்ரஹம், ஈஹா, அவாய, தாரண அகிய நான்கு வழிகளில் - மதி ஞானம் உண்டாகிறது.

முன் சூத்திரத்தில் அறிதல் முறைப் பற்றிக் கூறினார். இதில் அறியப்படுகின்ற பொருள் எப்படிக் காணப்படுகின்றது என்பதை விளக்குகிறார்.

பஹூ (more) :  அதிகம், அதிக எண்ணிக்கை, அதிக அளவு உள்ள பொருட்களை அறிதல். நெற்குவியல் போன்றவை; நிறைய சாதம், நிறைய பருப்பு போல ஆகும்.

பஹூவித (many) : தானியக் கிடங்குகளில் நெல், கோதுமை, கடலை, பருப்பு முதலிய பல வகையான தானியங்களைக் காணுவது போலாகும்.

க்ஷிப்ர (quick) : ஒரு பொருளை வேகமாக அறிதல் – பேருந்து, விமானம் போன்றவை வேகமாக இருக்கும் போது அறிதல்.

அநிஸ்ருத (hidden): முழுவதுமாக தெரியாமல் அரை குறையாகத் தெரியும் பொருளை அறிதல்.

அநுக்தம் (unexpressed): சொல்லப்படாத, விவரிக்கப்படாத ஒரு பொருளை அறிதல். ஒரு புதிய மரம், மிருகத்தை அறிதல். முகச்சாயல், கை யசைவை வைத்து ஊமையின் தேவையறிதல்.

த்ருவம் (lasting): நிலையானது. ஒரு பொருளைப் பற்றி அறிந்த விஷயத்தை நினைவில்  கொள்ளல். ஒரு கோபுரத்தை பார்த்து அதனை  தொடர்ந்து நினைவில் வைத்திருத்தல்.

ஸேதரா: (opposites) அதாவது மேற்கூறிய ஆறு வகைக்கும் எதிர் மறையான ஆறுவகை; அதாவது ஏக, ஏகவித, அக்ஷிப்ர, நிஸ்ருத, உக்த, அத்ருவ என்பன.
இவற்றை முதல் சூத்திரத்துடன் காண்போம்:

பஹூ X (எதிர்மறை) ஏக – ஏக அவக்ரஹ (one kind, அல்பம்): குறைந்த எண்ணிக்கை/ அளவு உள்ள அறிதல். உதாரணமாக ஒரே விதமான தானியத்தை அறிதல்.

ஏகவித அவக்ரஹ (kinds): ஒரே விதமான பல பொருட்களை அறிதல். நெல்லில் பல ரகங்கள் இருப்பதை  அறிதல். (IR8, IR20, CO33, பொன்னி என)

X  அக்ஷிப்ர அவக்ரஹ (slowly):  ஒரு பொருளை அறிய அதிக நேரம் எடுத்துக் கொள்ளுதல்.

X  நி:ஸ்ருத அவக்ரஹ (quikely): வெளிப்படையாக காண்கின்ற ஒரு பொருளை விரைந்து அறிவது.

X  உக்த அவக்ரஹ (expression): சொற்களைக் கேட்ட பிறகு அறிவது.

X  அத்ருவ அவக்ரஹ (transient): சஞ்சலமான மேகம் மின்னலைப் போன்றவைகளை அறியும்  ஞானம்.

ஆக அவக்கிரஹ மட்டும் 6+6 = 12. மேலும் ஈஹா, ஹவாய, தாரணா வும் சேர்த்து 48 ஆகிறது. (ஒரு இந்திரியத்திற்கு மட்டும்)

இந்திரியங்கள் – 5 மற்றும் அநிந்திரியம் (மனம்) – 1 ஆக 6 X 48 = 288 பிரிவுகள் மதிஞானத்தில் உள்ளன.

மேலும் அவக்ரஹ ஞானத்தில் மட்டும், தெளிவாக தோன்றும் பொருளின் அவக்கிரஹம், அர்த்தாவக்கிரஹம்; 

தெளிவாக தோன்றாத பொருளின் அவக்கிரஹம் வியஞ்ஜநாவக்ரஹம்;

 (வரும்) சூத்திரம் 18 ன் படி என இருவகைப்படும்.  சப்தம் போன்றவை தெளிவாக புலப்படுவதில்லை. (மற்ற மூன்றும் ஈஹா, ஹவாய, தாரணா கிடையாது)

அந்த வியஞ்ஜ அவக்ரஹத்தில் நான்கு பொறிகளில் அதாவது 12X4 = 48 ம்
மேற்சொன்ன 288 உடன் கூட்டிக் காணும் போது 336 வழிகளில், பொருளின் மதிஞானம் பெறலாம். 


-------------- 


அர்தஸ்ய   -  (17)


अर्थस्य


Arthasya 




These are the attributes of substances (objects) and known through sensory knowledge.
The sense organs know an object by its properties and modes. ie Artha.


நான்கு வகையான மதி அறிவு பொருட்களுடன் தொடர்புடையவையாகும்.  பொறிகளின் இலக்கு பொருள் எனக் கூறப்படுகிறது.

கண் முதலான இந்திரியங்களுடைய விஷயம் அர்த் (பொருள்) எனப்படுகிறது.

பொருளுடன் சேர்ந்தது தான் குணம்.  ஆனால் குணம் (பண்பு) மாறுதலுக்கு உட்பட்டது. அதாவது பர்யாயங்களுக்கு ஏற்ப ஒரு பொருள் தோற்றமளிக்கிறது.

பர்யாயங்களை எது அடைகிறதோ, எதில் ஏற்படுகிறதோ அது பொருள். அல்லது பர்யாயங்கள் மூலம் எது கிடைக்கப் பெறுகிறதோ அது பொருள் ஆகும்.

அவக்கிரஹ போன்ற நான்கும் பொருள் நிமித்தமாக வருவதால் அர்தஸ்ய என்று சூத்திரத்தில்  சொல்லப்பட்டுள்ளது.

நிறம், சுவை இவைகள் புற்கலப்பொருட்களின் பண்புகள் (குணங்கள்) ஆகும். வெண்மையான பொருளைக் காணும் போது அப்பொருளையும், அப் பொருளின் அந்த பர்யாய நிறமான வெண்மையையும் சேர்த்து முழுவதுமாக இந்திரியம் தொடர்பு கொண்டு அறியும்.

இதில் பொருள் உருவமுடையது, நிறம் அருவமாகும். (மூர்த்தம், அமூர்த்தம்).
இந்திரியத்தால் உருவப் பொருளைத்தான் அறிய  முடியும், அதோடு சேர்ந்த அருவப் பொருளும் தொடர்பு கிடைக்கிறது. அருவமான வெண்மையை மட்டும் தனியாக அறிய முடியாது.

அவ்வாறு அறிய முடிந்தால் அருவப் பொருளான உயிரை அதனால் காண முடியும் என்றாகிறது.  அவ்வாறு முடியவில்லை.

ஆனால் பிற தர்சனங்களில் நிறம், சுவை போன்றவற்றை மட்டும்தான் அறிவதாக சொல்லப்படுகிறது. அதனை மறுக்கவே ஆச்சாரியர் அர்தஸ்ய என, பொருட்களை மட்டுமே என குறிப்பிடுகிறார்.

-----------
பர்யாயம் என்பது பண்புகளில் தான் பொருட்களில் இல்லை.  பொருட்கள் மாறுவதில்லை.

பார்த்தேன், சுவைத்தேன் எனக் கூறுவதெல்லாம் பர்யாயங்களைத் தான். பொருட்கள் பர்யாயங்களில் இருக்கும் போது, பொருள் அனுபவத்தில் வருமே தவிர பரியாயங்கள் அனுபவத்தில் வருவதில்லை.

பொருட்களையும், பண்புகளையும் பிரிக்க முடியாது.   நிறத்தைப் பார்த்தாலும், சுவையை ருசித்தாலும் நிறமுடைய பொருளை நுகர்ந்தேன் என்று தான் கூறியிருக்க வேண்டும்.

இந்திரியத் தொடர்பு உருவப் பொருள்களுடன் தான் முடியுமே தவிர, அருவப்பொருளுடன் முடியாது, என்பதை சூத்திரம் தெரிவிக்கிறது.

---------------

Every object can have many properties by which it can be known. All of them cannot be comprehended by one single organ. 

For instance, when eyes see an apple, they see its shape, size and colour.  The apple has, however, other properties like taste and flaour, which can be experienced by tongue and nose.  Whether it is hard or soft can be made out by touching it and its nourishing property can be experienced by digesting system and so on. 

Total concept of an object can thus be grasped by knowing all its properties and modes. ie Artha.


---------        


வியஞ்ஜனஸ்யாவக்ரஹ:  -  (18)

व्यञ्जनस्यावग्रहः

Vyanjanasyavagrahah



Indistinct things are known only through perception sensory knowledge.


செவி, மூக்கு, நாக்கு, மெய் ஆகிய புலன்களுக்கு எட்டாத தெளிவற்ற ஒலி முதலியவற்றை அறியும் ஞானம், வியஞ்ஜன ஞானம் என்பர். 

இதில் ஈஹா, அவாய, தாரணா ஆகியவை நீங்கலாக, அவக்ரஹ ஞானம் மட்டும் தோன்றும்.

1.வியஞ்ஜன 2. அர்த்த – அவக்கிரஹம் என இருவகைப்படும்.


வியஞ்ஜன அவக்ரஹம்;  தெளிவாக புலப்படாத பொருள் பற்றிய அவக்கிரஹம். கண், மனம் இரண்டிலும் அறியப் படாது.

தூரத்தில் கேட்கும் ஒலி, அதாவது விளம்பர வாகனம் (car) தூரத்தில் சொல்லி கொண்டு வரும்போது புரிவதில்லை.  பின்னர் அருகில் வரவர வார்த்தைகள் புரிபடுவது போல.

பானையில் நான்கைந்து சொட்டுத் தண்ணீர் தெளித்தால் கண்களுக்கு கொஞ்சமும் புலப்படுவதில்லை. ஆனால் அதிகமாக தெளித்துக் கொண்டே வந்தால்,  நனையும் போது தான் புலப்படும்.

ஆரம்பத்தில் ஒலி காதுகளுக்கு தெளிவாக கேட்காது. ஆனால் கண்களால் முதலில் முழுவதும்  காணமுடியாது. (அதனால் கண் வியஞ்ஜனாவக்ரஹத்தில் அறிய முடியாது.)

2. அர்த்த அவக்ரஹம்: தெளிவாகப் புலப்படும் அவக்ரஹ ஞானம் எனப்படும். பிரத்யக்ஷமான ஞானம்.

இதில் ஐந்துபொறிகளும், மனமும் அறிதலுக்கு பயன்படும். மேலும்  ஈஹா, அவாய, தாரணா ஆகியவையும் சேரும். இவைகள் தெளிவாகத் தெரியும் பொருளை அறியும்.

இவைதான் இவை இரண்டிற்கும் உள்ள வித்தியாசம்.


---------------- 

 ந சக்ஷுரநிந்திரியாப்யாம்  -  (19)

न चक्षुरनिन्द्रियाभ्याम्

Na chakshuranindriyabhyam


Perception of indistinct things does not arise by means of the eyes and the mind.


கண் மற்றும் மனம் ஆகிய இரண்டு இந்திரியங்களிலும் வியஞ்ஜன அவக்ரஹம் தோன்றுவதில்லை/ ஏற்படாது.

அதாவது தெளிவில்லாத அறிவு (indistinct apprehension) தோன்றாது.

கண்; கண்ணுக்கெட்டிய தூரம் வரைதான் தெளிவாக பார்த்து அறியும். அதுவும் காணப்படும் வெளிச்சம் கொண்டே அறிகிறது.

அதனால் பொருட்களுடன் ஒன்றிய/தொட்டு அறிவதில்லை. (அவ்வாறு பொருளை கண்ணுடன் தொடும்படி வைத்தால் அப்பொருளே பார்வையை மறைத்து விடும்.)

அதே நிலைதான் மனதுக்கும் ஏற்படுகிறது. அதாவது அர்த்த அவக்ரஹ (தெளிவான அறிவு) மட்டுமே உண்டு.

மற்ற காது, மூக்கு, வாய், மெய் இவற்றிற்கு தெளிவில்லாமல் அறியும் நிலை காணப்படுகிறது. (அதிர்வு, வாசனை துகள்கள், அழுத்தம் போன்றவற்றால் தெளிவில்லாமலும், தெளிவுடனும் அறிய முடியும்)

எனவே சூத்திரம் 16 ல் குறிப்பிட்ட படி 288(தெளிவுடன்) + 12X4(தெளிவில்லாமல்) = 336 வழிகளில் மதி ஞானம் தோன்றுகிறது.

-------------
Indistinct apprehension does not occur in the case of the eyes and the mind.

It is because there is no contact in the case of these to sense-organs.

The eyes perceive without contacting an object, which is fit and which is placed in the vicinity in proper perspective and revealed the mind and the object.

Hence, there is no indistinct apprehension in the case of the sense of sight and the mind.
----------



ச்ருதம் மதிபூர்வம் த்வயநேக த்வாதசபேதம்  -   (20)


श्रुतं मतिपूर्वं ह्यनेकद्वादशभेदम्


Shrutam matipurvam dvyaneka-dvadasabhedam




ச்ருதம்- சுருத ஞானம், மதிபூர்வம் - மதி ஞானத்தை ஆதாரமாக கொண்டு அமைவது, த்வ- அநேக த்வாதச பேதம் – இரண்டு அல்லது பல மற்றும் பன்னிரண்டு பேதம் உடையது.


Scriptural knowledge is preceded by sensory knowledge and is of two kinds, twelve kinds, and many kinds.

----------- 

சுருத ஞானம் என்பது மதி ஞானத்தை அடிப்படையாக கொண்டதாகும். மேலும்  சுருதஞானம் இரண்டு வகைகளாகவும், பல வகைகளாகவும் மற்றும்  பன்னிரண்டு வகைகளாகவும் இருக்கின்றன.


சுருத என்ற சொல்லுக்கு பல அர்த்தங்கள் இருந்தாலும்; இங்கு குறிப்பிட்ட ஞானத்தை /  அறிவினுடைய கூறு என்பதைக் குறிக்கிறது என உரையாசிரியர் பூஜ்யபாதர் கூறுகிறார்.

அறிதல் என்பது அறியக்கூடிய செயல்,  அறிவு என்பது செயலைச் செய்வதினால் கிடைக்கும் விளைவு ஆகும்.


இந்திரியங்கள் எப்போதும் இருப்பதால் மதி ஞானம் கிடைத்துக் கொண்டே இருக்கும். ஆனால் சுருத ஞான மறைப்பு (சுருத ஞானாவரணக் வினைகளின் அழியும் தணிவும் பலமாக இருந்தால் சுருத ஞானம் ஏற்படுகிறது.


மதி ஞானத்திற்கு பிறகு தான் சுருத ஞானம் தோன்றுகிறது, எப்படி என்றால் மெழுகுவர்த்தியின் சுடரும், ஒளியும் ஒரே நேரத்தில் தோன்றினாலும், சுடர் இல்லை எனில் ஓளி தோன்றாது.


ஒரு சுருத ஞானம் இன்னொரு சுருத ஞானத்தாலும் உண்டாகிறது. சை-க்-கி-ள் என்று படிக்கும் போது காது (என்ற இந்திரியத்தி) ல் படும் ஒலியினால் மதி அறிவு ஏற்படுகிறது. பின்னர் சைக்கிள் என்பது என்ன, என்று அறிந்து கொள்வது சுருத ஞானம் மாகும். பின்னர் அது வாகனமாக புமியைக் கடக்க உபயோகமாகிறது என்ற அறிவு ஒரு சுருத அறிவிலிருந்து இன்னொரு சுருத அறிவு தோன்ற காரணமாகிறது.


சுருத ஞானத்தின் இரண்டு வகை:


அங்க பாஹ்யம் (non-canonical),  அங்க பிரவிஷ்டம் (canonical – மறை நூல்கள்/ மூல ஆகமங்கள்) ஆகும்.

   அங்க பாஹ்யம் என்பது தசவைகாலிகம் மற்றும் உத்தராத்யயனம் முதலிய அநேக வகைகள் ஆகும்.

அங்க பிரவிஷ்டம் பன்னிரு வகைகள் ஆகும்.

1. ஆசாரங்கம் : துறவறத்தார்களின் ஒழுக்கங்களைப் பற்றியது.

2. சூத்ரக்ருதாங்கம்: ஞானம் தர்சனம் ஆகிய இவைகளை வணக்கம் செய்யும் முறையைக் கூறும் நூல்.

3. சமவாயாங்கம்: திரவியம், க்ஷேத்ரம், காலம் எனும் பாவங்களினால் ஒன்றுக்கொன்று (பரஸ்பரம்) சமனாய் இருப்பவற்றைக் கூறும் நூல்.

4. வியாக்யாப்ரஜ்ஞப்தி: உயிர் இருக்கிறது (அஸ்தி இல்லை நாஸ்தி) என்பதைப் பற்றி 60000 கேள்விகளுக்கு விடை அளிக்கும் நூல்.

5. ஸ்தானாங்கம்: அ. உயிர் பொருள், ஆ. புத்கலப் பொருள், இ. தர்மப் பொருள், ஈ. அதர்மப் பொருள், உ. ஆகாசப்  பொருள்,  ஊ. காலப் பொருள் எனும் ஆறு மெய்ப் பொருள்களைப் பற்றிக் கூறும்  நூல்.

6. ஜிஞாத்ருகதாங்கம்:  தீர்த்தங்கர்ர், கணதரர் முதலானவர்களின் வரலாற்றை கூறும் நூல்.

7. உபாஸகாத்ய்யநாங்கம்:  இல்லறத்தார்களின் ஒழுக்கங்களைக் கூறும்  நூல்.

8. அந்தக்ருத்தசாங்கம்: ஒவ்வொரு தீர்த்தங்கரர் காலத்திலும் பிறரால் செய்யப்படும் கொடிய துன்பங்களை (உபஸர்க்கங்களை) அடைந்த பத்து முனிவர்களின் வரலாற்றைக் கூறும் நூல்.

9. அநுத்த ரோப்பாதிகதசாங்கம்:  ஒவ்வொரு தீர்த்தங்கரர் காலத்திலும் பிறரால் செய்யப்படும்  கொடிய துன்பங்களை வென்றும், விஜய, வைஜயந்த,  ஜயந்த, அபராஜித, ஸர்வார்த்த  சித்தி என்னும் ஐந்து அனுத்தர விமானங்களில் பிறந்த ஒவ்வொரு பத்து முனிவர்களின் வரலாற்றைக் கூறும் நூல்.

10. பிரஸ்னவ்யாகரணாங்கம்:  நஷ்ட, முஷ்டி,  சிந்தை, லாபம்,  அலாபம் முதலான பொருள்கள் பற்றி எழுப்பப்பட்ட வினாக்களுக்கு விடையளிக்கும் நூல்.

11. விபாக சூத்ராங்கம்: புண்ய, பாப பலன்களைக் கூறும் நூல்.

12. திருஷ்டி வாதாங்கம்: 363 மித்யாவாதிகளின் தன்மைகளை அவர்களுடைய கூற்றுகளையும் மறுக்கும் முறைகளைக் கூறும் நூல்.


இதில் திருஷ்டி வாதாங்கம்: ஐந்து வகை. 

பரிகர்மம், சூத்ரக்தம், பிரதமாநுயோகம், பூர்வகதம், சூலிகை என்பன.

பரிகர்மம்: இதுவும் ஐந்து வகை.
சந்திர ப்ரஜ்ஞப்தி, சூரிய ப்ரஞப்தி, ஜதிம்பூத்வீப் பரஜ்ஞப்தி, திவீபசாகர ப்ரஜ்ஞப்தி, வ்யாக்யா பிரஜ்ஞப்தி.  

பூர்வகதம்: இது பதினான்கு வகைகளாக உள்ளன.

சூலிகை: ஐந்து வகைகள் உள்ளன.

---------------

இந்த மூவகை பிரிவுகளுக்கான அடிப்படை, மூவகை ஆச்சார்யர்களின் அடிப்படையில் அமைந்தது.

முதலாமவர் சர்வக்ஞன் என்கிற தீர்த்தங்கரர்கள்/ சாமான்ய கேவலிகள், இரண்டாமவர் சுருத கேவலி மற்றும் மூன்றாமவர் ஆசாரியர்கள் ஆவார்கள்.


--------------



பவப்ரத்யயோவதிர் தேவநாரகானாம்  -  (21)


भवप्रत्ययोऽवधिर्देवनारकाणाम्


Bhavapratyayo (a)vadhirdeva-narakanam



பவப்ரத்ய்ய-  பர்யாய நிமித்தம், அவதிர்- அவதி ஞானம்,  தேவ நார கானாம்  - தேவர், நரகர் களுக்கு உற்பத்தியாகும்.


Clairvoyance (avadhi) based on birth is possessed by celestial and infernal beings.



அவதிஞானம் தேவர், நரகர்களுக்கும் பிறவியிலேயே தோன்றும். அது ஆயுள் முடியும் வரை இருக்கும்.

பவம்(bhavam) என்றால் கால வரம்போடு கூடிய பர்யாயம், ஆயுள் முடியும் வரை என்று அர்த்தம்.

பவப்ரதயய, பவ நிமித்தம் காரணமாக தோன்றும் அவதிஞானம் தேவ, நரகர்களுக்கு உண்டாகிறது.

தேவ, நரகர்களுக்கு பவத்தை சார்ந்தபோதே, எந்தவித  விரத நியமும் கடைபிடிக்காமலே, சுபாவத்திலேயே;  அவதிஞானவரண கர்மங்கள் அழிந்தும், தணிந்தும் விடுகிறது. (க்ஷயோபசமம்)
                                
தேவ, நரக பவப்ரத்யய அவதி தவிர; குணப் பிரத்ய அவதி என இரண்டு வகையுண்டு.

அவதிஞான கருமத்தின் கேடு, தணிவு நிலையினால் ஏற்படும் குண பிரத்ய அவதியை க்ஷயோபசம நிமித்திக அவதி ஞானம் என்றும் கூறுவர்.

----------
சம்யக் தரிசனத்தில் இருந்து தேவ, நரக பிறவியில் கிடைக்கும் போது சுஅவதி ஞானம்  என்றும், அவ்வாறு இல்லாமல் இந்த பவத்தை தழுபவர்களுக்கு விபாங்க அவதி ஞானம்- குஅவதி ஞானம் (erroneous clairvoyance) உண்டாகிறது.
-------------


க்ஷயோபசமநிமித்த: ஷட்விகல்ப:  சேஷாணாம்  -  (22)


क्षयोपशमनिमित्तः षड्विकल्पः शेषाणाम्


Kshayopashamanimittah shadvikalpah sheshanam


க்ஷயோபசம - வினைகள் கெடும் நிலை மற்றும் தணிவு நிலை. ஷட்விகல்ப – ஆறு பேதமாகும்,  சேஷாணாம் – (தேவ, நரகர் கதியில் இல்லாத)
எஞ்சியுள்ள பிற உயிர்களுக்கு உற்பத்தியாகும்.


Clairvoyance from destruction-cum-subsidence of clairvoyance covering karmas is of six kinds. It is acquired by the rest (namely human beings and animals).



வினைகள் கெடும் நிலை மற்றும் தணிவு நிலை காரணத்தால் ஏற்படும் அவதிஞானம் ஆறு வகையாகக் காணப்படுகிறது. அந்த அவதி ஞானம் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் ஏற்படும்.

க்ஷயம் (destruction) – வினைகள் கெடும் நிலை அதாவது:
                 
உயிரின் குணங்களை

ஓரளவிற்கு பாதிக்கக் கூடிய கரும அணுக்களின் கூட்டம் பலனைக் தந்து கொண்டிருக்கும் நிலைமை , அதோடு (+)
முற்றிலும் தடுக்கின்ற கரும அணுக்களின் கூட்டம் பலன் தர வராமலிருக்கும் நிலைமை.

இவ்விரண்டு நிலைமைகளும் சேர்ந்து க்ஷயம் எனப்படுகிறது.

உபசமம்: (subsidence) : தணிவு நிலை

கர்ம வினைகள் பலனைக் கொடுக்கும் நிலைமையை அடையாமல் எவ்வித மாற்றமுமின்றி முன்பிருந்த  நிலையிலேயே இருப்பது உபசமம் என்பபடும்.

மேற்சொன்ன இரண்டின் நிமித்தத்தால் எது தோன்றுகிறதோ அது க்ஷயோபசமம் எனப்படும்.

அவ்வாறு க்ஷயோபசம காரணத்தால் எது  தோன்றுகிறதோ அது க்ஷயோபசம நிமித்திக அவதி ஞானம் என்பர். (clairvoyance of destruction cum subsidence)

எஞ்சியுள்ள என்றால் மனித கதி, மனமுள்ள விலங்கு கதியுள்ள ஜீவன்கள்.

அதிலும் முற்றுலும் வளர்ந்த (பர்யாப்தி) மனமுடைய (ஸ்ஞ்ஞி) உயிர்களில், க்ஷயோபசம நிமித்தத்தில் ஞானாவரண கருமம் இருந்தால் மட்டுமே தான் அவதி ஞானம் தோன்றுகிறது.  

அதாவது தீர்த்தங்கரர், தேவர், நரகர் ஆகிய இவர்கள் நீங்கலாக நற்காட்சியுடைய மனிதர்கள் (அப்போது தான் க்ஷயோபசம நிலை) மற்றும் மனமுடைய விலங்குகளுக்கும் உண்டாகும்.

இதன்  சிறப்புத் தகுதி குணப்ரத்யய அவதி ஞானம் எனப்படுகிறது. அதில் ஆறு பிரிவுகள் உள்ளன.

முதல் இரண்டு உயிரின் தன்மை, இருப்பு நோக்கிலும்;  மற்ற நான்கும் அறிவின் ஏற்றத் தாழ்வு அடிப்படையிலும் இருக்கின்றன.

அனுகாமி (accompanying): இந்த வகை அவதிஞானம் உயிர்களிடத்து ஒரு பிறவியிலிருந்து மறுபிறவியிலும் தொடர்ந்து வரும். சூரியன் போகும் இடமெல்லாம் ஒளி செல்வது போல.

அனனுகாமி (unaccompaning): தொடர்ந்து வராமல் அந்த பிறவியில் மட்டும் இருந்து மறைந்துவிடும்.

வர்த்தமானம் (increasing): விரிந்து பரவி வளர்கிற ஞானம்.  வளர்பிறை சந்திரன்  போல.

ஹீயமானம் (decreasing):   இந்தவகை அவதிஞானம் தேய்பிறை சந்திரன் போல் குறையும்.

அவஸ்திதம் (steady) :அறியப்பட்ட ஞானம் ஏற்ற, இறக்கமில்லாமல் அதே நிலையில் இருத்தல். உடலில் உள்ள மச்சம் போல சாகும் வரை அதே அளவில் இருக்கும்.

அனவஸ்திதம் (unsteady) : உயர்தலும் தாழ்தலும் போல் உள்ளதாகும். காற்றின் வேகத்தினால் அலையும் ஏரி  அலைபோல. (crest and trough)

-------------               
இந்த அவதி ஞானத்தின் ஆறு பிரிவுகள், நற்காட்சியின் தீவிரத்தன்மையைப் பொருத்து அதிகமாகவோ/ குறைவாகவோ அமையும்.  மற்றும் இந்த அவதி ஞானத்தை தேச அவதி( பகுதியான); பரம அவதி (உயர்வான); சர்வ அவதி (முற்றிலும்) எனவும் பிரிக்கலாம்.  தேச அவதி குறைபட்டதாகவும், மற்ற இரண்டும்  கேவல ஞானத்தில் போய்  சங்கமமாகும்.
---------- 



ருஜு விபுலமதி மன: பர்யய:  -  (23)


ऋजुविपुलमती मनः पर्ययः


Rjuvipulamati manahparyayah



ருஜு(மதி)- சீரறிவு ; விபுலமதி - வீரியஅறிவு ;  மன: பர்யய - பிறர் மனதில் உள்ள பொருள் அறிதல். (மனம் முழுவதையும் அறிதலல்ல)


Rjumati and vipulamati are the two kinds of telepathy (manah-paryaya).



ருஜுமதி- பிறர் மனதில்  உள்ள பொருட்களை விளக்கமாக அறிதல்.

பிறர் மனதில் உள்ள சொல், செயல், சிந்தனை வழி எண்ணங்களை (ஒரு பொருளைப் பற்றி) சரளமாக, நேராக அறியும் மனப் பர்யய ஞானத்தினை ருஜுமதி- சீரறிவு ஆகும்.

இஞ்ஞானத்தால் தனக்கு இரண்டு, மூன்று பவங்கள் (births) வரை அறியமுடியும். மற்றவர்களுக்கு கதி மற்றும் கதியல்லாத நோக்கில் கடந்த, எதிர்கால ஏழெட்டு பவங்களை அதிக பக்ஷமாக அறியமுடியும்.

இட நோக்கில் இரண்டு மைல்களிலிருந்து (ஒரு குரோசம்) எட்டு மைல்கள் வரை (ஒரு யோசனை) அறிய முடியும்.

Produced and straight. It is produced by the knowledge of objects of speech, body and mind located in the minds of others. He who has straight telepathy is called rjumati.

விபுலமதி – உண்டு பண்ணாத/ பரந்த மற்றும் அதி நுட்பமான அறிவு, சொல், செயல், சிந்தனை வழியாக பிறர் மனதில் உள்ள விளக்கமற்ற பொருள்களின் ஞானத்தை அறிதல் விபுலமதி ஞானம் ஆகும்.

இந்த ஞானத்தின்  வழியே கால நோக்கில் குறைந்தது ஏழெட்டு பவங்கள் (கடந்த, எதிர்கால) அதிகமாக எண்ணிக்கையில் அடங்காத (அஸங்கியாத்) பவங்கள் வரை அறிய முடியும்.

இட நோக்கில் இரண்டு மைல்கள் – எழுபத்திரண்டு மைல்கள் (ஒன்பது  யோசனை) வரையும், அதிக பட்சமாக மனிதர்கள் வாழும் பகுதி (இரண்டரைத் தீவு) முழுவதும் அறிய முடியும்.

Not produced and curved or winding. It is not produced by the knowledge of objects of speech, body and mind in the minds of others. He who has complex telepathy is called vipulamati.

மன பர்யய ஞானாவரண (telepathy obscuring) கருமங்களின் அழிவு மற்றும் தணிவுநிலை (க்ஷயோபசமம்) யில் பிறர் மனதில் உள்ள பொருட்களின் எண்ணங்களைப் பற்றி அறிவது மன: பர்யய ஞானம் எனப்படும்.


-------------- 



விசுத்தய ப்ரதிபாதாப்யாம் தத்விசேஷ:  -  (24)


विशुद्ध्यप्रतिपाताभ्यां तद्विशेषः


Vishuddhyapratipatabhyam tadvisheshah




விசுத்தி – தூய்மைத்தன்மை; அப்ரதிபாதம் – நீங்காமல் இருப்பது; தத்விசேஷ – (விபுலமதி) சிறப்பானது


Vipulamati is special as compared to Rjumati on account of higher purity and infallibility.


ருஜுமதி எளிதில் உணரக்கூடிய மனப்பர்யய ஞானமாகும். விபுலமதி அபரிமித அதாவது (நுட்பமான) வீரியஅறிவு ஞானமாகும்.

ஆத்மாவின் பரிணாமத்தூய்மை வளர்ச்சி, விசுத்தி அடிப்படையில் கூறப்படுகிறது.

திரவிய, கால, க்ஷேத்ர, பாவ நோக்குகளில் பொருளினை அறிவதனாலும் வேறுபாடு காணப்படுகிறது.

மேலும் ருஜுமதி விழ்தல் (பிரதிபாதம்) மற்றும் விழுதலின்மை (அப்ரதிபாதம்) என்ற நோக்கில் விபுலமதி நீங்காமல் இருப்பதால் சிறப்பானதாக சொல்லப்படுகிறது.

ஏனெனில் விபுலமதி ஞானமுடையவருக்கு சாரித்திரம் (conduct) கூடிக் கொண்டே போகிறது. ஆனால் ருஜுமதி ஞானமுடையவருக்கு கஷாய உதயத்தினால் சாரித்திரம் குறையும் நிலையும் ஏற்படுகிறது.

சிறப்பான விபுலமதி மனப்பர்யய ஞானமுடையவர்கள் நிச்சயமாக கேவல ஞானத்தை அடைவார்கள்.
------------
An ascetic, whose karmic veil has only subsided but has not completely removed, sometimes falls from his spiritual height in the presence of powerful conduct-deluding karmas. 

Bust such a fall does not occur in the case of an ascetic whose conduct-deluding karmas have been completely destroyed.

And the excellence of telepathy depends upon purity and absence of fall.

-----------------



விசுத்தி க்ஷேத்ர ஸ்வாமி விஷயேப்யோவதி மன:பர்யயயோ:  - (25)


विशुद्धिक्षेत्रस्वामिविषयोऽवधिमनः पर्यययोः


Vishuddhi-kshetra-swami-vishayebhyo(a)vadhi-manah paryayayoh



விசுத்தி க்ஷேத்ர ஸ்வாமி விஷயேப்ய: - தூய்மை, இடம், மனிதர், விஷயம் (பொருள்)  அவதி மன:பர்யயயோ: - அவதி ஞானம், மனப்பர்யய ஞானம் இவற்றில் (வேறுபாடு).


Telepathy (manahparyaya) and clairvoyance (avadhi) differ with regard to purity, space, knower and objects. Telepathy is purer than clairvoyance, but clairvoyance extends to larger space. Those with telepathy maintain special restraint while clairvoyance can be had in all four conditions of existence.


ஆத்மாவின் மலத்தன்மை நீங்குவதால் தூய்மை (purity);  
எந்த இடத்தில் அறிகிற பொருள்கள் இருக்கின்றனவோ அந்த இடத்தை அறிவது க்ஷேத்ரமாகும் (space) ;
அறிபவர் அல்லது அந்த ஞானத்தை உடையவர் ஸ்வாமி (possessor);
எவை அறியப்படுகிறதோ அவை விஷயம் அல்லது பொருள்(object) ஆகும்.

இந்த நான்கு நோக்குகளில் மனப்பர்யய ஞானம், அவதி ஞானத்தை விட விசேஷமான தூய்மை (விசுத்தி) பெற்றதாகும். (ஏனெனில் பொருள் நுட்பமானது)

அவதி ஞானம் நான் கு கதிகளில் உள்ள ஜீவன்களிடம் (தேவ, நரக, மனித; விலங்கு) களிடமும் தோன்றுகிறது. ஆனால்;

நிகழ்காலத்தில் உயர்ந்த நல்லொழுக்கங்களை உடைய; மேலும் மேலும் சாரித்திரத்தில் (conduct) உயர்ந்து கொண்டே போகும் முனிவர்களிடம் மட்டுமே மனப்பர்யய ஞானம் தோன்றுகிறது.

அவதி ஞானம் நேரடியாக ஸ்தூலமான (உருவமுடைய) பொருள்களை ஒரு எல்லையுடன் அறிகிறது.

ஆனால் மனதுக்கு நிகழ்கின்ற; இந்திரியங்களுக்கு புலப்படாத நுட்பமான மாறுகைகளை (பர்யாயத்தை) மனப்பர்யய ஞானம் நுட்பமாக அறிகிறது.

மேலும் மற்ற நான்கு ஆதாரங்களைக் கொண்டும் வேறுபாடுகள் காண்பிக்கப்படுகிறது.

----------

Here the subject of discussion is the possessor. 

It arises in the case of ascetics possessed of high conduct that is from the seventh stage of perfection of vows to the twelfth stage of destroyed delusion.

Even among these ascetics, it arises only in those who advance spiritually higher and higher and not in those who go down spiritually.

And even among them it manifests itself only in those ascetics who possess one or more of the seven extraordinary powers (rddhis).

Still not all of them, but only a few of them, attain telepathy.


--------------- 


மதிஸ்ருதயோர் நிபந்தோ ஜ்;ரவ்யேஷ்வஸர்வபர்யாயேஷு  -  (26)


मतिश्रुतयोर्निबन्धो द्रव्येष्वस्रवपार्यायेषु


Mati-shrutayornibandho dravyesh- vasarvaparyayeshu



மதிஸ்ருதயோர் – மதிஞானம், சுருதஞானம்;  நிபந்தோ – இணைத்தல் /சேர்த்தல் (எதனுடன் )    அஸர்வபர்யாயேஷு  - கொஞ்சம் பர்யாயத்தோடு ;  த்ரவ்யேஷு – திரவ்யங்களை அறிகிறது.


The range of sensory knowledge and scriptural knowledge extends to all the six substances but not to all their modes (forms).


மதிஞானம், சுருதிஞானம் எவ்வளவு பொருளை அறிகிறது எனில், கொஞ்சம் பர்யாயத்தோடு பொருட்களை அறிகிறது.

அவ்விரண்டும் ஜீவன், புத்கலம் முதலிய திரவியங்களின் சில மாறுகைகளை மட்டுமே அறியும். எல்லா பர்யாயங்களையும்(change of modes) ஆறிவதில்லை.

திரவ்யேஷு என்ற சொல் பன்மையை(plural) குறிப்பதால் ஆறு திரவியங்களை/ மெய்ப்பொருட்களை குறிக்கும்.

அதாவது ஜீவன்(soul); புற்கலம் (matter); தர்மம் (தன்மம்/ the medium of motion); அதர்மம் (அதன்மம்/the medium of rest); ஆகாஸம் (space) மற்றும் காலம் (time) அகிய மெய்ப்பொருட்கள் ஆகும்.

இவை எல்லாம் மதி, சுருத ஞான பொருளாக இருப்பதால் சில பர்யாயங்களை மட்டுமே இரண்டு ஞானங்களால் அறிய முடிகிறது.

தர்மாஸ்திகாயம் முதலியவை அதீந்திரியமாகும். அதாவது ஐம்புலன்களால் அறிய முடியாது. எனவே மதி ஞானத்தால் அறிய முடியாது.

மனம் என்னும் கருவியின் துணையினாலும்; மற்றும் அறிவதற்கு தடையாய் இருக்கிற நோயிந்திரிய கருமம் கேடு தணிவு(destruction cum subsidence) ஆகிற அளவிற்கு விஷயங்களை அதன் தகுதிக் கேற்ப அறிந்து கொள்கிறது.

எனவே சுருத ஞானத்தாலும் சில பொருட்களின் மாறுகைகளையே தகுதிக் கேற்ப அறிந்து கொள்ள முடிகிறது.
-------------
It is contended how cognition can cognize non-material substances such as the medium of motion, the medium of rest, which are beyond the ken of the senses.

With the help of internal sense and on the destruction-cum-subsidence of qyasi-sense-covering karmas, apprehensions etc. arise.

Therefore, scriptural knowledge preceded by these ascertains what is proper for it.
------------------




ரூபிஷ்வவதே:  - (27)


रूपिष्ववधेः


Rupishvavadheh



ரூபிஷு – உருவமுடைய;  அவதே – அவதி ஞானம்.


The scope of clairvoy-anace is the substance which has a shape (the matter).


அவதிஞானம் உருவமுடைய பொருள்களை அறியும்.

அவதி ஞானம் மூர்த்த வாஸ்துக்களைத் (ரூபிஷு, உருவமுள்ள பொருள்களைத்) தான் அறியும்.

அதாவது ஐம்புலன்களுக்கு தோன்றக்கூடிய வண்ணம், சுவை, ஸ்பர்ஸம், கந்தம் ஆகியவை உள்ள பொருட்களைத்தான் அறிய முடியும்.

உருவமற்ற பொருள்களை அறிவதில்லை எனத்தெரிகிறது.

உருவமுள்ள பொருட்களை அறிவதில் கூட அவற்றின் அனைத்து மாறுகைகளையும் அறியாமல், அதனின் ஆற்றலுக்கு தகுந்தவாறு சில பரியாயங்களையே அறிகிறது.

--------------

That of clairvoyance can extend to all the tangible objects, but relate to some of their modes.

By the term rupi forms of matter and embodied souls are included. It is laid down that the scope of clairvoyance is restricted to matter only and does not extendto  non-material substances.

Even with regard to matter, the range of clairvoyance is limited to certain modes alone according to its potency and does not extend to all modes of matter.

---------- 


ததனந்தபாகே மனப்பர்யயஸ்ய:  -  (28)

तदनन्तभागे मनः पर्यस्य

Tadanantabhage manahparya-yasya


மனப்பர்யயஸ்ய - மனப்பர்யய: ஞானத்தால் அறியமுடியும்;  தத் அனந்த பாகே – (அவதி ஞானத்தால்) அறிந்த பொருளின் மிக நுட்பமான பகுதியை.

The scope of telepathy is the infinitesimal part of the matter, which is the subject of clairvoyance.



சிறந்த அவதிஞானத்தால் (உயர்ந்த ஸர்வாவதி ஞானம்) அறிந்த பொருளின் மிக சிறிய நுட்பமான (அனந்த பாகம்) பகுதியையும் மனப்பர்யய ஞானத்தால் அறிய முடியும்.

மனதில்  சிந்தித்ததை மனப்பர்ய்ய: ஞானம் அறியும். அவ்வாறு அவதி ஞானத்தால் முடியாது.

உருவப் பொருட்களை முற்றிலும் அறிவது ஸர்வாவதி ஞானத்தின் விஷயமாகும். அப்படி அறிந்த பொருளை பல கூறுகளாக்கி அதில் ஒரு பகுதியை அறியும் ஆற்றல் மனப்பர்யய: ஞானத்திற்கு உண்டு.
------------------

Telepathy ascertains the infinitesimal part of the matter ascertained by the highest clairvoyance (sarvavathi)


---------- 




ஸர்வ திரவ்ய பர்யாயேஷு கேவலஸ்ய  - (29)


सर्वद्रव्यपर्यायेषु केवलस्य


Sarvadravya-paryayeshu kevalasya



ஸர்வ-திரவ்ய-பர்யாயேஷு -  எல்லா திரவியங்கள் அவற்றின் எல்லா பர்யாயங்களும்;   கேவலஸ்ய  - கேவல ஞான விஷயம்.

Omniscience (kevala gyan) extends to all substances and all their modes simultaneously.



கேவல ஞானம் எல்லா பொருட்களையும், அவற்றின் மாறுதல்களையும் (பர்யாயங்களையும்) ஒரே சமயத்தில் முழுவதுமாக அறியக் கூடியது.

இந்த ஞானம், ஞானத்தை மறைக்கும் ஞானாவரணீய கர்மம் முற்றிலும் கேடு அடைந்தபின் (க்ஷயம்) உண்டாகக் கூடியது.

மூன்று காலம் பற்றி முன்று லோகம் பற்றி எல்லாம் அறியும்.

உயிர்கள் அனந்தம் இருக்கின்றன. அணு மற்றும் ஸ்கந்த (அணுக்கள் கூட்டம்) ரூபமாக காணப்படும் புற்கலம் அவற்றைக் காட்டிலும் அனந்தானந்த மடங்காகும்.

தர்ம, அதர்ம, ஆகாஸ திரவியங்கள் மூன்றும் மற்றும் காலமும் அஸங்க்யாதம் (எண்ணிலடங்காத) ஆகும்.

இவை அனைத்தையும் கேவல ஞானம் அறிகிறது. கேவல ஞானத்திற்கு எட்டாத திரவியமோ, பர்யாயமோ இல்லை. அதன் பெருமை அளவிடற்கரியது.

-----------
The range of sensory and scriptural knowledge can extend to all the objects, but relate to a few modes. 

That of clairvoyance can extend to all the tangible objects, but relate to some of their modes.

That of mind reading capability can extend only to a small section of tangible objects and relate to only a few modes. 

The scope of omniscience extends to all the objects in all their modes.
--------------


ஏகாதீனி பாஜ்யானி யுகபதேகஸ்மின்னா சதுர்ப்பய:  -(30)


एकादीनि भाज्यानियुगपदेकस्मिन्नाचतुर्भ्यः



Ekadini bhajyani yugapadek-asminnachaturbhyah



ஏகாதீனி – ஒன்று முதல்;  பாஜ்யானி – பிரித்து கூறலாம்; யுகபத் – ஒருசேர; ஏகஸ்மின் – ஒரு ஜீவனிடத்தில்;  ஆசதுர்ப்பய: - நான்கு ஞானம் வரை


A soul possesses minimum one and maximum four kinds of knowledge simultaneously. If soul possesses only one type of knowledge, it is omniscience, if two-these are-sensory and scriptural; if three-these are-sensory, scriptural and clairvoyance or telepathy; and if four-these are-sensory, scriptural, clairvoyance and telepathy.


ஒரு ஜீவனிடத்தில் ஒரே சமயத்தில் ஒன்று முதல் நான்கு ஞானம் வரை பிரித்துக் கூறலாம்.  

ஒரு ஜீவனிடம் ஒரு ஞானம் மட்டும் இருப்பின் கேவல ஞானம் மட்டும் இருக்கும்.

இரண்டு இருப்பின் மதி, சுருதியும்;  மூன்று இருப்பின், மதி, சுருதியுடன் அவதியோ, மனப்பர்யய: ஞானமோ இருக்கும். நான்கு எனின் முதல் நான்கும் இருக்கும்.

ஆனால் ஒரே நேரத்தில் ஐந்து ஞானமும் ஒரு சேர இருக்காது. கேவல ஞானம் எந்த ஒரு ஞானத்தின்  உதவியுடனும் (அஸகாய) இல்லை.

முதல் நான்கு ஞானமும் ஞானாவரண கருமம் கேடு தணிவு(destruction cum subsidence) நிலையில் உள்ள போது ஏற்படும்.

ஆனால் கேவல ஞானம் ஞானாவரண கருமம் கேடு/அழிவு (destruction)  நிலையில் உள்ள போதுதான் ஏற்படும்.

ஒவ்வொரு நிலையிலும் அதனதன் ஆற்றல் தனி விளக்கொளி போல் தோன்றும். ஆனால் கேவல ஞானம் என்ற சூரியன் உதயமானால் அனைத்தின் ஒளியும் இதனுள் அடங்கி விடும்.

ஞானம் என்பது ஒன்று தான். அதனால் அதன் நான்கு பரியாயங்களில் ஒன்றுதான் உபயோகத்தில் இருக்க முடியும். மற்ற ஞானங்கள் ஆற்றல்/சக்தி (லப்தி) வடிவமாக இருப்பில் இருக்க முடியும்.

ஒவ்வொரு நிலையும் ஞானத்தின் நான்கு பர்யாய நிலையே யாகும். ஒரு பர்யாய நிலையின் உபயோகம் ஒரு நேரத்தில் ஒரு அந்தர் முகூர்த்த நேரமே பிரகாசிக்கும்.

(பிறவிச் சுழற்சியில்  உள்ள ஜீவன்களில் கேவல ஞானிகள் நீங்கலாக மற்றவற்றில் மதி, சுருதி இரண்டும் எப்போதும்  இருக்கும்.)

எப்போது இரண்டு ஞானத்தின் மதி, சுருதி பர்யாயங்கள் வெளிப்படுவதற்கான க்ஷயோபசமம் இருக்கிறதோ அப்போது இரண்டு ஞானங்களின் இருப்பு சொல்லப் பட்டிருகிறது.

அதே போல் ஒரு சமயத்தில், ஒரு ஜீவனிடத்தில் நான்கு ஞானங்களின் இருப்பு வரை சொல்லப் படுகிறது.

-------------

When one holds only one type, it has to be Kevalgyan (omniscience), because there is no scope for other types in that state.

Two types relate to Matigyan and Shrutagyan (sensory and  scriptural knowledge). Even the minute beings hold an infinitesimal part of those two types.

Three types relate to either sensory, scriptural and clairvoyance (or mind reading capability.) 

Four types relate to all types except omniscience.

------------- 


மதிச்ருதாவதயோ விபர்யயச்ச  -  (31)


मतिश्रुतावधयो विपर्ययश्च


Matishrutavadhayo viparya-yashcha 




மதிச்ருதாவதயோ – மதி, சுருதி, அவதி ஞானம்; விபர்யயச்ச – மித்யாத்வமாகவும் இருக்கிறது.

Sensory knowledge, scriptural knowledge and clairvoyance can also be erroneous knowledge.


ஐந்து ஞானங்களில் மதி, சுருதி, அவதி அகிய ஞானங்கள் மட்டும் சம்யக் ஞானங்களாகவும்(சுஞானங்களாவும்), குஞானங்களாவும் (மித்யா, false) இருக்கும்.

சுமதி, சுசுருதி, சுஅவதி மற்றும் குமதி, குசுருதி, குஅவதி ஞானங்கள் எனப்படுகிறது. கடைசி மூன்றும் விபாங்க ஞானம், மித்யாதிருஷ்டியிடம் காணப்படுகிறது.

ஆக சம்யக் ஐந்து, மித்யா மூன்று ஆக மொத்தம் எட்டு ஞான உபயோகம் ஆகும்.

சுத்த நீர் எச்சுவையுடன் சேருகிறதோ அதன் ருசிபோல தென்படுவதால் தூய்மையான ஆத்மா மித்யா தரிசனத்தால் இந்த மூன்றும் பொய் ஞானமாக அதாவது குமதி, குசுருதி, குஅவதியாக மாறும்.

அவற்றில்  கீழ்க்கண்ட மித்யாத்வம் இருக்கும்.

ஸம்சயம்:  சந்தேகம் இது மதி, சுருத ஞானங்களில் ஏற்படும் ஆனால் அவதி ஞானத்தில் இருக்காது.

விபர்யயம்: விபரீதமாக அதாவது உண்மைக்கு புறம்பானதாயிருக்கும். இது அவதி ஞானத்திலும் இருக்கும்.

அநந்யவஸாயம்:  இது கவனமின்மை, அஜாக்கிரதை மற்றும் குழப்பத்தினால் ஏற்படும்.

மற்றவை இரண்டும்;  மனப்பர்யய: ஞானமும், கேவல ஞானமும் சம்யக் ஞானங்களேயாகும்.
--------
Sensory knowledge, scriptural knowledge and clairvoyance can also be of misleading types.

That occurs on account of absence of discernment which does not allow making out the difference between the right and the wrong an intoxicated person.

Why these are wrong? It is similar to the milk kept in a bitter gourd.  Now the taste of the milk becomes different on account of the defect of the receptacle in which it is kept.  


-------------- 

ஸதஸதோரவிசேஷாத்யத்ரு ச்சோப லப்தேருன்மத்தவத்  - (32)


सदसतोरविशेषाद्यदृच्छोपलब्धेरुन्मत्तवत्


Sadasatoravishesha-dyadrachchhopala-bdherunmattavat



ஸத் அஸத் – உண்மையானது, மித்யா என்ன? அவிசேஷாத் – யாருக்கு விஷயம் தெரியாது ; யத்ரு ச்சோப லப்தே: - மனம் போன போக்கில் அறிகிறான்;  உன்மத்தவத் – பைத்தியக்காரன் போல.


Owing to lack of discrimination between the real and the unreal, erroneous knowledge is whimsical as that of a lunatic.



உண்மையையும் பொய்யையும் பிரித்து  அறிய முடியாதவர்,  பைத்தியக்காரனைப் போல அவர் மனம் போன போக்கில் அறிகிறான்.  இப்படி அறிவதே மித்யா திருஷ்டிகளுடைய அறிவு  ஆகின்றது.

உண்மையில் எது இருக்கிறதோ அது ஸத்; எது இல்லையோ அது அஸத்.  இவை பற்றிய தெளிவு இல்லாமல் பொருளை அறிவதால், ஞானம் விபரீதமாகி விடுகிறது.

பொய் நம்பிக்கை காரணத்தால், பொருளில் நிறம் முதலிய பண்புகள் இருக்கும் போது இல்லை என்றும், நிறம் இல்லாத போது இருக்கிறது என்று கருதுவது;

பைத்தியக்காரன் தாயை, தாரத்தை பற்றி அறிந்திருந்தும், தெளிவான, நிலையான ஞானம் இருப்பதில்லை. அது போல் மித்யாதிருஷ்டி ஒரு பொருளை நன்கு அறிந்த போதும், தெளிவான, நிலையான ஞானம் இருப்பதில்லை.

ஒரு ஜீவனின் தவறான மனோபாவம் (attitude) மூன்று விதமான தவறுகளை (விபர்யம்) ஏற்படுத்துகிறது.

விபர்பயம் இருவகையில் ஏற்படும் தனக்குத்தானே ஏற்படுத்திக் கொள்ளுதல் (சஹஜ); மற்றொன்று பிறரால் தவறாக உணர்த்தப்பட்டது. (அதாவது செவிவழி வந்த தவறான  சுருத ஞானமாகும்)(ஆஹார்ய)

தவறுகள், (விபர்யம்) முன்று வகைகள் அதாவது  காரணம், பேதாபேதம், ஸ்வரூபம் ஆகும்.

காரண விபர்யம்: காரணத்தை பொருத்த தவறுகள் வரையில் சிலர் உருவம் முதலியன எது  அமூர்த்தமாயும், நித்தியமாயும் இருக்கிறதோ அது ஒரு காரணம் என்கின்றனர்.
                                                                    
ஆன்மாவில் ஏற்படும் கஷாயங்களை, புத்கலத்தினால் ஏற்படுவதாக தவறாக நினைத்தல்.

பேதாபேத விபர்யம்: காரணத்தையும், காரியத்தையும்  தலைகீழாக அறிதல். பிரித்து அறிய வேண்டியதை சேர்த்தும், சேர்த்து அறியவேண்டியதை பிரித்தும் அறிதல். பண்புகள் பொருட்களிலிருந்து வேறுபட்டதாக கூறுதல்.

ஸ்வரூப விபர்பயம்: ஒரு பொருளின் இயல்புக்கு மாறாக பேசுதல். நிறம் உள்ளது பொருள் என்பதை ஏற்காமல் வேறு விதமாக சொல்லுதல்.
-------------
From lack of discrimination of the real, and the unreal (the soul with wrong knowledge) like a lunatic, knows things according to his own whims.

------------------ 



நைகம ஸங்கிரஹ வ்யவஹாரர் ஜுஸுத்ர சப்தஸமபி ரூடைவம்பூதா நயா: - (33)


नैगमसंग्रहव्यवहारर्जु सूत्रशब्द समभिरूढैवंभूता नयाः


Naigama-sangraha-vyavahararju- sutra-shabda



நைகம ஸங்கிரஹ வ்யவஹாரர்ஜுஸுத்ர சப்தஸமபிரூடைவம்பூதாநயா:
நைகமம், ஸங்கிரஹம், வியவஹாரம், ருஜுஸுத்திரம், சப்தம், ஸ்மபிரூடம், ஏவம்பூதம் என ஏழு வகை  நயங்கள் இருக்கின்றன.


samabhiru-dhaivambhuta nayah The figurative, the synthetic, the analytic, the  straight, the verbalistic, the conventional and the specific are the aspects of knowledge (naya).


ஏழு நயத்தால் பதார்த்த ஞானம் புலப்படும். (முன்னே பிரயக்க்ஷ பிரமாணம், பரோஷ பிரமாணம் எனச் சொல்லப்பட்டது.)

நயம் பற்றி இந்த ஸூத்திரத்தில் விளக்குகிறார்.

நயம் இரண்டு வகையாகும். அவை திரவியார்த்திக நயம்; பர்யாயார்த்திக நயம் என்பன.

திரவியார்த்திக நயம் பொருட்களின் பொது குணங்களையும் (general attributes) , திரவியம் என்ற சொல்லுக்கு general/common; a general rule; conformity அதாவது பொது, உத்ஸர்கம் மற்றும் அனுரீதி என்பது  பொருளாகும்.

பர்யாயார்த்திக நயம் என்பது பொருள்களில் காணப்படும் மாறும் தன்மைகளைப் பற்றி பேசப்படுவது. பர்யாய என்ற சொல்லுக்கு சிறப்பு/ விசேஷம்; அபவாதம்/விதிவிலக்கு (exception); வியாவ்ருத்தி (exclusion) என பொருள் படும்.

ஒரு பொருளின் பல பண்புகளில் ஒன்றை மட்டும் எடுத்துக் கொண்டு, குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவற்றையும் மற்றும் ஏற்படும் மாறுகைகளையும் கூறுவது பர்யாயார்த்திக நயம் ஆகும்.

இவ்விரு நயங்களின் வரையறைகள் (definitions) சிறப்பாக விளக்கப்படுகின்றன.

நைகம நயம்: (figurative stand point) பூர்த்தியாகாத ஒரு செயலை கற்பனையால் அறிதல் அல்லது உற்பத்தியாக ஒரு செயலை நோக்கத்தை அதாரமாக கொண்டு உற்பத்தி ஆனது போல் பேசுவது ஆகும்.

மஹாவீர் இன்று மோக்ஷமடைந்தார் என்று தீபாவளியன்று கூறுவது. அது என்றைக்கோ நடந்த நிகழ்வு, அதனை தற்போது நடப்பது போல் கூறுவது / அதனை புரிந்து கொள்ள வகை செய்தல்.

Online ல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தவுடன், டெல்லி செல்கிறேன் என்று சொல்வது: விறகு, நீர் எடுத்து வரச் செல்லும் ஒரு பெண்ணிடம் என்ன செய்கிறாய் என்று கேட்டால், சமையல் செய்யப் போகிறேன் என பதிலளிப்பது போன்றவற்றை நாம் புரிந்து கொள்கிறோம்.

நடக்காத ஒரு செயலை கூறுவதை; கேட்பவர், கூறிய கருத்தை புரிந்து கொள்ளுதல்.

இப்படியே கால பேதங்கள் மறைக்கப்பட்டு எல்லாவற்றையும் நிகழ் காலத்தில் நடப்பதாகப் பேசுதல் நைகம நயம்  எனப்படும்.

ஸங்கிரஹ நயம்: (synthetic stand point) தன்னைச் சார்ந்த பொருட்களைப் புறக்கணிக்காது, அப்பொருளின் ஒரு உட்பிரிவை மட்டும் கூறும் போது மற்ற எல்லா பிரிவுகளும், பண்புகளும், பரியாயங்களும் பொருட்களும் ஏற்கப்படுகிறதோ அது ஸங்கிரஹ நயம் ஆகும்.

திரவியம் எனும் போது ஆறு திரவியங்களைக் குறிப்பதாகும். மனிதர்கள் எனும் போது ஆண், பெண் பேதமில்லை; விலங்கு எனும் போது ஆடு,மாடு, புலி,சிங்கம் அனைத்தும் சேர்க்கப்படுகிறது; ஜீவன்  என்று சொன்னால் உலகிலுள்ள அனைத்து ஜீவ ராசிகளும் அடங்கும்.

இப்படி சேர்க்கும் போது பொருளின் இயல்புத்தன்மைக்கு எதிராக இருக்கக் கூடாது. ஒரு பொதுவான ஆதாரம் இருக்க வேண்டும், இந்த ஆதாரம் எல்லா பொருள்களிலும் இருக்க வேண்டும். அதனை ஸங்கிரஹ நயம் எனலாம்.

வியவஹார நயம்: (analytic stand point) சங்கிரஹ நயத்தின் மூலம் ஏற்ற பொருள்களை முறைப்படி/விதிப்படி; அதாவது எந்த சங்கிரஹ நயத்தின் மூலம் ஒரு பொருளின் ஆதாரத் தன்மையினைக் கொண்டு சேர்க்கப்பட்டதோ அந்த ஆதாரத்தினை மேலும் பிரித்து பிரித்து பேசுவது வியவஹார நாயமாகும்.

திரவியம் என்பது ஒரு பொதுச் சொல். உயிர் என்பதை சுத்தாத்மா மற்றும் ஸம்சார ஜீவன் என்றும் அறிகிறோம்.

முதல் மூன்று நயங்களும் திரவியார்த்திக நயமாகும். மற்ற நான்கும் பர்யாயார்த்திக நயங்களாகும்.

ருஜுசூத்ர நயம்: (straight or direct view point) கடந்த கால பர்யாயங்களையும், எதிர்கால பர்யாயங்களையும் விடுத்து, நிகழ்கால பர்யாயங்களை மட்டுமே அறிதல்.

ஒருவன் தர்மம் செய்யும் போது பார்த்தால் உடனே அவனை தர்மப் பிரபு என்றும்,  பரோபகாரி என்றும் குறிப்பிடுதல். 

அவன் கடந்த காலத்தில் தர்மம் செய்தானா, எதிர் காலத்தில் செய்வானா என்று கவனிப்பதில்லை.
                               
கடந்த காலத்தைப் பற்றிப் பேசுவதில் பயனில்லை. அது போல் எதிர்காலத்தில் வருவதைப் பற்றி பேசியும் பயன் ஏதும் இல்லை. நிகழ்காலம் என்பது தற்போதைய பர்யாயமாகும். அடுத்த சமயம் வருவது வேறொரு பரியாயம் ஆகும்.

இவ்வாறு ஸ்தூல பர்யாயத்தைப் பற்றி பேசுவது ருஜு ஸுத்ர நயமாகும்.

சப்த நயம்: (verbal view point) Gender/ பால் (லிங்கம்) முதலானவற்றைப் பார்ப்பது ஆண்பால்(புருஷ லிங்கம்), பெண்பால் (ஸ்திரி லிங்கம்), அலிப்பால் (நபும்ஸக லிங்கம்) அவ்வகையில் பார்ப்பது ஸப்த நயம்.

ஒரு தவறான பதப்பிரயோகம்; அதாவது இறந்த காலத்திற்கு பதிலாக நிகழ்காலமாக பேசுதல். ஒருமைக்கு பதிலாக பன்மை முதலிய வற்றை உபயோகித்தல்.

அதாவது  சப்தம் தவறாக இருந்தாலும் பொருளை உணர்தல் ஸப்த நயம் ஆகும்.

ஸ்பத நயம் என்பது லிங்கம்/பால், சங்க்யா (ஒருமை, பன்மை) மற்றும் வேற்றுமை உருபு முதலியவைகளால் ஏற்படும் பிழைகளை (irregularities) கருத்தில் கொள்ளாமல் பொருள் உணர்ந்து கூறுவதாகும்.

ஸமபிருட நயம்: (conventional view point) சிறப்புச் சுட்டு. ஒரு வார்த்தை பொதுவானதாக யிருந்தும் குறிப்பினால் அது ஏதோ ஒன்றைச் சுட்டுதல்.

ஒருவரை துரை என்பது அவரது மேல் நாட்டு நாகரீகத்தை  சுட்டிக்காட்டும்.

மஹாராட்டிர மன்னன் சிவாஜியானாலும் சினிமா உலகில் சிவாஜி என்பது நடிகர் திலகத்தைதான்  குறிக்கும்.

மேலும் gau (கெள) என்ற வார்த்தை சமஸ்கிரதத்தில் நீர், வாக்கு, பூமி, பசு, திக்கு, அம்பு போன்று பல அர்த்தங்கள் இருந்தாலும் வழக்கில் (ருடியால்) பசு என்று பொருள் கொள்வதைப் போல் ஆகும்.

ஏவாம் பூத நயம்: (actual stand point)   எவர்  எந்த  வேலையைச் செய்கிறாரோ அப்பொழுது அந்த வேலையைச் சார்ந்து அவருக்கு பெயர் வைப்பது.

சொல் வேறாகவும், பொருள் வேறாகவும்  இருக்க முடியாது.

இந்திரன் வைபவங்களுக்கு அதிபதியாக இருக்கும் போது தான் இந்திரன். மற்றபடி பூஜைகள் செய்யும் போது தேவனாகத்தான் கொள்ள வேண்டும்.

வக்கீல் தொழில் செய்யும் நேரத்தில் மட்டும் வக்கிலாகவும், சிம்மாசனத்தில் அமரும் போது அரசனாகவும், நோயாளிக்கு வைத்தியம் பார்க்கிறாரோ அப்போது மட்டும் டாக்டர் அது போல.

செயலில் ஈடுபடும் போது மட்டும் ஏவம் புத நயம்.

மூன்று கால்கள் இருப்பதால் முக்காலி என்றும், நான்கு கால்கள் இருப்பதால் நாற்காலி என்றும் இருப்பதைப் போல. இவை ஏவம்பூத நயத்தை சேர்ந்தது.

---------
நயங்கள் ஒன்றை ஒன்று சார்ந்து இருப்பதால் அடுத்தடுத்து உள்ளன.
அந்நயங்களை ஒத்துப் பார்த்து ஆகம  அறிவைப் பெற வேண்டும்.

நூல், தறி, நெய்பவரின் உழைப்பு இவையெல்லாம் சேர்ந்துதான் துணியாகிறது. அது போல் நயங்கள் அனைத்தும்  சேர்ந்து இருந்தால்  தான் பயன் கிடைக்கும்.

வெறும்  நூல் மட்டும் துணியாவதில்லை. துணியாக்குகிற புத்தியும், செயலும் தான் துணியாகிறது.

ஒன்றை ஒன்று இணைத்து ஒத்து பார்ப்பது நல்நம்பிக்கை யடைவதற்கான காரணமாகிறது.

------------  


இத்துடன் முதல் அத்தியாயம் நிறைவு பெற்றது.


-------------------- 


மங்களாஷ்டகம்:


கோடி சதம் த்வாதஸம் சைவ கோட்யோ லக்ஷாண்யஷீதிஸ்த்ரயதிகாணி சைவ
பஞ்சாஸதஷ்டெள ச ஸஹஸ்ர ஸங்க்யாமேதத் ஸ்ருதம் பஞ்ச பதம் ணமாமி
 அரஹந்த ப்பாஸியத்தம் கணயர தேவேஹிம் கந்தியம் ஸவ்வம்
பணமாமி பக்தி ஜுத்தோ சுதணான மஹோவயம் ஸிரஸா


அக்ஷரமாத்ரபத ஸ்வரஹீனம் வயஞ்ஜன ஸந்தி விவர்ஜிதரேஃபம்
ஸாது பிரத்ர மம க்ஷமிதவ்யம் கோ ந விமுஹ்யதி ஸாஸ்த்ர ஸமுத்ரே


தஸாத்த்யாயே பரிச்சன்னே தத்த்வார்த்தே படிதே ஸதி ஃபலம் ஸ்யாதுபவாஸஸ்யப்பாஷிதம் முனிபுங்கவை:


ததத்வார்த்த ஸுத்ர கர்த்தாரம் க்ருத்த் பிச்சோபலக்ஷிதம்
வந்தே கணீந்த்ர ஸஞ்சாதமுமாஸ்வாமி முனீஸ்வரம்


ஜம் ஸக்கயி தம் கீரயி ஜம்ண ஸக்கயி தஹேவ ஸத்தஹணம்
ஸத்தஹணமாணோ ஜீவோ பாவயி அஜராமரம் ட்டாணம்


தவயரணம் வயதரணம் ஸஞ்சம சரணம் ச ஜீவதயாகரணம்



அந்தே ஸமாஹிமரணம் சஉவிஹ துக்கம் ணிவாரேஇ

--------------------------

No comments:

Post a Comment