SAPTHABANGI - சப்தபங்கி


சப்தபங்கியைப் பற்றி  தினமணியில் வந்த வெளியீடு. 



அதன் முக்கியத்தை  இன்றளவும் இவ்வுலகம் ஏற்றுக் கொண்டுள்ளது. 


ஹால்டேனும் ராமச்சந்திரனும் ஜைன நியாயமும்



Author: அரவிந்தன் நீலகண்டன்


சோவியத் யூனியன் என்கிற அமைப்பின் அத்தனை கொடுமைகளுக்கும் அப்பால்அதில் இருந்து இந்தியா போன்ற

சோவியத் யூனியன் என்கிற அமைப்பின் அத்தனை கொடுமைகளுக்கும் அப்பால்அதில் இருந்து இந்தியா போன்ற மூன்றாம் உலக’ நாடுகளுக்கு ஒரு நன்மை கிடைத்தது என்றால்அது அவர்கள் இந்தியாவில் விற்ற பிரசுரங்கள். பிரசாரத்துக்காகத்தான். ஆனால் பிரசாரத்தை தாண்டி சில நல்ல அறிவியல் நூல்களும் மிகக் குறைவான விலையில் மாணவர்கள் கைகளில் வந்து கிடைத்தன.

பேராசிரியர் யாகோவ் குர்கின் (Yakov Khurgin), கணிதம் குறித்து எழுதிய நூல்கள்அவற்றில் சுவாரசியமானவை. எப்படி ஏனைய’ மக்களுக்கு எளிய விதத்தில் கணிதக் கோட்பாடுகளை அறிமுகப்படுத்தலாம் என்பதற்கான நல்ல செய்முறை விளக்கம் அவரது நூல்கள். மிர் பதிப்பகத்தாரின் அனைவருக்கும் அறிவியல்’ என்கிற பிரிவில் வெளியிடப்பட்ட அவரது நூல்களில் ஒன்று, ‘Yes, No or Maybe’.

ஆம்’, ‘இல்லை’ என்பதை தாண்டி, ‘இருக்கலாம்’, ‘இருக்கக்கூடும்’ என்பதாக ஒரு நிலை. இதை புள்ளியியல் (statistics), நிகழ்தகவு (probability) ஆகியவை சார்ந்துபல துறைகளில் உள்ள நிகழ்வுகளுடன் பொருத்தி சுவாரசியமாக சொல்லியிருப்பார் குர்கின். ஆனால் இந்தக் கட்டுரை குர்கின் குறித்ததோ அவர் நூல் குறித்ததோ இல்லை.

இருக்கலாம்’, ’இருக்கக்கூடும்’ என்பதன் அடிப்படையில்ஒரு அறிவியல் புலம் இன்று உருவாகியுள்ளதைப்போல்அதே அடிப்படையில் பண்டைய ஜைன ஞானிகள் ஒரு தர்க்க-தரிசன அமைப்பையே  உருவாக்கியிருக்கிறார்கள். அதற்கு, ‘சியாத்வாதம்’ என்று பெயர். இதுஅநேகாந்தவாதம் என்கிற இன்னும் விரிவான ஜைன தத்துவத்தின் ஒரு பகுதி.

அது என்ன அநேகாந்தவாதம்எந்த ஒரு விஷயத்தையும் ஒற்றைப் பார்வையாக பார்த்துவிட முடியாது என்பதுதான் அதன் சாரம். எந்த ஒரு பொருளுக்கும்ஒவ்வொன்றுக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட சார்புலம் (context) இருக்கிறது. அதில் பார்க்கும்போதுஒரு பொருளின் ஒரு தன்மை இருக்கவும் செய்யலாம்இல்லாமலும் இருக்கலாம். ஆனால்ஒரு பொருள் குறித்து ஒரே ஒரு பார்வைதான் சரி என்று முடிவு கட்டுவது தவறு. அதாவதுஏகாந்தவாதம் குறுகியது. (ஒன்றை மட்டுமே பார்ப்பது). எனவேமுழுமையான அறிதலை நோக்கி செலுத்துவது அநேகாந்தவாதம்.

சில அறிதல் முறைகள்தன்னியல்பிலேயே ஒற்றைப் பார்வையை நோக்கிச் செல்பவை. உதாரணமாகநியூட்டானிய பார்வை. எதையும் பகுத்தாயும் தன்மை. அன்றைக்கு அதுமட்டும்தான் அறிவியலின் ஒரே பார்வையாகவும்அறிவியல்தான் உண்மையை அறிய ஒரே புலமாகவும் கருதப்பட்டது. மேற்கின் நிறுவன அறிவியல்இந்த அடிப்படையில்தான் எழும்பியது. அப்போது அதை தவறென கூறும் குரல்கலையிலிருந்து எழுந்தது.

வில்லியம் பிளேக் எழுதினார் - May God us keep From Single vision and Newton's sleepபிளேக்குக்கு அநேகாந்தவாதம் குறித்து எதுவும் தெரியாது. ஆனால்அவருக்கு தன் கலையின் மூலமாக ஒற்றைப் பார்வையின் குறுகிய தன்மை நல்லதல்ல என்பது மட்டும் தெரிந்திருந்தது.

கிறிஸ்து சகாப்தம் என்கிற பொது காலகட்டத்துக்கு சில நூற்றாண்டுகள் முன் வாழ்ந்தவர்பத்ரபாகு எனும் ஜைன ஞானி. இவர்சந்திரகுப்த மௌரியரின் சமகாலத்தவர் எனக் கருதப்படுகிறார். சியாத்வாதம் குறித்து முதன்முதலில் கூறியவர் இவர்தான்.


இன்றைக்கு, truth-table என்று Boolean algebra-ல் பேசுகிறோமேஅதைப்போன்ற ஒரு சமாசாரத்துக்கான அடிப்படையை இவர் உருவாக்கினார். ஆனால்உண்மை / பொய்உண்டு / இல்லை என இருமைத்தன்மையுடன் அல்ல. ஏழு தன்மைகளுடன் - இவை அனைத்துடனும் இருக்கலாம்’ என்கிற தன்மையை சேர்த்துக்கொண்டார்.

ஆகவேஒரு விஷயம் 1) இருக்கலாம், 2) இல்லாமல் இருக்கலாம், 3) இருத்தலும் இல்லாமல் இருத்தலுமாக இருக்கலாம், 4) விளக்கப்படாத தன்மை கொண்டிருக்கலாம் (அவக்தவ்ய:), 5) விளக்கப்படாத தன்மையுடனான இருத்தலாக இருக்கலாம், 6) விளக்கப்படாத தன்மையுடனான இருப்பின்மையாக இருக்கலாம்,  7) விளக்கப்படாத தன்மையுடன் இருத்தலும்இருத்தலின்மையுமாக இருக்கலாம்.

இப்படிஏழு தன்மைகளில் ஒரு விஷயம் இருக்க முடியும். இதை சப்தபங்கி’ என சொல்கிறார்கள். இது சியாத்வாதத்தில் இருந்து எழுவது. சியாத்வாதம் என்பது ஏற்கெனவே நாம் பார்த்ததுபோல்அநேகாந்தவாதத்தின் ஒரு பகுதி. ஜைன தர்க்க உலகின் ஒரு முக்கிய இதயகதியாக சப்தபங்கியை நாம் காணலாம். ஆயிரமாயிரம் ஆண்டுகள் கடந்துஇன்றைக்கும் இது கணிதவியலாளர்களையும் உயிரியலாளர்களையும் ஈர்க்கிறது.

இங்கிலாந்தின் முன்னணி உயிரியலாளர் JBS.ஹால்டேன்டார்வினியர். கணிதவியலாளரும்கூட. மார்க்ஸிஸ்ட். அவர்விலங்குகள் ஒரு குறிப்பிட்ட தூண்டுதலுக்கு உள்ளாகும்போது எப்படி எதிர்வினையாற்றுகின்றன என்பதை அறிந்திடகணித model ஒன்றை வடிவமைக்கிறார். அப்போதுபாவ்லோவின் பரிசோதனைகள் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. ஹால்டேன்பின்னர் பல ஏமாற்றங்களை அடைந்தார். இந்தியாவில் வந்து குடியேறினார். அப்போதுஇந்தியப் புள்ளியியலின் பிதாமகரான மகாலனாபிஸ் மூலமாகசியாத்வாதம் குறித்து அறிகிறார். அது அவருக்கு ஆச்சரியம் ஏற்படுத்துகிறது.


ஹால்டேன் எழுதுகிறார் 

நவீன அறிவியக்க சாதனைகள் அனைத்தையும் ஏற்கெனவே எதிர்நோக்கும் ஞானம் பண்டைய தத்துவஞானிகளுக்கு இருந்தது என கருதுவது முட்டாள்தனமானது. அந்தத் தத்துவஞானிகளின் நினைவுக்கு நாம் செய்யும் சிறந்த அஞ்சலிஅவர்களின் தத்துவங்களுக்கு பாஷ்யம் எழுதுவதைக் காட்டிலும்நாம் சுயமாக சிந்திப்பதுதான் என்று நம்புகிறவன் நான். ஆனால் அப்படி செயல்படும்போதுநம் அறிதல் அவர்களின் சிந்தனைக்கு இணையாக இருக்கும்பட்சத்தில்அதை சுட்டிக்காட்டுவது நம் கடமையாகும்.

நான் என் ஆய்வுத்தாளை எழுதும்போதுபத்ரபாகு என்று ஒருவர் இருந்தார் என்பதுகூட எனக்குத் தெரியாது. ஆனால்அவர் வந்தடைந்த அதே முடிவுகளை நான் வந்தடைந்திருக்கிறேன். இது பல பரிமாணங்கள் கொண்ட சத்தியத்தின் ஒரு குறிப்பிட்ட முகத்தை நாங்கள் இருவரும் தரிசித்திருக்கலாம் என்பதைக் காட்டுகிறது.  ஆனால்அதை வந்தடைய நாங்கள் பயன்படுத்திய பாதைகள் நிச்சயமாக வேறு வேறானவைதான். பத்ரபாகுஅதனை தியானத்தின் மூலம் வந்தடைந்தார். பரிசோதனைசாலைகளில் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளின் முடிவுகளை பகுத்தாய்வதன் மூலம் நான் அங்கு வந்தடைந்தேன்.

பொதுவாகவெவ்வேறு விதமான வழிமுறைகள்வெவ்வேறான வேறுபட்ட முடிவுகளுக்குத்தான் இட்டுச்செல்லும். ….ஆனால்நம் மனத்தின் தியானமும்விலங்குகளின் மனத்தை ஆராய்ச்சி செய்யும் பரிசோதனைகளும் ஒரே விதமான முடிவை தருகின்றனவென்றால்அந்த முடிவுகள் ஆழமாக ஆராய்ச்சி செய்யப்பட வேண்டியவை.

சப்தபங்கி’ என்கிற இந்த ஜைன அறிதலை பயன்படுத்தியவர்களில் முக்கியமான மற்றொருவர்கோபாலசமுத்திரம் நாராயண ராமச்சந்திரன் என்கிற G.N.ராமச்சந்திரன். உயிரியல்-இயற்பியலாளர் – Bio-physicist. மேற்கத்திய நாடுகளில்தொடக்கநிலை ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருந்தபோதுஅதற்கான முன்னணி ஆராய்ச்சிகளுக்கு இந்தியாவில் அச்சாரம் போட்டவர் இவர்.


புகழ்பெற்ற உயிரி-வேதியியலாளரான லின்னஸ் பவுலிங்கினால் (Linnus Pauling) தாக்கம் பெற்றுஉயிரி-வேதி பொருள்களின் மூலக்கூறு வடிவங்களை அறிவதில் இவரது ஆர்வம் திரும்பியது. இந்தியா திரும்பினார். மெட்ராஸ் பல்கலைக் கழகத்தின் இயற்பியல் துறைத் தலைவராக அவர் ஆனபோதுஅவருக்கு வயது 29. அன்று துணைவேந்தராக இருந்த லக்ஷ்மணசுவாமி முதலியார்ராமச்சந்திரனை புரிந்துகொள்பவராக இருந்தார். எனவேராமச்சந்திரனால் தனது ஆராய்ச்சிகளை செய்ய முடிந்தது.

அப்போதுடி.என்.ஏ. முதல் பல முக்கியமான புரதங்கள் என்று பெரிய மூலக்கூறுகளின் வடிவமைப்புகளை கண்டடைய தீவிரமான போட்டியே சர்வதேச அளவில் நடந்துகொண்டிருந்தது. ஒருவரது தரவுகளை ஒருவர் எடுப்பதும்ஒருவர் செய்வதை அடுத்தவர் மட்டம் தட்டுவதும் அல்லது அதை திருடி கொஞ்சம் தட்டி நிமிர்த்தி தன்னுடையதாக்குவதும் கூடவே இருக்கத்தான் செய்தது.

1953-ல் பிரான்ஸிஸ்க்ரிக்கும் ஜேம்ஸ் வாட்ஸனும் இரட்டைத் திருகல் (Double Helical) கொண்ட இரு இழைகளென டி.என்.ஏ மூலக்கூறின் வடிவத்தை கண்டறிந்தார்கள். இந்த வரிசையில் மிகவும் முக்கியமாக இருந்தது ஒரு புரதம். பாலூட்டிகளில் மிகவும் அதிக அளவில் இருக்கும் புரதம் கொலஜன் (Collagen). நம் இணைப்புத் திசுக்களில் (connective tissue) இருக்கும் புரதம். இதன் மூலக்கூறு வடிவமைப்பை, 1955-ல் ராமச்சந்திரன் சரியாகக் கணித்துக் கூறினார். மூன்று அமினோ அமில இழைகள் கொண்ட மூன்று திருகல்கள் (triple helical) அமைப்பு. இன்று இது மெட்ராஸ் முத்திருகல்’ (Madras Triple Helix model) என அழைக்கப்படுகிறது. ஆனால்இந்த வடிவமைப்பை ஏற்றுகொள்வதில் ஒரு தயக்கம் இருந்தது.



இந்தத் தயக்கத்தை அறிவியலாளர் விஜயன் இப்படி விவரிக்கிறார் 

‘‘அன்று உலகின் முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்களின் சிறந்த விஞ்ஞானிகள் தேடிக் கண்டுபிடிக்க முடியாமல் இருந்த ஒரு புதிரின் விடைஅறிவியல் உலகின் இருண்ட மூலையாகக் கருதப்பட்ட ஒரு நாட்டின் ஒரு மூலையில் இருந்து வந்தது. யாரும் கேள்விப்பட்டிராத ஒரு ராமச்சந்திரனிடம் இருந்து.

இந்த விஷயத்தில்ராமச்சந்திரனும் கார்த்தாவும் சரியான வடிவமைப்பை கண்டடைந்துவிட்டனர் என்பதை ஏற்றுகொள்வதில் ஒரு தயக்கம் இருந்தது. இதற்காகச் சொல்லப்பட்ட ஆட்சேபணைகள் மிகவும் சின்ன சின்ன விஷயங்கள். அவை பெரிது செய்யப்பட்டுஇந்த மாடலே’ தவறு என்பதுபோல் ஒரு பிம்பம் உருவாக்கப்பட்டது. ஆனால் இன்று பார்க்கும்போதுஇந்த மாடல் சரி என்பது மட்டுமல்லஇந்த ஆட்சேபணைகள்கூட பொருளற்றவை எனத் தோன்றுகிறது.

இன்று பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கொலஜன் வடிவமைப்பாகமூன்று இழை முத்திருகல் அமைப்பே உள்ளது. ஆனால் இந்த ஆட்சேபணைகளைத் தொடர்ந்துமூலக்கூறு வடிவமைப்புகளின் சரியான ஸ்திரத்தன்மையை காட்டக்கூடிய ஒரு அமைப்பை கணித ரீதியில் ராமச்சந்திரன் வடிவமைத்தார். புரதங்களின் வடிவமைப்பை அறிவதில் ராமச்சந்திரன் மேப் (Ramachandran psi-phi map) ஒரு முக்கியமான அறிதல் கருவி. 1950-களில்ஒரு புரதத்தின் முப்பரிமாண வடிவம்கூட அறியப்பட்டிராத காலகட்டத்தில்இதை ராமச்சந்திரன் செய்தார் என்பது முக்கியமானது.

ஒரு விஷயத்தைக் கவனிக்கலாம். ராமச்சந்திரன்ஒரு குறிப்பிட்ட புரதத்தின் வடிவமைப்பில் இருந்துபொதுவாக புரத வடிவமைப்புகளை கண்டறியும் ஒரு முறையை குறித்து தன் பார்வையை செலுத்தினார். இவ்விதத்தில்அவர் இயல்பாக அறிதல்-தர்க்கம் ஆகிய புலங்களில் ஆர்வம் அடைந்தது இயற்கையே. இந்த ஆர்வம்அவரை சப்தபங்கியில் கொண்டு சேர்த்தது.

1980-களில்சியாத்வாத அறிதல் முறையையும் பூலியன் அல்ஜீப்ராவையும் தொடர்புபடுத்தி அவர் எழுதிய ஆராய்ச்சித்தாள், ‘கரென்ட் சயின்ஸ்’ இதழில் வெளிவந்தது. (Syad-Nyaya system - A new formulation of sentential logic and its isomorphism with Boolean Algebra of genus 2). ராமச்சந்திரனின் இந்த ஆராய்ச்சி முக்கியமானது.

இன்றுக்வான்டம் கம்ப்யூட்டர்கள் சாத்தியமாகும் ஒரு சூழல் உருவாகி வருகிறது. நாம் பயன்படுத்தும் பிட்கள் (bits) ஒன்று அல்லது பூஜ்ஜியம் என்று இருக்கும். க்வான்டம் கம்ப்யூட்டர்களின் க்யூபிட்களோ (qubits), ஒரே நேரத்தில் ஒன்றாகவும் பூஜ்ஜியமாகவும் இருக்க முடியும். இதுசியாத்வாத அடிப்படையிலான பூலியன் அல்ஜீப்ராவுக்கு’ இன்றும் சாத்தியங்கள் தொடர்கின்றன.

விலங்குகளின் நடத்தைதர்க்கம்கணினி என பல தளங்களில்இன்றும் அறிதலைத் திறக்கும் ஒரு சிறப்பான சாவி சப்தபங்கிசியாத்வாதம் மற்றும் அநேகாந்தவாதம். ஒற்றை பார்வையைத் தாண்டிஒவ்வொரு நிகழ்விலும் முடிவிலாத பரிமாணங்களைதொடர்புகளைவலைப்பின்னல்களை அது நமக்குக் காட்டுகிறது. அகிம்சையுடன்உலகுக்கு சமணத்தின் மற்றொரு பெரும் பங்களிப்பு சப்தபங்கி.




No comments:

Post a Comment