Friday, April 8, 2016

MELIGE - மெளிகெ


Shri Anandanadha swamy Jinalaya  -  ஸ்ரீஅனந்தநாதஸ்வாமி ஜிநாலயம்





Location :  lies in the Latitude and Longitude of  (13.66692, 75.28512)
click for map  put on the search box the above figure.

while travelling find your location and put to destination this no. (13.66692, 75.28512) on the Navigator.of smart phone.




Bangaluru →Tumkuru →Arsikere →Banavara →Bhadravati →Umblibail →Muduba →Tirthahalli →Melige. = 330 Kms.

Mysore →Srirangapatna →Chennapatna →Arsikere →Banavara →Bhadravati →Umblibail →Muduba →Tirthahalli →Melige.. = 300 Kms. 





*************


Melige is situated at a distance of 10 kilometers from Tirtahalli taluk of Chickkamagalur district.



மெளிகெ: தீர்த்தஹள்ளி (சிக்மகளுர் மாவட்டம்) நகரிலிருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. 



More than 700 years old Shri Anandhanatha Jinar Jinalaya has beautiful architectural and ornamental stone carvings. Appearance and layout are Vijayanagahara and hoysalas style sculptures.  
















ஏறத்தாழ 700 ஆண்டுகளை கடந்து நிற்கும் ஸ்ரீஅனந்தநாத ஜிநருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஜிநாலயம், மிகவும் அழகிய புடைப்பு சிற்ப வேலைபாடுகளுடன், கட்டப்பட்டுள்ளது. விஜயநகர மற்றும் ஹொயசள ஆலய வேலைப்பாடுகளை கொண்டுள்ளது.

************

The Basadi got Shri Anandhanathaswamy on the plinth. Has on plan a Garbhagriha with a inner prahara (pradakshinapatha), Suhanasi (connecting mandap) , a Navaranga and a Mugamandapa and an entrance porch at the east. The pillar of the Mandap are Vijayanagara pillar design in order. The superstructure over the sanctum sanctorum has five Thala (tier) in receding order with prominent Griva portion and a Stupi.  



ஸ்ரீஅனந்தநாதரை கர்ப்பக்கிருஹ வேதிகையில் நிறுவப்பட்ட இவ்வாலயம்,  அதனைச் வலம் வகையில் உள்சுற்று பிரகாரமும், சுகநாசி என்ற முகமண்டப தொடர்படுத்தும் நடை மண்டபமும், வண்ண நுழைவாயிலும், முகமண்டப வாயிலின் சிறிய முன்மண்டப படிகளும் கொண்டுள்ளது. முலஸ்தானத்தின் மேல் உள்ள விமானம் ஐந்து தளங்களும், எடுப்பான கிரீவப்பகுதியும் மேல் ஸ்தூபியும் அழகாக சரியான அளவில் அமைக்கப்பட்டுள்ளது.

******************

In the open cicumbulace prakara Shri Kshetrabalaha shrine and other side Dhevendra shrine with beautiful bas-relief  of 6 feet height are established. In the north side Mugamandapa has a opening with porch.














திறந்த வெளிச்சுற்றின் ஒரு முலையில் ஸ்ரீக்ஷேத்ர பாலகர் சன்னதியும், மறுபுறம் தேவேந்திரன் யானைமீது அமர்ந்த கோலத்தில் உள்ள சன்னதியும் உள்ளன. ஆறு அடி உயர புடைப்பு சிற்பங்களும் அழகாக செதுக்கப்பட்டுள்ளன. முகமண்டபத்தின் வடபுற மத்தியில் நுழைவாயிலுடன் கூடிய சிறிய முன்மண்டபம் படிகளுடன் காணப்படுகிறது.


****************


 The front entrance way, arch shape inner cutting opening has carvings of ornamental design and many bas-reliefs.



ஆலய பிரதான வாயில் நிலை மிக அழகான பூ வேலைப்பாடுகளும், தீர்த்தங்கரர் சிலை முகப்புடன், வேறு பல சிற்பங்களும், வளைவான நுழைவுடன் அமைக்கப்பட்டுள்ளது.




In front of the Basadi there is Manasthambha, Brahmadeva pillar, of good proportions. It stands on a three tiered ornate platform in receding tiers. The pillar is square at the base and the shaft has octagonal, sixteen-sided  and circular sections. The abacus of the pillar supported by rearing lions at the corners and are decorated with floral designs.  The pillar at apex accommodates an ornate Kula shikara. The base of the pillar and the Kantha mouldings of the platform have themes depicting Jain god and goddess bas reliefs.







ஆலயத்தின் முன் பிரம்மஸ்தம்பம் என்ற நெடிதுயர மனத்தூய்மைக் கம்பம் சரிவகித அளவில் செய்யப்பட்டு, மூன்று அடுக்கு பீடத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. சதுர வடிவில் கீழ்புறம் கம்பம், மேற் செல்ல, செல்ல எண்பட்டை, பதினாறு பட்டை பின்னர் உருளை வடிவலும் அமைக்கப்பட்டுள்ளது. பூ வேலைப்பாடுள்ள அதன் மேல்தளம் நான்கு சிங்கங்கள் தாங்கி நிற்கிறது. அத்தளத்தில் சிறிய குலசிகரம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் அடி மேடையைச் சுற்றிலும் அழகிய சமண உருவ புடைப்பு சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.


*******************

The temple is in the control of Archaeological survey of India, Bangalore control. So It is open between 10 am and 4 pm only.



காலை 10 மணிமுதல் மாலை 4 மணி வரை திறந்திருக்கும் இவ்வாலயம் இந்திய தொல்லியல் துறையினரின் பாதுகாப்பில் உள்ளது.


-----------------------------------






















































































No comments:

Post a Comment