Thursday, November 13, 2014

CHAKRAPURAM (GINGEE) - சக்கராபுரம் (செஞ்சி )


Shri ANANTHANATHAR JAIN TEMPLE  -  ஸ்ரீ அனந்தநாதர் ஜிநாலயம் 




Map for Jain pilgrimage centres:   Click CHAKRAPURAM
(Tamil nadu / Kerala)

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் :  சக்கராபுரம் கிளிக் செய்யவும் 

(தமிழ்நாடு / கேரளா )




ROUTE:-

Tindivanam → Gingee → Chakrapuram = 29 kms.

chetpet → Gingee → Chakrapuram = 29 kms.

Villupuram → Gingee →  Chakrapuram = 40 kms.

Tiruvannamalai  → Gingee → Chakrapuram = 40 kms.

Vandavasi → V. pettai → Mailam road → Deevanur turn →   Gingee → Chakrapuram = 50 kms.


செல்வழி:-

திண்டிவனம் → செஞ்சி →    சக்கராபுரம் = 29 கி.மீ.

சேத்பட் → செஞ்சி →    சக்கராபுரம் = 29 கி.மீ.

விழுப்புரம் → செஞ்சி →    சக்கராபுரம் = 40 கி.மீ.

திருவண்ணாமலை  → செஞ்சி →    சக்கராபுரம் = 40 கி.மீ.

வந்தவாசி → வெ. பேட்டை → மைலம் சாலை → தீவனூர் → செஞ்சி →    சக்கராபுரம் = 50 கி.மீ.






 ஓம் ஹ்ரீம் ஸ்ரீ அனந்த தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ 
 அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா 




ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷ்வாகு வம்சத்து சிம்மசேன மஹாராஜாவிற்கும், ஜயஸ்யாமா மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 50 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 30 லக்ஷம் வருடம் ஆயுள் உடையவரும், வல்லூகம் (கரடி) லாஞ்சனத்தை உடையவரும், பாதாள யக்ஷ்ன், அனந்தமதி யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் ஜெயராதி முதலிய 50  கணதர பரமேட்டிகளை உடையவரும் ஒரு மாதம் ப்ரதிமா யோகம் கொண்டவரும் சம்மேத கிரியில் சைத்ர அமாவாசை  திதியில் 96 கோடா கோடி 70 லட்சத்து 70 ஆயிரத்து 700 முனிவர்களுடன் ஸ்வயம்பிரப கூடத்தில் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீஅனந்த தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!



செஞ்சியின் தென்பகுதியில் சக்கராபுரம் என்னும் இடத்தில் அமைந்துள்ளது ஸ்ரீஅனந்தநாதர் ஜிநாலயம். சமணர்கள் தர்மசக்ரத்தின் நினைவாக சக்கராபுரம் என்னும் பெயர் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். கி.பி. 16ம் நூற்றாண்டிற்கு முன்னரே சமணர்கள் இங்கு வாழ்ந்துள்ளனர்அப்போதிருந்தே இங்கு ஜிநாலயம் இருந்திருக்க வேண்டும்.

அங்குள்ள சக்கர குளத்தின் கீழ்பகுதியில் அமைந்துள்ள இவ்வாலயம் தற்போது அங்குள்ள சமணர்களால் பெருமுயற்சி எடுக்கப்பட்டு முழுவதுமாக புதிப்பிக்கப்பட்டு பொலிவுடன் விளங்குகிறது. அங்குள்ள கருவறையின் வேதிகையில்  ஸ்ரீஅனந்தநாதர் கற்சிலை நிறுவப்பட்டுள்ளது. அர்த்த மண்டபத்தின் பின்பகுதியாக அமைந்துள்ள அக்கருவறையில் சமவசரண தீர்த்தங்கரரின் எட்டு அம்சங்களையும் கொண்டுள்ள அழகிய சிலையாகும். அதன் மேல் ஏகதள விமானம் சிகர கலசத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. அதன் நாற்புறமும் தீர்த்தங்கரர் சிலைகள், கோடியில் இருசிம்மச்சிலைகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அர்த்த மண்டபத்தின் முன்பகுதி அந்தராளம் போல் அமைத்து அதன் நடுவே உள்ள மேடையில் தினபூஜைக்கான உலோகச்சிலைகளும், இருபுறம் உள்ள மேடையில்  தீர்த்தங்கரர்கள், 24 தீர்த்தங்கரர்கள் தொகுப்பு, நவக்கிரக தீர்த்தங்கரர்கள், பஞ்சபரமேஷ்டி, நந்தீஸ்வர தீப மாதிரி வடிவம் மற்றும்  யக்ஷ, யக்ஷியர்களின் உலோகச் சிலைகளும் அலங்கரிக்கின்றன. அடுத்து மகாமண்டபம் பாதுகாப்பு கதவுகள் அமைக்கப்பட்டு, முகமண்டபம் இரும்பு தட்டிகள், கதவுகளுடன் வேதிபகுதி முடிவடைகிறது.

கிழக்கு நோக்கிய இவ்வாலயத்தின் நுழைவுவாயில் திருச்சுற்று மதிற்சுவருடன் விளங்குகிறது. அதன் உள்ளே பலிபீடம் மனத்தூய்மை கம்பம் செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. அதன் நாற்புறமும் தீர்த்தங்கரர் புடைப்பு சிற்பங்களுடன் கீழ்புறமும், விமானத்தில் சலவைக்கல் பிம்பங்களுடன் மேற்புறமும் அழகாக அமைத்துள்ளனர்.

திருச்சுற்றின் தென்மேற்கில் ஸ்ரீபத்மாவதியின் அழகிய சலவைக்கல் பிம்பத்துடன் சன்னதி அமைக்கப்பட்டுள்ளதுவடகிழக்கில் நவக்கிரஹ தீர்த்தங்கரர்கள் மேடையும் நிறுவப்பட்டுள்ளது.


தமிழகத்தின் அனைத்து ஜிநாலயங்களிலும் நடைபெறும் தினபூஜை, நந்தீஸ்வர தீப பூஜை, மார்கழி முக்குடை பூஜை, இரவு தீபம், ஆவணி அவிட்டம், கார்த்திகை தீபம், நவராத்திரி கொண்டாட்டம், ஆடி வெள்ளி பூஜைகள் போன்றவை வளமைபோல் இவ்வாலயத்திலும் நடைபெறுகிறது. மேலும் சித்திரை மாதத்தில் திருநாதர்குன்று பூஜை தினத்தின் மாலை ஸ்ரீபார்ஸ்வநாதர் திருவீதியுலாவும் ஆண்டுதோறும் நடைபெறுகிறது.


Gingee is one of the Jain hub in ancient times. Jain vestiges and habitats are found in and around the place. At Chakrapuram south part of Gingee town, many jain families has been lived since several centuries. It was named for the memory of the Dharmachakra of jains. So a Jinalaya might be there since ancient times. The present one is since 16th Century AD.

It is totally renovated and has a beautiful look by the local Jains. It is dedicated to Shri Ananthanathar, 14th thirthankar of chadurvimsathi (24). In the Garbhagriha a granite plate made engraved statue with eight features of Samavacharan thirthankar is established upon a plinth. It was crowned by a Viman, shirkara and kalash. And mortar protrudes idols of four thirthankars on each directions. It lies on the back portion of a squared arthamandap, a different design of temple art. Next in the Anthralam portion daily pooja metal statues are arranged on a dais. The remaining alloy idols of Thirthankars, Panchaparameshti, Nandheeswara dweebh, 24 Thirthankar cluster, navagraha Thirthankars and Yaksha, Yakshies are placed upon platforms on eitherside. At front a mahamandap with highly secured doors and a Mugamandap with iron grill and door at the entry.

East entranceway Jinalaya has surrounded by a compound wall of open corridor. A brick-made Manasthambh has a thirthankar with cement idols at the bottom and marble made on the top viman on four directions. An altar also installed in the corridor. A shrine of shri Padmavathy is constructed at south-west and at north-west a Navagraha thirthankars platform is built.


All Jain poojas and rituals ie daily pooja, Nandheeswara dheeba pooja, Mukkudai, Navarathri pooja are conducted regularly. Apart from a festival of shri Parshwanathar idol is celebrated annually in the month of Chithrai.

No comments:

Post a Comment