TEMPLE DISCIPLINE


ஜிநாலயத்தில் செய்ய வேண்டியவை


        காலை நீராடிய பின்னர் நெற்றி, இருகரங்கள், மார்பு இவற்றில் சந்தனமிட்டு, தூய்மையான ஆடையை உடுத்திக் டிகாண்டு, தூய அரிசி முதலான அருச்சனைப் பொருட்களை (சக்திக்கேற்றவாறு) கையிலேந்தி மனம், சொல், உடல் தூய்மையுடன் ஆலயம் செல்லவேண்டும்ஜினாலய வாயிற்படி அருகே, ஜினேஸ்வரனை ழிபட ழி ஆகுக எனப் பணிந்து கூறி நுழைந்து, மானத்ஸ்தம்பத்தை நோக்கிச் சிரம்தாழ்த்தி  வணங்க வேண்டும்நான்கு திக்குகளிலும் மும்மூன்று ஆவர்த்தனைகளுடன் (இருகரங்களையும் கூப்பி மூன்று தரம் வலமுறையாக சுற்றுதல் ஆவர்த்தனையாகும்) ஜினாலயத்தை மூன்று மூறை வலம் (பிறப்பு, மூப்பு, இறப்பு ஆகிய முன்றினை ழித்து பிறவாநிலை அடைதலைக்குறிக்க வரவேண்டும். ஜி பிம்பத்தின் வலப்பக்கமாக நின்று. துதிபாடி, சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து பணியவேண்டும்ஜினரின் முன் விளக்கேற்றி, நறுமணப்புகையை வைக்க வேண்டும். முழு அரிசி மணிகளை ழுவி எடுத்துக் கொண்டு, பகவந்தனின் முன்னர் ஒரு மனைப் பலகையின் மீதோ அல்லது தட்டிலோ அருகர், சித்தர், ஆசாரியர், உபாத்தியாயர், சர்வசாதுக்கள் என ஓதியவாறெ புஞ்சம் வைக்க வேண்டும். இதனை மையத்தில் ஒரு குவியல் வைத்து- அருகர்- அதற்கு மேல்புறம் சித்தர்-வலப்புறம் ஆசாரியர் - இடப்புறம் உபாத்தியாயர் - கீழ்;புறம் - சர்வசாதுக்கள் என வைக்க வேண்டும். மலரோ, பழமோ, ஏலம், இலவங்கம் போன்ற போருட்கள் கிடைத்தால் அவற்றையும் பகவானுக்கு முன்னர் வைத்து வணங்கலாம். இவ்வாறு வணங்கும் போது பஞ்ச பரமேட்டிகளின் பண்புகளை நினைவில் இருத்த வேண்டும்இல்லையெனில் நாம் செய்யும் அனைத்தும் வெற்றுச் சடங்குகளாகவே ஆகும் என்பது தெளிவான ஒன்றாகும். பகவந்தனை வணங்கிய பின்னர் எதிர்முகமாகவே நாம் வெளிவரவேண்டும், நம் பின்புறத்தை காட்டுதல் ஆகாது.

        அஷ்டவிதார்ச்சனை: எண்வகைப் போற்றல் என்பதும் இதுவே. இது அருகனைப் போல தாம் தெய்வீகத் தன்மையை யடைய வேண்டி உறுதியான மனத்துடன், வைராக்கிய பாவனையால் எண்வகைப் பொருட்களால் செய்யப்படுவது. எண்வகைப் பொருட்களும் அர்த்தம் உடையனவாம்.

1       தூயநீர் (ஜலம்) - வினை மாசுபோக்குதற்கு
2       சந்தனம் - பிறவித்தாபம் போக்குவதற்கு
3    அட்சதை (முழு அரிசி மணிகள்) ழியா முக்திப் பேற்றிற்கு
 மலர் - காமனை வெல்லுதற்கு
5     சரு (நைவேத்தியம் உண்ணாமை, குறைவான அளவு
      உணவேற்றல் முதலிய விரதங்களால் பசிவேட்கை
      யைப் போக்குதற்கு
6       தீபம் - கேவலஞானம் பெறுவதற்கு
7       தூபம் - வினைகளை எரித்தற்கு
8       பலம் மோட்ச பலம் பெறுதற்கு அறிகுறிகளாகச் செய்யப்படுவதாகும்.


இவை கடவுள் முன்னர் தாரை வார்த்து அர்ப்பணிக்கப்படுதலால் நிர்மாலியப் பொருட்கள் எனப்படும். இவற்றை எவரும் உபயொகிக்கக் கூடாது. (திருவிழா எடுப்பது பகவான் ஸ்ரீவிகாரம் செய்து தனது திவ்யத் தொனியால் அறமாமழை பொழிந்ததைக் குறிப்பிடவேயாகும்).

        இவ்வாறு ஒவ்வொருவரும் அருகப் பெருமானை முன்வழிகாட்டியாகக் கொண்டு தன்னுடைய ஆன்மன் உயரிய நிலையை அடைய - இயற்கைத் தன்மையடைய முயலவேண்டும்.


ஜினாலயத்தில் செய்யக்கூடாதன:

ஜிpனாலயத்தில் எக்காலத்திலும், எக்காரணத்தை முன்னிட்டும் சிரித்து விளையாடவோ, சேட்டைகள் செய்யவோ, அறமல்லாப் பிற கதைகளைப் பேசுவதோ, தூங்கவோ பொருட்களை உண்ணுதலோ கண்டிப்பாகச் செய்தல் கூடாது.

                                               

நன்றி:  ஜைனம் ஓர் அறிமுகம்

No comments:

Post a Comment