Monday, April 4, 2016

SIMHANAGADDE - சிம்மனஹத்தே

Sri Chandraprabanatha swamy, yakshi Jwalamalini Atishaya Kshetra - 

ஸ்ரீ சந்திரப்ரபுஸ்வாமி மற்றும் யக்ஷி ஸ்ரீ ஜ்வாலாமாலினி அதிசய க்ஷேத்திரம்



  


Location :     Click for MAP


lies on the Google map in the coordination of (13.605202, 75.497389)

ie put the latitude, Longitude on the search box 
or In the navigator from your location to (13.605202, 75.497389) and find the distance also.

Route: 

Bangaluru → Tumkuru → Arsikere → Banavara → Bhadravati → Umblibail → Mandagadde → NRpuram → Simhanagadde. = 305 Kms.

Mysore → Srirangapatna → Chennapatna → Arsikere → Banavara → Bhadravati → Umblibail → Mandagadde → NRpuram → Simhanagadde. = 273 Kms. 




How to get there:
Nearest Airport: Mangalore or Bangalore International Airport
Nearest Railway Station: Birur

Road: Simhanagadde is well connected to road network. Good bus facilities are available from Birur,
Shimoga and Chikmagalur.

ஸ்தலத்தை அடைய மார்க்கங்கள்:
விமான நிலையம்: மங்களுர்/ பெங்களூரு
ரயில் நிலையம்: பிரூர்.

நாற்திசைகளிலும் சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளது. ஷிமோகா, சிக்மகளூர், பிரூர் போன்ற இடங்களிலிருந்து சுலபமாக வருவதற்கு பஸ்வசதிகள் அதிகம் உள்ளன.


************************ 



The predecessor


The present Bhattarak



யதேஹள்ளி எனும் புராதன ஸ்தலம் சிம்மனஹத்தே என காரணப்பெயர் மாற்றம் பெற்று, பின்னர் நரசிம்ஹராஜபுரம் என்றழைக்கப்பட்ட தற்போதைய கிராமம் என் ஆர். புரா எனும் தாலுக்கா நகரத்தின் ஒருபகுதியாக சிக்மகளுர் ஜில்லாவில் அமைந்துள்ளது.

இச்சமண அதிசய க்ஷேத்ரம்ம் தோன்றிய வரலாறு…

உத்தர்கன்னடா ஜில்லாவில், ஹன்னொவரா தாலுக்காவில் ஜெருசோப்பா எனும் கிராமம் உள்ளது. சாளுவ மன்னர்களின் கட்டுப்பாட்டில் நல்ல செழிப்புடன்  ஒரு காலத்தில் மிகவும் வியாபாரத்தலமாகவும் இருந்தது. மேலும் அக்காலத்தில் நூற்றுக்கணக்கான ஜினாலயங்களுடன் விளங்கிய சமணத் திருத்தலமாகும். சாளுவ பரம்பரையில் வந்த சென்னபைரவிதேவி எனும் பெண் அரசி பலகாலம் ஆண்டு வந்தார். அவர் வழிபாட்டில் இருந்த  ஸ்ரீஜ்வாலாமாலினி யக்ஷி, பலருக்கு வழிபடும் தெய்வமாக இருந்தது. அவ்வாறான வழிபாட்டுத்தலம் 15-16 ம் நூற்றாண்டு வரை செழிப்புற்று இருந்தது.

அடிக்கடி போர்த்துக்கீசீய மன்னரின் படையெடுப்பும், அருகிலிருந்த கிலாடி மன்னர்கள் மற்றும் பில்ஜி தலைமையும் இடையூறுகளைத் அவ்வரசிக்கு தந்து வந்தன. ஒரு முறை அவர்கள் தாக்குதலில் பல ஜினாலயங்கள் அழிக்கப்பட்டன.

அவ்வேளையில் அப்போது ஸ்ரீ ஜ்வாலாமாலினியின் உபாசகராக விளங்கிய ஆச்சார்ய சம்பந்தபத்ர ஸ்வாமி  வாழ்ந்து  வந்தார். அந்த அழிவுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது.

அப்போது ஓர்நாள் அவர் கனவில் ஜ்வாலாமாலினி தேவி இனி இத்தலம் அழிவுறும் நிலையை எய்துமாதலால், இங்கிருந்து கிழக்கு நோக்கி சென்று அமைதியான ஓர் இடத்தில் என்னை பிரதிஷ்டை செய்து விடு என ஆணையிட்டது. அவ்வாறே ஆச்சார்ய பத்ரபாகு முனிவரும் ஒரு மாட்டுவண்டியில் அந்த  யக்ஷி சிலையுடன் கிழக்கு நோக்கி பயணமானார். ஒருநாள் காட்டுப்பகுதியில் யதேஹள்ளி என்னும் ஸ்தலத்தில்  பசுவின் கன்று பால் குடித்துக் கொண்டிருக்கும் போது  அருகில் ஒரு புலி அவற்றுடன் நட்புணர்வுடன்  இருந்ததைக் கண்டார். அவ்வதிசய நிகழ்வினை கண்டு ஆச்சர்யத்தில் மூழ்கியவர் அதுவே அஹிம்சையின் உச்சமான ஸ்தலம் என்பதால், ஸ்ரீ  ஜ்வாலாமாலினி யக்ஷியை அவ்விடத்திலேயே பிரதிஷ்டை  செய்து விட்டார்.

அவ்வதிசயம் நிகழ்ந்ததினால் சிம்மம்+பசு+பசுமைவெளி என்ற காரணப்பெயருடன் சிம்ஹனஹத்தே என்று வழங்கப்பட்டது. அவருக்குப் பின்னர் பல ஆண்டுகள் கழித்து மைசூர் மஹாராஜா நரசிம்மராஜ உடையார் வந்து தரிசித்ததினால் அவ்விடத்திற்கு அரசினரால் நரசிம்மராஜபுரம் என்ற தற்போதைய பெயரும் அவ்வேளையில் ஆவணத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

ஜைன மடம் தோன்றிய வரலாறு….

ஆச்சார்ய சம்பந்தபத்ர ஸ்வாமி அவர்கள் ஸ்ரீ ஜ்வாலாமாலினியை பிரதிஷ்டை செய்த பின்னர் நாள்தோறும் பெரும்பாலான நேரம் யதாஸ்தானத்திலேயே  பூஜை, சடங்குகளை செய்து காலம் கழித்து வந்தார். வயோதிகம் அதிகரிக்க தன் ஆயுள் முடியும் வேளை வந்து விட்டதாக உணர்ந்த அம்முனிவர், இத்தலத்தை நிருவகிக்க அடுத்து ஒரு சரியான பக்தரை நியமித்தால் நல்லது என்ற மன உருத்தலுடனிருந்தார். அவ்வாறான வேளையில் ஓர்நாள்  ஆலய மணி அடித்த ஓசை கேட்டதும் கவனித்த போது கஷாயம் உடுத்திய ஒரு மனிதர் அத்தலத்திற்கு வருவதைக் கண்டார். விசாரித்ததில் அவரே அருகிலுள்ள பெனுகொண்டை  மடாதிபதி  லஷ்மிசேன பட்டாரக ஸ்வாமிஜி என்பதை தெரிந்து கொண்டார். அவரே இத்தலத்தை வளர்ச்சியடைய, பராமரிக்க தன்காலத்திற்கு பின்னர் சரியானவர் என உணர்ந்து; அந்த  தலத்திலேயே தமது  மடத்தை நிறுவி இந்த அதிசய க்ஷேத்ரத்தை நிர்வாகம் செய்ய வேண்டினார்.

அம்மடாதிபதியும் அவர் சொல்லை சிரமேற்கொண்டு இங்கு பெனுகொண்டை மடத்தை  நிறுவி வளர்ச்சிப்பணியில் ஈடுபட்டார். இந்த மடாதிபதி மற்ற டெல்லி, கொல்லாபுரம், ஜினகஞ்சி, பெனுகொண்டா அனைத்திற்கும் ஒருங்கிணைந்த பீடாதிபதாக கருதப்பட்டார். பிற்காலத்தில் அவர் தலைமையில் கிளைமடமாக மடுகிரி, நாகமங்களா, பெல்லூர்  போன்ற இடங்களிலும் மடங்கள் தோன்றின.

அந்தந்த மடத்தில் மடாதிபதிகளாக வழிவழியாக, அப்போதைய மடாதிபதி மற்றும் அத்தல சிராவர்களால் புதியவர் தேர்வு செய்து அவர்களுக்கு கீழ் உள்ள ஜினாலயம், சிராவகர்களை சிறந்த முறையில் பரிபாலனம்  செய்து  வருகின்றனர்.


-----------------------------------------------------



Simhanagadde (original name – Yadehalli) also popularly called as Narasimharajapura (N.R.Pura) is a small village located adjacent N.R.Pura town, a taluk centre in the Chikamagalur district of Karnataka.
Installation of Jwalamalini Idol and Origin of the name

Gerusoppe, situated in the Honnavara Taluk of Uttara Kannada district is a small village in central Karnataka. This was the capital of Salva kings and flourished as one of the chief centres of Jainism in Karnataka. This had been the holy abode of Goddess Jwalamalini for few centuries and had a huge followership in the region. It is said to have continued till around 15-16th century.


The Jain muni Acharya Samathabadhra was looking after the place around this time. It is said that around this time Goddess Jwalamalini had felt that Gerusoppe is on the verge of extinction and is said to have appeared in the dreams of Samathabadhra Acharya and indicated the same to Acharya and asked him to move her idol from that place. As a result of this the Acharya is said to have traveled along the eastern direction with the idol on a bullock cart. While on his search to find the right place he crossed across Yadehalli (the present N.R.Pura) and was mesmerised on seeing an astonishing scene there. He found a cow grazing along with its calf in the midst of a ‘Gadde’ (fields) and a ‘Simha’ (Lion). The Simha was seen to be interacting with cow in a very calm and composed manner in contrary to its ferocious nature. He was astonished to see this and felt this as the right place to install the idol of the Goddess Jwalamalini. Since then the place is popularly known as ‘Simhanagadde’.


Further, the Yuvaraja of Mysore dynasty – Narasimharaja Wodeyar had visited this place in 1915.
Since, then the town has been named as Narasimharajapura in memory of his visit.


Bhattarakha Seat at Simhanagadde
After installing the idol of Goddess Jwalamalini, Acharya Samanthabadhra spent most of his time here by involving in spiritual activities. During the course of his stay after a period of time he felt that he is nearing Samadhi and was concerned about the future of the place. It is around this time that the temple’s bells started ringing by themselves. On seeing around he found a person coming towards the temple wearing a saffron clad. The person was none other than Sri Lakshmisena Bhattarakha Swamiji, the pontiff of erstwhile Penukonde Jain Mutt.


Looking at him Acharya Samanthabadhra felt that he was the right person to look after the place and advised to establish a Bhattaraka seat at Simhanagadde. Since then the Lakshmisena Bhattarakha seat has been established here and is popularly called as Simhanagadde Basti Mutt. The pontiff of this mutt is also said to be the pontiff of the Jain mutts at Delhi, Kolhapur, Jinakanchi and Penukonda. In addition to this there are sub branches of the mutt at Madugiri (Tumkur district of Karnataka), Nagamangala & Bellur (Mandya district of Karnataka).


Following the establishment of temple, this place got the name Simhanagadde. Simhanagadde in addition remained devotional hub for some Saints.

Atishaya: The idol of Jwalamalini is attractive and amazing. The miracle is that desires of devotees get fulfilled at this place.


அத்திருத்தலம் பல ஆலயங்களைக் கொண்டுள்ளது.

பகவான் பாகுபலி ஸ்வாமி ஆலயம்,  சந்திரப்பிரப ஆலயம்,  பார்ஸ்வநாத ஸ்வாமி ஆலயம், ஜ்வாலாமாலினி ஆலயம், சாந்திநாத ஆலயம், மடம்சார்ந்த ஆலயம், பிரம்ம யக்ஷ ஆலயம்,  க்ஷேத்ரபாலக ஆலயம், ஜலமந்திர்சமந்தபத்திரர் ஞானபீடம் மற்றும் ஆஸ்ரமும் உள்ளன.

மேலும் ஸ்ரீலஷ்மி சேன பட்டாரகரின் சமண மத பீடமாகவும் விளங்குகிறது.
தற்போதைய  மதகுருவாக தவத்திரு ஸ்வஸ்தி ஸ்ரீ லஷ்மிசேன பட்டாரக ஸ்வாமிஜி மடாதிபதி பீடத்தில் இருந்து, பெருமுயற்சியுடன் இந்த ஷேத்திரத்தின் வளர்ச்சிக்கான அனைத்து அம்சங்களுடன் வழிநடத்துகிறார்.





சமந்தபத்திரர் ஞானபீடம்:

சமண மரபில் தனித்தன்மையுடன் விளங்குபவர் சம்ந்தபத்திர ஆச்சார்யர்கள் ஆவர். மூன்றாம் நூற்றாண்டிலிருந்து ஐவர் அடுத்தடுத்து தோன்றி சமணத்தை வளர்த்தவர்கள். அதில் 15-16 ம் நூற்றாண்டில் வாழ்ந்த மூன்றாவது சமந்தபத்திரர் ஜெர்சோப்பாவிலிருந்த ஸ்ரீஜ்வாலாமாலினி அம்மனது கட்டளைபடி அங்கிருந்து சிம்மன்ஹத்தே ஸ்தலத்திற்கு கொணர்ந்து நிறுவியவர் ஆவார்.





There are more Jain temples at this place. Chandranath temple; Parsvanath swami temple; Jawalamalaini temple; Shantinath temple; Jalamandir; Math temple and kshetrapal temple.The Samantbhdra Gyanpeeth and Ashram are here.

This is also the seat of Bhattarak Shri Laxmisen.

The current pontiff of the Jain mutt His Holiness Swasti Sri Lakshmisena Bhattarakha Swamiji , has evinced keen interest in the overall development of the place.



Samanthabadhra Acharya & Simhanagadde

Samanthabadhra Acharya occupies a unique name in the lineage of Jaina Acharyas. He is said to belong to around 3rd or 4th century A.D. and his origin is traced to a region around the river Cauvery. After him we can find a series of around 5 Samanthabadhra Acharya’s in the Jain tradition. Of these the third Samanthabadhra belonging to Gerusoppe is said to be associated with Simhanagadde. A copper plate inscription at Simhanagadde mentions that he belonged to 15-16th century. He is said to have brought the idol of Goddess Jwalamalini from Gerusoppe to Simhanagadde.



ஸ்ரீ சாந்திநாத சுவாமி பஸ்தி: 1300 ல் இவ்வாலயம் கட்டப்பட்டு பல தடவைகள் சீரமைக்கப்பட்டுள்ளது. கடைசியாக 2008 ல் கர்ப்பகிருஹ சீரமைப்பு நடைபெற்றுள்ளது. நல்ல வெண்மை நிற சலவைக்கல்லால் ஆன 3 அடி உயர பத்மாசன நிலையில் உள்ள ஸ்ரீ சாந்திநாதர் திருவுருவம் பிர்திஷ்டை செய்யப்பட்டுள்ளது.
மேலும் அவ்வாலயத்தின் முன்னர் அழகிய வேலைப்பாடுடன் 64 அடி உயர மனத்தூய்மை கம்பம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. அதன் மேல் நாற்புரமும் சதுர்முக சாந்திநாதர் சிலைகள் உள்ளன. 1991 ல் நிலை நிறுத்தப் பட்டுள்ளது. 


Sri Shanthinatha Swamy Basadi – Scholars are of the opinion that the temple was constructed initially by around 1300 A.D. Later it was reconstructed in 1982. The reconstruction of the sanctum sanctorum (garbagriha) was done in 2008.



Manastambha – The 64 feet high manastambha installed in front of the Shanthinatha basadi consists of a chaturmukha (four face) Shanthinatha Swamy idol. It was installed and inaugurated in 1991.





ஸ்ரீபாகுபலி ஸ்வாமி பஸ்தி:

1962 ம் ஆண்டு 4 அடி உயரமுள்ள கருமை நிறக்கல்லால் ஆன பகவான் பாகுபலி காயத்சர்க உருவச் சிலை, சுற்றுவட்ட பாதையுடைய கருவறை வெதிகையில் நிறுவப்பட்டுள்ளது. அதற்கு முன் பெரிய பிரார்த்தனை கூடமும் மேற்கூரையுடன் அமைக்கப்பட்டுள்ளது.  அவ்வாலயத்திற்கு பக்கத்தில் சமண மடம் அமைந்துள்ளது. 




Jain Mutt and Sri Bahubali basadi – The temple built in 1962 has a spacious hall and a garbagriha with a pradakshina patha around the garbagriha. It has a 4 feet high black colourd idol of Lord Bahubali in Kayotsarga as the main deity.

 Adjacent to the temple is found the Jain Mutt. To the left of the temple is found an ancient memorial stone embedded on to the wall. This temple was reconstructed in 1988.







ஸ்ரீபார்ஸ்வநாத சுவாமி பஸ்தி: கருவறையும் இரு கூடங்களையும் கொண்ட இவ்வாலயத்தில் கருவறைக்கு வெளியே இருபுறமும் ஸ்ரீசரஸ்வதியும், ஸ்ரீபத்மாவதி மாதாவும் நிறுவப்பட்டுள்ளன. 1979 ம் ஆண்டு  கட்டப்பட்ட இவ்வாலயத்தின் கருவறை வேதிகையில் 3 அடி உயர கருமை நிற பார்ஸ்வ ஜிநரின் கருங்கல் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.



Sri Parshwanatha Swamy basadi – It has two halls followed by the Garbagriha. We can find the idols of Goddess Saraswati and Goddess Padmavathi at the entrance to the Garbagriha. These idols were donated by Smt Sushilamma wife of Sri R.P.Shantharaj in memory of her late in laws Sri Ratnagiri Pachhappa and Smt Hombujamma of Ratnagiri on 1st December 1979. The garbagriha has a 3 feet high black coloured idol of Lord Parshwanatha in Kayotsarga as the main deity.









ஸ்ரீசந்திரனாத சுவாமி பஸ்தி: இவ்வாலயம் 1778 ல் கட்டப்பட்டு, பின்னர் 1985 ம் வருடம் மீண்டும் சீரமைக்கப்பட்டு பஞ்சகல்யாணம் செய்யப்பட்டுள்ளது. அகலமான பிரார்த்தனைக்கூடமும், கருவறையும் கொண்டது. மூன்று அடி உயரமுள்ள பத்மாசன நிலையிலுள்ள சலவைக்கல் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கந்தக்குடியில் அமர்ந்துள்ள ஸ்ரீ சந்திரநாதருக்கு இருபுறமும் ஸ்ரீஜ்வாலாமாலினியும், ஸ்ரீபத்மாவதியும் நிறுவப்பட்டுள்ளன.


Sri Chandranatha Swamy basadi – Scholars are of the opinion that this temple might have been constructed initially in 1778. The Panchakalyana pratishta mahotsava of the reconstructed temple was held in 1985. It has a wide hall and a garbagriha. It has a 3 feet high marble idol of Lord Chandranatha in Padmasana seated on a lotus flower as the main deity. It has a gandhakuti and flanked by the idols of Goddes Padmavathi and Goddess Jwalamalini in the hall around the entrance leading to the Garbagriha.










ஸ்ரீஜ்வாலாமாலினி தேவி ஆலயம்:  மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. 15-16 ம் நூற்றாண்டில் ஜெர்சோப்பாவலிருந்து சம்ந்தபத்திர முனிவரால் கொண்டு வரப்பட்ட அம்மன் சிலை மிகப்பெரிய பிரார்த்தனைக் கூடத்துடன் கூடிய கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பல பக்தர்களை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் கொண்டு அருள் பாலித்து வருகிறாள். 1994 ல் மீண்டும் புணருதாரணம் செய்யப் பட்டுள்ளது.



Sri Jwalamalini Basadi – This is the most important of all the Jain temples at Simhanagadde.  It has an attractive black coloured idol of Goddess Jwalamalini as the main deity. The history of this idol dates back to the period around 15th & 16th century mentioned earlier in this article. It has a huge followership from across India and abroad. The temple has a very spacious hall and a sanctoum sanctorum. Reinstallation ceremony of the reconstructed temple was celebrated on a grand scale in 1994.







ஸ்ரீ பிரம்ம யக்ஷ பஸ்தி: சிறிய கருவறையும், முன் மண்டபமும் கொண்ட இவ்வாலயத்தில் குதிரைமீது அமர்ந்த ஸ்ரீபிரம்ம யக்ஷனும், இருபுறமும் நின்ற நிலையிலும் நிறுவப்பட்டுள்ளது. அழகிய இவ்வாலயம் 2007ம் ஆண்டு மீண்டும் சீரமைக்கப்பட்டுள்ளது.


ஸ்ரீ பைரவ க்ஷேத்ரபாலக பஸ்தி: 2008 ம் ஆண்டு மிகப்பழமையான ஸ்ரீ பைரவ க்ஷேத்ரபாலகர் நின்றநிலை உருவ கற்சிலை பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளது.



Sri Brahma Yaksha Basadi – The temple has a centrally located stone idol of Sri Brahma Yaksha riding a horse flanked by two Brahma Yaksha idols on either side. The reinstallation ceremony of the temple was held on 20th June 2007.


Sri Bhyrava Kshetrapala basadi – The temple has an ancient idol of Sri Bhyrava Brahma Yaksha in standing posture. The punarpratishapana mahotsava (reinstallation ceremony) of the temple was held on 27th March 2008.










ஜலமந்திர் -  பாவாபுரியில் உள்ள ஸ்ரீமஹாவீரர் மோக்ஷ ஸ்தலத்தை நினைவு கூறும் முகமாக 2008 ம் ஆண்டு ஸ்வஸ்தி ஸ்ரீ லஷ்மிசேன பட்டாரக ஸ்வாமிஜி மடாதிபதியவர்கள் முயற்சியால் ஸ்ரீமதி ஹேமாவதி ஹெக்டே அவர்களால் நிர்மாணிக்கப்பட்டது.


2008 ம் ஆண்டு தர்மாதிகாரி ஸ்ரீவீரேந்திர ஹெக்டே அவர்களால் பெரிய சமுதாய கூடம் ஒன்று ஆலயங்களுக்கு முன்னதாக கட்டப்பட்டுள்ளது.
மேலும் ஆண்டு தோறும் ரத உற்சவத்திற்கான ரதம் ஒன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.




Jala mandir – This was inaugurated on 25th March 2008 by Smt Hemavathi Veerendra Heggade in the presence of His Holiness Swasti Sri Lakshmisena Bhattarakha Swamiji of the Simhanagadde Jain Mutt. This is a replica of the Jala Mandir at Pavapuri.











ஸ்ரீ பைரவ க்ஷேத்ரபாலக பஸ்தி: 2008 ம் ஆண்டு மிகப்பழமையான ஸ்ரீ பைரவ க்ஷேத்ரபாலகர் நின்றநிலை உருவ கற்சிலை பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளது. 

Sri Bhyrava Kshetrapala basadi – The temple has an ancient idol of Sri Bhyrava Brahma Yaksha in standing posture. The punarpratishapana mahotsava (reinstallation ceremony) of the temple was held on 27th March 2008.









மற்றும் பிரம்மச்சர்ய ஆசிரமம், பசுக்கள் காப்பகம், பட்டாரக பவன், பல யாத்திரீகர்கள் தங்குமிடங்களும், உணவுக்கூடமும் கட்டப்பட்டுள்ளது



The kshethra also comprises of Brahmacharya Ashrama, Bhattarakha Bhavana, Goshala, Yatri nivas  and Boarding Hall.



Not in perfect Scale - சரியான அளவுத்திட்டத்தில்  இல்லை

 ********************


No comments:

Post a Comment