Sunday, March 22, 2015

ANANDAMANGALAM - அனந்தமங்கலம்


Anandhamangalam Rock  Relief Temple  -  அனந்தமங்கலம் பாறை சிற்பக்கோவில் 




Location:

lies on the Google map in the coordination of (12.32445, 79.66669) ie put the latitude, Longitude on the search box

Map for Jain pilgrimage centres:   Click  ANANDAMANGALAM
(Tamil nadu / Kerala)
(Not fully updated) 

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் 
(தமிழ்நாடு / கேரளா )


ROUTE:-

Tindivanam → Chennai road → Bye pass turn → Orathi road → Anandamangalam = 15 kms.

Gingee → (Vandavasi road)-Bye pass turn → Orathi road → Anandamangalam = 53 kms.

Vandavasi → Tindivanam road →  Kodiyam turn → Vairapuram → Anandamangalam = 38 kms.

Tiruvannamalai  → Gingee → (Vandavasi road)-Bye pass turn → Orathi road → Anandamangalam = 76 kms.

chennai → (Before Tindivanam) Thozhipedu right turn → Orathi road → Tindivanam-Orathi road → Anandamangalam = 143 kms.



செல்வழி:-

திண்டிவனம் → சென்னை சாலை → பை பாஸ் சாலை → ஓரத்தி சாலை → அனந்தமங்கலம் = 15 கி.மீ.

செஞ்சி → வந்தவாசி சாலை → பை பாஸ் சாலை → ஓரத்தி சாலை → அனந்தமங்கலம் = 53 கி.மீ.

சென்னை → தொழிப்பேடு, திண்டிவனம் பை பாஸ் சாலை → ஓரத்தி சாலை → திண்டிவனம்-ஓரத்தி சாலை → அனந்தமங்கலம் = 143 கி.மீ.

திருவண்ணாமலை  → செஞ்சி → வந்தவாசி சாலை → பை பாஸ் சாலை → ஓரத்தி சாலை → அனந்தமங்கலம் = 76 கி.மீ.


வந்தவாசி  → திண்டிவனம் சாலை → கொடிலம் திருப்பம் → வைரபுரம் → அனந்தமங்கலம் = 38 கி.மீ.






யேமீசம் ப்ரதிகால பவ்ய ஜநதா
திருஷ்ட்வா மரேந்த்ரைர் முதா
கல்யாணே வ்ர­பாதயோ ஜினவரான்
சம்பூஜிதா ஸ்தாநிஹ
த்ரைலோக்யாதிபதி ந்யஜா ம்யதிசயோ
மேதான் சதுர்விமசதிம்
சாந்த்யர்த்தம் ஜகதாம் சராசரகுரும்
திர்த்தங்கரான் சாம்ப்ரதம்.
----

   நிலவுல கெழுந்த  நீதியினை அளித்த  
  அலகில் பெருங்குணத்து ஆதிஇடபன்  
  விஜயவீரன் அஜித பட்டாரகன்  
  அம்பவழ மேனிச் சம்பவநாதன்  
  அரத்தகு சேவடி அபிநந்தநனும்  
  உரைத்தகு மேனி உத்தமசரீரன்  
  தொலையா வாய்மைச் சுமதி பட்டாரகன்  
  பரம மூர்த்தி பத்மபிரபனும்  
  ஏர்பெறு காட்சி சுபாரீசநாதன்  
  சந்திரவீறொளி சந்திரபிரபன்  
  புரையறு தவத்துப் புஷ்பதந்தன்  
  சிங்கம்ஏந்து அணைச் சீதளநாதன்  
  திருமறு மார்பிற் திகழ் சிரேயாம்சன்  
  மலர்மிசை நடந்த வாசுபூஜ்சியன்  
  மேமல் மேனி விமலபட்டாரகன்  
  அருள்நெறி யளித்த அனந்த சித்தன்  
  தருமலை உடைய தருமபட்டாரகன்  
  தவநெறி யளித்த சாந்திபட்டாரகன்  
  கொந்தார்மலர்மழை குந்து பட்டாரகன்  
  அந்தர வினையின் அரபட்டாரகன்  
  தொல்லை வினை கெடுத்த மல்லிபட்டாரகன்  
  முகடுபெற  வுயர்ந்த முனிசுவிரதர்  
  அரிட்ட நெறியின் நமிபட்டாரகர்  
  அஷ்டவினை கெடுத்த அரிட்ட நேமி  
  பட்ட வினைபகல் பாரிஸநாதன்  
  சித்தர்கள் ஏத்தும் ஸ்ரீவர்த்தமானன்  
  என்றிவர் இருபத்து நால்வரையும்  
  நாளும் நாளும் நலம் புகழ்ந்தேத்த  
  மீளா உலகம் வேண்டுதற் பொருட்டே!!  





திண்டிவனத்திலிருந்து  ஒரத்தி சாலையில் 15 கி.மீ. தொலைவில்  உள்ளது அனந்தமங்கலம் என்னும் பாறைச்சிற்ப கோவில் உள்ள கிராமம். கி.பி. 910ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.  சிறிய அளவிளான மலை ஒன்றின் மீது உள்ள பாறையில் கிழக்கு நோக்கி நான்கு புடைப்பு சிற்பத்தொகுப்பும், அதன் கீழ் சிறிய குகைத் தளம் ஒன்றும்,  அருகில் மற்றொரு பாறைமீது வடதிசை நோக்கி ஸ்ரீபார்ஸ்வ ஜிநரின் நின்ற நிலை புடைப்புச் சிற்பமும், மேலேறிச் செல்லும் வழியில் கல்வெட்டு சாசனம் ஒன்றும் உள்ளன. (செல்லும் வழிகள் முட்புதர்களுடன் காணப்படுகிறது.)


பராந்தக சோழனது காலத்தில் (கி.பி.942) உள்ள சாசனமாக குறிப்பிடுகின்றனர். அதில்  வினையபாசுர குரவடிகளின் சீடரான ஸ்ரீவர்த்தமாப் பெரியடிகள் என்பவர் இந்த ஜினகிரி பள்ளியில் தினமும் ஒரு அடியார்க்கு உணவளிக்க சில பொற்காசுகள் வழங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  ............

Anandhamangalam, a rock temple Jain heritage, is situated 15 Kms from Tindivanam towards Orathi road (near Vairapuram village). A hillock clustered by rock has Jain bas-reliefs which belong to 9-10th Century AD. After reaching a moderate height (with strains because no step cuttings) a big boulder has group of carvings facing east and Shri Parswana Jinar relief toward north. One rock inscription also itched on the way to rise.

The inscriptions belong to King.Paranthaga Cholan period (ie 942 AD). It indicates that some gold coins were donated to Holiness.Vardhamana Periyadigal, the disciple of Shri Vinayapasura kuravadigal, the chief ascetic of Jinagiri Palli (Jain hillock school) for the purpose of meals-feeding to a devotee daily. 



நான்கு சிற்பத்தொகுப்பில்,  முதற் சிற்பமான ஸ்ரீகூஷ்மாண்டினி யக்ஷியின் உருவம் அழகாக ஆபரணங்களுடனும், அருகில் பணிப்பெண்ணைத் தொட்டவாறும், சிங்கத்தின் மீது நின்றநிலையிலும் தனது இரு குழந்தைகளுடனும், மேல் புறம், இரு சாமரைகள், கமுகு மரத்துடன் காட்சி யளிக்கிறது.  அதற்கடுத்து அமர்ந்த  நிலையில் சற்று பெரியதாக தீர்த்தங்கரர் உருவம் உள்ளது. சிங்காதனமும், சாமரை தாரிகளுடன், கந்தர்வர்களுடன், தலைக்கு பின்புறம் பிரபா வட்டமும், மேற்புறம் முக்குடையுடன் திகழும் அவர் ஸ்ரீஅனந்தநாதர் என அவ்வூரின் பெயரை வைத்துக் குறிப்பிடுகின்றனர். அடுத்துள்ள தீர்த்தங்கரர் வடிவம் தாமரை மலர் மீது நின்ற நிலையில் தலைக்கு பின்புறம் பிரபை வட்டமும், மேல் முக்குடையும் இருபுறம் சாமரைகள் மட்டும் உள்ளவாறு செதுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீதர்மதேவி சிலையிருப்பதால் அவரை நேமிநாதர் என்றே குறிப்பிடலாம். அடுத்துள்ள ஸ்ரீபார்ஸ்வ நாதர் பனாமுடியுடன்  நின்ற நிலையிலுள்ள வடிவத்தில் பாம்பு கால் வரை நீண்டு தெரியும் வண்ணமும், மலர் மேல்  நின்ற கோலத்திலும் வடிக்கப்பட்டுள்ளது.

அதனை அடுத்துள்ள தனி சிற்பமான ஸ்ரீபார்ஸ்வ ஜிநரின் சிற்பம் பனாமுடியுடன் அருகில் தரணேந்திர யக்ஷன் நின்ற நிலையிலும் மற்றும் ஸ்ரீபத்மாவதி யக்ஷி அமர்ந்து வணங்கிய நிலையில் காணப்படுகிறது. மேலும் பாம்பின் வால்பகுதி கால்வரை சென்றும், தாமரை மலர் மீது அப்பெருமான் நிற்பதைப் போன்று செதுக்கப்பட்டுள்ளது நன்கு தெரிகிறது.


அருகிலுள்ள சமணர்கள் சில முக்கிய தினங்களில் வந்து வழிபாடு செய்து வருகின்றனர். தொலைவில் உள்ளவர்களும் ஆண்டுக் கொருமுறையேனும் சென்று தரிசித்து வந்தால் அக்கலைப் பொக்கிஷ­ம் அழியாமல் நீண்ட காலம் பாதுகாப்பாக இருக்கும்.


The east facing reliefs cluster exhibits Shri Dharmadevi with essential ornamental work, standing on a lion, a maid, two girl children, two whisks on either side and a arecanut tree on the back of overhead. Next is Shri Anandhanatha Jinar sitting on a throne in the meditative posture, Praba circle, Mukudai canopy and whisk maids itches deeply. Subsequently Shri Neminatha Jinar standing on a lotus, praba circle, tri-umbralla canopy carvings. Last one is bravely indicates Shri Parswa Jinar with five headed snake canopy which crawling end at the foot of the Lord, standing on a lotus podium.

The north facing relief Shri Parshwanathar also having five headed snake dilated canopy, which end to the feet of the Lord on a lotus podium. Also Shri Dharanendran standing on right and Shri Padmavathy Devi bowed posture to the Lord.


Both reliefs are not severly corroded but it should be preserved for the future generation. Otherwise nearby quarry lessee may destroy the identities. Our frequent visit to the treasure might prevent the havoc.

No comments:

Post a Comment