Tuesday, May 27, 2014

MELMALAIYANUR - மேல்மலையனூர்


MELMALAIYANUR- SRI ADHINATHAR TEMPLE






Location   lies on the Google map in the coordination of (12.33673, 79.3224) ie put the latitude, Longitude on the search box


Map for Jain pilgrimage centres:   Click    MELMALAIYANUR on the list.
(Tamil nadu / Kerala)
(Not fully updated) 

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் :  கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )

ROUTE:

Tindivanam  Gingee Melmalaiyanur- 46 k.m.

Villupuram  Gingee Melmalaiyanur– 56.5 k.m

Tiruvannamalai Avalurpet Melmalaiyanur - 35 k.m.

Vandavasi Chetpet Melmalaiyanur– 50 k.m.


செல்வழி:

திண்டிவனம் செஞ்சி  மேல்மலையனூர்- 46 கி.மீ..

விழுப்புரம்  செஞ்சி  மேல்மலையனூர்- 56.5 கி.மீ..

திருவண்ணாமலை  அவலூர்பேட்டை மேல்மலையனூர் – 35 கி.மீ.

வந்தவாசி சேத்பட் மேல்மலையனூர்-50கி.மீ..



 ஓம் ஹ்ரீம் ஸ்ரீ விருஷப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
 அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா



ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷூவாகு வம்சத்து நாபி மஹாராஜாவிற்கும், மருதேவி க்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 500 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 84 லக்ஷ்ம் பூர்வம் ஆயுள் உடையவரும், விருஷப லாஞ்சனத்தை உடையவரும், கோமுக யக்ஷ்ன், சக்ரேஸ்வரி யக்ஷி யர்களால் சேவிக்கப்பட்டவரும் விருஷப சேனர் முதலிய 84 கணதர பரமேட்டிகளை உடையவரும் 14 நாட்கள் உபவாசத்துடன் பல்லியங்காசனமாக இருந்து கைலாசகிரியில் மாக மாத கிருஷ்ண சதுர்தசியில் ஆயிரம் முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீவிருஷப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!


மேல்மலையனூர்: செஞ்சிக்கு வடக்கே 16 கி.மீ. தொலையில் அமைந்துள்ள சிற்றூர். அங்கு சோழர் காலத்தில் கட்டப்பட்ட ஜிநாலயம் ஒன்றுள்ளது. அது தற்போது முழுவதுமாக புதுப்பிக்கப்பட்டு பொலிவுடன் காட்சி தருகிறது.
கீழ்திசை நோக்கிய ஜிநாலயத்தில் ஸ்ரீஆதிநாதர் மூலவராக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். கருங்கல்லால் செய்யப்பட்ட அச்சிலை ஜிநரின் எட்டு அம்சங்களுடன், பத்மமேடையில் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறது. மேற்புறம் இருதள விமானம்; முதல் தளத்தில் நாற்புறமும் தீர்த்தங்கரரின் சிலைகள் அமர்ந்த நிலையிலும், மேற்தளத்திலும், அதற்கு மேல் உள்ள கீரீவக் கோட்டத்தின் நான்குபுறமும் நின்ற கோலத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சிகர, கலசத்துடன் காட்சியளிக்கிறது.

முன்னர் அர்த்தமண்டபமும் அதன் நடுவே மேடையில் தினபூஜைக்கான பிம்பங்களும், இருபுறமும் உள்ள மேடைகளில் உலோகத்தால் ஆன முக்கிய தீர்த்தங்கரர்கள் பிரபையுடன், 24 (தனித்தனியாக) தீர்த்தங்கரர்கள், ஸ்ருதஸ்கந்தம், நந்தீஸ்வர தீபம், மகாமேரு, மற்றும் யக்ஷ, யக்ஷிகள் போன்ற சிலைகள் அலங்கரிக்கின்றன.

அதன் முன்னர் முகமண்டபமும், மகாமண்டபமும் உள்ளது. அதன் தூண்களில் அழகிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. மேலும் வடபுறம் ஸ்ரீபிரம்மதேவர் சன்னதியும், ஸ்ரீதர்மதேவி சன்னதியும் அமைக்கப்பட்டுள்ளது.

ஆலய குடவரையும், திருச்சுற்று முழுவதும் மதிற்சுவரும், அதன் முடிவில் கலசமண்டபமும் கட்டப்பட்டுள்ளது. பலிபீடமும், நாற்புறமும் தீர்த்தங்கரர் உருவங்களுடன் கூடிய மானஸ்தம்பமும் திருச்சுற்றின் ஆரம்பத்தில் உள்ளது. அனைத்தும் சமீபத்தில் முழுசிரமைப்பு செய்யப்பட்டதால் வண்ணங்களுடன் காட்சி தருகிறது.

அனைத்து சமணர் ஆலயங்களிலும் நடைபெறும் தின பூஜை , விசேஷபூஜைகள், பண்டிகைகள், விழாக்கள் அனைத்தும் செவ்வனே நடைபெற்று வருகிறது.


*********

Melmalaiyanur is situated at about 16 kms north of Gingee town. It was built in the Chola reign but it is fully renovated and got a beautiful look. So the inscriptions were disguised during the time.

East facing Jinalaya got Shri Adinathar as Moolnayak. A granite stone carved idol with eight features of jinar and seated on a lotus plinth. It is crowned by two tier viman, one has four thirthankar statues in sitting state and the next stage and Griev circle has standing posture thirthankars. A shikara and kalash is on the peak. 

Front of the sanctum a Arthamandap has statues of daily worship and rituals at middle platform and alloy idols of thirthankar statues, Nantheeswar dheepam, mahameru. sruthaskandam, Yaksha, Yashis are arranged in decorative manner.

A mugamandap and Mahamandap are also constructed with pillars of carved sculptures. Two shrines are placed at the northern side contains Shri Brahmadevar and Shri Dharmadevi.

 East side entranceway and surrounded walls of open corridor has altar, manasthamp with thirthankar statues on four directions. The whole temple is renovated recently, so it got a wonderful look.

All poojas, rituals, festivals are conducted regularly like other Jinalayas.    
 

No comments:

Post a Comment