Thursday, September 11, 2014

KEEZHVAILAMUR - கீழ்வயலாமூர்


Shri ADHINATHAR JAIN TEMPLE  -  ஸ்ரீ ஆதீஸ்வரம் 




Location: 

lies on the Google map in the coordination of (12.14913, 79.51264) ie put the latitude, Longitude on the search box

Map for Jain pilgrimage centres:   Click  Keezhvailamur
(Tamil nadu & Kerala)
(Not fully updated) 

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : கீழ்வயலாமூர் கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )

(முழுவதும் குறிக்கபடாத )



ROUTE:

Tindivanam →  kutteripattu  →   Keezhvailamur  =     28 k.m.

Villupuram →  Veedur dam → Keezhvailamur   =   31 k.m.

Gingee →  Keezh mampattu →  Keezh vailamur  → Keezhvailamur   =  28 k.m.

Vandavasi  →  Vellimedupettai →  Deevanur →  kutteripattu   → Keezhvailamur   =  63 k.m.



செல்வழி:

திண்டிவனம் → கூட்டேரிபட்டு → கீழ்வயலாமூர்  =  28 கி.மீ.

விழுப்புரம் → வீடூர் அணை → கீழ்வயலாமூர்  =  31கி.மீ.

செஞ்சி → கீழ்மாம்பட்டு →  கீழ்வயலாமூர் → கீழ்வயலாமூர்   =  28 கி.மீ.

வந்தவாசி →  வெள்ளிமேடுபேட்டை →   கூட்டேரிபட்டு →  கீழ்வயலாமூர்  =  63 கி.மீ.






 ஓம் ஹ்ரீம் ஸ்ரீ விருஷப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ 
 அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா 


ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷூவாகு வம்சத்து நாபி மஹாராஜாவிற்கும், மருதேவி க்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 500 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 84 லக்ஷ்ம் பூர்வம் ஆயுள் உடையவரும், விருஷப லாஞ்சனத்தை உடையவரும், கோமுக யக்ஷ்ன், சக்ரேஸ்வரி யக்ஷி யர்களால் சேவிக்கப்பட்டவரும் விருஷப சேனர் முதலிய 84 கணதர பரமேட்டிகளை உடையவரும் 14 நாட்கள் உபவாசத்துடன் பல்லியங்காசனமாக இருந்து கைலாசகிரியில் மாக மாத கிருஷ்ண சதுர்தசியில் ஆயிரம் முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீவிருஷப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!


 
 

Keezhvailamur, about 27 k.ms from Gingee ,belongs to Villupuram dt. has  a Jain temple which influences the Chola temple architecture ie improved Pallavas Dravidian temple architecture. So it  falls in 9-13th century period. An old Shri Adheeshwar statue, which has no Lanchanam, and a Shri Neminathar stone sculpture were resided.  The temple was called as Adheewaram and cared by three Jain families only. Though it had 20-30 sravaka families but diminished now to three.

Shri Adhinathar is in sanctum. The rectangular compound is in damaged condition. Two mandaps are inside the circumbulance corridor was in dilapidated stage. The degenerated jain temple consists of altar, manastham, big arthamandap and sanctum with tower in domb shaped. Two thirthankars were mounted on it.

Inside the arthamandap a stone scuplture of 24 thirthankars (23 was made in granite but one Shri Parswanth was in metal with detachable type), Mahameru, Shri kushmandini, Shri Padmavathy were present. Shri Brahmadevar statue  of three heads visible (one disguised on back) with eight hands with weapons.
Daily pooja, Nandeeswara deepa pooja, Pournamy pooja were conducted regularly. One annual festival also celebrated there.

Diminished population in the village was endangered to degenerate the monument. So frequent visit to these places will preserve the valuable treasure.

Contact No. Mr. Rajendra Nainar: +91 9488456327

*******

விழுப்புரம் மாவட்டத்தில் வல்லம் தாலுக்காவைச் சேர்ந்த சிற்றூர் கீழ்வயலாமூர். செஞ்சிக்கு 27 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இவ்வூரில் கி.பி. 13 ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஸ்ரீஆதீஸ்வரர் சிலையையும் (லாஞ்சனம் இல்லை) மற்றும் ஸ்ரீநேமிநாதர் சிலையையும்(லாஞ்சனம் இல்லை) கொண்ட, இப்பகுதி மக்களால் ஆதீஸ்வரம் என அழைக்கப்படும் ஜிநாலயம் ஒன்றுள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இவ்வாலயத்தை மூன்று சமண இல்லறத்தார்கள் பேணி பாதுகாத்து வருகின்றனர். 2030 சிராவகர்கள் வாழ்ந்திருந்த இவ்வூரில் மிகவும் அருகி விட்டநிலை ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீஆதிநாதரை முலவராக கொண்டுள்ள இந்த ஆலயத்தில் சுற்றுச்சுவர் மிகவும் பாழடைந்துள்ளது. கிழக்கிலும், மேற்கிலும் மண்டபம் உள்ளது. தூண்களில் சிற்பங்கள் உள்ளன. பலிபீடமும், மனத்தூய்மைக் கம்பமும் உள்ளன. மூலவர் விமானம் கூண்டு வடிவத்தில் அமைக்கப்பட்டு கலசம் வைக்கப்பட்டுள்ளது. கிழக்கிலும், மேற்கிலும் ஜினரின் உருவங்கள் மட்டும் அலங்கரிக்கின்றன.

ஆலயத்தின் உள்ளே பெரிய அர்த்தமண்டபத்தில் 24 தீர்த்தங்கரர் சிலைகள் 23 கற்சிலைகளாகவும், நடுவில் நின்ற கோலத்தில் ஸ்ரீபார்ஸ்வநாதர் உலோகச் சிலை பொருத்தி வைக்கும் ஏற்பாட்டிலும் அமைக்கப் பட்டிருக்கிறது. மகா மேரு கற்சிலையும் மற்றும் ஸ்ரீதர்மதேவி, ஸ்ரீபத்மாவதி கற்சிலைகளுடன், ஸ்ரீபிரம்மதேவர் கற்சிலை யானைமீது காலை மடித்து அமர்ந்த நிலையில், மூன்று முகங்கள் (நான் முகன்) மற்றும் எட்டு கைகளில் ஆயுதங்களுடன் வடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாலயத்தில் இருவேளை நித்திய பூஜை, நந்தீஸ்வர தீப பூஜை,கார்த்திகை தீப விழா, மார்கழி முக்குடை தீப விழா, ஆடி, தை மாத பூஜை போன்றவை தொடர்ந்து நடந்து வருகிறது.

இவ்வூர் சமணக் குடும்பங்கள் அருகி வருவதால், இந்த ஜிநாலய நலன் கருதி தென் இந்திய சமணப் பெருமக்கள் ஆண்டுக்கு ஒரு முறையாவது விஜயம் செய்வது, அந் நினைவுச் சின்னங்களை பாதுகாக்க ஏதுவாகும்.
  

தொடர்புக்கு : திரு. ராஜேந்திர நைனார்:  +91 9488456327.







No comments:

Post a Comment