Friday, October 10, 2014

VEMPAKKAM - வெம்பாக்கம்


Shri MAHAVEERAR JAIN TEMPLE  -  ஸ்ரீ மகாவீரர் ஜிநாலயம்




Map for Jain pilgrimage centres:   Click VEMPAKKAM
(Tamil nadu / Kerala)
(Not fully updated) 

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : வெம்பாக்கம் கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )
(முழுவதும் குறிக்கபடாதது )



ROUTE:

Tindivanam Vandavasi→kanchipuram road→Ayyankargulam turnVEMPAKKAM = 80 k.m.

Gingee Chetpet Cheyyar→ Kunnathur VEMPAKKAM    = 85 k.m.

Vandavasi → kanchipuram road→Ayyankargulam turn  VEMPAKKAM    = 43 k.m.

Arni  Kalavai   → Perunkattur   VEMPAKKAM I   = 48 k.m.

Kanchepuram  → Ayyankargulam turnVEMPAKKAM   = 17 k.m.



செல்வழி:.

திண்டிவனம் → வந்தவாசி→காஞ்சிபுரம்   சாலை →அய்யங்கார் குளம் திருப்பம்  வெம்பாக்கம்= 80 கி.மீ.

செஞ்சி சேத்பெட்→ செய்யார்   →  குன்னத்தூர் → வெம்பாக்கம் = 85 கி.மீ.

வந்தவாசி → காஞ்சிபுரம்   சாலை →அய்யங்கார் குளம் திருப்பம்  →  வெம்பாக்கம்   43 கி.மீ.

ஆரணி  கலவை   → பெருங்காட்டூர்  →   வெம்பாக்கம்    = 48 கி.மீ.

காஞ்சிபுரம்
→அய்யங்கார் குளம் திருப்பம்    வெம்பாக்கம்    =  17 கி.மீ.





 ஓம் ஹ்ரீம் ஸ்ரீ விருஷப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ 
 அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா 



ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷூவாகு வம்சத்து நாபி மஹாராஜாவிற்கும், மருதேவி க்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 500 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 84 லக்ஷ்ம் பூர்வம் ஆயுள் உடையவரும், விருஷப லாஞ்சனத்தை உடையவரும், கோமுக யக்ஷ்ன், சக்ரேஸ்வரி யக்ஷி யர்களால் சேவிக்கப்பட்டவரும் விருஷப சேனர் முதலிய 84 கணதர பரமேட்டிகளை உடையவரும் 14 நாட்கள் உபவாசத்துடன் பல்லியங்காசனமாக இருந்து கைலாசகிரியில் மாக மாத கிருஷ்ண சதுர்தசியில் ஆயிரம் முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீவிருஷப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!





காஞ்சிபுரத்திலிருந்து தென் மேற்குப்பகுதியில் அய்யங்கார்குள திருப்பத்தில், வலதுபுற சாலையில் 17 கி.மீ. பயணித்தால் வெண்பாக்கம் என்னும் கிராமம் வரும். அவ்வூரில் 30 சமணக்குடும்பங்கள் பல நூற்றாண்டுகளாக  வாழ்ந்து வருகின்றனர். (தற்போது பட்டினப் பிரவேசத்தினால் சற்று அருகி வருகிறது.)

ஸ்வேதபுரம் என்ற  இவ்வூர் தற்போது வெம்பாக்கம், வெண்பாக்கம் என்று அழைக்கப்படுகிறது. அவ்வூரில் மிகப் பழமையான ஜிநாலயம் நல்ல பராமரிப்புடன் உள்ளது. தற்போது சீரமைப்பு பணி நடந்து வருகிறது. தொன்மைக்கான ஆதாரங்கள் பல சீரமைப்புகளை ஆலயம் கண்டதால் மறைந்து விட்டது. (புதிய சமவசரணம் அமைக்க கட்டுமான பணி நடந்து வருகிறது.)

ஸ்ரீவர்த்தமானரை மூலவராக கொண்டுள்ள இந்த ஜிநாயலம் கிழக்கு முகமாக கோபுர நுழைவாயிலுடன் , திருச்சுற்று மதிற்சுவருடன் காணப்படுகிறது. நுழைந்ததும் பலீபீடம், திருச்சுற்றின் தென்மேற்கில் ஸ்ரீபிரம்மதேவருக்கு  சிகரம், கலசம் மற்றும் மண்டபத்துடன் தனி  ஆலயம் ஒன்றுள்ளது. அதே போல் ஸ்ரீபத்மாவதி தேவிக்கும் தனி ஆலயம் அமைத்துள்ளனர். நடுவில் சமவசரண அமைப்பு பணி நடை பெறுகிறது. ஆலய தென்புறத்தில் ஸ்ரீதர்மதேவிக்கு தனியாலயமும், வடகிழக்கில் நவக்கிரஹ மேடையும் அமைத்துள்ளனர்.

ஸ்ரீமகாவீரரின் கருவறைச் சிலை, உருவம் பீடத்துடன் சற்று பிதுக்கத்துடனும்; சாமரைதாரிகள், முக்குடை, பிண்டிமரம், பிரபா ஒளி, சிங்காதனம் மற்றும் யாளி தீச்சுவாலைபோன்ற அமைப்புகள் பின்னால் வருமாறும் ஒரே கற்பலகையில் வடிக்கப்பட்டுள்ளது. அழகிய அந்த கற்சிலைக்கு முன் அர்த்த மண்டபம். அதில் அபிஷேகத்திற்குரிய பல உலோக பிம்பங்கள் முக்கியமாக, நவதேவதா, பஞ்சபரமேஷ்டி, 24 தீர்த்தங்கரர்கள், நந்தீஸ்வர தீபம், மகாமேரு, ஸ்ருதஸ்கந்தம் மற்றும் யக்ஷ, யக்ஷியர்கள் சிலைகளோடு, ஸ்ரீசந்திரப்பிரப தீர்த்தங்கரரின் வெண்பளிங்குச் சிலையும் அலங்கரிக்கின்றன.

சற்று பெரிய மகாமண்டபத்தை பின்னாளில் மகாமண்டபமாகவும் (பாதுகாப்புக்காக இரும்பு கதவிட்டு), முக மண்டபமாகவும் பிரித்துள்ளனர். கருவறைக்கு மேல் விமானம்,  சிகர கலசங்களுடன், நான்குபுற தீர்த்தங்கரர் உருவச்சிலைகளுடன் அழகாக காட்சி தருகிறது.

நித்ய பூஜை, நந்தீஸ்வர தீப பூஜை, விசே பூஜைகள் மற்றும் யுகாதி அன்று ஸ்ரீஆதிநாதர் திருவீதியுலா, காணும் பொங்கல் ஸ்ரீமகாவீரர் திருவீதியுலா, நவராத்திரி தரணேந்திர பத்மாவதி உற்சவம் போன்றவை செவ்வனே நடந்து வருவது சிறப்பாகும்.


Vempakkam, a village is located southwest of Kanchipuram, at 17 kms travelling, towards vandavasi road and get right diversion at Ayyangarkulam junction. 30 Jain families are living there (because of city immigration now-a-days) Some renovation work is going on now.(New samavasaran layout was constructed) Due to repeated repair work the antiquity evidences were disguised/demolished. Moreover it is very ancient jinalayam.

East entrance of the Jinalaya has crown on the top and fencing by wall, around the Corridor, is owned by Shri Mahaveerar. An altar, a separate temple for Shri Brahmadevar with viman and kalash on the top, also another temple for Shri Padmavathy at North-West and shri Dharmadevi at north, a Navagraha shrine at north-east of Corridor. Middle of the west Samavasaran chamber is under construction.

Sanctum got Shri Mahaveerar stone idol, fashioned as the figure of Mahaveerar protrude at front, with pedestal and the eight features of samavasaran were on the back, but the whole arrangements are on single plate of granite stone. sanctum Viman is crowned with Thirthankar idols on four directions. Then Arthamandap consist the Metal idols of Important Thirthankars, 24 thirthankars cluster, Nantheeswara dheepam, Mahamedu, Sruthaskandam, Navadevatha, Yaksha, Yakshis and white marble made Shri Chandraprabhar idols are exhibits on either side.

Next to the arthamandap a Mahamandap half portion is bifurgated for safeguarding the treasure.

Daily pooja, Nantheeswara pooja, Mukkudai, special poojas; Yugathi urchav for Shri Adhinathar, Kanumpongal urchav for Shri Mahaveerar and Navarathri urchav for Shri Dharanendra Padmavathy are celebrated recurrently.



No comments:

Post a Comment