சாணக்கிய முனிவர்




சாணக்கிய முனிவர்



Jain United News Centre, Whatsapp குழுவில் தொடராக செய்யாறு திரு கம்பீர. துரைராஜ் அவர்கள் பதிவு செய்து வந்த தொடர். அவரது தொகுப்பு அஞ்சல்களுக்கு நன்றி.


****************1*************


    (நோய் நம்முடம்பில் பிறந்தே நம்மைக் கொல்கிறது. நமக்கு உற்றவராக இருப்பவரே நமக்குப் பகைவராகவும் மாறி நம்மைக் கொல்லக்கூடும். பகைவனாக மாறிய நண்பனையும் பழையபடி நண்பனாகவே கருதும் அருளாளனாகச் சாணக்கியன் மாறி, சாணக்கிய முனிவராக மதிக்கப்பட்ட வரலாறு இது. )

          இச்சம்புத் தீவத்தின் பரத நிலத்தில் மகத நாடிருந்தது. இதன் தலைநகரான பாடலிபுத்திரம் என்னும் பொழிலில்.      ( நகரில் )  👳பதுமன் என்னும் அரசன் ஆட்சி புரிந்து வந்தான். இவன் நந்த மரபைச் சார்ந்தவன். இவனுடைய👸🏻 அரசமாதேவியின் பெயர் சுந்தரி. இவர்களுக்கு👮🏼 மகபதுமன் என்றொரு மகனிருந்தான். இம் மன்னனின் அமைச்சனான காப்பி என்றழைக்கப்பட்ட விசுவசேனன்🤓 பெண் பித்தும் பேராசையும் கொண்டவன்.

    அமைச்சன்🤓 விசுவசேனன்,  அரசி👸🏻 சுந்தரியைக் கண்டு காமுற்றான். அவளைத் தன் வயப்படுத்திக் கொண்டான். அரசனைக் கொன்று அரசியை மனைவியாக்கிக் கொள்ளத் திட்டமிட்டான். பிறநாட்டு அரசர்களைப் பாடலிபுரத்தின் மேல் படையெடுத்து வருமாறு செய்தான். போர் மூளும் நேரத்தில் அரசனிடம்👳 சென்று,  'அரசே ! போர் மும்முரமாக நடைபெறும்போது நம் செல்வங்களையும்💰 விலையுயர்ந்த அணிகலன்களையும்🎁 காக்க முடியாது. ஆதலால் அவற்றைப் பாதுகாப்பாக ஓரிடத்தில் ஒளித்து வைத்துவிட வேண்டும். ஒளித்து வைப்பதற்குரிய பாதுகாப்பான இடத்தைக் காட்டுகிறேன் வாருங்கள்' என்று நள்ளிருள் கழிந்து மூன்றாம் யாமத்தில் அரசனை அழைத்துச் சென்றான். அரண்மனை பூஞ்சோலையின் ஒரு பக்கத்திலிருந்த⛲ பாழடைந்த சேறு நிரம்பி ஆழம் மிக்கதுமான ஒரு பாழுங் கிணற்றங்கரைக்குச் சென்று அரசனின்👳 கழுத்தைப் பிடித்து திருகிக் கிணற்றுக்குள் தள்ளிவிட்டான். யாராவது பார்க்கிறார்களா என்று சுற்றிலும் பார்த்தான். யாரும்🤓 தன்னைப் பார்க்கவில்லை என்று நினைத்தான்.
                (ஆனால் அவனையறியாமல் ஒரு உருவம்👀 பார்த்துவிட்டதே!!
அவன் யார்)
                        நாளை👁பார்க்கலாம்....



 😷சாணக்கிய முனிவர்🙏
----------------2-------------
   🤓  விசுவசேனன் அமைச்சன் அரசி👸🏻 சுந்தரி மேல் காமுற்று வயப்படுத்தி  அரசன்👳 பதுமனை சூழ்ச்சியால் பாழுங் கிணற்றில் தள்ளி கொன்று விட்டு தன்னை யாரும் பார்க்கவில்லை என்று நினைத்தான்.

   ஆனால் அந்நேரத்தில் பூப்பறிப்பதற்காகப் பூஞ்சோலைக்கு வந்த😳 வசந்தகன் என்னும் மாலை விற்பவன் மரத்தின்🌳 மேலிருந்தபடியே அமைச்சன் அரசனைக் கொன்று கிணற்றுக்குள் தள்ளியதைப் பார்த்து விட்டான். தன்னை🤓 அமைச்சன் பார்த்தால் என்ன செய்வானோ என்று அஞ்சி மரத்திலிருந்து பக்கக் கிளை நுனியைப் பிடித்துத் தாழக் குதித்து ஓடிப்போய் விட்டான். மரக்கிளை🌿 ஆடியதனால் ஏற்பட்ட சலசலப்பைக் கேட்டு யாராவது தன் செயலைப் பார்த்திருக்கக்கூடும் என்று அஞ்சினான்.

   ' அசைந்த மரக்கிளை🌿, குரங்கால்🐒 ஆட்டப்பட்டிருந்தாலும், மாந்தரால்😄 ஆட்டப்பட்டிருந்தாலும் என் குற்றத்தை ஆயிரக் கணக்கான ஆண்டுகள் வரை சொல்லிக் கொண்டேயிருக்கும் ' என்று தன் குற்றத்திற்குத் தானே😢 வருநதினான். பொழுது விடிவதற்குள் வீடு போய்ச் சேர்ந்தான்.

  மறுநாள் காலையில்🏛 அரண்மனையில் அரசனைக்👳 காணவில்லை என்னும் பேச்சு நகரம் முழுவதும் பரவியது. 🤓அமைச்சன் பெரிதும் வருந்துபவனைப் போல் நடித்து பலவிடங்களிலும் அரசனைத் தேட🏇🏻🚴 ஆளனுப்பினான். ஆட்கள் எல்லா இடங்களிலும் தேடி🕵 அலைந்து எங்கும் 👳அரசனைக் காணவில்லையென்று உணர்ந்தனர். நகர மக்கள் வியப்பும்😲😩 வருத்தமும் கொண்டனர்.

    சிலநாள் கழித்து அரசனின் மூத்த மகன்👮🏼 மகாபதுமனுக்கு முடிசூட்டி அரசனாக்கினர். 👩🏻சுவிரதைக்குப் பட்டத்தரசியாக முடிசூட்டினர். இதற்கிடையில்,  இறந்த அரசனின் மனைவி 👸🏻சுந்தரியுடன் அமைச்சன் கள்ள நட்புவைத்து (மறை வாழ்வு) வாழ்ந்து வந்தான்.

  🏛 அரண்மனைக்குள் அரசன் மாயமாய் மறைந்து விட்டார் என்னும் செய்தியை👮🏼 மகாபதுமனால் நம்ப முடியவில்லை.  'என்👳 தந்தையின் சாவை இத்துணைப் பெரிய நகரத்தில் ஒருவன் கூட அறியாமலிருக்க முடியாது. யாருக்காவது என் தந்தையின் சாவைப் பற்றிய செய்தி தெரிந்தே இருக்க வேண்டும். அதை நான் கண்டறியாமல்👀 விடுவதில்லை ' என்று சூளுரைத்து நள்ளிருளில் நகருக்குள் வேற்று வடிவம் கொண்டு மகாபதுமன் புறப்பட்டான். கையில் வாளுடன் எச்சரிக்கையாக இருளில் மறைந்து மறைந்து ஒவ்வொரு வீட்டுச் சுவரோரத்திலும் நின்று உள்ளே என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று உற்றுக் கேட்டான்.

    😳 வசந்தகன் என்னும் பூமாலை விற்பவன் (மாலைக்காரன்) வீட்டினருகில் வந்து நின்றபோது வசந்தகன் இறந்து விட்ட தன் மனைவியை நினைத்துப் புலம்புவது🗣 கேட்டது.
                (தொடரும் )


 😷 சாணக்கிய முனிவர்🙏
---------------3--------------
 'குவளை மலர்🌷 போலும் மேனியளே! நீலத்தாமரை👁 விழியாளே! என் நெஞ்சம் குளிர்வித்த பண்பினளே! மறக்க முடியாத அன்பினளே! ஆருயிரே! மங்கலம் குலுங்கும் முகத்தவளே! உன் பிரிவு என்னை வாட்டி😰 வதைக்கிறது. மெல்லிய பூங்கிளையால்🌿 உலகம்(விசுவம்) நடுங்குகிறது.' என்று அவன் புலம்பியதைக் கேட்ட மன்னன் 👮🏼 புலம்பலின் கடைசி வரியில் ஏதோ உளவு (இரகசியம்) இருப்பதாக உணர்ந்தான்.விசுவம் என்னும் சொல்லுக்கு அமைச்சன்🤓 விசுவசேனன் என்றும் உலகம் என்று🌍 இருபொருள் இருப்பதையும், பூங்கிளை என்பதற்கு🌿 மரக்கிளை என்றும் மாலைக்காரனின் மனைவி என்றும் இருபொருள் இருப்பதையும் மன்னன் புரிந்து கொண்டான். ஒன்றும் பேசாமல்🏛 அரண்மனைக்குத் திரும்பினான்.

     🌄 மறுநாள் பொழுது புலர்ந்ததும் அரசன்👮🏼 கொலுமண்டபம் சென்று வீற்றிருந்தான். 😳வசந்தகன் என்னும் மாலைக்காரனை அழைத்து வர ஆணையிட்டான். சிறிது நேரத்தில் வசந்தகனைக்😳 கொணர்ந்து, அரசன் முன் நிறுத்தினர்.     👮🏼அரசன் மாலைக்காரனைப் பார்த்து,  'என் 👳தந்தையைக் கொன்றவனை நீ நன்கு அறிவாய். அஞ்சாமல்👊 உண்மையைச் சொல். சொல்லாவிடின் உன் தலை மண்ணில் உருளும்' என்றான்.

   😳வசந்தகன் மிகவும் அஞ்சி உண்மையைச் சொல்லத் தொடங்கினான். 'அரசே! ஒருநாள் இரவு🌃 மூன்றாம் யாமத்தில்
🏛அரண்மனைப் பூஞ்சோலையில் மலர் பறிப்பதற்காக மரத்தின்🌳 மேல் ஏறினேன். அப்பொழுது அமைச்சர்🤓 விசுவசேனன் அரசனின்👳 கழுத்தைப் பிடித்து திருகி பாழுங் கிணற்றில் ⚫பிடித்துத் தள்ளியதைப் 👀பார்த்தேன். என்னைப் பார்த்தால் என்னையும் கொன்று விடுவான் என்று அஞ்சி🌳🌿 மரக்கிளையிலிருந்து குதித்து ஓடி வந்து விட்டேன். இதுதான்🤘 நான் கண்ட உண்மை' என்றான்.

🏛   கொலு மண்டபத்தில் இருந்த அனைவரும் 🤓அமைச்சனே கொலைகாரன் என்றறிந்து அமைச்சனை😬😠🤐😁 வெறித்துப் பார்த்தனர். அமைச்சன் விசுவசேனன்🤓 நடுங்கினான்.   👮🏼அரசன் மாலைக்காரனுக்குப்😳 பொன்னும்💰 பொருளும்📦🛍 பரிசளித்தான். நல்ல நிலங்களையும் தந்தான். பிறகு படைத்தலைவரை அழைத்து அமைச்சன்🤓 விசுவசேனனின் குடும்பத்தைச் சார்ந்த எல்லோரையும் கொன்று விடுமாறு✍ ஆணையிட்டான்.
             (தொடரும் )


😷சாணக்கிய முனிவர்🙏
----------------4--------------
       🤓விசுவசேனன் செய்த அடாத செயலை படைத்தலைவரும்😁 பிற அமைச்சர்களும்🤐😡 வெறுத்தாலும் விசுவசேனனைப்🤓 போன்ற திறமையான அமைச்சனை மீண்டும் பெறமுடியாது என எண்ணினர். அரசியல் தொடர்பான😇 அறிவுரைகளைத் தக்க நேரத்தில் சொல்வதிலும் பகை மன்னரை ஒடுக்குவதிலும் நல்ல திறமை பெற்றவன் என்று புகழ் பெற்றிருந்தான்.

     ஆதலால்,  பிற அமைச்சர்களும் படைத்தலைவர்களும் அரசனிடம் சென்று🤓 விசுவசேனனின் அரசியல் தொடர்பான திறமைகளை எடுத்துக் கூறி அவன் திறமை நெருக்கடியான நேரத்தில் நாட்டுக்குப் பயன்படும்🌍 என்பதையும் தெளிவுபடுத்தி அவனைக் கொன்று😨 விடாமல் எவ்வகை ஒறுப்பாவது⛓ (தண்டனையாவது) தருதலே தக்கது என்று ஒருமுகமாகக் கூறினர்.

   👮🏼அரசனும் அவர்களின் வேண்டுகோளிலும் ஒரு உண்மையிருப்பதாக நினைத்தான். தான் இளைஞன் என்பதும் அரசியலை நடத்திச் செல்ல இன்னும்😇 போதிய பட்டறிவு பெற வேண்டும் என்பதாலும் 🤓விசுவசேனனைக் கொல்லாமல் சிறையிலிட🕋 திட்டமிட்டான். அதனால் அவர்களை நிலவறையில்🕋 சிறையிலடச் செய்தான். ஒரு நாளைக்கு அத்தனை பேருக்கும் சேர்த்து🍮 ஒரு சட்டுவச்சோறும், 🍶ஒரு செம்பு தண்ணீரும் கொடுக்கச் செய்தான். 🕋சிறைச்சாலையில் ஒரு சட்டுவச்சோறு மட்டும் உள்ளே தருமளவுக்குச் சிறிய பொந்து🕳 செய்யப்பட்டிருந்தது. ஒரு சட்டுவச்சோற்றைப் பசியானால் ஆளுக்கொரு சிறுகவளம் தின்று தண்ணீரால் அத்தனை🤓😫😭👱🏽 பேரும் நாவும் நனைத்துக் கொள்ள முடியாமல் வருந்தினர்.

  இந்நிலையில்🤓 விசுவசேனன் தன்😭👱🏽 மக்களை நோக்கி, "ஒரு சட்டுவச்சோற்றை அனைவரும் உண்டு வாழ முடியாது. நம்மை நிலவறையிலிட்டுக் கொன்ற 👮🏼அரசனையும் அவனுடைய நந்த மரபையும், பூண்டோடு அழித்துப் பழிக்குப்பழி😬 வாங்குவதற்காக யாராவது ஒருவர் உயிரோடு இருக்க வேண்டும். உங்களில் யார் அந்தத் திறமை உள்ளவனோ அவன் மட்டும் வயிறாற உண்டு உயிரோடு இருக்கட்டும்;  மற்றவரெல்லாம் பசியோடிருந்து இறந்து விடலாம்" என்றான். இதைக்கேட்ட விசுவசேனனின் மகன் சுபந்து👱🏽 என்பவன், 'நான் அரசனையும்👮🏼 அரச குடும்பத்தையும் பழி வாங்குகிறேன்' என்றான். அன்றுமுதல் ஒரு சட்டுவச்சோற்றையும்🍮 ஒரு செம்பு தண்ணீரையும்🍶 அவனுக்கே கொடுத்து உண்ணச்செய்து மற்றவர்கள்🙁☹😞 பட்டினி கிடந்து இறந்தனர்...
                  (தொடரும்)

 😷சாணக்கிய முனிவர்🙏
----------------5-------------
          இவ்வாறு மூன்றாண்டுகள் சென்றதும் பகைவர்கள்😬😁 பாடலிபுரத்தின் மேல் படையுடுக்கத் திட்டமிட்டு மகத நாட்டு எல்லைகளில் தொல்லை கொடுக்கத் தொடங்கினர். அரசன்👮🏼 மகாபதுமன் இந்த நேரத்தில் விசுவசேனனைப்🤓 போன்ற திறமையான அமைச்சன் இல்லையே என்று வருந்தினான். 🤓விசுவசேனன் உயிரோடு இருந்தால் சிறையிலிருந்து🕋 விடுவித்து மீண்டும் அமைச்சனாக்கவும் நினைத்தான். ஒரு🍮 சட்டுவச் சோறு உண்டு இன்னும் அவர்களில் யாராவது உயிரோடு இருக்கிறார்களா? என்று பார்த்து வர ஆளனுப்பினான். 🤓விசுவசேனனின் மகன் சுபந்து👱🏽 உயிரோடிருப்பதாகத் தெரிவித்தனர்.

       👮🏼 மன்னன் சுபந்துவைச்👱🏽 சிறையிலிருந்து விடுதலை செய்து அமைச்சனாக்கினான். அவனுக்கு வேண்டிய அனைத்து நன்மைகளும் செய்தான். 👱🏽சுபந்து தன் திறமையினால் மகத நாட்டு எல்லைகளில் தொல்லை கொடுத்தவர்களையும் படையெடுக்கத் துணிந்தவர்களையும்😁😬 வெகுவிரைவில் அடக்கி விட்டான். இரண்டாம் அமைச்சன் சகடாளனின் மகள்👩🏽 நந்தவதியைச் 👱🏽சுபந்துக்கு அரசன் திருமணம் செய்து வைத்தான்.👱🏽சுபந்து, அரசனால் பெரிதும் மதிக்கப்பட்ட முதன்மை அமைச்சனாக விளங்கினான்.

சாணக்கியனின் பிறப்பும் வளர்ப்பும்
------------------------------
     மகத நாட்டிலிருந்த சால்மலி என்னும் பார்ப்பனச் சேரியில் சோமசருமன் என்னும் பார்ப்பனன் இருந்தான். இவன் மனைவியின் பெயர் கபிலை. இவ்விருவருக்கும் 👵🏻சாணக்கியன் மகனாகப் பிறந்தான். இவன் பிறந்த போது நான்கு கோரைப் பற்களுள்ளவனாகவும் பிறந்ததால் இவனுக்குச்👵🏻 சாணக்கியன் (சதுர்த்ரும்ஷ்-சாணக்கிய) என்று பெயரிட்டனர். 👵🏻மகன் நான்கு கோரைப் பற்களுள்ளவனாக இருப்பதால் வருந்திய சோமசருமன் நிமித்திகனை🤑 அழைத்து வினவினான்.

     ' உன் மகன் 👵🏻நான்கு கோரைப் பற்களுடன் பிறந்திருப்பதால் அரசனோ அல்லது அமைச்சனோ ஆகும் வாய்ப்பைப் பெற்று நந்தகோன்👳 அரசமரபைப் பூண்டோடு அழித்து விடுவான். இதில் எள்ளளவும் ஐயமில்லை.  இது நடந்தே தீரும்' என்று🤑 நிமித்திகன் கூறினான்.
              (தொடரும்)

 😷சாணக்கிய முனிவர்🙏
-----------------6------------
     🤑 நிமித்திகன் கூறியதைக் கேட்ட சோமசருமன் குழந்தை👵🏻 சாணக்கியனின் நான்கு கோரைப் பற்களையும் ⚔அரத்தால் அராவிச் சிறியவனாக ஆக்கினான். 👵🏻சாணக்கியன் இளமை முதலே கல்வி கேள்விகளில் நிகரற்று விளங்கினான்.📚 நான்கு மறை, ஆறு அங்கம், பதினெட்டு அறநூல்கள்,📕 இலக்கணம்,📘 இலக்கியம்,  யாப்பு, அணி, நிகண்டு,📗 நாடகம், சாலிகோத்திரம், மருத்துவம், நீதி சாத்திரம் ஆகியவற்றை முறையாக ஆசிரியரிடம் கற்றான்.

  😷 சைன முனிவரிடம் அறநெறிகளையும் அருளுரைகளையும் கேட்டுத் தெளிந்தான். ஜைன சமயத்தின் நோன்புகள்🙏 பலவற்றையும் மேற்கொண்டு ஒழுகி வந்தான். பிறகு ஒருநாள்⛳ பாடலிபுரத்திற்குச் சென்று கற்றோர் அவைகளிலும்,🏤 அரசவையிலும் தன் புலமைத் திறத்தைக் காட்டி அனைவராலும் போற்றிப் புகழப்பட்டான். இவன் திறமையைக் கண்ட இரண்டாம் அமைச்சன் சகடாளன் தன் இரண்டாவது மகள்👩🏼 யசோமதியைச் சாணக்கியனுக்குக் கொடுத்துத் திருமணம் செய்து வைத்தான்.

      ஒருநாள்👵🏻 சாணக்கியன் சோணையாற்றங் கரையில்🌾🌾 செல்லும் போது தருப்பைப் புல்லின் முள் அவன் காலில்👢 குத்தியது. 👵🏻சாணக்கியனுக்குச் சினம் பொங்கியது. காலிலிருந்து அதைப் பிடுங்கி எறிந்தான். காலில் இரத்தம்👣 வடிந்தது. அந்தத் தருப்பைப் புல் புதர்🌾🌾 முழுவதையும் தீயிட்டுக்🔥 கொளுத்தி விட்டான். அப்பொழுது அங்கு வந்த 👱🏽சுபந்து சாணக்கியனின் செய்கையைக் கண்டு சிரித்தான். 'இந்தப்🌾 புல்லும் உனக்கொரு பகையா?' என்று வினவினான்.  ''என் பகைவர் யாராயினும் அவர்களைப் பூண்டோடு அழித்தால் ஒழிய எனக்குத் தணிவு (திருப்தி) ஏற்படாது''😬 என்றான். 👱🏽சுபந்துக்குச் சாணக்கியன்👵🏻 பிறக்கும் போதே கோரைப் பற்களுடன் பிறந்ததும் இவன்👳 நந்தமரபை அழித்து விடுவான் என்று நிமித்திகன்🤑 சொன்னதும் மறைவாகக் கேட்டுணர்ந்தவன் ஆதலால், நந்தர்களை ஒழிக்கும் முயற்சியில் தனக்கேற்ற நண்பன் கிடைத்துவிட்டான்😆 என்று மகிழ்ந்தான்.
         .. (தொடரும்)..


 😷சாணக்கிய முனிவர்🙏
-----------------7-------------
           சாணக்கியனின்👵🏻 அறிவுத்   திறமையையும் கொண்ட கொள்கையிலுள்ள உறுதியையும் அறிவதற்காகச்  👱🏽சுபந்து ஒருநாள் ஒருபாடலை எழுதி✍ வைத்தான். 'அரசியல் நூல்களைக் கற்றுப் புலமை நிரம்பியவன் தன் முயற்சியோடு பலவகை ஆற்றல்களும் துணை புரிந்தால் நிலத்தை🌍 அடக்கி ஆளும் வாய்ப்பைப் பெறுவான்' என்பது அப் பாடலின் பொருள்.

     அடுத்தநாள் அதனைக் கண்ட👵🏻 சாணக்கியன் பலவகை ஆற்றல்களின் துணை என்பதை✂ நீக்கிவிட்டு, அந்த இடத்தில் அவன் ஒருவனாலேயே என மாற்றி, தனித்த ஒருவனே நிலத்தை வென்று ஆளமுடியும் எனப் பொருள்📋 படுமாறு செய்திருந்தான். 👱🏽சுபந்து சாணக்கியனின்👵🏻 அறிவுத் திறமையையும் நன்கு புரிந்து கொண்டான். சுபந்து சாணக்கியனைத்👵🏻 தன் வீட்டுக்கு 🏚அழைத்து விருந்து வைத்து🍷🍨🍪 மகிழ்ந்தான்.சாணக்கியனுக்கும்👵🏻 அவன் மனைவிக்கும்👩🏼 பொன்னும்💍 பொருளும்💰ஆடையணிகளும்👔 ஆடையணிகளும்?👖?👗 கொடுத்து பெருமைப் படுத்தினான்.

    👵🏻 சாணக்கியன் தன் மனைவியுடன் வீட்டுக்குச் சென்றான்.நாளடைவில் வறுமையின் கொடுமைகளை உணர்ந்தான். வறுமையில் வாடிய போது நந்தமதி அவர்களுக்கு சோற்றுக் கஞ்சி கொண்டு போய் கொடுத்து வந்தாள். வறுமையை விடக் கொடியது உலகில் வேறு எதுவுமே இல்லை.

   "வறுமை வந்தால் யாரும் நண்பராவதில்லை. அண்டை அயல் வீட்டாரும் இழிவாக நினைத்து ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. செல்வர்களும் அதிகாரம் படைத்தவர்களும் கந்தலாடை உடுத்துபவர்களைக் கண்டால் 'தொலைவில் போ. அருகில் வராதே" என விரட்டுகிறார்கள். நம்முடைய வறுமையை நாம் வெளியில் காட்டிக் கொள்ள வேண்டியிருப்பது நம்மால் தடுத்துக் கொள்ளமுடியாத பெருந்துயரம்; கொடுமையிலும் கொடுமை, தீவினைகளிலும் பெரிய தீவினை!'என்று சாணக்கியன் வறுமையின் கொடுமைகளை விரித்துரைத்தான்.

    இதையறிந்து சுபந்து சாணக்கியனைப் பார்க்க வந்தான். நண்பா ! உன் வறுமையைப் போக்கிக் கொள்ள வழியிருக்கிறது. அறுபது சிற்றூர்களைக் கொண்ட அகரப் பகுதியை உனக்குக் கொடையாகத் (தானமாக) தருமாறு அரசனை வேண்டினால் உனக்குத் தப்பாமல் தருவான். உன் வறுமை நிலையாக நீங்கும் ' என்றான். அவ்வாறே சாணக்கியன் நந்த அரசனைக் கண்டு புகழ்ந்து தனக்கு அறுபது சிற்றூர்களைக் கொண்ட அகரம் வேண்டுமென்று கூறியதும் அரசன்  அறுபது சிற்றூர்களைக் கொண்ட அகரத்தை உவந்தளித்தான். சாணக்கியன் அவற்றைத் தன் நிலையான உரிமையாகப் பெற்று வறுமை நீங்கி மகிழ்ந்து வாழ்ந்தான்.
               (தொடரும்)


 😷சாணக்கிய முனிவர்🙏
---'--------------8-------'---
   மற்றொருநாள் அமைச்சன் சுபந்து👱🏽 அரசனைக்👮🏼கெடுப்பதற்கான வழிமுறைகளை விரைந்து செய்ய நினைத்தான். அரண்மனைப்🤔🤕 புரோகிதர்களை வரச்சொன்னான். அவர்களை நோக்கி , 'உங்களுக்கு வழிவழி உரிமையான அறுபது சிற்றூர்களை உள்ளடக்கிய அகரத்தை 👮🏼அரசன்  👵🏻சாணக்கியனுக்குக் கொடுத்து விட்டான். அந்த ஊர்களில் நந்த அரசர்களின் முன்னோர்களான விசயன், நந்தன், சுகுந்தன், நந்திவர்தனன், சீநந்தன், பதுமநந்தன், மகாபதுமன் முதலிய ஒன்பது மன்னர்கள் காலத்திலிருந்து உங்கள் உடைமையாக இருந்தன. உங்கள் உடைமையான ஊர்களைப் பிறனொருவன் பெற்று இன்பமாக வாழும்போது நீங்கள் பேசாமல்🤐வாயை மூடியவாறு பார்த்துக் கொண்டு நிற்கிறீர்களே' என்றான்.

      'அமைச்சர்👱🏽 பெருமானே ! தங்கள் அருளால் வாழ்பவர்கள் நாங்கள்.  தங்கள் ஆதரவு இருந்தால் எங்கள் ஊர்களைத் திரும்பப் பெறுவோம். அரசனிடம்👮🏼 முறையிடுவோம் என்றனர். அப்படியே செய்யுங்கள் என்று அமைச்சன்👱🏽 மேலும் தூண்டிவிட்டான். அரண்மனைப் புரோகிதர்🤕🤔அனைவரும் அரசனிடம் சென்று முறையிட்டனர்.

  '👮🏼அரசே! தங்கள் குல முன்னோர்களால் தரப்பட்டு பல தலைமுறைகளாக நாங்கள் பயன் நுகர்ந்து வந்த அறுபது ஊர்களையும் தாங்கள் திடீரென 👵🏻சாணக்கியனுக்குக் கொடுத்தது பொருந்தாது.இது உங்கள் குல முன்னோர்களின் விருப்பத்திற்கு முரணானது. தாங்கள் குடிப்பெருமையைக் காத்து எங்களுக்குரிய ஊர்களை 🤕🤔எங்களுக்கே மீண்டும் உரிமையாக்கி எங்களையும் காக்கவேண்டும்' என்று முறையிட்டனர். 👮🏼அரசனின் அருகிலிருந்த அமைச்சன்👱🏽 சுபந்து, "அரச மரபினர் தம் முன்னோர் சென்ற வழியே செல்வதுதான் நல்லது. முன்னோர் கொடுத்த கொடை (தானம்) பின்னால் வரும் மன்னர்கள் மாற்றுவது அறநூல்📖 நெறியன்று" என்றான்.

    இதைக் கேட்ட அரசன்,    "👵🏻 சாணக்கியனை வெளியேற்றி அந்த அறுபது ஊர்களையும் திரும்பவும் இவர்களுக்கே🤕🤔 கொடுத்து விடுங்கள்"  என்று ✍ஆணையிட்டான்.  👱🏽அமைச்சன் வாயிற்காவலர்களுக்கு அரண்மனையில் விருந்துண்ண வந்திருக்கும் 👵🏻சாணக்கியனைப் பிடித்து வெளியில் தள்ளுங்கள் என்றான்.

     வாயிற்காவலர்கள், சாணக்கியன்👵🏻 அரண்மனையில் விருந்துண்பதற்காக முதல் இலையில் உட்கார்ந்தபோது, 'செருக்கும் கிறுக்குமுடைய இழி நடத்தையாளனே! வெளியே போ. 🏤 அரண்மனையில் உண்ணும் தகுதி உனக்கில்லை. உன்னை, 👮🏼அரசன் வெளியேற்றுமாறு ஆணையிட்டிருக்கிறார்' என்றனர். 👵🏻சாணக்கியன் மறுமொழி சொல்வதற்குள் அவன் கழுத்தைப் பிடித்து அரண்மனைக்கு வெளியே தள்ளி விட்டனர்.
                  ( தொடரும்)


 😷சாணக்கிய முனிவர்🙏
------------------9-----------
     👵🏻சாணக்கியனுக்குப் பொங்கி எழுந்த சினத்தை அளவிட்டுரைக்க முடியாது.  அவனுடைய சினம்😁 அனல் மூச்சாக வெளிவந்தது. 'என்னை அவமதித்த இந்த நந்தனைப்👮🏼 பூண்டோடு ஒழிப்பேன். அமைச்சன் 👱🏽சுபந்துவை ஏதிலி(அனாதை) யாக்குவேன். பன்னிரண்டு ஆண்டுகளுக்குள் இதை👊 நிறைவேற்றுவேன். அதுவரை காவித்துணி கச்சையைத்தான் கட்டுவேன்' என்று சூளுரைத்தான். 👵🏻சாணக்கியன் , நாட்டை விட்டு வெளியேறி மகோதம் என்னும் நகருக்குச் சென்றான்.

சந்திரகுப்தனின் பிறப்பும் வளர்ப்பும்
------------------------------
     மகோத நகரிலிருந்து அரசாண்ட மன்னன்👨🏻 குமுதன். இவனுடைய அரசமாதேவியின்👰🏻 பெயர் மந்தை. இவள் சூலாக (கர்ப்பவதியாக) இருந்தபோது🌙 நிலாவை விழுங்க வேண்டும் என்னும் ஆசை பெருகியது. தன் ஆசையை அரசனிடம்👨🏻 கூறினாள். அரசன் இவளுடைய ஆசையை எவ்வாறு நிறைவேற்றி வைப்பது எனத் திகைத்தான். 👰🏻அரசியின் ஆசையை நிறைவேற்றி வைப்பவர்களுக்குப் பரிசளிப்பதாக💰 அறிவித்தான்.

  இதைக் கேட்ட👵🏻 சாணக்கியன் அரசனிடம்👨🏻 சென்று தன்னால் அரசியின்👰🏻 விருப்பத்தை நிறைவேற்றமுடியும். அதற்கு ஈடாக அரசி பெறும் 🙇குழந்தையை தனக்குத் தரவேண்டும் என்றான். 👨🏻அரசனும் ஒப்புக் கொண்டான். ஒருநாள் முழுநிலா🌝 நாளன்று அரண்மனை மேன்மாளிகைக்🏣 கூரையில் ஒரு பெரிய துளையிடச் செய்தான். அரசனையும்👨🏻 அரசியையும்👰🏻 நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு அங்கு வரச்சொன்னான். 👵🏻சாணக்கியன் சொல்லியவாறு 👰🏻அரசியின் கண்களைக் 👀கட்டி மேன்மாளிகைக்கு அழைத்து வந்தனர். ஒரு சிறிய கண்ணாடித் தொட்டியில்🍸 இனிப்பும் நறுமணமும் கலந்த நீரை நிரப்பி வைத்திருந்தான். இரவு முழுநிலவின் உருவம்🌝 அந்த கண்ணாடித் தொட்டியிலிருந்த நீரில் பளிச்சென அழகுற்றுத் திகழ்ந்தது. 👰🏻அரசியின் கண்களுக்குக்👁 கட்டியிருந்த துணியை அவிழ்க்கச் சொல்லி 'கண்ணாடித் தொட்டியில்🍸 மந்திர வலிமையால் முழுநிலாவைப் பிடித்து🌝 அடைத்திருக்கிறேன். இதை மகிழ்ச்சியுடன் கண்ணை மூடிக்கொண்டு குடித்து விடவேண்டும்' என்று அரசிக்குக் கூறினான். 🌝நிலாவை விழுங்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சி அரசிக்கு👰🏻 மீதூர்ந்தது. அவள் பெருமகழ்ச்சியோடு அந்நீரைக் குடித்து நிலாவை விழுங்கி விட்டதாக மன நிறைவுற்றாள். 👵🏻சாணக்கியனின் திறமையை அரசன் பாராட்டினான்.
                  (தொடரும்)


 😷சாணக்கிய முனிவர்🙏
--------------10-------------
    👰🏻 அரசிக்கு ஒன்பது மாதம் நிறைந்து நிறை சூலாகியபின் ஒருநாள் ஆண் குழந்தை பெற்றெடுத்தாள். அக் குழந்தை மிகவும் அழகாக இருந்தது. 🌙நிலவை விழுங்கிய அரசி👰🏻 பெற்றெடுத்த குழந்தையாதலால் அக் குழந்தைக்கு சந்திரபுக்தன் எனப் பெயரிட்டனர். (சந்திரபுக்தன் என்னும் பெயர் பிற்காலத்தில் சந்திரகுப்தன் என மருவியது.) 👵🏻சாணக்கியனுக்குத் தந்த வாய்மொழி (வாக்குறுதி) யின் படி 🚶🏻குழந்தையை அவனிடம் ஒப்படைத்தனர். 🚶🏻அக் குழந்தைக்கு 🍵வாய்வெண்ணெய்* ஊட்டும் போது மிகவும் சிறு அளவில் நஞ்சையும் கலந்தூட்டிப் பழக்கப் படுத்தினான்.  சந்திரகுப்தன்👦🏻 பெரியவனான போதும் உணவில் 🍵நஞ்சு கலந்து உண்ணும் பழக்கம் நீடித்தது.

   👦🏻சந்திரகுப்தன் பதினாறு வயது நிரம்பிய காளைப் பருவம் எய்தினான். 👵🏻சாணக்கியன் அமைச்சர்  படைத்தலைவர், நகரக் காவலர் ஆகியோரை அழைத்து,  👦🏻சந்திரகுப்தனுக்கு இந் நிலவுலகம் முழுவதும் ஆளக்கூடிய இலக்கணங்களும் நற்பேறும் (அதிர்ஷ்டம்) உள்ளதால் இவனுடைய நாட்டை விரிவுபடுத்த வேண்டும்.  👦🏻சந்திரகுப்தனைப் பேரரசனாகவும் மன்னர் மன்னனாகவும் (சக்ரவர்த்தி) ஆக்க வேண்டும்.  அப்பொழுது நீங்கள் யாவரும் இப்பொழுதுள்ளதை விட பத்து மடங்கு பெருகிய செல்வ💰 வாழ்வும் அதிகாரங்களும்✍ பெருமையும் உடையவர்களாவீர்கள். ஆதலால் உள்ள போர் வீரர்களையும்🏇🏻🏌🐘?🕴பிற படைகளையும் அழைத்துக் கொண்டு என் பின்னே வாருங்கள்.  ஒரு புதிய தலைநகரை🏁🏰 உண்டாக்கிப் படைகளைப் பெருக்கி அண்டைநாடுகளை🌎 வெல்லலாம்' என்றான். அமைச்சன் படைத்தலைவன் ஆகியோர் சாணக்கியன்👵🏻 சொற்படியே செய்தனர்.

   👵🏻சாணக்கியன், 👦🏻சந்திரகுப்தனையும் படைகளையும்🏇🏻🐘🏌🕴அழைத்துக் கொண்டு சீபருதம்⛰என்னும் மலைக்குச் சென்றான். மலையின் ஒரு பக்கத்தில் அனைவரையும் இருக்கச் செய்து 👵🏻சாணக்கியன் மட்டும் தன்னந்தனியே அந்த மலையில் இரும்மைப் பொன்னாக்கும் 🌿 மூலிகையைத் தேடித் திரிந்தான்.
                (தொடரும்)


 😷சாணக்கிய முனிவர்🙏
--------------11------------
  👵🏻   சாணக்கியன் மலை முகட்டிலிருந்த⛰ தப்பல் என்னும் சமமான🏞 நிலப்பகுதிக்குச் சென்றான். அங்கு ஒரு வகை முடைநாற்றம் வீசியது. நாற்றம் எங்கிருந்து வருகிறது என்று திரும்பிப் பார்த்தான். அருகிலிருந்த  மூலிகைச் 🌿சாற்றுக் கிணற்றிலிருந்து🕳 அந்த நாற்றம் வீசுவதைக் கண்டான். அந்தக் கிணற்றை மூடியிருந்த கல்லைப் புரட்டித் தள்ளினான். ஆழமான 🕳கிணற்றினுள்ளே ஒருவன்👴🏼 ஒரு ஓரமாக ஒட்டிக்கொண்டு நிற்பதைக் கண்டான். 👵🏻சாணக்கியனுக்கு வியப்பு மேலிட்டது. 'கல்லால் மூடப்பட்ட கிணற்றுக்குள்👴🏼 நீ எப்படி வந்தாய்' என்று👵🏻 சாணக்கியன் வினவினான்.

  'பொன் செய்யும் கலையைக் கற்ற ஒரு துறவி😄 என்னை இந்த மூலிகைச் சாற்றுக்குள் இறங்கி மூலிகைச் சாற்றை சுரைக்குடுக்கையில்🍶 முகந்து கொடுக்குமாறும், அந்த மூலிகைச் சாற்றால் செய்யும்🏵 பொன்னில் சரிபாதி எனக்குத் தருவதாகவும் கூறினான். அவன் பேச்சை நம்பி நான👴🏼 இந்தக் கிணற்றுக்குள் இறங்கி மூலிகைச் சாறு முகந்து கொடுத்தேன். என்னை மேலே ஏற்றிவிடாமல் கல்லால் கிணற்றை மூடிவிட்டுப் போய்விட்டான்' இதற்கு முன்னும்  பலரை இவ்வாறு மூலிகைச் சாற்றை முகந்து தருமாறு கிணற்றுக்குள் இறக்கி ஏற்றி விடாமல்😬 கொன்றிருக்கிறான்'  என்று கிணற்றுக்குள் இருந்தவன் கூறினான்.

     👵🏻 சாணக்கியன் அவனை நோக்கி ' நான் உன்னை மேலே ஏற்றிக் காப்பாற்றுகிறேன். எனக்கு மூலிகைச் சாறு  முகந்து கொடு' என்று கூறி கயிறுகளையும், 🍶சுரைக் குடுவைகளையும் கொணர்ந்து கிணற்றினுள் விட்டான். 🍶சுரைக்குடுவைகள் நிறைய மூலிகைச் சாற்றை நிரப்பி கயிற்றின் வழியாகத் தானும் மேலே ஏறி வந்த அந்த👴🏼 மாந்தனைச் சாணக்கியன்👵🏻 அன்புடன் நடத்தினான். மூலிகைச் சாற்றில் ஊறி புண்பட்டிருந்த👴🏼 அவனுக்கு வேறு மருந்துகளை இட்டு நலம் பெறச் செய்தான்.

       👵🏻 சாணக்கியன் மூலிகைச் சாற்றைப் பயன்படுத்தி பொன்கட்டிகளை🏵 ஏராளமாகச் செய்து குவித்தான். 'சீபருவத மலையில் எவனொருவன் ஒருகூடை மண் கொண்டு வந்து கொட்டுகிறானோ அவனுக்கு ஒரு கட்டிப் பொன் கொடுக்கப்படும்' என்று மலையடிவாரத்திலும் தொலைவிலும் இருந்த ஊர்களில் 👵🏻சாணக்கியன் 📢பறையறைவித்தான். இதைக் கேட்ட😃 உழவனொருவன் தான் தூக்கமுடியுமளவு பெரிய கூடை நிறைய மண்ணைச் சுமந்து வந்து⛰ சீபருவத மலையுச்சியில் கொட்டினான். அவனுக்கு ஒரு பொற்கட்டியை 👵🏻 சாணக்கியன் பரிசளித்தான். இதைக் கேள்வியுற்ற அந்நாட்டு மக்கள் அனைவரும் ஆளுக்கொரு கூடை மண் கொணர்ந்து கொட்டினர்.
                    (தொடரும்)


 😷சாணக்கிய முனிவர்🙏
----------------12-----------
  🏞சீபருத மலைமேல் மண்குவியல் ஒரு பெரிய குன்று போல் குவிந்தது. மண் கொணர்ந்து கொட்டிய😧😊😆 மக்கள் சாணக்கியனிடம்👵🏻 சென்று பொற்கட்டி தருமாறு வேண்டினர். 👵🏻சாணக்கியன் அவர்களை நோக்கி, 'நான் ஒரு கூடை மண் மட்டும் வேண்டும் என்று ஊரில் பறையறையச் 😃சொன்னேன். முதலில் ஒரு உழவன் ஒரு கூடை மண் கொணர்ந்து கொடுத்து 🏵பொற்கட்டியையும் வாங்கிக் கொண்டு போய்விட்டான். 👵🏻''நான் உங்களை மண்😧😊😆 கொணர்ந்து கொட்டுமாறு சொல்லவில்லை. எனக்கு இவ்வளவு மண் தேவையில்லை. நீங்களாகக் கொண்டு வந்த மண்ணை நீங்களே எடுத்துக் கொண்டு போங்கள்'' என்று அவர்களை அனுப்பி விட்டான். அனைவரும் ஏமாந்து⛺ வீடு திரும்பினர்.

    👵🏻சாணக்கியன் மலை போல் குவிந்த மண்ணைப் பயன்படுத்தி, சீபருவத மலைமேல் பெரிய கோட்டையையும் அரண்மணையையும்🏛 கட்டினான். மலையுச்சியில்⛰ கருங்கல் பாறைகள் மேல் உயர்ந்த மாடமாளிகைகளை🏢🕍 எழுப்பினான். பெரும் பொருள் செலவு செய்து கோட்டை , அரண்மனை, ஆகியவற்றை அழகு படுத்தினான். 🐘யானைப்படை, ?🏇🏻குதிரைப்படை ஆகியவற்றையும் பெருக்கினான். படைகள் பெருகியதும் பாடலிபுத்திரத்தின் மேல் 👦🏻சந்திரகுப்தன் தலைமையின் கீழ் படையெடுத்து அரசன்👮🏼 மகாபதுமனைத் தாக்க✍ ஆணையிட்டான்.

      👵🏻சாணக்கியனின் படைகள்  👦🏻சந்திரகுப்தனின் தலைமையில் போருக்கு வருவதைக் கண்ட மன்னன்👮🏼 மகாபதுமன் பெரும்படையுடன் எதிர்த்துத் தாக்கினான்.
பாடலிபுரத்தை நெருங்கவிடாமல் போரிட்டுச் 👵🏻சாணக்கியனின் படைகளைத் தோற்கடித்தான். சாணக்கியனின் படைகள் நாலாப்புறமும் அஞ்சி சிதறி ஓடின. 👵🏻சாணக்கியன் தன் படைகளை மீண்டும் ஒன்று திரட்டித் தன் கோட்டைக்குத் திரும்பச்செய்தான்.

     பாடலிபுரத்தின் மேல் அடுத்த ஆண்டும் படையெடுத்தான்.👵🏻 மீண்டும் தோற்றான். இப்படிப் பல ஆண்டுகள் படையெடுப்பதும் தோற்பதும் 👵🏻👦🏻சாணக்கியனுக்கும் சந்திரகுப்தனுக்கும் இயல்பாக இருந்தன. இறுதியாகச் சாணக்கியன் தன்🏇🏻🐘படைகள் முழுவதையும் திரட்டி நன்கு பயிற்சி கொடுத்து பாடலிபுரத்தின் மேல் படையெடுத்தான். இருதிறத்துப் படைகளுக்கும் கடும்போர் நடந்தது. முன்பு போலவே 👵🏻 சாணக்கியனின் படைகள் தோற்றுச் சிதறும் நிலையைக் 👀 கண்டான்.                                   👵🏻 சாணக்கியன் போர்க் களத்திலிருந்து தப்பியோட முடியாதவாறு படைகள் வளைத்துக் கொண்டன.
                   (தொடரும்)


 😷சாணக்கிய முனிவர்🙏
----------------13-----------
  சாணக்கியன் போர்க்களத்தில் இருந்து வெளியிலும் தப்பியோட முடியாதவாறு பகைவரின் படைகள் வளைத்துக் கொண்டன. ஆதலால் 👵🏻சாணக்கியன் போரக்களத்தின் அருகில் இருந்த 🌷தாமரைக்குளத்தில் மூழ்கி ஒளிந்து கொண்டான். போர் முடிந்து மாலையில் நன்கு இருள் பரவியபின் 🏖குளத்தை விட்டு வெளியே வந்தான்.  👵🏻 சாணக்கியனைப் பசி வாட்டியது. பாடலிபுரத்திற்குள் மாற்றுப்புனைவு🎅🏻 (மாறுவேடம்) இட்டுக் கொண்டு சென்றான்.

    துணி👘நெய்து வாழும் நெசவாளர் வீட்டுக்குச் சென்றான். நெசவாளர் வீட்டில்🏚 நரைத்துத்திரைத்த ஒரு தொண்டு கிழவி🙍🏼 சாணக்கியனை "வா! மகனே ! இந்த இருளில்🌑 எங்கே வந்தாய்? ஏன் களைத்து காணப்படுகிறாய் ? இப்படி உட்கார் ! என்றாள். 👵🏻 சாணக்கியன் பசியோடிருப்பதை அறிந்து உட்கார மணையிட்டுச் சூடாகக் கொதித்துக் கொண்டிருந்த கூழைத்🍵 தட்டில் வார்த்து உண்ணுமாறு கூறினாள்.

  மிகவும் பசியால் வருந்திய 👵🏻சாணக்கியன் சூடான கூழைக் கையில் எடுத்து விரைவாக உண்டான். அவன்👅நாவும்🖐🏽கையும் சுட்டதால் வாயை ஊதி கையை உதறிக் கொண்டான். அவன் உடம்பு குலுங்கியது. 🍵கூழை ஆற வைத்து குடிக்கத் தெரியாத 👵🏻சாணக்கியனைப் பார்த்து 🙍🏼அக்கிழவி சிரிக்கத் தொடங்கினாள்.

  🙍🏼அவள் , 👵🏻சாணக்கியனைப் பார்த்து, "இந்த உலகத்தில் ஏற்கனவே பெரிய முட்டாள்கள் இரண்டு பேர் இருக்கிறார்கள். இப்போது உன்னோடு சேர்த்து முட்டாள்களின் தொகை மூன்றாயிற்று என்றாள். உடனே சாணக்கியன்👵🏻, துணுக்குற்றவனாய் 'அந்த முட்டாள்கள் யார்?  எவ்வாறு முட்டாள்களானார்கள்' என்று வினவினான்.  🙍🏼கிழவி சொல்லத் தொடங்கினாள்.

  'இந்த நாட்டு அரசன்👮🏼மகாபதும நந்தன் முதல் முட்டாள். அவனை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருக்கும்👵🏻 சாணக்கியன் இரண்டாவது முட்டாள். 🍵தட்டில் வார்க்கப்பட்ட கூழை தட்டின் விளிம்புப் பகுதிகளில் சிறிது சிறிதாக ஆற ஆற எடுத்துண்ணத் தெரியாமல் கையும் வாயும் வேகுமாறு சுடச்சுட கூழைத் தின்ற நீ🎅🏻 மூன்றாவது முட்டாள்.

   👮🏼நந்தன் எவ்வாறு முட்டாள் ஆனான் என்பது உனகக்குத் தெரிய வேண்டுமானால் கேள்!  சொல்லுஉகிறேன. நநத அரசன் 👮🏼மகாபதுமன் முன்பு சாணக்கியனுக்கு அறுபது ஊர்களைக் கொடுத்துப் பிறகு பறித்துக் கொண்டான். கொடுத்த ஊர்களைப் பறித்துக் கொண்டதற்காகச் 👵🏻சாணக்கியன் பகைமையும், சூளும் (சபதம்) மேற்கொண்டிருப்பதை அறிந்து அப்பொழுதே தன் பகைவனான 👵🏻சாணக்கியனைக் கொல்லாமல் விட்டதால் அரசாள் உளவு (ராஜதந்திரம்) தெரியாத மகாபதும  நந்தன் முதல்தரமான முட்டாளாவான்.
                    (தொடரும்)


 😷 சாணக்கிய முனிவர்🙏
--------------14-------------
      நந்த மன்னனைப் போரிட்டு வெல்ல நினைக்கும் ,👵🏻 சாணக்கியன் முட்டாள்களுக்கெல்லாம் முட்டாள். ஆற்றை🚣🏿எதிர்த்த🌳 மரமும், அரசனை எதிர்த்த குடியும் வாழ முடியாது. 👵🏻 சாணக்கியன் தன் சினத்தை😬 யும் சூளுரை(சபதம்) யையும் பெரிதாக நினைக்கிறானே ஒழிய எந்த வினையை எவ்வாறு செய்ய வேண்டும் என்று அவனுக்குத் தெரியாது. 👵🏻சாணக்கியன் அரச மரபில் பிறந்தவனல்லன். ஆதலால் போர் முறைக்குரிய தந்திரங்களும் அவனுக்குத் தெரியாது. சாணக்கியனுக்கு👵🏻 சிறிதேனும் அறிவிருந்தால் வீணாகப் போர்புரிந்து கொண்டிருக்க மாட்டான். பகைவனின் நாட்டை வேறு வகைகளில் கெடுத்திருப்பான். 👮🏼அரசனுக்கு எதிராக மக்களையும் அரசு அதிகாரிகளையும் தூண்டி விட்டிருப்பான். பகை நாடுகளை ஒன்று திரட்டி நந்தனின் மீது ஏவியிருப்பான். 👮🏼நந்தனுக்கு நண்பராக இருந்தவர்களை எல்லாம் பிரித்து பகைவராக்கி நந்தனின் வலிமைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து இறுதியில் நந்தனை எளிமையாகக் கெடுத்திருப்பான். நந்தனின் படைத் தலைவர்களுக்கு ஏராளமான பொன்னையும், பொருளையும் கொடுத்துத் தன் பக்கம் திருப்பிக் கொண்டிருப்பான். இத்தகைய சூழ்ச்சிகளால், எவராலும் மதிக்கப் படாமல் துணையின்றி நந்த அரசன்👮🏼 தனித்து விடப்படும் நிலைமை பார்த்துப் படையொடு தாக்கி தன் எண்ணத்தை நிறைவேற்றிக் கொண்டிருப்பான். சாணக்கியன்தான்👵🏻 முட்டாளாயிற்றே. நான் இவற்றையெல்லாம் சொல்லி என்ன பயன் ? என்று கிழவி🙍🏼 பெருமூச்சு விட்டாள்.

      👵🏻சாணக்கியன் கிழவியை🙍🏼 மனமாற வாழ்த்தினான். 'ஆசிரியரும் அரசியல் அறிவு நூல்களும்📚 கற்றுத் தராத அரசியல் உளவுகளை இந்தக் கிழவி மிக எளிதில் கற்றுக் கொடுத்து எனக்கு பெரிய தெளிவை உண்டாக்கி விட்டாள்' எனக் களிப்புற்று கிழவியிடம் விடைபெற்று⛰ சீபருவத மலைக் கோட்டைக்குச்🏛 சென்றான்.

👵🏻  சாணக்கியன்  நெசவாளர் வீட்டுக் கிழவி கூறிய அத்தனை உளவுகளையும் கையாண்டு, 👮🏼 நந்தனைக் கெடுக்கத் தொடங்கினான். நந்தனின் பகைவர்களைத்😄😆😃 தனக்கு நண்பர்களாக்கிக் கொண்டான்.👮🏼 நந்தனின் நண்பர்களையெல்லாம்  நந்தனுக்குப் பகைவராக்கி விட்டான். நந்தனின் படைத் தலைவர்களுக்குப் பெரும் பொருள்💰 கொடுத்தும் ஆசை🤒 காட்டியும் தன் பக்கம் திருப்பிக் கொண்டான். பல ஆண்டுகளாக இந்தச் செயல்களை மெதுவாகச் செய்து வந்தான். மகத நாட்டு மக்கள் நந்தனை வெறுக்குமாறு அவர்கள் மனதை😇 மாற்றினான்.🏛 அரண்மனையிலும் அரசனுக்கு👮🏼, ஆதரவாளர் இல்லாத நிலையை உருவாக்கினான். 👮🏼நந்த மன்னன் தன்னை உளமாற உண்மையாக விரும்பும் ஆதரவாளர் ஒருவரும் இல்லாத நிலையை எய்தினான். அரண்மனைப் பெரிய அதிகாரிகள் ஒப்புக்காக அரசனைப் புகழ்ந்து😛😜 பேசினர். உள்ளார மனம் வேறு பட்டிருந்தனர்.
                 (தொடரும்)


 😷சாணக்கிய முனிவர்🙏🏻
---------------15------------
   👵🏻சாணக்கியன், இதுவே தக்க நேரம் என அறிந்து, பெரும்படையுடன் பாடலிபுரத்தைத் தாக்குமாறு , 👦🏻சந்திர குப்தனை ஏவினான். பெரும் போர் நடந்தது. போரில் 👮🏻மகாபதுமநந்தன் தோற்று ஓடிப்போய் விட்டான்.அவனுடைய படைத்தலைவர்கள் எல்லாம், 👵🏻 சாணக்கியன் பக்கம் சேர்ந்தனர். நந்தனின் அமைச்சன்👱🏼 இறுதிவரைப் போரிட்டுத் தோற்றான். அவனைப் பிடித்து விலங்கிட்டு இழுத்து வந்தனர். சாணக்கியன் சுபந்துவைச்👱🏼 சிறையிலிட்டான்.

   போரில் பெரும் வெற்றி பெற்ற👵🏻சாணக்கியன் பாடலிபுரத்து அரண்மனையினுள்🏤 புகுந்து கருவூலத்துக்கும், அரசிகளின் வாழ்விடத்துக்கும் காவலிட்டான். நகர மக்களை மகிழ்வித்தான். 📅நல்ல நாளில்👦🏻 சந்திரகுப்தனை அரியணையில் ஏற்றி மகதநாட்டு அரசனாக முடிசூட்டினான். 👵🏻சாணக்கியனின் 👍சூளுரை(சபதம்) நிறைவேறியது. மகாபதுமநந்தனின் மனைவி சந்திரமதியை👰🏻 சந்திரகுப்தனின் பட்டத்தரசியாக்கினான்.

  இதுவரை நடந்த பல போர்களால் நந்த மன்னர்களின் கருவூலம் 💵💴💰பணமின்றி வறிதாக இருப்பதும், தன் கருவூலத்திலும் செல்வம் வறண்டு விட்டதையும் அறிந்த👵🏻 சாணக்கியன் மற்றொரு தந்திரம்😜 கையாண்டான். நாட்டு மக்களையும் நகர மக்களையும் வரவழைத்து 🏤அரண்மணையில் தொடர்ந்து பலநாள் பெரிய விருந்து🍚🍪🎂🍧🍷🍺 நடத்தினான். உணவில் சொக்குப் பொடியை🍲தூவினான். அரண்மனையில் விருந்துண்ட அனைவரும்😇சொக்கிப் போய் அரசனும் சாணக்கியனும் சொல்வதைச் செய்தனர். "நீங்கள் உங்கள் 💴பணத்தையும்,💰பொற்காசுகளையும் 💍அணிகலன்களையும் எங்கே வைத்திருக்கிறீர்கள்? கொண்டு வந்து காட்டுங்கள்" என்று 👵🏻சாணக்கியன் கூறியதும் அவரவர் தத்தம் செல்வங்களைக் கொணர்ந்து கொடுத்தனர். அவற்றை வாங்கி கருவூலத்தை நிரப்பினான். கருவூலம் பொற்காசுகளால் நிரம்பி வழிந்தது.

   👵🏻சாணக்கியன், 👦🏻சந்திரகுப்தனை நோக்கி, "உனக்கு செய்ய வேண்டுவன அனைத்தும் செய்து விட்டேன்.நீ செல்வச் செழிப்புடன் வாழ்ந்திடு. பன்னிரண்டு ஆண்டுக்குள் நந்த மரபை ஒழிப்பேன் என்னும் என் சூளுரையும் வெற்றி பெற்றது. நான் இதுவரை அணிந்து வந்த காவி உடையும், கமண்டலும் முக்கோலும் துறவிக் கோலமும் இன்றோடு களைந்து விட்டேன்" என்று கூறி மகிழ்ந்தான்.⛰சீபருவத மலைக்கோட்டையிலிருந்த தன் மனைவி யசோமதியை👩🏻 வரவழைத்து 👵🏻சாணக்கியன் பாடலிபுரத்தில் இனிது வாழ்ந்து வந்தான்.
                  (தொடரும்)


😷சாணக்கிய முனிவர்🙏🏻
- - - - - - - - 13----------------
     👦🏻சந்திரகுப்தனின் 👰🏻பட்டத்தரசி கருவுற்றாள்.அவள் ஒரு நாள் தேரில்🚩 ஏறிச் செல்லும்போது தேர்ச்சக்கரங்கள் நிலத்தில் புதைந்ததால் அதன் பத்து ஆரக்கால்கள் நிலத்துக்குள் அமிழ்ந்தன. இதைக் கண்ட👵🏻 சாணக்கியன் சந்திரகுப்தனின் ஆட்சி விரைவில் கவிழுமென்றும், பத்து மயில் மரபினர்(மயூரர்- மௌரியர்) மகத நாட்டைக் கைப்பற்றி ஆட்சிபுரிவர் என்றும் உய்த்துணர்ந்தான்.

   அரசி👰🏻சந்திரமதி  நிறைமாதமாகி 🙇குழந்தை பெறும் நாளை 🗓எதிர்நோக்கி இருந்தாள். 👦🏻சந்திரகுப்தன் உணவு உண்ணும் போது அவனருகில் 👰🏻வந்து அமர்ந்தாள். 👵🏻சாணக்கியனும் அங்கிருந்தான். சந்திரகுப்தனின் உணவில் என்றும்போல் அன்றும் நஞ்சு கலக்கப் பட்டிருந்தது.நஞ்சு கலந்த உணவை நாள்தோறும் 👦🏻சந்திரகுப்தன் உண்டு பழகியவன் என்பது, 👰🏻சந்திரமதிக்குத் தெரியாது. அவள் அரசனோடு உடன் உண்ண ஆசைப்பட்டாள். 👦🏻சந்திரகுப்தன் தன் உணவில் நஞ்சிருப்பதை மறந்தவனாய் சோற்றுருண்டையைக் கையிலெடுத்து சந்திரமதிக்கு ஊட்டினான். இதைக் கண்ட 👵🏻சாணக்கியன், சோற்றுருண்டையை, 👰🏻அரசி வாயிலிட்டு விழுங்குமுன் அவள் தலையை வாளால் ஒரே வெட்டாக வெட்டி எறிந்து விட்டான். அவள் வயிற்றைக் கிழித்துக் குழந்தையை பாதுகாப்பாக வெளியில் எடுத்தான். அக்குழந்தையின்🙇 உச்சந்தலையில் பனித்துளியினும் சிறிய நஞ்சுத்துளி பரவியிருந்தது. குழந்தையை நஞ்சு தாக்காவிடினும் துளிபோல நஞ்சு தலையில் பரவியிருந்ததால் அக்குழந்தைக்குப் 🙇 பிந்துசாகரன் எனப் பெயரிட்டனர்.
                 (தொடரும் )


 😷சாணக்கிய முனிவர்🙏🏻
- - - - - - - - - - 14 - - - - - - - - -
     👦🏻சந்திரகுப்தன் தன் மனைவி👰🏻 சந்திரமதி இறந்ததற்காகப் பெரிதும் வருந்தினான்.  😭அவனால் அவளை மறக்கவே முடியவில்லை.  'ஐயோ! என் நல்லலே ! உனை பிரிந்து வாழேன்' என்று கூறி வாளால் தன்னைத்தானே மாய்த்துக் கொண்டு 👦🏻சந்திரகுப்தன் இறந்து விட்டான். குழந்தை🚶🏻 பிந்துசாரனுக்கு அரசனாகப் பட்டங்கட்டினர். குழந்தை வளர்ந்து பெரியவனாகும் வரை 👵🏻சாணக்கியனே நாடாண்டு வந்தான்.

   👨🏻பிந்துசாரன் வளர்ந்து கட்டிளங் காளையானான். 👵🏻சாணக்கியனுக்கு இவ்வுலக வாழ்வில் வெறுப்பு தோன்றியது. தவம் மேற்கொள்ள நினைத்தான். ஆதலால் சிறையிலிருந்த 👱🏽சுபந்துவை விடுதலை செய்து மீண்டும் அமைச்சனாக்கினான். அவனைச் சிறையிலிட்டு துன்புறுத்தியதற்காக 🙏🏻மன்னிக்க வேண்டினான். 🏛அரண்மனை, அமைச்சர் பதவி, 💰செல்வம்,😄இன்ப வாழ்வு அனைத்தையும் துறந்து, 👵🏻சாணக்கியன் வெளியேறினான்.

   😷மதிவரர் என்னும் முனிவரிடம்,👵🏻    துறவு மேற்கொண்டான். முனிவரிடம் ஆகமங்கள் முதலிய நூல்களைக் கற்று கடுந்தவம் செய்து ஆச்சாரியர் என்னும் பட்டம் பெற்றான். 👵🏻😷சாணக்கிய முனிவருக்கு பல சீடர்கள் வந்து சேர்ந்தனர். தன் சீடர்களுடன், சிற்றூர்,  பேரூர், மலையூர், காட்டூர், ஆற்றூர், பட்டணம், துறைமுகப் பட்டினம், தலைநகரம் எனப் பலவிடங்களுக்கும் சென்று இறுதியில் சோணையாற்றங் கரையிலிருந்த மாட்டுப் பட்டியருகில் கடுந்தவம் மேற்கொண்டார்.

   😷சாணக்கிய முனிவர்  சோணையாற்றங்கரை யில் கடுந்தவம் செய்து கொண்டிருப்பதை அமைச்சன்👱🏽சுபந்து அறிந்தான். மகாபதும நந்தனை👮🏻 அழித்துத், தன்னையும் விலங்கிட்டுச் சிறையில் நெடுங்காலம் 😷(👵🏻) சாணக்கியன் துன்புறுத்தியதை நினைத்தான். 😷சாணக்கிய முனிவனைப் பழிக்குப்பழி😁 வாங்க வேண்டும் என்னும் எண்ணம்👱🏽சுபந்துவிற்குத் தோன்றியது.
           🙏🏻🙏🏻🙏🏻
          ( வளரும் )


 😷சாணக்கிய முனிவர்🙏🏻
**************15**************
     👱🏽சுபந்து அமைச்சனுக்கு, மகாபதுமநந்தனை👮🏻 அழித்துத், தன்னையும் விலங்கிட்டு சிறையில் நெடுங்காலம் துன்புறுத்திய,  👵🏻😷சாணக்கிய முனிவனைப் பழிக்குப்பழி வாங்கவேண்டும்என்றஎண்ணம் தோன்றியது.

   அன்று மாலையில் 😷 சாணக்கிய முனிவரைக் காண, 👱🏽சுபந்து  வழிபடு பொருள்களை எடுத்துச் சென்றான். முனிவரை வலம் வந்து வணங்கி பூசை செய்தான். முனிவரிடம் விடை பெற்றுத் திரும்பும்போது தன் ஆட்களிடம் இந்த முனிவர்கள்  இரவில் கண்ணை மூடிக் கடுந்தவம்செய்வர். இது மாரிக்காலம் ஆதலால் குளிரால் அவர்கள்  நடுங்க நேரிடும். ஆதலால் வறட்டிகளையும் உலர்ந்த புல்லையும் முனிவர்களின் மேல் போட்டுப் போர்த்தி விடுங்கள் என ஆணையிட்டான். அவ்வாறே பணியாட்கள் முனிவர்களின் மேல் ஏராளமான வறட்டி, புல், குப்பை கூளங்களைப் போட்டு மூடிவிட்டனர். சுபந்து👱🏽 சிறிது நேரம் கழித்து வந்து அனைவர்க்கும் தீமூட்டி விட்டுத் திரும்பிப் போய் விட்டான்.

🔥தீ கொழுந்து விட்டெரிந்தது. 😷😷சாணக்கிய முனிவரும் அவருடைய சீடர்களும் தீயில் கருகி😱😱வெந்தனர். சாணக்கிய முனிவர் மனத்தை ஒருமுகப் படுத்தி 🔥தீச்சுடும் துன்பத்தைப் பொறுத்துக் கொண்டு அறநினைவுகளுடன் இவ்வுலக வாழ்வை நீத்து சனத்குமார கல்பம் என்னும்                     மேலுலகில்  தேவனாகப் பிறந்தார். ஏனையவர்கள் சவுதரும கல்பம் என்னும் மேலுலகில் தேவர்களாகப் பிறந்தனர்.

  👵🏻😷சாணக்கிய முனிவரின் கதையைக் கேட்ட, படித்த அன்பர்கள் அறநெறிகளில் பற்றுடையவராகி, உலகத் துன்பங்கள் அனைத்தையும் பொறுத்து மேலுலக இன்பங்களை எய்துவீர்களாக!!!
      (முடிந்தது) 

No comments:

Post a Comment