Thursday, October 16, 2014

KILSATHAMANGALAM - கீழ்சாத்தமங்கலம்





Shri CHANDRANATHAR  JAIN TEMPLE - ஸ்ரீ சந்திரநாதர்   ஜிநாலயம் 




Location:

 lies on the Google map in the coordination of (12.48996, 79.57899) ie put the latitude, Longitude on the search box

Map for Jain pilgrimage centres:   Click KILSATHAMANGALAM
(Tamil nadu / Kerala)
(Not fully updated) 

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : கீழ்சாத்தமங்கலம் கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )
(முழுவதும் குறிக்கபடாதது )



ROUTE:

Tindivanam Vandavasi Kilsathamangalam   = 36 k.m.

Gingee Vandavasi Kilsathamangalam  = 48 k.m.

Vandavasi Kilsathamangalam  = 4 k.m.

Arni  → Vandavasi Kilsathamangalam  = 45 k.m.

Kanchipuram  → Vandavasi Kilsathamangalam    = 45 k.m.



செல்வழி:.

திண்டிவனம் → வந்தவாசி கீழ்சாத்தமங்கலம் = 36 கி.மீ.

செஞ்சி வந்தவாசி கீழ்சாத்தமங்கலம் = 48 கி.மீ.

வந்தவாசி → கீழ்சாத்தமங்கலம்   = 4 கி.மீ .

ஆரணி  →வந்தவாசி கீழ்சாத்தமங்கலம்    = 45 கி.மீ.


காஞ்சிபுரம்வந்தவாசி கீழ்சாத்தமங்கலம்   =  45 கி.மீ







 ஓம் ஹ்ரீம் ஸ்ரீசந்திர பிரப  தீர்த்தங்கராதி சகல முனி  கணேப்யோ அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா 


   ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து சந்திரபுர நகரத்து இக்ஷ்வாகு வம்சத்து  மகாசேன மகாராஜாவிற்கும் லக்ஷ்மணை தேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மகா புருடரும், வெள்ளை வண்ணரும் 150 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும்  10 லட்சம் பூர்வம் ஆயுள் உடையவரும்  சந்திரன் லாஞ்சனத்தை உடையவரும் விஜய யக்ஷன் ஜ்வாலாமாலினி யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் உத்திராதி முதலிய 99 கணதர பரமேட்டிகளை உடைய வரும் ஒரு மாதம் பிரதிமா யோகம் கொண்டவரும் சம்மேதகிரியில் பால்குண சுக்ல சப்தமியில் ஒரு அரப் 2 கோடி 80 லட்சத்து 4 ஆயிரத்து  595 முனிவர்களுடன்  லலித கூடத்தில் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீசந்திர பிரப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!




About 4 kms from Vandavasi, between chetpet road and Tindivanam road Kilsathamangalam village is situated. Before AD 745, a Jinalaya and Jain familes are there, by the reference on a stone inscription on Perumal rock near the temple. A subsidy was granted by the then Pallava king, Nandi varma for the maintanence of the temple and in AD 876 another grant was served for repair work done in the Jinalaya. Later in the Chola regime; they adorn the temple and named as Vimala shriArya thirththapalli. Vizhukkam and other neary by villages have Jain families during period were also indicated on the same rock inscription. (so the antique evidences of most of the jinalayas are destroyed during the repairs and renovation period and also nearby quary explosion time.)

It has a separate Shri Dharmadevi goddess shrine, it is a unique during the period. Since the design is adopted by all the temples onward. (no such practice in other religion temples at the time)
Shri Chandraprabha nathar white marble, fully engraved, statue in the sitting posture resides upon a decorated viman plinth. in front of the bifurcated chamber the daily use Statue of Shri Chandranath stone made idol was placed. On both side of the Arthamandap all the metal idols, like important thirthankars, Navadevatha, panchaparameshti, 24 thirthankars cluster,  navagraha thirthankars and so on are arranged beautifully. And the mahamandap was protected by iron grill and doors. There is a Mugamandap at the courtyard corridor level. A three tier Viman crowned over the sanctum with 24 thirthankar statues, six numbers on each side. Which is more tall then the height of Manasthamp is also unique one.

Thought the vedi block of the temple facing east, the entranceway is on the southern side. A tower with thirthankar statues in sitting posture of 5 tiers with five kalashes is built upon it in recent years.  The open corridor of the temple was surrounded by high wall.  An altar and a stone pillar of Manasthamp with four thirthankar engravings is on four directions in top and bottom of it.
On the north side of corridor Sammed sigarji miniature layout, shri Jwalamalini, shri Kooshmandini, and Shri Padmavathy and Navagraha thirthankar shrine are also established.
Daily pooja, Nandheeswara pooja, special pooja and rituals are conducted regularly. Akshaya thirithiyai Urchav for Shri Rishbadev and Audi Friday festival for Shri Jwalamalini and Shri Padmavathi is celebrated annually.  


கீழ்சாத்தமங்கலம் என்னும் கிராமம் வந்தவாசிக்கு தென்மேற்கில் 4 கி.மீ. தொலைவில் சேத்பட் சாலைக்கும், திண்டிவனம் சாலைக்கும் நடுவே அமைந்துள்ளது. அவ்வூரில் பெருமாள் பாறை என்ற இடத்தில் உள்ள தமிழ் கல்வெட்டின் மூலம் அவ்வாலயத்திற்கு கி.பி. 745ல் பல்லவ (நந்தி வர்மர் ஆட்சிக்காலம்) மன்னரிடமிருந்து மான்யம் பெற்றதாக தெரிய வருகிறது. ஆகவே அதற்கு பல நூற்றாண்டிற்கு முன்னர் சமணர்கள் குடியேறி, பின்னர் ஜிநாலயம் ஒன்றை ஸ்ரீசந்திரநாதருக்காக கட்டியுள்ளனர் என்பது தெளிவாக விளங்கும். மேலும் கி.பி. 846 ல் ஆலயம் சீரமைப்பதற்கும், சோழர் ஆட்சி (பராந்தக சோழன்) தொண்டை நாட்டில் ஏற்பட்ட பிறகு அவ்வாலயத்தை ஆதரித்த செய்தியும் தெரிய வருகிறது. அக்காலத்தில் விமல ஸ்ரீஆரிய தீர்த்தப்பள்ளி என்ற சிறப்புப்பெயரும் பெற்றுள்ளது. மேலும் விழுக்கம், வெண்குன்றம் போன்ற ஊர்களிலும் சமணர்கள் வாழ்ந்துள்ளதற்கான ஆதாரங்களும் அங்குள்ள கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே மிகவும் பழமையான ஜிநாலயங்களில் இதுவும் ஒன்றாகும். (மேலும் பல ஜிநாலயங்களின் பழமைக்கான ஆதாரங்கள் ஆலய சீரமைப்பின் போதும், அப்பகுதியில் பாறை உடைக்கும் பணி தொடங்கியதாலும் மறைந்து விட்டன.)

முதன் முதலில் பெண் தெய்வத்திற்கான தனி சன்னதி தமிழகத்தில் முதலில் ஏற்பட்டதும் இவ்வாலயத்தில் தான் என்பது சிறப்பாகும். (பிற மத ஆலயங்களிலும் அப்போது இல்லை) 

சிறிய பாறையின் மீது கீழ்திசை நோக்கி அமைந்துள்ள ஜிநாலயத்தின் கருவறையில் வெண்பளிங்குக் கல்லால் ஆன ஸ்ரீசந்திரநாதரின் முழுஉருவச்சிலை அமர்ந்த நிலையில், அழகிய விமானத்தின் பத்ம மேடையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அடுத்துள்ள உள்ளாலையின் நடுவில் அமைந்து மேடையில் நித்ய பூஜைக்கான கருங்கல் சிலையினால் ஆன ஸ்ரீசந்திரப்பிரபர் அமர்ந்துள்ளார்.

அதன் மேல் உள்ள விமானம் மூன்று தளங்களைக்கொண்டு கலசத்துடன் உள்ளது. அதில் 24 தீர்த்தங்கரர்கள் சிலைகள் திசைக்கு ஆறாக  அலங்கரிக்கின்றன. மேலும் அதன் உயரம் மானஸ்தம்பத்தைக் காட்டிலும் அதிகம் உள்ளது.

அர்த்த மண்டபத்தின்  இருமருங்கிலும் மேடையமைத்து அனைத்து உலோகச்சிலைகளும் வைக்கப்பட்டுள்ளது. முக்கிய தீர்த்தங்கரர்கள் அனைத்தும், நவதேவதா, பஞ்சபரமேஷ்டி, 24 தீர்த்தங்கரர்கள், நவக்கிரக தீர்த்தங்கரர்கள், நந்தீஸ்வர தீபம், மஹாமேரு போன்ற சிலைகள் அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அடுத்து மகாமண்டபம் இரும்பு தட்டிகள், கதவுகளுடன் அமைந்துள்ளது. சிறிய முக மண்டபம் திருச்சுற்றின் மட்டத்தில் உள்ளது.

ஆலய நுழைவுவாயில் தென்புறம் அமைத்து அதன் மீதும் ஐந்து தள கோபுரம் ஐந்து கலசங்களுடன் நல்ல உயரத்துடன் கட்டப்பட்டுள்ளது. அதிலும் அமர்ந்த நிலையில் தீர்த்தங்கரர் சிலைகள் முன்புறம் அமைத்துள்ளனர். ஆலய திருச்சுற்றை சுற்றி மதிற்சுவர் அமைத்து பலிபீடம், மானஸ்தம்பம், அதன் நாற்புறமும் கீழ் , மேல் தட்டுகளில் தீர்த்தங்கரர் சிலைகளுடன் கருங்கல்லால் செய்து நிறுவியுள்ளனர்.

வடபுறம் சம்மேத சிகர மாதிரி வடிவமும், ஸ்ரீ ஜ்வாலாமாலினி, ஸ்ரீதர்மதேவி, ஸ்ரீபத்மாவதி, ஸ்ரீநவக்கிரக தீர்த்தங்கர்கள் சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளது.
நித்ய பூஜை, நந்தீஸ்வர பூஜை மற்றும் விசேஷ பூஜை போன்றவை செவ்வனே நடந்து வருகிறது. மேலும் அக்ஷய திரிதியை அன்று ஸ்ரீஆதிநாதர் திருவீதி உலாவும், ஆடி வெள்ளி அன்று ஸ்ரீஜ்வாலாமாலினி மற்றும் ஸ்ரீபத்மாவதி தேவியர்களின் ஆலயம் வலம் வரும் விழாவும் ஆண்டு தோறும் நடைபெறுகிறது.





No comments:

Post a Comment