தமிழகத்தில் சமணம்



சமணம் தமிழகத்தில் வேரூன்றிய காலம்.



எல்லா ஆராய்ச்சிகளும் பல ஹேஷ்யங்கள், ஒரு சில சான்றுகள் அடிப்படையில்  தான் துவங்குகின்றன.


சமணம் பரதம் முழுவதுமாக பரவி இருந்த ஒன்று, என நமது புராணங்கள் வாயிலாக தெரிந்து கொண்டோம். அப் பரதன் ஆளுமைக்கு உட்பட்டதுதான் இந்த தமிழகமும். அதனால் சமணர்கள் தென் கோடியிலும் இருந்திருப்பார்கள் என்பது உறுதி.


ஆனால் அதில் சில பகுதியில் வாழ்ந்த மன்னர்கள் முழுவதுமாக தழுவியதாலும், அஹிம்சைக்கு மிக்க ஊறு ஏற்பட்ட இடங்களில் மட்டும் தீர்த்தங்கரர்களும், ஆச்சார்யர்களும், முனி சங்கங்களும் தீவிரமாக இருந்துள்ளனர் என்பதை சமண வரலாற்றிலிருந்து தெரிந்து கொள்ள முடிந்தது.


அவ்வாறு சமண தீர்க்க தரிசியான ஸ்ரீ மகாவீரர் அப்பகுதியில் மட்டும் தங்கி அஹிம்சையை வலியுறுத்த வேண்டிய கட்டாயம் இருந்தது. அவர் காலம் முழுதும் அங்கேயே கழிந்து விட்டது. இல்லாவிடில் அவரும் முனி சங்கத்துடன் இப்பகுதி நோக்கிய தேச விஜயத்தில் முற்பட்டிருப்பார்.


அவர் காலத்தில் நான்கு  விதமான கொள்கைகள் மனிதர்களை குழப்பிக் கொண்டிருந்தது.


அதாவது ஒரு தனிமனிதன் தனது  நல்ல/தீய செயல்களுக்கு பொறுப்பேற்க வேண்டும் என கிர்யாவாதிகள், நல்லது/கெட்டது என எந்த வேறுபாடுகளுக்கும் மனிதன் பொறுப்பில்லை என்ற அக்கிரியாவாதிகள், சத்தியத்தை  அறிய முடியாது என்ற அஞ்ஞானவாதிகள், சத்தியத்தை பகுப்பாய்வு செய்ய முடியாது என்ற  வினய வாதிகளும் இருந்ததால் அஹிம்சை செயலற்று; சர்ச்சைகளும், சண்டைகளும், இன மத காழ்ப்புணர்ச்சிகளும் நிறைந்திருந்ததால், மிருக பலியை தடுத்து நிறுத்தவும் அப்பகுதியின்  செய்திகள் சமண வரலாறாக நம்மிடையே பேசப்படுகின்றன.

அது போன்ற நிலை தென்பகுதியில் உக்கிரமாக அப்போதும் (இப்போதும் தமிழ் பேசுபவர்களிடம்) இல்லை. அதனால் ஆன்மீய மறுமலர்ச்சிகள், புரட்சிகள் தோன்றும் சூழல் இங்கு இல்லை. ஆதலால் இப்பகுதியின் சமண நிகழ்வுகள் வரலாற்றில் இடம் பெற வில்லை.


எப்படியெனில் மகாவீரர் காலத்தில் தென்பகுதி சமணர்களைப் பற்றியும், பிற நிகழ்வுகளின் சரித்திரங்கள் ஏதும் கிடைக்கப்பெற வில்லை.


சமணக் கூட்டம் சந்திரகுப்தர் காலத்தில் கன்னட நாட்டில் தங்கினர். அப்போது வடமாநில சமண ஒழுக்கங்கள், விரதங்கள் போன்றவற்றின் தாக்கங்கள் இப்பகுதியில் ஏற்பட்டிருக்குமே ஒழிய, இங்கு அவர்கள் வந்த பின் தான் சமண சமயமே பரவியது என்பதை ஏற்றுக் கொள்ளமுடியாது.


மதுரைக்கு வடகிழக்கில் 20 கி.மீ. தொலைவில் உள்ள மாங்குளம்  என்ற சிற்றூருக்கு அருகில் மீனாட்சிபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ஓவாமலை (கழுகுமலை என்றும்) அமைந்துள்ளது. அதிலுள்ள கல்வெட்டு ஒன்றை 1882 ம் ஆண்டு ராபர்ட்சீவல் என்ற ஆங்கிலேயர் கண்டறிந்தார்.  அதில் உள்ள தமிழ் பிராமி கல்வெட்டுகளில் இவையே காலத்தால் மிகவும் தொன்மை வாய்ந்தது. ஏனெனில் கி.மூ மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்தது.


அதாவது அவை சமஸ்கிரதத்தில் எழுதப்பட வில்லை. தமிழீ என்ற தமிழ் பிராமி கல்வெட்டில் எழுதப்பட்டது. ஹிந்தி, சமஸ்கிரத பிராமி என்றெல்லாம் இருப்பதாக இதுவரை தெரியவில்லை. தமிழ் சமணர்கள் தான் பிராமி (ஸ்ரீஅதிநாதரின் மகள்) என்ற எழுத்தினை அதற்கு முன்னர் எழுதி இருக்க வேண்டும். அவ்வெழுத்தையே கல்வெட்டில் பயனபடுத்தி இருக்க வேண்டும் என்பது உறுதியாகிறது.


எந்த ஒரு சமய புரட்சியுமே அதன் கருத்துக்கள் ஏற்கபடாத இடத்தில் தான் தீவிரம் அடைந்திருக்க முடியும்.


அவ்வழியே நோக்கின் சமணம் சார்ந்த தமிழகத்தில் அக்காலகட்டத்தில் தேவைப் படவில்லை. பின்னர் மாற்றங்கள் தழுவிய நிலை ஏற்பட்ட போது அங்கு நடந்த சரித்திரத்தையே இங்கு தமிழில் வெளியிட முற்பட்டிருப்பர். அது போல் நிலை இங்கு ஏற்படாமல் தடுக்கவே பல சமண உத்தமர்களின்  புராணங்கள்  இயற்றப்பட்டிருக்க வேண்டும்.


மேலும் தமிழுக்காக ஆற்றிய தொண்டுகள் அளவிடற்கரியதாக இருந்துள்ளது. அவை அனைத்தும் தனிமனிதனை, இங்குள்ள அரசனை புகழ்ந்தும் இல்லை என்பதிலிருந்தே, வேறு மாநிலத்திலிருந்து இங்கு வந்தவர்கள் ஆக்கியது என்பதும் பொருந்தாதவையாக உள்ளது.


அவ்வாறு வேற்று நாட்டவர்கள் தேவன் புகழை மட்டுமே புகழ்பவர்களாக இருந்திருக்க வாய்ப்பில்லை. இங்குள்ளவர்களின் அனுசரிப்பே அவர்களுக்கு ஸ்திரத்தன்மையை அளிக்கும் என்பதை இக்காலத்திலும் காணலாம்.


அதனால் சமணம் என்ற கொள்கை பாரத தேசத்தில் தோன்றியதிலிருந்தே தமிழகத்தில் சமணம் இருந்திருக்க வேண்டும்.


No comments:

Post a Comment